டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2012-ல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகாவது, பலாத்கார சம்பவங்கள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக்குறியே. சமீபத்திய சாட்சி, டெல்லியில் 14 வயது பள்ளி மாணவி மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள்.
பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது நிர்பயா சம்பவத்துக்குப் பிறகே. 2013-ல் தனிச்சட்டமும் இயற்றப்பட்டு வர்மா கமிட்டி பரிந்துரைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக தலைநகரான டெல்லியில் அதிகரித்து வருகிறது.