Monday, July 18, 2011

சவூதி: தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்

சவூதிசெங்கடல் நகரமானஜெத்தாவில் புகழ்பெற்ற  வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள் (Passports)
 முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன. இத்தகவலை ஜெத்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

முறையான பரிகாரங்களை மேற்கொள்ள நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  அனைத்தையும் மீளமையச் செய்ய 75 நாள்களாவது ஆகலாம் என்று அவர் கூறினார்.  நிறுவனம் சார்பாக சட்டத் தரணிகள் குழுவொன்று ஜெத்தாவில் முகாமிட்டு ஆகவேண்டிய  முறைமைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
 

வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகங்களை அணுகி புதிய பாஸ்போர்ட்  பெற்று கொள்ளும்படி   நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 
இதற்காக 20 மில்லியன் ரியால்களை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாம்.

குண்டு வெடிப்புகளில் RSS ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது!

, புதுடெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பயஸ் உஸ்மானியை போலீஸ் அடித்தே கொன்றது!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் பயஸ் உஸ்மானி. இவரை போலீஸ்சார் அடித்தே கொன்றார்கள். விசாரணை என்றபெயரில் அழைத்து செல்லப்பட்டவரை போலீஸ் அடித்தே கொன்றுள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பையில் கடந்த 13ம் தேதி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 23 பேர் பலியாயினர். 130க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த நாசவேலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் துப்பு துலக்கி வருகின்றனர். 


கடந்த 2008&ம் ஆண்டு நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அப்சல் உஸ்மானியின் சகோதரர் பயஸ் உஸ்மானி. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க, பயஸ் உஸ்மானியை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். ஆனால் அந்த அகமதாபாத் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று நிருபிக்கப்பட்டது. 

இதில் தொடர்புடைய ஹிந்துத்துவா சாமியார் அசிமானந்தா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் இந்திரஜித் குப்த்தா உட்பட நிறையபேர் ஜெயிலில் உள்ளனர். இந்த மொலோகன், அகமதாபாத், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்து தீவிரவாதிகள் பிடிக்கப்பட்டதும் அதில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இலஞ்சர்களை விடுதலை செய்வதில் அரசு காகதாமதம் செய்து வந்தது.

இந்நிலையில் இந்த அப்பாவிகளின் உறவினரான பயஸ் உஸ்மானியை விசாரணை என்ற பெயரில் இந்திய ஹிந்துத்துவா போலீஸ் கைது செய்து அடித்து சித்திரவதை செய்தது. இதில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பயஸ் இறந்தார். விசாரணையின்போது போலீசார் அடித்து துன்புறுத்தி பயஸ்சை கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மும்பை குண்டுவெடிப்பு ஹிந்துத்துவா தொடர்பா?


புதுடெல்லி:மும்பை தொடர் குண்டு வெடிப்பிலும், ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிலும் ஒரே வெடிப்பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது என கருதப்படுகிறது.


அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டுதான் மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளின் பயன்பாடும் கண்டறிந்தால் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுதான் மும்பையிலும் வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக கூறலாம்.

மத்திய தடவியல் சோதனைக்கூடத்தில் நடத்திய பரிசோதனை அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்படவில்லை என கூறிய பொழுதிலும், ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டின் சிதிலங்களை கலினா தடவியல் விஞ்ஞான சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதை நிராகரிக்கவில்லை.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அரசு தடவியல் சோதனைக்கூடத்தின் அறிக்கையை முடிவாக கொள்ளவேண்டாம் என புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டதால் தான் ஓபரா ஹவுஸில் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என மும்பை போலீஸ் கருதுகிறது. 2007 பெப்ருவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ், அம்மோனியம் நைட்ரேட், குரூட் ஆயில் ஆகிய உபயோகித்த வெடிக்குண்டு பயன்படுத்தப்பட்டது.

ஆனால்,இவ்விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்க ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிச்செய்யவேண்டும். ஆகையால், கலினா தடவியல் சோதனைக் கூடத்தின் விரிவான அறிக்கைக்காக காத்திருப்பதாக மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அம்மோனியம் நைட்ரேட்டை ஆர்.டி.எக்ஸில் கலந்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியதையும் போலீஸ் நிராகரிக்கவில்லை.

டி.என்.டி வெடிப்பொருளை உபயோகித்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி கருதுகிறது. பாறையை தகர்ப்பது உள்ளிட்டவைகளுக்கு உபயோகிக்கப்படும் இந்த வெடிப்பொருளின் சக்தி குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் ஆர்.டி.எக்ஸ் பெரும் சேதத்தை விளைவிக்கும். ஓபரா ஹவுஸ், ஜவேரி பஸ்ஸார், தாதர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் எல்லாம் பெரும் சேதம் விளைந்துள்ளது.

குண்டுவெடிப்பிற்கு அம்மோனியம் நைட்ரேட்டின் உபயோகத்தை அனைத்து ஆய்வுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.குண்டுவெடிப்பிற்கு உபயோகித்த டைமர் குறித்து மும்பை ஏ.டி.எஸ் இதுவரை இறுதி முடிவுக்கு வரவில்லை. மோட்டார் சைக்கிளில் குண்டை பொருத்திய முறையையும் போலீஸ் பரிசோதித்துவருகிறது. மலேகானிலும், மொடாஸாவிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளிலும் மோட்டார் சைக்களில் தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது.

யோகா ராம்தேவ் மீது கடத்தல் வழக்கு.

யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான இயற்கை வைத்திய தொழிற்சாலை அரியானா மாநிலம் நர்னால் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து கடுகு எண்ணெய் பாரத்தை டேங்கர் லாரியில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு எடுத்து சென்றனர். அந்த லாரியையும், அதன் டிரைவர் ஹனுமான் என்பவரையும், கடத்திச்சென்று விட்டதாக ஜெய்ப்பூர் கோர்ட்டில் லாரியின் அதிபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் யோகா குரு ராம்தேவ், அவரது உதவியாளர் பால கிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'ராம்தேவ் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
நன்றி; தினத்தந்தி 

Friday, July 15, 2011

சோமாலியாவில் அமெரிக்காவின் புதிய வதை முகாம்

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA தீவிரவாத எதிர்ப்பு நோக்கங்களுக்காக சோமாலியாவை பயன்படுத்துவதாகவும்சோமாலியா தலை நகரில் ஒரு இரகசிய சிறையை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் வெளிவரும் TheNation என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளதாக AFP தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலில் அமெரிக்க மத்திய புலனாய்வு ஏஜென்சி சோமாலியாவில் கடற்கரை பகுதியில் பல சுற்று சுவர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட பல கட்டடங்களை அதன் உள்பகுதில் கொண்ட பலமான சிறைச்சாலை ஒன்றை இரகசியமாக இயக்கிவருவதாக் தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலின் படி இந்த சிறை தொகுதிக்குள் தனியான விமான நிலையமும் உள்ளதாகவும் அந்த சிறை தொகுதியை சூழ பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.விரிவாக
அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது முன்னர் அம்பலமாகிமையும் குறிபிடத்தக்கது.
நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே பயங்கரவாதிற்கு எதிரான போரை மேற்கொள்வதாகவும்  என்று கூறி  பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச  தரத்தில் சட்டவிரோத பயங்கரவாத  நடவடிக்கைகளை கொண்டுள்ளமை  தடவைகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIAயின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 14 நாடுகள் உதவியாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியது.
சுவிஸ் செனட்டர் டிக் மார்ட்டி நடத்திய ஏழு மாத புலனாய்வின் பின்னர் மேற்கின் இரகசியம் வெளிவந்தன. எந்த எந்த வான்பாதையூடாக கைதிகளை  வதைமுகாம்களுக்கு அமெரிக்கா விமானங்கள் ஏற்றி வந்தன. என்பதையும் அதற்கான செய்திமதிப் புகைப்படங்களையும் கைதிகளின் வாக்குமூலங்களையும் வெளியிட்டார்.
இந்த சதியில் ஸ்பெயின், ஜேர்மனி, சைப்ரஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் கீர்ஸ் ஆகிய நாடுகள் பாரிய பங்காற்றியிருப்பதாகவும் மார்ட்டியின் அறிக்கை தெரிவித்தது.
சுவீடன், இத்தாலி, போஸ்னியா, மாசிடோனா ஆகிய நாடுகளில் தங்களது சொந்த மண்ணிலிருந்து மக்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்துள்ளன. என்றும்.
போலந்து மற்றும் ருமேனியாவில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் இரகசிய வதைமுகாம் இருப்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஆப்கான் மற்றும் தாய்லாந்தில் இத்தகைய முகாம்களை அமெரிக்கா அமைத்திருப்பதாக வாசிங்கடன் போஸ்ட் தெரிவித்திருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் அமெரிக்காவின் சோமாலிய வதை முகாம்கள் பற்றிய செய்தி புதியவையாகும்.

ஸ்ரீராமசேனாவின் உறுப்பினர்களுக்கு ராணுவ பயிற்சி!

பெங்களூர்: ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்களுக்கு   பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ராணுவ 
தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்து வருகின்றனர். 

மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித் அளித்த ராணுவ பயிற்சிக்கு சமமான பயிற்சியாகும் இது. ஸ்ரீராமசேனாவின் தேர்வு செய்யப்பட்ட 100 உறுப்பினர்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஆயுதங்கள் உபயோகித்து நடத்தும் பயிற்சிக்கு போலீஸ் தடை விதித்துள்ளதால் ஆயுதங்கள் இல்லாமலேயே இத்தகைய பயங்கரவாத தாக்குதல் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்களை கொண்ட ஆயுதப்படையை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 4 அதிகாரிகள் இப்பயிற்சியை அளிப்பதாக பிரமோத் முத்தலிக் தெரிவித்துள்ளார். 

தனது தொண்டர்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பிரமோத் முத்தலிக் கோரியுள்ளார். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை உபயோகிப்பதற்கான அனுமதி இல்லாததால் கர்நாடகா போலீஸின் சிவிலியன் ரைஃபிள்ஸ் ட்ரைனிங் ப்ரோக்ராமில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று திரும்பி வர பிரமோத் முத்தலிக் இளைஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மாநிலத்தின் பல பகுதிகளில் நடக்கும் சிவிலியன் பயிற்சியில் நுழைய ஸ்ரீராமசேனா தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதர மத சமூகங்களுக்கு எதிராக உபயோகிக்கும் தரத்தில் படையை உருவாக்க முத்தலிக் திட்டமிட்டுள்ளார். சமூகத்தில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் வீடியோ காட்சிகளை பயிற்சியில் கலந்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு காட்டப்படுகிறது.

அதே வேளையில் ஸ்ரீராமசேனாவுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸின் சிவிலியன் ரைஃபிள் பயிற்சியில் ஊடுருவ முடியாது என உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர். வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீராமசேனா பயங்கரவாத தாக்குதல் பயிற்சியை துவங்கி பல நாட்கள் கழிந்தபிறகும் போலீஸ் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவில்லை.

சோமாலியா தொடரும் வறட்சி தொடரும் சோகம்!

 உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் என ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கொமிஷன் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர். 

இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா. விற்கான அகதிகள் உயர் கொமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது, கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார். 

முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர். 

இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது என்று கட்டர்ரஸ் தெரிவித்தார். 

ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.

Tuesday, July 12, 2011

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை பதிவு செய்வது ஒத்திவைப்பு

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விரல் ரேகைகளைப் பதிவு செய்யும் திட்டத்தை அந்நாட்டு அரசு காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
மலேசியாவில் ஏராளமான இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கணக்கெடுத்து விரல் ரேகைகளைப் பதிவு செய்து வைக்க மலேசிய அரசு திட்டமிட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்த இப்பணியை ஒத்தி வைப்பதாக மலேசிய அரசு அறிவித்தது.




இத்தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸ்ஹமூதின் ஹுசைன், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், இதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. எனினும் முதலில் உரிய அனுமதியுடன் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து கணக்கெடுத்து, அவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

அடுத்த கட்டமாக சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளவர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றார் அவர். மலேசியாவில் கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள், தோட்டப்பணியில் ஏராளமான வெளிநாட்டவர்கள் உள்ளனர். முக்கியமாக இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு தங்கியுள்ளனர். இப்போதும் ஆண்டுதோறும் மலேசியாவுக்கு அதிகமானோர் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்களின் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் இங்கேயே தங்கி விடுகின்றனர். அவ்வாறு தங்குபவர்களை மலேசிய அரசு கண்டறிந்து அவர்களை சொந்த நாட்டு அனுப்பி வைக்கிறது. அவர்களுக்கு சிறைத் தண்டனை போன்றவை வழங்கப்படுவதில்லை.

துருக்கி தனது இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

 துருக்கியில் மூன்றாவது தடவையாக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப்அர்துகான் இஸ்ரேலுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதை நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரவேண்டும், காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். இவைகள் இடம்பெற்றால் இஸ்ரேலுடன் சுமூக உறவு மீண்டும் ஏற்படுத்தப்படும் என்றும் இதில் காஸா மீதான முற்றுகையை இஸ்ரேல நீக்குவது முக்கிய நிபந்தனை என்றும் துருக்கி பிரதமர் அர்துகான் பாராளுமன்றத்தில் இஸ்ரேல்  தொடர்பான துருக்கியின் நிலைப்பாட்டை மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளார். விரிவாக

காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து துருக்கிய பாராளுமன்றம் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற  ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது துருக்கி மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரினர். துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 16 வகையான இராணுவ ஒப்ந்தங்கள் நடைமுறையில் இருந்தன . இந்த ஒப்பந்தங்களை உறைநிலையில் வைக்க வேண்டும் என்று அன்று துருக்கி தீர்மானித்தது.
இதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் இந்த தனது இராணுவ தாக்குதல் தொடர்பாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்றும். இஸ்ரேல் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொல்லப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். என்று துருக்கி கோரியது.
ஆனால் இவற்றை இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு புறகணித்து வந்தது . இதை தொடர்ந்து துருக்கிய பிரதமர் தலைமையில் கூடிய துருக்கி உயர் பாதுகாப்பு சபை இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராணுவ உறவுகள் , உடன்படிக்கைகள் என்பன வற்றை முழுமையாக துண்டிக்கும் முகமாக பல படித்தரங்களை கொண்ட ரோட் மெப் ஒன்றை தயாரித்தது .

இந்த ரோட் மெப் துருக்கிகும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள 16 வகையான இராணுவ ஒப்பந்தங்களையும் முழுமையாக துண்டிகும் – ‘தாங்கிகள் , யுத்த விமானங்கள் நவீனமாக்கள்’ என்ற 757 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஒபந்தம். $757 million plane and tank modernization project மற்றும் 1.5 பில்லியன் பெறுமதியான ஏவுகணை ஒபந்தம். missile project worth over $1.5 billion- என்பனவும் அடங்கும் முதல் கட்டத்தில் இஸ்ரேல் நடாத்திய கொலைகளை உடனடியாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த அனுமதித்து சர்வதேச விசாரணை அதிகாரிகள் இஸ்ரேல் வர அனுமதிக்க வேண்டும். என்று நிபந்தனையிட்டது.
இதை இஸ்ரேல் புறகணித்தாள் துருக்கி திருபிப்பியலைத்த தனது தூதுவரை மீண்டும் இஸ்ரலுக்கு அனுப்பாது. என்று அந்த ரோட் மெப் தொடங்கி இறுதியில் இஸ்ரேலுடன் அனைத்து இராணுவ உறவுகளையும் துண்டிக்க ஏதுவாக அமைந்திருந்தது .
கடந்த ஆண்டில் துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், லி-மொன்டே எனும் பிரான்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ப்ரீடம் புளோடில்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதலானது, பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் குற்றச்செயலை ஒத்திருக்கிறது. என்றும் இஸ்ரேல் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரல், இழப்பீடு வழங்குதல், சுயாதீனமான விசாரணையொன்றை ஒழுங்குசெய்தல், காஸா மீதான முற்றுகையை நீக்குதல் முதலான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முன்னெடுப்புக்களை இஸ்ரேல் மேற்கொள்ளாத வரையில் அதன் அடாவடிச் செயற்பாட்டை இலகுவாக மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. என்று அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது இஸ்ரேல் ஒரு விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த விசாரணையை பெரும்பாலானவர்கள் வெறும் கண்துடைப்பாகத்தான் பார்க்கின்றனர். என்பது குறிபிடத்தக்கது .
இதேவேளை துருக்கி பிரதமரின் இஸ்ரேல் தொடர்பான மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு தொடர்பாக தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ள இஸ்ரேல் யுத்த அமைச்சர். விரைவில் வெளிவரும் அறிக்கை காஸா மீதான முற்றுகை சட்டபூர்வமானது என்பதையும், கப்பல்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானது என்பதையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அரசின் புதிய மருத்துவக் காப்பீடு

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக இதுவரை அமலில் இருந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா மாற்றி அமைத்துள்ளார்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 950 வகையான மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்துக்கான மருத்துவச் செலவினைப் பெறலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
"மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில் அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை.

மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே, ""அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இப்போதைய காப்பீட்டு திட்டம்: இந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இப்போதைய காப்பீட்டுத் திட்டம் ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதிமுக அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும்.
புதிய காப்பீட்டுத் திட்டம்: முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்ச மருத்துவச் செலவாக நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு ரூ.1 லட்சமும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்காண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சத்துக்கான மருத்துவச் செலவினைப் பெற இயலும்.
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 642 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. இந்த சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு இப்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்: மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும்.
அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்குப் பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவைச் சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.
ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில் பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.
நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும்.
இந்த வகையிலான கட்டணங்களைப் பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், இப்போதுள்ள முறைகளை மாற்றி சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுவது போன்று அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தனி-சிறப்புப் பகுதிகள்: புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி மற்றும் சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும்.
இதனால் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவர்.
அரசே நேரடியாக வழங்கும்: புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுவத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு இப்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வித்தியாசம் என்ன?

திமுக அரசின் காப்பீட்டுத் திட்டம்

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம்
642 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதி
பரிசோதனைக்கான செலவுத் தொகை
காப்பீட்டுத் திட்டத்தில் அடங்காது
சிகிச்சை முடிந்த பிறகு பரிசோதனை மற்றும் இதர செலவுகள் வழங்கப்படாது

அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம்
950 வகையான சிகிச்சைகளுக்கு அனுமதி
பரிசோதனைக்கான செலவுத் தொகை காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும்
பரிசோதனை மற்றும் இதர செலவுகள் காப்பீட்டில் சேர்க்கப்படும்.

Monday, July 11, 2011

காரட்டும்-CARROT அதன் சத்து‌க்களு‌ம்

காரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. பல நூற்றாண்டுகளில் பலவித மாறுதல்களுக்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட்டு, இனிப்புடன் கிடைக்கக்கூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.  காரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடியது. 


ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் காரட் கிடைக்கின்றது. காரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது.  பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம்.  




100 கிராம் காரட்டில் உள்ள சத்துக்கள்:  


சக்தி 41 கலோரிகள்  
கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம் 
சர்க்கரை 5 கிராம் 
நார்சத்து 3 கிராம் 
கொழுப்புச் சத்து 0.2 கிராம்  
புரோட்டின் 1 கிராம்  
வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)  
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)  
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)  
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்) 
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)  
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)  
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)  
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)  
கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)  
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)  
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)  
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)  
பொட்டாசியம் - 5% (240 மில்லி கிராம்)  
சோடியம் 2.4 மில்லி கிராம்

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல் நகல் (xerox)
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் : 
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை(Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்துகொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்


11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)
தகுதிகள் :
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% 
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
சாதி சான்றிதல்
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவும்
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.