Wednesday, August 31, 2011

ஆஸி.யில் முகத்திரைக்கு நிபந்தனை!


மெல்போர்ன் :  பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டி ஆஸ்திரேலிய காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கி காட்ட வேண்டும். என, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை மூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைக் கண்டறிய, தேவைப்படின் இஸ்லாமிய பெண்கள் தங்கள் முகத்தை காவல்துறையினரிடம் காண்பிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை தற்போது விக்டோரியா மாகாணமும் பின்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரம் அம்மாகாண காவல்துறையினரிடம் ஏற்கனவே இருந்த போதிலும், இனி, இரு சக்கர வாகனங்களில் வரும் சந்தேகத்திற்குரிய நபர்களையும் இப்புதிய உத்தரவின் கீழ் விக்டோரியா காவல்துறையினர் விசாரிக்க முடியும்.

செப்டம்பர் 2 முதல் அரசு கேபிள் டி.வி.

சென்னை, ஆக.30: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலமான கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பேரவை விதி 110-ன் கீழ் தாமாக முன்வந்து அவர் சமர்ப்பித்த அறிக்கை:
"முந்தைய அரசால் 2007-ல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. 2008 ஜூலையில் ஒளிபரப்பைத் தொடங்கியது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளை அந் நிறுவனம் வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. 31.3.2011 தேதியில் இது 432 இணைப்புகள் என்ற அளவில் சுருங்கிவிட்டது. திமுக அரசு தொடங்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டுவிட்டது.




இப்போது அரசு கேபிள் டி.வி. நடவடிக்கைகளை புனரமைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கெனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, வேலூர் நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன. மீதி 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும் அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி 34,344 கேபிள் ஆபரேட்டர்கள், எம்.எஸ்.ஓ.க்கள் இந் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் 1.45 கோடி கேபிள் இணைப்புகள் உள்ளன.


தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 2 முதல் ஒளிபரப்புச் சேவைகள் தொடங்கப்படும்.
இதற்காக சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக ரூ.70 மட்டும் ஆபரேட்டர்கள் வசூலிப்பார்கள் என
ஜெயலலிதா தெரிவித்தார்.

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், 


இன்று கொண்டாடும் அணைத்து சகோதர- சகோதரிகளே! உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த

'பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, August 30, 2011

சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்த தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது- மத்திய அரசு

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.


இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய பேருக்கும் செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது. குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.


உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூற முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்.

லோக்பால் ஊழலை ஒழிக்குமா? - ஓ பக்கங்கள், ஞாநி


நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனத்தில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அண்ணா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு தரப்பிலும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன. 


அசல் பிரச்னையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும், அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக சொந்தப் பணம் 50 கோடி ரூபாயை நன் கொடையாக அளித்தவர்கள்.  அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து வெற்றி பெற்றவர். மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரசார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார். இப்போது அண்ணா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மகசாசே விருது பெற்றவர்கள். நந்தன், அண்ணா ஹசாரே இருவரும் பத்ம பூஷன் பெற்றவர்கள்.




நந்தன் நீலகேணி, “லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று லோக்பால். ஊழலில் இருவகை. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலிடத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தர வேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான தீர்வுகள் தேவை.  “எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும் விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது” என்கிறார் நந்தன். “எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையைத் தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது” என்பது நந்தன் கருத்து.


இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.கள் தனி. அரசு ஊழியர்களில் உயர் அதிகாரிகள் தனி, கீழ் மட்டம் தனி. நீதித் துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இதுதவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான் கையும் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி அவர் சார்ந்திருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து. 

நந்தன், அருணா இருவருமே அண்ணா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்ட போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்ய வேண்டும் என்றெல்லாம் அண்ணா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்ய முடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு, பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொதுமக்களிடையேயும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்து வருகிறது. முதலில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்.டி.டிவி, ஹெட்லைன்ஸ் டுடே, சி.என். என். ஐ.பி.என். சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன. 




 சி.என்.என். ஐ.பி.என். ஒரு சமரசத் தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும். அண்ணா அணியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அண்ணா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பி.கள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம்பெற வேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்ட முன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி, தீபாவளிக்குள் லோக்பால் சட்டத் தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை. இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்ட முன்வடிவு பாராளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அண்ணா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம்.

லோக்பால் வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம்?  

லோக்பால் ஒன்றும் அண்ணா ஹாசாரேவின் கண்டுபிடிப்பல்ல. உலக அளவில் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது. உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது (அதுதான் அரவிந்த் கேஜரிவால் பிறந்த வருடம்!). மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக் பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல். ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நிலைக்குழுக்களும் விவாதித்து, கருத்துசொல்லியிருக்கின்றன.  
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. மாநிலத்துக்கு ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகா யுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். இவர் அண்ணா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அண்ணாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்காற்றியவர்.லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அண்ணாஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை மன்மோகன் சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார். 
அதன்பிறகுதான் அண்ணா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக, தாங்களும் இடம்பெற வேண்டுமென்று அண்ணா உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை உருவாக்குவதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அரசு தான் தீர்மானித்த மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா தங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணா விரதம் தொடங்கினார். 
இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம்? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்லுகிறது?  
பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசி வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்க வேண்டும் என்கிறது அண்ணா குழு.ஆனால் வித்தியாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள்.அது அப்படித்தானா?
(விவாதிப்போம்)
1.எட்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததுமே பதறிப் போய் அண்ணாஹசாரேவுடன் பேச்சு நடத்தும் அரசு ஏன் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளாவுடன் இதே போல பேச்சு நடத்த முன்வருவதே இல்லை? ஷர்மிளாவை மட்டும் தற்கொலை முயற்சி என்று கைது செய்து கட்டாய குளூகோஸ் ஏற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதை ஏன் அண்ணாவுக்குச் செய்யவில்லை?

2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா?  

3. இந்தியாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைக்கப்படும் கூடன்குளத்தில் அந்தக் கிராம மக்கள் சுதந்திர தினத்தன்று நடத்திய கிராம சபையில் தங்கள் ஊரில் அணு உலை இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறை வேற்றி, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அரசு அலுவலகத்துக்குச் சென்று ரேஷன் கார்டுகளைத் திருப்பித் தந்த போராட்டத்தை ஏன் தமிழ், ஆங்கில டி.வி.சேனல்கள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை தேசியப் பிரச்னையாகக் கருதவில்லை?

Monday, August 29, 2011

மூவரின் தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் தமக்கில்லை - ஜெயலலிதா அறிவிப்பு!


முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்திக் கொலைக் குற்றவாளிகள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தமக்கில்லை என்றும் அரசியல் கட்சிகள் தமக்கு அதிகாரம் இருப்பதாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்னர் மூவரையும் காப்பாற்ற தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் மீண்டும் குடியரசுத் தலைவருக்குத் தான் மூவரும் தங்கள் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டத்தைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ முதல்வருக்கு மூவரையும் காப்பாற்ற அதிகாரம் இருப்பது போன்று தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்த ஜெயலலிதா இனி தமக்கு அதிகாரம் இருப்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூவரின் உயிரைக் காப்பாற்ற செங்கொடி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்டதாக வந்த செய்தி தமக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கியதாகவும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தூக்குமேடை தயார்! மருத்துவப் பரிசோதனையும் முடிந்தது


வேலூர்: வேலூர் சிறையில் தூக்குத்தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதற்கென்று என்று தனியாக பணியாளர்கள் எவரும் இல்லை. இறுதியாக 1983ம் வருடம் மனைவி,மற்றும் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக சென்னையை சேர்ந்த சேட்டு என்ற சந்துரு தூக்கிலிடப்பட்டார். அப்போது தண்டனையை நிறைவேற்ற சென்னையில் இருந்து ஒரு காவலர் வேலூர் வந்து தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார்.
இதற்கு பின்னர் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போது சிறை அதிகாரிகள் தூக்கு மேடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பேரை மட்டுமே தூக்கு போடும் வசதி உள்ளது. தற்போது தூக்கு தண்டனை கைதிகள் 3 பேர் உள்ளதால் ஒரு கைதியை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் மணிலா கயிறுகள் 4 ஜோடிகள் உள்ளது. இதன் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.  இன்று காலை சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் வழக்கம் போல் காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் 3 பேரையும் சிறை மருத்துவ அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது 3 பேரும் நலமாக இருப்பது தெரியவந்தது.
தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு வந்ததை தொடர்ந்து வேலூர் ஆண்கள் ஜெயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஜெயிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் ரோந்து வருகின்றனர்.

Sunday, August 28, 2011

பாபரி மஸ்ஜித் வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு


டெல்லி பாபரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியத்திற்கு வழங்கிட உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும், ஆதலால் அந்த நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் 2010 செப்டம்பர் 10 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் என்.எல்.கணபதி, ஆர்.சி.கப்ரியேல் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். செப்டம்பர் 2ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் ருபேந்தர் சூரி ஆஜராவார்.
முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு விசித்திரமானது என்று கூறி நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்தத் தீர்ப்பை இடைநிறுத்தம் (Stay) செய்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 27, 2011

முத்துபேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து

SEP:27 இன்று மாலை 5 மணி அளவில் முத்துப்பேட்டை செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த  டிராக்டர் குறுக்கே மாடு புகுந்தது இதனால் டிராக்டர் ஓட்டுனர்  டிராக்டர்  நிறுத்த முயன்ற போது டிராக்டர்  கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில்  கவிழ்ந்தது.


டிராக்டரின் பின்னால் வந்து கொண்டிருந்த பைக்கும் விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இருவருக்கு காயம் ஏற்பட்டது, அதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!

என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது.




சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ள வியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன. தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை. மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.


இறுதியாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவர் பாகிஸ்தானைச் சார்ந்த லஷ்கர் போராளி இயக்கத்தின் பிராந்திய கமாண்டர் அபூ உஸ்மான் என ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு கஷ்மீரி ஹிந்து ஆவார்.

1989-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் கஷ்மீர் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவோர் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மக்களை முழுவதும் பீதியில் ஆழ்த்த தடை உத்தரவு உள்ளிட்ட தந்திரங்களை ராணுவமும், போலீசும் கையாழுகின்றன.

பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது பல இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாலியல் வன்புணர்வு என்பது மக்களை அடக்கி ஆளுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது என ரூர்த்வா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர்.மைதி கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையொன்றும் இதனையே கூறுகிறது.

உலகிலேயே அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கஷ்மீரி பெண்கள்தாம் என ’டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற ஆய்வில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரு தினங்களும் மூன்று வீதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாவதாக பிரிட்டனில் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் பேராசிரியராக பணியாற்றும் இந்தியரான அங்கனா சாட்டர்ஜி கஷ்மீரில் அரச பயங்கரவாதத்தைக் குறித்து விரிவாக ஆய்வுச் செய்துள்ளார். மக்களை அடக்கி ஒடுக்க ராணுவத்திற்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காக கஷ்மீரில் தீவிரவாத-ஊடுருவல்களை குறித்து ஊதிப் பெருக்கிய பொய்கள் பரப்புரைச் செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

சுதந்திர இந்தியா அதன் குடிமக்கள் மீது இவ்வளவுதூரம் கொடுமை இழைத்த பிறகும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் ‘தீவிரவாதம்’ என்ற லேபலை எதிர்ப்பவர்கள் மீது சுமத்துவதாகும். இதனையும் முறியடித்து விசாரணையை மேற்கொண்ட அங்கனா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரையும் தொந்தரவு அளித்து ஆய்விலிருந்து பின்வாங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ஷாப்பிராக்கிற்கு கஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மகளிர் எம்.பிக்களின் குழுவினர்கள் கூட மன்ஸ்காம் போன்ற சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவு நெருக்கடியிலும் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச், சர்வதேச தீர்ப்பாயம், செஞ்சிலுவை சங்கம், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல வேளைகளிலும் கண்டறிந்த உண்மைகள் நம்மை வெட்கமடையச் செய்கின்றன. ஆட்சியாளர்களைப் போலவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மகளிர் கமிஷன் ஆகியனவும் கஷ்மீர் விவகாரத்தில் கையாலாத தன்மையை வெளிப்படுத்துகின்றன.

மோதல் படுகொலைகளை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்த முயன்றார் முன்னாள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர். குடும்ப பாரம் ஒருபுறம், மன அழுத்தம் மறுபுறம் என காணாமல் போன கணவனை எண்ணி அவதியுறும் கஷ்மீரின் ‘அரை விதவைகளை’ (காணாமல் போன கணவர் உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாமல் துன்பத்தில் உழலும் கஷ்மீர் பெண்களுக்கு ‘அரை விதவை’ என பெயரிட்டுள்ளனர்) சந்தித்து ஆறுதல் கூறக்கூட தேசிய மகளிர் கமிஷனால் இயலவில்லை.

கஷ்மீர் இன்று தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தேசத்திற்கு அவமானத்தை தேடி தரும் ராணுவத்தின் அக்கிரமங்கள் நிறைந்த மாநிலமாகவே காட்சி தருகிறது. ஒரு மாநிலத்தின் மக்களை அவதிக்கும் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு நாம் எவ்வாறு உலகத்தின் முன்னால் தலை உயர்த்தி நிற்க இயலும்? அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கஷ்மீரின் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை வாபஸ்பெற வேண்டும் என்ற பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இன்னமும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளது.


கஷ்மீர் மக்களின் துயரத்தை துடைக்க விரும்பினால் அரசு முதலில் செய்யவேண்டியது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெறச் செய்வதாகும். கஷ்மீரில் சுமூகமான அரசியல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவம் தடையாக உள்ளது.
ஜனநாயக நாடு என பெருமைக்கொள்ளும் நாம் ஒரு தேசத்தின் கொள்கை முடிவுகளை ராணுவத்திற்கு விட்டுக் கொடுப்பது வெட்ககேடானது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தவே வழிவகைச் செய்யும்.

கட்டுப்பாடற்ற அதிகாரங்களை ராணுவத்திற்கு வழங்கியதன் விளைவுதான் மாநில மனித உரிமை கமிஷன் கண்டறிந்த உண்மைகள். இனிமேலும் கஷ்மீரின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைத்து கஷ்மீரை ஆபத்தான பள்ளத்தாக்காக மாற்றிவிடாதீர்கள். தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திய கொடுங்கோலர்களை கண்டறிந்து தண்டனை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம், மனித நேயம் இவற்றிற்கெல்லாம் என்னதான் பொருள்?

விலை போகும் நீதித்துறை! கொக்கரிக்கும் கொலைகாரர்!

சென்னை:  காஞ்சி வரதராஜ பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் காஞ்சி ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசும் ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.  

நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார்.






இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2  இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக்கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளியாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக ஏதோ ‘டீல்’ நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக்காரர் கெளரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந்திரரின் உதவியாளர் என்று அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

இந்த மனு மீது வார இறுதியில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது. இதன்மூலம் புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ஜெயேந்திரர். இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் திமுக ஆட்சியின்போது இந்த வழக்கின் சாட்சிகள் அடுத்தடுத்து ஜெயேந்திரருக்கு ஆதரவாக பல்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும், சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது.

சங்கர மட காம கேடிகளை.. அபச்சாரம் அபச்சாரம் காம கோடிகளை உலக குரு அதாவது ஜெகத்குரு நமது பெருமைக்குரிய காஞ்சி காமகோடி சங்கராச்சாரியாரின் தேவலீலைகள் உலகம் அறிந்ததே. அதில் சில முக்கியமான லீலைகளை பார்ப்போம்.

1. 1986 இல் சங்கரமடத்தை போட்டு விட்டு... வெங்கெட்(ட)ராமன் பெண்ணை இழுத்து கொண்டு 1 மாததிற்கு மேல் குடும்பம் நடத்தியதையும், ஓடி போன சங்கராசாரி, வெங்கெட்(ட)ராமன் பெண் ஆகிய இரண்டு ஓடுகாலிகளையும் சிபிஐ தேடி கண்டு பிடித்ததையும், வெங்கெட்(ட)ராமன் மனைவி தலைகாவிரிக்கு போய் தனது பெண்ணை சங்கராச்சாரியிடம் இருந்து இழுத்துக்கொண்டு வந்ததும் பெரிய சங்கராச்சாரியின் சங்கர புராணம்.





2. சின்ன சங்கராச்சாரி பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், சங்கர மடம் நடத்தும் கல்லூரி விடுதிக்கு தினமும் இரவில் சென்று இரவு 1 மணி முதல்... காலை 5 மணி வரை...விடுதியில் இருந்த பல பெண்களை கெடுத்து சாதனை புரிந்ததும்,  நடிகை ஸ்வர்ணமால்யாவை வைத்திருந்ததும், அவள் கணவனிடம் இருந்து அவளை அபகரித்து வைத்து கொண்டதும், பிறன்மனை நோக்கி அசிங்கமான காரியம் செய்ததும் இது வெல்லாம் சின்ன சங்கராச்சாரியின் சங்கர புராணம்.

3. காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமனை கூலிபடையை வைத்து கொலை செய்ததும், அதன் காரணமாக சிறையில் இருந்ததும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்து முக்கிய சாட்ச்சிகளை கலைத்ததும், இப்பொது நீதிபதிக்கு பணம் கொடுத்து கேசை முடிக்கப் பார்ப்பதுமாக இவரது புராணங்கள் தொடர்கிறது.

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா



வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திர போருக்கு ஒப்பானதாக ஊழலுக்கு எதிராக தற்போது இந்தியாவின் தாத்தாவாக காந்தியின் அவதாரமாக மீடியாவால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேயின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அன்றைய சுதந்திர போரை விட மிக பிரபலமான ஒன்றாக தேச எல்லைகளை தாண்டி சர்வதேச ஊடகங்களின் கதாநாயகனாக மாறியிருக்கிறார் இந்த தாத்தா.
இன்று பத்திரிகைகள், முக புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இப்புரட்சிக்கு எதிராக பேசுபவர்கள் சமூக விரோதிகளாக, தேச துரோகிகளாக சித்தரிக்கபடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கின்றோம். புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சொன்னதை போல் இன்று அன்னாவின் குழுவால் முன்வைக்கப்படும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் என்ன கிடைக்கும் என யோசித்தால் பின்வருபவை கிடைக்கலாம் a. வந்தே மாதரம் b. பாரத் மாதா கி ஜெய் c. இந்தியா தான் அன்னா, அன்னா தான் இந்தியா d. ஜெய் ஹிந்த்
இன்று ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னாவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் படித்த மேல்தட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களே. எலக்ட்ரிக் பேன்கள் வீச, தில்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள் இரவு பகலாக பணி புரிந்து இடத்தை சமப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்ஷிப்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தின் மூலம் அன்னாவின் எடை சில கிலோக்கள் குறைந்தது தவிர வேறொன்றும் சாமானியனுக்கு நடக்க போவதாக தெரியவில்லை.
ஏற்கனவே இருக்கும் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் போது ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் மறைந்து விடும் அளவுக்கு ஊழல் எளிதானதல்ல என்று இன்போஸிஸின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகினியே சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பது தான் அன்னாவின் பணி என்றால் இவரின் அணியின் உள்ள சந்தோஷ் ஹெக்டேவை தலைவராக கொண்ட லோக் ஆயுக்தா மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களைஉள்ளடக்கிய பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்காமல் காங்கிரஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் புரியவில்லை. தலைவரே சூட்கேஸில் பணம் வாங்குவதில் தொடங்கி சவப்பெட்டி வரை ஊழல் நடத்திய பரிசுத்த பா.ஜ.கவும் இவரின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க மெனக்கெடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் போராட்டம் ஊழல் எதிர்ப்பா அல்லது வெறும் காங்கிரஸ் எதிர்ப்பா என்று?
அன்னாவை ஆதரிப்பதாக சொல்லும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட அவரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் சந்தோஷ் ஹெக்டே அறிக்கையால் ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப் பட்டு பதவி பறிக்கப் பட்ட எடியூரப்பா அமைச்சரவையில் பதவி வகித்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கேட்டு பாஜக வை மிரட்டி வரும் நிலையில் வேறு யாருக்கும் அவர்கள் முன்னர் வகித்து வந்த இலாகாவை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக மறு பக்கம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என அண்ணா ஹசாறேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலே. மேலும் நல்லாட்சி நடத்துகிறோம் என முழங்கும் மோடியின் குஜராத்தில் கூட இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பு தோற்றுவிக்கப் பட வில்லை என்பதை விட வேறென்ன வேண்டும் இவர்களின் நேர்மைக்கு.


உடல்தகுதி அடிப்படையில் தகுதி பெறாமலேயே அவசர தேவையிருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த அன்னா ஹசாரே தன் கிராமத்தை சீர்படுத்தியது குறித்து இந்திய மீடியாவே புகழ்ந்து தள்ளுகிறது. ஆனால் அவரின் கிராமத்தில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் தொடர்வது குறித்தும் தலித்துகள் ஜாதி பெயர் கொண்டே அழைக்கபடுவது குறித்து ஊடகங்கள் மறைப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. இன்னும் அம்மாதிரி கிராமத்தில் உள்ள பள்ளிகூடங்களில் விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களே சுதந்திர வீரர்களாக கற்பிக்கப்படுதலையும் அங்குள்ள சினிமா தியேட்டரில் கூட இந்து கடவுள்களின் மேன்மைகளை சொல்லும் படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படுவதையும் வசதியாய் மறைத்து விடுகின்றன.
தன்னை காந்தியவாதியாக காட்டி கொள்ளும் அன்னா ஹசாரே காந்திய கோட்பாடுகளுக்கு எதிராக ஊழல் செய்பவர்களுக்கு உடனே மரண தண்டனை, மக்கள் தொகையை குறைக்க கட்டாய குடும்ப கட்டுப்பாடு என சர்வதிகார தோரணையில் செயல்படுதலை பார்க்க முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் இருக்கும் போது வீதியில் போராட்டம் நடத்துவதன் மூலம் தான் விரும்பும் சட்டத்தை கொண்டு வருவது அதே எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது. அதனால் தான் எமர்ஜென்ஸியின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவாவால் முன் வைக்கப்பட்ட “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” எனும் முழக்கத்தை போன்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி “அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்று முழங்கியது கவனிக்கப்பட வேண்டியதாகும். தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஷா அன்னா ஹசாராவின் போராட்ட நடைமுறைகள் எமர்ஜென்ஸியை நினைவுபடுத்துவதாகவும் என்னை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சர்வதிகார தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
தனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை நிறைவேற்ற அழுதாவது காரியம் சாதிக்கும் குழந்தையை போல் உண்ணாவிரதத்தை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாகவே அன்னாபயன்படுத்துவதாக தெரிகிறது. இப்போது மக்கள் ஆதரவு இருப்பதால் ஜெயிலை விட்டு வர மறுத்த அன்னா ஏப்ரல் 1998ல் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்ட போது 5000 ரூபாய் ஜாமீன் கட்டி வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கோரிக்கையின் பேரில் 2003ல் அமைக்கப்பட்ட பி.பி. சாவந்த் கமிஷன் அன்னாவின் டிரஸ்டுகளை பற்றியும் புகார்களைகூறியது. அன்னா ஹசாரேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவரின் டிரஸ்டான ஹிந்து சுவராஜ் டிரஸ்ட் 2,20,000 ரூபாய் செலவு செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்றும் ஜில்லாபரிஷத்துக்கு தன் டிரஸ்ட் சார்பாக 11 ஏக்கர் நிலம் ஒதுக்கியது விதிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் பிரஷ்டிச்சர் விரோதி ஜனன்தோலன் டிரஸ்டின் கணக்குகள் ஒழுங்காகபராமரிக்கப்படவில்லை என்றும் மதசார்பற்ற கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு சாந்த் யதவ்பாபா ஷிக்ஷன் பிராசரக் மண்டல் டிரஸ்டின் மூலம் கோவிலை புதுப்பித்ததுபோன்றவை தவறென்றும் அவ்வறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பது ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்கள் குறை கூறியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அப்சல் குரு போன்றவர்களை தூக்கிலிடக் கூடாது என்று கூக்குரல் வலுக்கும் இந்நேரத்தில் தூக்கிலிடுவதை வலியுறுத்தும் அன்னாஹசாரேவின் போராட்டம் சர்ச்சைகளை வலுப்படுத்துகிறது.


பாபா ராம்தேவின் போராட்டத்தை மத்திய அரசு அடக்க முயன்ற போது போராட்டக்காரர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை ஜனநாயகத்தை நசுக்குவதாகும் என்றும் மனித குலத்தின்மீதான வடு என்று ஆவேசப்பட்ட அன்னா நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றவாளியாக்குவதாக குறிப்பிட்டார். ஏன் அன்னா இதே ஆவேசத்தை மஹாராஷ்டிராவில் விவசாயிகள்தற்கொலை செய்து கொண்ட போதோ அல்லது சிவசேனை கும்பல்களால் பிற மாநிலத்தவர்கள் அடித்து விரட்டப்பட்ட போதோ காட்டவில்லை. குஜராத்தின் முதல்வர் மோடியை புகழ்ந்தவர் 3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது ஏன் ஆவேசப்படவில்லை, மோடியை குற்றவாளியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அன்னாவின் போரட்டத்தை பிரபலப்படுத்துவதில் மேல்தட்டு ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும். மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக பத்து வருடங்களாகபோராடும் ஷர்மிளாவின் போராட்டமோ கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடும் கிராம மக்களின் போராட்டமோ தங்கள் சொந்த இடங்களில் இருந்து தாரளமயமாக்கல்பெயரால் வெளியேற்றப்படுவதற்கு எதிராக ஒரிஸாவில் போஸ்காவுக்கு எதிராக போராடும் போராட்டங்களோ போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்களோ ஊடகங்களின் கண்களில் படுவதில்லை.
மத்திய அமைச்சரவையில் இவர் தான் அமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்யும் அளவுக்கு சர்வ வல்லமை பெற்ற ஊடகங்களும் உண்டு என்பதை இந்தியாவிற்கு வெளிப் படுத்தியவர் நீரா ராடியா. இந்தியாவில் லாரிகள் வேலை நிறுத்தம் என எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு என மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களின் நேர்மையும் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது. 2G ஊழல் வழக்கில் பல்வேறு டாடா, அம்பானி போன்ற பெரிய கார்பரேட் கம்பெனிகளும் கோடி கொடியாக முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை எழுதி இருக்குமா இந்த ஊடகங்கள். இன்று ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாம்.
இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அன்னா முன்னிலைப்படுத்தப்படுகிறார். இன்னும் தெளிவாகசொல்ல வேண்டுமென்றால் அன்னாவின் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், போராட்ட ஒழுங்குமுறைகள், வெறியேற்றப்பட்ட தேசபக்தி போன்றவை இட ஒதுக்கீட்டுக்குஎதிரான போராட்டம், உலக கோப்பை வெற்றி ஊர்வலம், அணு சக்தி வெற்றி கொண்டாட்டம் போன்றவைக்கு ஒத்திருப்பதை தெளிவாக கண்டு கொள்ள முடியும்.
அன்னாவின் கனவு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 25 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, காந்தி கனவு கண்டது போன்று அவரவர் ஜாதிக்கு ஏற்ப ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வெட்டியான், துப்புரவு தொழிலாளி, ஒரு நாவிதன் என்று தன்னிறைவு கொண்ட கிராமமாக அன்னாவின் கனவு கிராமம் இருப்பது, சமநிலையை நோக்கிய இளைஞர்கள்எனும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தோடு அன்னாவின் தளபதிகள் இணைந்திருப்பது, கோகா கோலா, லெஹ்மன் பிரதர்ஸ் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களில் நிதியுதவி பெறும் அன்னாவின் தளபதிகளின் என்.ஜி.ஓக்கள் போன்றவை அன்னாவின் போராட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கிறது. போர்ட் பவுண்டேசனிடம் இருந்து கடந்த 3 வருடமாக கபீர் என்ற அமைப்புக்காக அதனை நடத்தி வரும் அர்விந்த் கேஜ்ரிவால் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்று இருக்கும் நிலையில் நாளை போர்ட் பவுண்டேசன் மீது முறைகேடு புகார் வரும் நிலையில் இவர்களின் நடவடிக்கை எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?
பிரதமரும் நீதித் துறையும் தங்களின் ஜன் லோக்பாலுக்குள் வர வேண்டும் என அடம் பிடிக்கும் அன்னா ஹசாரே குழுவினர் தாங்கள் பொறுப்பு வகிக்கும் தொண்டு அமைப்புகள் மட்டும் ஜன் லோக்பால் வரம்புக்குள் வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நேர்மை இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்து அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். இவர்கள் என்ன ஊழலே புரிய மாட்டார்கள் என இறைவனிடம் வரம் வாங்கி வந்தவர்களா?
அம்பேத்கர் குறிப்பிட்டதை போன்று இந்திய ஜனநாயகம் தனிமனித வழிபாடால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று சொன்னதை போல் சாதாரண யோகா வாத்தியாரால் சில ஆண்டுகளில் தன் மாணவர்களை சீடர்களாக்கி அவர்களை தொண்டர்களாக்கி பின் அரசுக்கே சவால் விடும் அளவுக்கு உயர முடிகிறது. அப்படி அன்னாவை பின்பற்றும் ஓர் ஆட்டு மந்தை சமூகத்தைசமைக்கும் முயற்சியில் இந்திய ஊடகங்கள் தீவிரமாக குதித்திருக்கின்றன. தலித் சமூக ஆர்வலர் காஞ்சா இலய்யா குறிப்பிட்டதை போல் “அன்னாவின் போராட்டம் சமூக நீதிக்கெதிரானமனுதர்ம இயக்கம். பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினருக்கு இதில் எவ்வித பங்குமில்லை” என்று குறிப்பிட்டதை போல் ஒரு சாராரின் விருப்பத்தை பொது புத்தியில் புகுத்தும் முயற்சியாகவே அன்னாவின் போராட்டம் தெரிகிறது.
அன்னாவின் போராட்டத்தை கண்மூடித்தனமாய் ஆதரிப்போர், அதையே தேச பக்திக்கான இலக்கணமாய் சொல்வோர் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். ஆயுத புரட்சியின் மூலம் கடைநிலை மக்களை ஒன்று திரட்டி போராடும் மாவாயிஸ்டுகளின் நோக்கம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறிவது எனில் மேல் தட்டு மக்களை, அறிவு ஜீவிகளை, ஊடகங்களை வைத்துநடத்தப்படும் அன்னாவின் இயக்கம் வெற்றி பெற்றால் அதே விளைவு தான் ஏற்படும். ஆம் எனவே இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது மாத்திரமல்ல சட்டத்தை தன் கையில் தனிநபர்கள் எடுப்பதும் அனுமதிக்கப்பட கூடிய ஒன்றல்ல.

சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் மனு 26 Aug 2011


புதுடெல்லி:சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதித்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் நடத்தும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள மேற்கண்ட மாநிலங்களுக்கு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அளித்த மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.


அம்மனுவில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான மக்களின் அடிப்படை உரிமை அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் தடைச் செய்யப்பட்டுள்ளது. மக்களின் மனதில் தேசப்பற்றையும், ஜனநாயக மதசார்பற்ற இந்தியா என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் இதர அமைப்புகளைப் போலவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.
2004 ஆம் ஆண்டு முதல் கேரளாவிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுப்பில் பங்கேற்கவும், அதனை காணவும் வருகை தருகின்றனர். அமைதியாகத்தான் அணிவகுப்பு எல்லா வருடங்களும் நடத்தப்படுகிறது என போலீஸ் பதிவேடுகளிலும், ஊடக செய்திகளிலிருந்தும் நிரூபணமாகிறது.
இவ்வளவு காலமாக அணிவகுப்பு தொடர்பாக எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஏதேனும் சட்ட-ஒழுங்கு பிரச்சனைகள் பதிவுச் செய்யப்படவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக போலீசிலும், இம்மாநிலங்களின் ஆட்சியாளர்களின் ஒரு பகுதியினரும் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை தடைச்செய்ய முயலுகின்றனர்.


கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் சுதந்திர தின அணிவகுப்பு மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகள் கூட நடத்துவதற்கு அனுமதியை மறுத்துள்ளன. ஒவ்வொரு அமைப்புகளும் தனித்தனியாக சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்துவது சட்ட-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் என கூறி இத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அன்றைய தினம் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை.
பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆளும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவ்விவகாரத்தில் பாரபட்சத்தை அதிகாரிகள் காட்டியுள்ளனர். இவ்வாறு இ.அப்துற்றஹ்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குடிமக்களின் உரிமைகளை மறுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தலையிட வேண்டும் எனக்கோரி அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனையும் பாப்புலர் ஃப்ரண்ட் குழு சந்தித்து மனு அளித்துள்ளது. 

Saturday, August 6, 2011

ஹிந்துத்துவா ஒரு தேசிய அபாயம்! ப. சிதம்பரம்!


AUG 5, புதுடெல்லி: ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதக் குழுக்கள் ஆபத்து நிறைந்த வையாகும். எனவே வலதுசாரித் தீவிரவாத்துக்கு எதிராகவும் உறுதியுடனும் அச்சப்படாமலும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஹிந்துத்துவா வலதுசாரித் தீவிரவாதமும் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு உள்நாட்டு எதிரியுமாகும். அதை எதிர்நோக்கும் வகையில் உளவுப் பணிகளைப் பாதுகாப்புப் படையினர் வலுப்படுத்த வேண்டும். அவ்வாறான தீவிரவாதம் உருவாகக் காரணமானவற்றைக் கண்டறிந்து அவற்றைக் களைய பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்க்க ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. பல கட்டங்களில் எதிரிகளை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடிவதில்லை. எனவே சாதாரண மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மற்றும் அதன் துணை அமைப்புகள் உலெகெங்கும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து மத துவேசத்தை ஏற்ப்படுத்தி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் சக்திகளாக செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.