Friday, December 30, 2011

திறப்பு விழாவுக்கு தயாரான குத்பா (சின்ன பாபரி) பள்ளி !!

இன்ஷா அல்லாஹ்  இன்று காலை சரியாக 9.30  மணியளவில்  முத்துப்பேட்டை குத்பா பள்ளி திறக்கப்படுகிறது இன் நிகழ்ச்சியில் வுல்லூர் வாசிகள் மற்றும் சுத்து வட்டரா  ஊர்களில்  உள்ள  அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுகொள்கிறோம்....




Tuesday, December 27, 2011

அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது!

DEC 27: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.
1) ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் 
அன்னா ஹஸாரே



2) 1983-ல் 
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில்ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார். 



3) 1965 ல் இந்தியா, பாகிஸ்தான்  யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார்.

4) நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில்  பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் 
அன்னா ஹஸாரே. 
அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.


இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன.  "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படி பட்ட ஒரு பெய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

Saturday, December 10, 2011

சுட்டுவீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை ஈரான் வெளியிட்டது

டெஹ்ரான்:ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோ காட்சியை ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
வான் எல்லையில் அத்துமீறி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கிழக்கு ஈரானில் உளவு வேலையில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன விமானி இல்லாத உளவு விமானம் ஆர்.க்யூ-170ஐ ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருந்தது.


பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படாத உளவு விமானத்தை ஈரான் ராணுவ அதிகாரிகள் பரிசோதிப்பதை வீடியோவில் காணலாம். விமானாம் காணாமல் போனதை ஏற்கனவே அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள் உறுதிச்செய்தனர். ஈரான் அணுசக்தி நிலையங்களை குறித்து விபரங்களை உளவறிவதற்கான அமெரிக்காவின் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த உளவு விமானத்தின் வேவு பார்த்தல் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
அதேவேளையில் சட்டவிரோதமாக வான் எல்லையை மீறியதற்காக அமெரிக்காவின் மீது ஈரான் ஐ.நாவில் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை ஐ.நா கண்டிக்கவேண்டும் என்றும், போதுமான இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் ஈரான் ஐ.நாவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நாவில் ஈரானின் தூதர் இந்த புகாரை அளித்துள்ளார்.

யார்? யாரோடு?

DEC 10: இன்றைய பத்திரிகை செய்திகளை படித்ததில்  உறுத்தலான சில விடயங்களை குறித்து உங்களோடு ஒரு பகிர்வு.

செய்தி 1: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய யாத்திரையை பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டார்.

அத்வானிக்கு  பதில்:  ஐயா
! பயங்கரவாதி அத்வானி! நீங்கள் நடத்திய இரத்த யாத்திரையினால் ஓட்டப்பட்ட இரத்தங்கள் இன்னும் காயவில்லை எதை மறைக்க இப்படி ஒரு நாடகம். 

உங்கள் பாரதிய ஜனதா ஆட்சி செய்த கர்நாடகாவில் நடந்த ஊழல்கள் அளவுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்தில்லை மக்களின் மறதியை வைத்து வசதியாக மறைக்க பார்க்கிறீரா.

செய்தி 2 :
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து மக்கள் கட்சிக்கு பதில்: மதவாதம் பேசி தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கும் இரத்தவெறி பிடித்த ஹிந்த்துதுவா இயத்தை சார்ந்தவர்களே! உங்கள் கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், பாரதிய ஜனதா இயக்கமும் உங்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தருமா? இல்லையே அவர்கள் எல்லாம் முல்லை பெரியாரை உடைக்க அல்லவா ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செய்தி 3: லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் ரஜினியின் முழு உருவ மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள்  கோரிக்கை விடுத்து  உள்ளனர்.

ரஜினி ரசிகர்களின் கோரிக்கைக்கு பதில்: 12 கோடி மக்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் மக்களே உங்களுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையை உடைக்கவும் புதிய அணையை கட்டவும்  கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது .  

இது தெரியாமல் ரஜினிக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என்று கோரும் மானம் கெட்ட தமிழா! உன் கர்நாடகத்து ரஜினிகாந்த் காவிரி பிரச்சனையில் எப்படி அந்தர் பெல்டி அடித்தார் என்பது மறந்து விட்டதா?
 

செய்தி 4: ஐஸ்வர்யாராய்க்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை பிறப்பு காரணமாக அவரது உடல் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்க ஐஸ்வர்யா ராய் முயற்சி: உடலை அழகுப்படுத்த பயிற்சி.

பத்திரிக்கைகளுக்கு பதில்: அட மானம் கெட்ட  நாளிதழ்களே உங்களுக்கு பேச வேற செய்திகள் இல்லை. குஷ்புக்கு கோவில், ரஜினிக்கு மெழுகு பொம்மை, ஐஸ்வர்யாராய் உடலை அழகு படுத்துகிறார், அட மானம் கெட்டவர்களே மக்கள் பிரச்சனைகளை எழுதுங்கள் அதைவிட்டு பத்திரிக்கையை நிறைக்க ஏன் இந்த அம்மண வேலை.

செய்தி 5 :
கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசும் போது கேரள மக்களின் உணர்வுகளை தமிழகம் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

கேரளா முதல்வருக்கு பதில்:
 கேரளா தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரை, நெய்யார் அணை, புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதி, அங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனை . சேங்கோட்டைத் தாலுகாவில் பாதி, தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணை இவை அனைத்தும் தமிழர்களுடையது. இவற்றை நீங்கள் வஞ்சகமாக களவாடி கொண்டீர்கள் நாங்கள் மறக்கவில்லை வரலாற்றை. இவை அனைத்தையும் நீங்கள் சீக்கிரம் திருப்பி கொடுக்க வேண்டி வரும் என்பதை முதலில் நினைவில் நிறுத்துங்கள்.

செய்தி 6: இலங்கையிடம் பயிற்சிபெற இந்திய ராணுவத்துக்கு அழைப்பு. தில்லிக்கு வந்துள்ள இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இந்திய ராணுவத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு பெற்று வருகிறார். 

அத்துடன் இந்தியாவின் முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார்.யுத்த தந்திரங்கள் தொடர்பாக இலங்கை ராணுவத்தினர் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இந்தியாவோடு பகிந்து கொள்ள விரும்புவதாக அவர் குறிபிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா ராணுவத்திற்கு பதில்:
இலங்கை பயங்கரவாத ராணுவம் இந்திய பயங்கரவாத ராணுவத்திற்கு பயிற்சி கொடுகிறார்கலாம் வேடிக்கையான செய்தி. பயங்கரவாதம் செய்வதில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.  


இந்தியா ராணுவத்திற்கு பல முகங்கள் உண்டு. அமைதிப்படை என்கிற ஆக்கிரமிப்பு படை, சத்திஷ்கர் பழங்குடி மக்களை கொன்றுகுவிக்கும் பயங்கரவாத படை, காஷ்மீர் மக்களை கொல்லும் நாசகார படை, தமிழக மீனவர்களை இலங்கை பயங்கரவாத படைக்கு காவு கொடுக்கும் சதிகார  படை, இப்படி பல நல்ல முகங்கள் உண்டு. இவர்கள் இரண்டு பெரும் சேர்ந்து பயிற்சி எடுத்து உலகை அழிக்கவா! உலகம் தாங்காது!

பார்பனர்கள் ஹிந்துதுவாவோடு, தமிழகத்தை அண்டிப்பிழைக்கும் கர்நாடக நடிகர்கள் கர்நாடகாவோடு, நாயர்கடை, சினிமாத்துறை மலையாளிகள் எல்லாம் மலையாளிகளோடு, இந்திய ஹிந்தி ராணுவம் இலங்கை ராணுவத்தோடு தமிழா நீ மட்டும் போலி தேசபக்தி பேசி ஹிந்திகாரனோடு உறவாடி தமிழர் குடி கெடுக்கிறாய், உன்தலையில் நீயே மண்ணை வாரி போடுகிறாய்  என்பதை புரிந்து கொள். விழித்துக்கொள்.

Friday, December 9, 2011

கொல்கத்தா: தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ- 20 பேர் பலி?

கொல்கத்தா: தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 20 நோயாளிகள் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 20 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் பல நோயாளிகள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது குறித்து மேற்கு வங்க அமைச்சர் ஜாவித் கான் கூறுகையில், மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்க முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் பலரை மீட்டுள்ளோம். அடித்தளத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தான் தீப்பிடித்துள்ளது என்றார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4 மாடிகளில் தீ பரவியுள்ளது. எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐசியு, ஐசிசியு, ஐடியு ஆகியவற்றின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

பாப்ரி மஸ்ஜித் வழக்கு: தினமும் ஆதாரங்கள், சாட்சிகளை பதிவுச்செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை அன்றாடம் நடத்த ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவரான விஷ்ணு ஹரி டால்மியாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடிச் செய்துவிட்டு நீதிபதிகளான சுக்லா, சுரேந்திர விக்ரம்சிங் ராத்தோர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதை ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 தினங்களாக நிச்சயிக்க ராய்பரேலி விசாரணை நீதிமன்றத்திற்கு ராய்பரேலி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஷ்ணு ஹரி டால்மியா மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை வேகமாக நடத்தி முடிப்பதை உறுதிச்செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டியது அவசியம் என கருதுவதாக உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கூறியது. அரசு தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜரானால் அவரிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை தீர்ப்பு வெளியாகும் வர தினமும் பதிவுச் செய்யவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு போட செசன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும், சட்டத்தின் பார்வையில் நீதிபதியின் நடவடிக்கை மோசமானது என்றும் விஷ்ணு ஹரி டால்மியா தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். தொலைவில் இருந்து இந்த வழக்கில் ஆஜராக வரும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு இந்த உத்தரவு சிரமத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்தார். ஆனால், உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் கூறுகையில், சாட்சிகளுக்கு வாக்குமூலம் அளிக்க ஏதேனும் தினம் அசெளகரியம் ஏற்படும் வரை வழக்கை நீட்டிக்கொண்டு செல்லக்கூடாது என உத்தரவிட்டது.
எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டால் அவர் வேறு ஏதேனும் வழக்கறிஞருக்கு இவ்வழக்கை ஒப்படைத்தது குறித்து உறுதிச்செய்ய வேண்டும். இதன் மூலம் அவர் இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைக்கு தடை ஏற்படாது. எப்பொழுது ஒரு சாட்சியை விசாரிப்பது முடிவடைகிறதோ அன்றைய தினமே அடுத்த சாட்சியை விசாரிக்கும் தேதியை நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால், இந்த தேதி 7 தினங்களுக்கு அதிகமாக கூடாது. சாட்சிகளை உறுதிச்செய்து வழக்கை நீட்டிக்கொண்டு செல்வதை சி.பி.ஐ தடுக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, சன்னியாசினி ரிதம்பரா, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கத்தியார் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜென்டில்மேன் முதல்வர்!

DEC 08: ஹைதராபாத் : மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞ்சர்களுக்கு ஆந்திர அரசு 70 லட்சம் ரூபாய் நஷ்ட்ட ஈடாக வழங்க உத்தரவு பிரபித்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இந்த  70 இலட்சம் ரூபாயும் இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை கயவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2007  ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ஹைதராபாத் ஜும்மா தொழுகை நடைபெற்ற சமயத்தில் மக்கா மஸ்ஜிதில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பல உயிர்கள் பலியாயின.

மேலும் இக்குண்டு வெடிப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 70  பேரை காவல்துறை கைது செய்து அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியது.


இந்நிலையில் சென்ற வருடம் இந்தியா முழுவதும் நடந்த தொடர்  குண்டு வெடிப்புகளுக்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிருபிக்கப்பட்ட பின்னர் இந்த வழக்கில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் அடைந்த துன்பத்திற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் தான் பாவமன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். காந்தியும் புத்தரும் பிறந்த குஜராத்தில் பயங்கரவாதி  மோடியின் பாசிசம் ஆட்சி செய்கிறது. அதே நேரம் ஆந்திரத்தில் இருந்து ஒரு வசந்த காற்று வீசுகிறது அதுதான் முதல்வர் கிரண் குமார் ரெட்டி இவர் நீதியன் காவலனாக, நேர்மையின் சின்னமாக உயர்ந்து விளங்குகிறார். இவர்தான் இந்தியாவின் ஜென்டில் மென். இவரை போன்றவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆனால் இந்தியாவில் மதநல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இதுபோன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்குமா? பாபர் மசூதி மீண்டும் கட்டி கொடுக்கப்படுமா? ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி, பால்தாக்ரே, ராமகோபாலன், உமாபாரதி போன்றோர் தண்டிக்கப்படுவார்களா? இது நடக்குமேயானால் மீண்டும் ஒரு பிரிவினையில் இருந்து இந்தியா தப்பிக்கும். இந்தியா வல்லரசாக தேவையில்லை தனது குடிமக்களுக்கு நல்லரசாக இருந்தால் போதும்.

source:sinthikkavum.net