Tuesday, January 31, 2012

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது...



திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள். ஆனால் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் தற்கால, எதிர்கால அபாயங்களைக் குறித்து அஞ்சி அப்பகுதி சார்ந்த மக்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் நடத்திவரும் மனம் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தை ஆரம்பம் முதலே நாடு மற்றும் மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத இந்து முன்னணி போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தேசப்பற்று என்ற போலியான போர்வையை போர்த்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நீதிக்காக போராடும் ஆர்வலர்கள் மீது ஹிந்து முன்னணி பாசிச வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இதற்காக 12பேர் கொண்ட அரசு குழுவினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்போது நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.
நாட்டுக்கு அவசியமான அணு உலையை எதிர்க்கும் தேச துரோகிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறில் தொடங்கிய மோதல் வன்முறையாக மாறியது.



கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வந்த வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. அவர்கள் மீது காலணிகளும் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 நிமிட நேரம் நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் போர்க்களமாக மாறியது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
தாக்குதலை நடத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடங்குளம் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இனி மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு கூடங்குளத்துக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
கூடங்குளம் போராட்டக்குழுவினர் தாக்குதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து விட்டு வெளியேறியதால், 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
மேலும் தங்களை இந்து முன்னணியினருடன் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தாக்கியதாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்திருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருணாசாகர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த மத்திய குழுவுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அவசர ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
கூடங்குளத்தில் பதட்டமான சூழல்
போராட்டக் குழுவினர் மீது குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவியது. தாக்குதலைக் கண்டித்து கூடங்குளம் அணு உலையை 500 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.
கூடங்குளம், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவாலய மணி அடிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டனர். தாக்குதலுக்குள்ளான போராட்டக் குழுவினரும் கூடங்குளம் நோக்கி விரைந்தனர்.
கூடங்குளத்தில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவுவதால் பெருமளவிலான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு 'ஷாக்' நியூஸ்..ரூ.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

டெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த நிதியாண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகும். முதல் கட்டமாக 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 118 வி்மானங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரித்து அளிக்கும்.

உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியுள்ள இதைப் பெற ரஷ்யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமானமான டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரபேல் வென்றுள்ளது.

ஈரோபைட்டர் எனப்படும் டைபூன் போர் விமானத்தை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற கடுமையாக முயன்று வந்தன. அதேசமயம், டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு தீவிர ஆதரவு தெரிவித்து செயல்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறுதியாக இந்த இரண்டு நிறுவனங்களை மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தப் பரிசீலனையில் வைத்தது. இதில் டஸ்ஸால்ட் ரபேல் விமானங்களின் விலை டைபூனை விட குறைவாக இருந்ததாலும், அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததாலும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அடித்துள்ளது யோகம்.

மிராஜைத் தந்ததும் டஸ்ஸால்ட்தான்

இந்திய வி்மானப் படைக்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று மிராஜ்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும்போது இந்திய விமானப்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Monday, January 30, 2012

BJP இரண்டாக உடைகிறது!

 பராதிய ஜனதா கட்சியில் மோடிக்கும் அத்வானிக்கும் இடையே கடும் குடும்பி சண்டை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியில் அத்வானி தன்னை பெரும் செல்வாக்கு உள்ள தலைவராக காட்டி  வந்துள்ளார்.

பாபர் மசூதி விஷயத்தை பூதாகரமாக்கி அதை வைத்து  தொடர்ந்து பல ரதயாத்திரைகளை (ரெத்த யாத்திரை) நடத்தி மதவாத பிரிவினைகளை உண்டாக்கி பாரதிய ஜனதாவில் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி கொண்டவர்தான் திருவாளர் அத்வானி. 

பாரதிய  ஜனதாவில் மிதவாத தலைவர்களாக அறியப்பட்டவர்களே பிரதம வேட்பாளராக வரமுடியும் ஏனனில் அதை வைத்துதான் நடுநிலையான ஹிந்துக்களிடம் ஓட்டுக்களை வாங்க முடியும். அந்த அடிப்படையில் வாஜ்பாய் அந்த இடத்தை பூர்த்தி செய்துவந்தார். அதனால் தொடர்ந்து அத்வானி ஓரம்கட்டப்பட்டு வந்தார் இந்நிலையில் வாஜ்பாயி சுகவீனம் அடைந்ததும் அந்த இடத்தை அத்வானி நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சூழலில் குஜராத் இனகலவரங்களை திட்டமிட்டு நடத்தி தான் ஒரு தீவிர ஹிந்துத்துவா சிந்தனை கொண்டவர்  என்பதை நிரூபித்து பாரதிய ஜனதாவில் ஒரு செல்வாக்கு மிக்க தலைவராக மோடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அத்வானியின் புகழை (கலவரங்கள் மூலம்) குறுகிய காலத்தில் எட்டிப்பிடித்து மோடி அவருக்கு போட்டியாக மாறினார். இதனால் இருவருக்கும் ஒரு பனிப்போர் நடந்து வந்தது. 

அத்வானி, குஜராத்துக்கு பதிலாக பீகாரில் இருந்து, ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரையை துவக்கியதால்,  மோடிக்கும் அத்வானிக்கும் இருந்த கருத்து வேறுபாடு மேலும் பெரிதாகியது.  இந்நிலையில் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை  நடத்த பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகராக மோடி அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அந்த பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாது மோடி புறக்கணித்தார்.

அத்வானியோடு மட்டும் அல்லாமல் பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்கர் மற்றும்  பொதுச் செயலாளர் சஞ்சய் சிங் ஜோஷி ஆகியோரோடும் மோடிக்கு பெரும் கருத்து வேறுபாடுநிலவி வந்தது. ஏனெனில் பிஜேபியின் பிரதமர் பதவிக்கு உரிய  வேட்ப்பாளராக  மோடியை  அறிவிக்க வேண்டும் என்று  கட்சியில் இருக்கும் இளஞசர்கள் விரும்பினர். ஆனால் அதை அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

இதனால் பாரதிய ஜனதா கட்சி இரண்டாக உடையும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்கள் வாரியாக  பல துண்டுகளாக உடைந்து போன பாரதிய ஜனதா கட்சி இப்பொழுதுமத்திய அளவில் ஒரு உடைவை நோக்கி நகர்கிறது. கேரளத்திலே மாராடு என்ற ஊரில் நடந்த கலவரத்தில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 7 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். இதை செய்தது NDF இயக்கம்  என்று குற்றம் சாட்டியது பிஜேபி. 

இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் இந்த படுகொலைகளை விசாரிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்அதை NDF  இயக்கமும் ஆதரித்து வரவேற்றதுஆனால் இந்த வழக்கை நடத்தி வந்த பிஜேபிதரப்பு திடீர் என்று இந்தவழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று வழக்கை அந்த குடும்பத்தின்  அனுமதி இல்லாமலேயே வாபஸ் வாங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த  ஒரு பிரிவினர் பிஜேபியில் இருந்து தனியாக உடைந்தனர். அதுபோல் கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், உத்ராஞ்சலில் ஒரு கோஷ்டி இப்படியாக மாநிலங்கள் வாரியாக வலுவிழந்த பிஜேபி இப்போது மத்தியிலும் ஒரு பெரும் உடைவை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

BJP இரண்டாக உடைகிறது!


புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.
1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.
ஜனவரி 9, 2012 ஆம் ஆண்டு மகன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவரால் தனது மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த இயலவில்லை. கடுமையான முயற்சிக்கு பிறகே வார்த்தைகள் உடைந்து போய் அவரிடமிருந்து வெளியாகின.
முஹம்மது அமீர்கான் மீது டெல்லியை சுற்றி நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 20 வழக்குகள் சுமத்தப்பட்டன. தற்போது பலத்த சட்டரீதியான போராட்டத்திற்கு பிறகு 17 வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்டார். இம்மாதம்(ஜனவரி)தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 வழக்குகள் மீதமுள்ளன. 2 வழக்குகளில் மேல்முறையீடுச் செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது.
14 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியான அமீர்கான் முதலில் வானத்தை அண்ணாந்து பார்த்தார். “நான் கடந்த 14 ஆண்டுகளாக வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவில்லை. நான் உயர் பாதுகாப்பு நிறைந்த தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். இரவு துவங்கும் முன்பே நான் சிறை அறையில் அடைக்கப்படுவேன். ஆதலால் என்னால் கடந்த 14 ஆண்டுகளாக நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை. இப்பொழுது நான் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து எனது சுதந்திரத்தை உணர்கிறேன்” என்று அமீர்கான் கூறுகிறார்.
14 ஆண்டுகள் தனிமைச் சிறை. மூன்றாம் தர(thirddegree torture) சித்திரவதைகள். அமீர் மாமூலான வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்கள் தேவைப்படும்.
இவ்வளவு வழக்குகளில் இருந்து விடுபட்டு சிறையை விட்டு வெளியே வருவோம் என அமீர் நம்பவில்லை. ஆமை வேகத்தில் நடக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் தனது நம்பிக்கையை இழந்திருந்தார்.


Saturday, January 28, 2012

ராமர் கோயில் கட்டுவோம்! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்! -பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை


லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும் கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர்கள் உமா பாரதி, சூர்ய பிரதாப் ஷாஹி, கல்ராஜ் மிஸ்ரா, முக்தர் அப்பாஸ் நக்வி, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சனையாகும் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம். போலி மதச்சார்பின்மை, வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ராமர் கோவில் கட்டுவதற்கான தடைகள் அகற்றப்படும் என தேர்தல் அறிக்கை கூறுகிறது.
மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாங்கள் எதிரானவர்கள் என பா.ஜ.கவின் சட்டப்பேரவை தலைவர் ஓம்ப்ரகாஷ்சிங் கூறினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கான 4.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்துச்செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
உயர்ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர்களின் நலத்திற்காக ‘சாமான்ய நிர்தன்வர்க் கல்யாண் ஆயோக்’ என்ற திட்டம் அமுல்படுத்தப்படும். 50 சதவீதம் அளவிலான இடஒதுக்கீடு கிடைக்காத சமூகத்தினருக்கு தனியாக கமிஷன் உருவாக்கப்படும். தேவைப்பட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடும் வழங்கப்படும். இவ்வாறு பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர்.

கேடுகெட்ட சுகாதாரத்துறை! 100 குழந்தைகள் பலி!

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

சிந்திக்கவும்: 26  நாட்களுக்குள் நூறு குழந்தைகள் சாவுஎன்று சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரியே ஒத்துக்கொள்கிறார் என்றால் சாவின் எண்ணிக்கை எத்தனை மடங்காக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். இப்படி கேடுகெட்ட ஒரு சுகாதாரத்துறை நமக்கு தேவையா?

அடிப்படை சுகாதார, மருத்துவ வசதிகள் கூட இல்லாத ஒரு நாட்டில்தான் நாம் வசிக்கிறோம். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யாமல் அழிவு ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் ஆனந்தம் அடைவதேன்? ஆடம்பர விழாக்களை நடத்துவதேன்?  ஒரு நாட்டின் வருங்கால சந்ததிகளை மழலைகளை  காப்பாற்ற  துப்பில்லாத நமக்கேன் இந்த வல்லரசு குடிபோதை.




இந்த போதையால் வாங்கி குவித்த ஆயுதங்களால் என்ன பயன். துருபிடித இந்த ஆயுதங்களை  குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில்தானே தூசு தட்டுகிறோம். அணுவுலைகள்  இல்லாத ஒரு மாவட்டத்தில் வாழும் குழந்தைகளையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை. அணு உலைகள் இருக்கும் மாவட்டங்களின் நிலைமையை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளதே. அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவினால் ஏற்ப்படும் சுகாதார குறைவையும், நோய்களையும் நாம் எப்படி தீர்க்கப்போகிறோம்.

போபால் நமக்கு ஒரு முன்னுதாரணம், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இன்னும் நஷ்ட்ட ஈடுகள் கொடுக்க முடியவில்லை. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில்  பஞ்சம் மற்றும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கிறது. சீன தனது நாட்டை பஞ்சத்தில், வரட்சியில் இருந்து பாதுகாக்க பிரமபுத்திரா நதியின் குறுக்கே ஒரு அணையை கட்டி இருக்கிறது. நாம் இருக்கிற நதிகளை பங்கிட தெரியாமல் தவிக்கிறோம்.மக்கள் விழிப்படைவார்களா?

கூடங்குளம் மக்களின் போராட்டம் நியாயமானதே என்பதை நிரூபிக்கும்
நிதர்சனமான 
ஒரு உதாரணம் இது. மொத்த தமிழகமும் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை தடுத்து நிறுத்த வேண்டும். 

போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்


போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன. இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்கத்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த் பஞ்சமியையொட்டி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
அகழ்வாராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போஜ்சாலாவில் அமைந்துள்ள கமால் மவ்லா மஸ்ஜிதிற்கு எதிராக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இம்மஸ்ஜித் சரஸ்வதி கோயில் என்ற பொய் பிரச்சாரத்தை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.



லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் சரஸ்வதி சிலையை இம்மஸ்ஜிதில் ஸ்தாபிக்க வேண்டும் என ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஹிந்துக்களுக்கு எல்லா செவ்வாய்க்கிழமையும், முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் இங்கு பிரார்த்தனை புரிய அகழ்வாராய்ச்சித் துறை அனுமதி அளித்துள்ளது.
பசந்த் பஞ்சமி தினத்தில் சூரியன் உதயம் துவங்கி சூரிய அஸ்தமனம் வரை வழிபாடு நடத்தவும் ஹிந்துக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அகழ்வாராய்ச்சித்துறை.
மா வாகதேவி சரஸ்வதி ஜன்மோல்சவ் சமிதி தலைவர் நவல்கிஷோர் சர்மா இந்த பல்கி யாத்ராவை நடத்துகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் சரஸ்வதி சிலையை திரும்ப அளிக்கவேண்டும் என கோரி இவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார். கடந்த ஆண்டு பஞ்சமி திருவிழாவின் போது போலீஸ் சரஸ்வதி சிலையை கைப்பற்றியது.
நவல் கிஷோரின் யாத்திரைய பாதுகாப்பு காரணங்களால் தடைச் செய்வதாக தர் மாவட்ட கலெக்டர் பி.எம்.ஷர்மா அறிவித்துள்ளார். போஜ் உற்ஸவ் சமிதிக்கு மட்டுமே திருவிழா நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி உள்ளது என கலெக்டர் கூறியுள்ளார். தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றால் அதனை தடுப்பதற்கு கலவரம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். உ.பி உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வேளையில் ஹிந்துத்துவாவாதிகள் இப்பிரச்சனையை மீண்டும் கிளப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாம் – ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது



வதோதரா:அரசியல் சாசனத்தையும், நீதிபீடங்களையும் மீறிச் செயல்படுவதில் பிரசித்திப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது.


இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறியது :பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
இது ஒரு அரசியல் நடவடிக்கையாகும். தேர்தலின்போது இதுபோல செயல்படுவது காங்கிரஸின் வாடிக்கை. உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே இதை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

பேஸ்புக்:ராணுவத்தினருக்கு இறுதி எச்சரிக்கை


புதுடெல்லி:ட்விட்டர்,பேஸ்புக்,ஆர்குட் உள்பட பல்வேறு சமூக இணையதளங்களில் தங்களின் ஃப்ரொஃபைல்களில் இருந்து ராணுவம் தொடர்பான தனிப்பட்ட விபரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கம் செய்ய ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.


மூன்று மாதத்திற்குள் தகவல்களை நீக்கம் செய்ய கடந்த அக்டோபர் மாதம் ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. கால அவகாசம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் உரிய கால அவகாசத்தில் தகவல்களை ஃப்ரொஃபைலில் இருந்து நீக்காத ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தரைப்படையைச் சார்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் சோசியல் நெட்வர்க்கில் உள்ள தங்களுடைய ஃப்ரொஃபைல்களில் ராணுவத்தில் உள்ள பொறுப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்களை சேர்த்துள்ளனர். அதேவேளையில் இத்தகைய இணையதளங்களை உபயோகிப்பதை ராணுவம் தடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் மூலமாக தகவலை கசியவிட்ட குற்றச்சாட்டில் விசாரணைச் செய்யப்பட்ட நான்கு கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகள் என அண்மையில் விசாரணை கமிஷன் கண்டுபிடித்தது.

இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை


ஐ.நா:சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டும் பணியை தொடர்வதன் மூலம் மேற்காசியாவில் அமைதிக்கான முயற்சிகளுக்கு இஸ்ரேல் குந்தகம் விளைவிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.


அமைதிக்கான முயற்சிகள் பலன் அளிக்க வேண்டுமென்றால் இஸ்ரேல் சட்டவிரோத குடியுருப்பு கட்டும் பணியை நிறுத்தவேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியாவில் அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்த விவாதத்தின்போது ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹர்தீஃப் சிங் பூரி இக்கோரிக்கையை விடுத்தார். இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் குடியிருப்பு கட்டுமானங்களை அங்கீகரிக்க இயலாது என்றும் இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

Friday, January 27, 2012

ஜெ. சொத்துக் குவிப்பு: மறுபடியும் மொதல்ல இருந்தா...?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.


இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.


இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது. 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கச் சொல்வது ஏன் என்பது புரியவில்லை.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குமூலம் பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கக் கோருவது சரியல்ல, இதுதொடர்பான அரசாணை ஏற்கத்தக்கதல்ல.


இந்த அரசாணையானது, அரசியல் சட்டத்தின் 173வது பிரிவை கேள்வி கேட்பதாக உள்ளது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பத்மஸ்ரீ என்கிற மாயக்கண்ணாடி!

பத்மஸ்ரீ விருது இந்த விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் முதன்மை விருதுகளில் ஒன்றாகும். பத்ம விபூசன், பாரத ரத்னா, பத்ம பூசன் போன்ற விருதுகளுக்கு அடுத்து நான்காவது இடத்தில்  பத்மஸ்ரீ விருது அமைந்துள்ளது.

இது கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை, பொதுவாழ்வில் சிறப்பான பங்களித்தல் போன்றவைகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1954  ஜனவரி 2 நாள் இந்திய ஜனாதிபதியால் ஏற்ப்படுத்தப்பட்டது.

இது ஒன்றும் அப்படியே நூறு சதவீதம் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக எண்ணிவிட வேண்டாம். இது ஆளும் வர்க்கத்திற்கும், அரசு துதிபாடுபவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும், சினிமா கூத்தாடிகளுக்கும் கொடுக்கப்படும் ஒரு விருதே தவிர வேறொன்றும் இல்லை.




ஒருபக்கம் பசி, வறுமையால் தற்கொலை சாவுகள்! மறுபக்கம்  உயர்குடிகளுக்கு இதுபோல் சாதனை பூச்செண்டுகள். வறுமையில் வாடும் மக்களை கவனியுங்கள் என்று சொன்னால் குடியரசு தினம் நடத்துகிறோம், ராக்கெட்டு பறக்க விடுகிறோம், விமானத்தில் சாகசம் காட்டுகிறோம், பத்மஸ்ரீ விருது வழங்குகிறோம் பாருங்கள் என்று சொல்கிறார்கள். பசிக்கும் வயிறோடு இதையெல்லாம் பார்த்து விட்டு பட்டினியில் சாகுங்கள் என்று சொல்கிறார்கள்.

மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பியுசிஎல்) அமைப்பில் உள்ள டாக்டர் பினாயக் சென். இவரை நீங்கள்  மறந்திருக்கலாம். இவர்தான்  சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மக்களுக்கு கிராமம்தோறும் சென்று மருத்துவம் செய்து வந்தவர்இவருக்குத்தான் சத்தீஸ்கர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இந்த பழங்குடிமக்கள் வாழும் மலைகளில் இருந்துதான் இந்திய அரசு கனிமவளங்களை எடுக்க உள்நாட்டு யூத்தம் செய்துவருகிறது. இவரைப்போல் ஏழை, எளிய மக்களுக்கு சேவைகள் செய்யும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எல்லாம் விருதுகள் கிடையாது.

ஆனால் மக்கள் சேவை செய்யாத, சேவை நோக்கம் இல்லாத மருத்துவர்களுக்கும்,  நாதஸ்வர வித்வான், மிருதங்க வித்வான், வயலின் வித்வான், நடிகை, நடிகர்கள், தொழில் அதிபர்கள்இவர்களைத்தான் இந்த விருது சென்றடையும். இவர்கள் ஏற்கனவே பெரும் பணமும், புகழும் சம்பாதித்து வாழ்க்கையை வளமோடும், செல்வ செழிப்போடும் வாழ்பவர்கள். இவர்களுக்கு இந்த விருதுகளை வழங்குவதால் என்ன பிரோஜனம் இருக்கிறது. ஏழை, எளிய மக்களில் திறமை உள்ளவர்களுக்கு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு விருது கொடுத்து உதவி செய்து கவுரவிப்பதே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு  உறுதுணையாக அமையமுடியும்.

இந்தியாவில் நரோரா என்ற இடத்தில் உள்ள அணு உலையில் ஒரு தீவிபத்து நடக்கிறதுஅதை அதன் ஊழியர்கள் நான்குபேர் தங்கள் உயிரை பணயம் வைத்து அணைக்கின்றனர். இவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்படவில்லைஇதே போல் ஒரு விபத்து அமெரிக்காவில் நடக்கிறது அதை சரி செய்த ஒருவருக்கு அமெரிக்க சுதந்திர தினத்தில் அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது. ஆனால் நமது பத்மஸ்ரீ விருதுகளால்  லிவிங் டுகெதர் (Living together) என்பதை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்த மாமேதை கமல்ஹாசன் போன்றவர்களைத்தான் சென்றடைய முடிந்துள்ளது என்பதை நினைத்து நாம் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நமது டாக்டர் பட்டங்கள் எப்படி ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் காற்றில் பறக்கவிடும் பட்டமாக ஆகிவிட்டதோ அதுபோல் தான் இதுவும். இதில் ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் புச்சேரி வேங்கடபதி என்ற  விவசாயிக்கு இந்தவருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பதே.

Tuesday, January 24, 2012

காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என கூறினார்.  இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில பண்டிட்கள் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது? 

”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட் பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.

ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது? ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா? 

”எந்த நாட்டுடனும் இணையமாட்டோம். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும் ”அது சரிதான். ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு” என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனால் இந்திய படைகளுக்கும், பாகிஸ்தான் படைகளுக்கும் இடையே போர் நடந்தது.

இந்தியா இந்த பிரச்னையை  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. அதில் இந்தியா குறிப்பிட்டதாவது  சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.



இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு – காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டு மென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். 

அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு – காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும். அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும். அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப் படவில்லை.

போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. இந்தியவசம் உள்ள காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் என்றும் பாகிஸ்தான் வசம் உள்ளது ஆசாத் கஷ்மீர் என்றும் அழைக்கப்படுகின்றன. 

சிந்திக்கவும்: இந்திய, பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு காஷ்மீர் சொந்தமானது இல்லை. அருந்ததி ராய் சொன்னதுபோல் காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விரும்புவதுபோல் சுதந்திர காஷ்மீர் நாடு  அமைவதற்கு உதவுவதே இந்திய மற்றும் பாகிஸ்தானிய பயங்கரவாத அரசுகளுக்கு நல்லது.

இவர்கள் இருவரும் வல்லரசு போதையில் ஆயுதங்களை வாங்கி குவித்து மக்களின் நலன்களை புறக்கணிப்பார்கள் என்றால் இந்த இரண்டு நாடுகளும் ரஷ்யாவை போல் உடைந்து பல்வேறு மொழி மற்றும் இனம் சார்ந்த நாடுகளாக மாறிப்போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதே கருத்தை  மனித நேய ஆர்வலர் அருந்ததி ராய் சொன்னதற்கு தான் இந்த பண்டிட்டுகள் இப்படி குதிக்கின்றனர்.

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமான தல்ல என்கிற உண்மையை சொன்னதற்கு அவர் மேல் பொது நல வழக்கு தொடுக்கும் இந்த பண்டிட்டுகளுக்கு காஷ்மீர் சுதந்திரத்தை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. சொந்த நாட்டின் விடுதலையை நிராகரிக்கும் பண்டிட்டுகள் நிச்சயம் காஷ்மீரின் போர்வீக குடிகளாக இருக்க முடியாது என்றே எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு உதவி செய்து  இரண்டு இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த  கையேடு தமிழக மீனவர்களை கொல்ல இலங்கை ராணுவத்திற்கு பயிற்ச்சியும் அளித்ததை பார்த்த  தமிழக மக்கள் இந்தியாவை விட்டு பிரிந்து போவது என்று முடிவெடுத்து விட்டார்கள். அதுபோல் சத்திஸ்கரில் பழங்குடி மக்களின் நிலங்களை அந்நிய முதலாளிகளுக்கு கொடுக்க ஒரு உள்நாட்டு போர் நடத்தி அந்த மக்களும் தனி நாடு கேட்கிறார்கள். இதுபோன்ற அரசு அடக்குமுறைகள், அரசு  பயங்கரவாதங்கள் தொடருமே ஆனால் இந்தியா பல நாடாக பிரிந்து போகும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழீழமும் காஷ்மீரும் ஒன்றா? அருந்ததிராய்!


சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்கிற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.    

காஷ்மீர் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக சேர்த்து கொள்ளப்பட்ட ஒரு சமஸ்தானமே அன்றி அந்த மக்கள் விரும்பி தங்களை இந்தியாவுடன் இணைத்து கொள்ளவில்லை. படிக்க காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!.   

எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் அதன் ராணுவமும் மக்களை கொல்லுதல், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை.  


தாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும்.  ஒரு தேசத்தின் மீது பற்று கொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. மற்றபடி இது இயல்பாக மக்களுக்கு வந்ததல்ல.  
இதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை!" என்று குறிபிட்டுள்ளார்.  
சிந்திக்கவும்: அருந்ததி ராய் சொல்வது முற்றிலும் சரியே. இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தாங்கள் பிரிந்து தனிநாடாக போகலாம்  என்று "தீர்மானிக்கும் உரிமை" இருக்கிறது என்றுதானே அந்த போராட்டத்தை நசுக்க இந்தியா உதவி செய்தது. அதனால்தானே அமைதிப்படை என்கிற ஆக்கிரம்பிப்பு படை நடத்தியது.   

எங்கே இலங்கையில் தமிழீழம்  அமைந்து விட்டால் அது போல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை கொடுக்க வேண்டி வருமே. அது போல் நாம் ஒட்டி சேர்த்து வைத்து கொண்ட சமஸ்தானங்களை எல்லாம் திரும்ப கேட்க்க ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தினால்தானே ஒன்றரை இலட்சம் மக்களை கொல்ல கொலை கருவிகளையும், கூலி படைகளையும் கொடுத்துதவியது.  

மக்கள் வாழ்வதற்காகத்தான்  நாடுகளும், எல்லைகளும் சட்டங்களும் மக்களை கொன்று வெறும் எல்லைகளை வகுத்து, நிலங்களை வைத்து தேசியம் பேசி என்ன பிரோஜனம். காஷ்மீர் விசயத்திலும், ஈழத்து விசயத்திலும்,  நடப்பது  ஒன்றே. மக்களின் உரிமை போராட்டங்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும். இது விசயத்தில் நியாயமாக மக்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுவே நீதியும், நியாயமும் ஆகும்.