Saturday, September 28, 2013

மோடி சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணம்! வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத்திற்கு இடமில்லை!

புதுடெல்லி: மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இப்பொழுது மீண்டும் மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கை மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய அரசின் நிதி வழங்க வேண்டும் என்று  சிபாரிசு செய்து மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
ஆனால்,ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் குஜராத்திற்கு 12-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.
கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் கூடுதல் மத்திய அரசின் நிதிக்காக பின்தங்கிய மாநில அந்தஸ்தை கோரிய பொழுது நிதியமைச்சகத்தில் முக்கிய நிதி ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் தலைமையில் இது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு கமிட்டியை நியமித்தது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.
தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.
பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மத்திய நிதி அனுமதிக்கும்போது பட்டியலில் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, வளர்ச்சிப் பணிகள் நடத்துவதில் பொறுப்புணர்வு ஆகியவற்றை பரிசோதித்து நிதி வழங்க வேண்டும் என்று கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரகுராம் ராஜன் கமிட்டி தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார். அறிக்கையின் விவரங்கள் பற்றி அவர் கூறியதாவது:
மொத்தம் உள்ள 28 மாநிலங்கள் பல்நோக்கு குறியீட்டு எண் (எம்.டி.ஐ.) அடிப்படையில் வளர்ந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்கள் (குறைந்த வளர்ச்சி), பின்தங்கிய மாநிலங்கள் என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு பற்றி கமிட்டி அளித்துள்ள பரிந்துரையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படையாக நிலையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களின் தேவைகள், மேம்பாட்டுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு அடிப்படை நிதி ஒதுக்கீடான 0.3 சதவீததத்தை மேலும் அதிகரிக்க சம்பந்தப்பட மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க இரட்டை பரிந்துரை செய்யப்படும்.
இந்த இரண்டு பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, சிறப்பு அந்தஸ்தின் கீழ் குறிப்பிட்ட மாநிலங்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்பதை தவிர்க்க முடியும் என்றார்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.) வகுத்துள்ள அடிப்படையில் தனிநபர் நுகர்வு, வறுமை விகிதம் மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்ய எடுத்து கொள்ளப்படும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் மாநிலங்களின் பின்தங்கிய நிலைமையை கணிக்கும் பல்நோக்கு குறியீட்டு எண் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 0.6 புள்ளிகள் மற்றும் அதற்கும் மேல் புள்ளிகள் பெற்ற மாநிலங்கள் பின்தங்கியவையாகவும், 0.6 முதல் 0.4 வரையிலான புள்ளிகளைக் கொண்ட மாநிலங்கள் வளரும் (குறைந்த வளர்ச்சி) மாநிலங்களாகவும் 0.4 புள்ளிக்குக் கீழ் உள்ள மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்களாகவும் கருதப்படும்

மே.வ. முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் ஆவணப் படம்: மம்தா அரசு தடை!

கொல்கத்தா: மேற்கு வங்காள முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் டாக்குமெண்டரி படத்திற்கு (ஆவணப் படம்) மம்தா பானர்ஜி அரசு தடை விதித்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் சவ்மித்ரா தஸ்திதாரின் ‘முஸல்மானேர் கதா’ (Musalmaner Katha – முஸ்லிம்களின் நிலை) என்ற டாக்குமெண்டரிக்கு மாநில அரசின் திரைப்பட தலைமையகமான நந்தனில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்சர் சான்றிதழ் இல்லை என்று கூறி டாக்குமெண்டரியை திரையிடக் கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போலீஸ் உத்தரவிட்டது. ஆனால், இதே டாக்குமெண்டரி, கொல்கத்தா ப்ரஸ் கிளப்பிலும், புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும் திரையிடப்பட்டது.
நந்தன் 3-வது எண் ஹாலில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு சென்சர் சான்றிதழ் தேவையில்லை என்ற நிலையில் வேண்டுமென்றே
இத்தடையைப் போட்டுள்ளது மம்தா அரசு. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உள்ளடக்கி 25க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை தஸ்திதார் தயாரித்துள்ளார்.
இது தொடர்பாக தஸ்திதார் கூறுகையில், “இம்மாதம் 24-ஆம் தேதி இரவு நேரத்தில் அமலாக்கப் பிரிவைச் சார்ந்த 2 அதிகாரிகள் வந்து ஆவணப் படத்தின் டி.வி.டி. நகலை கேட்டனர். இதன் மூலம் ஆவணப் படத்தை திரையிட தடை விதித்தன் பின்னணியில் உள்ள சதித் திட்டம் தெளிவாகிறது. டாக்குமெண்டரியை தயாரிப்பவர் அரசின் ஊதுகுழலாக செயல்பட்டால் மட்டுமே திரையிட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.


பல தசாப்தங்களாக மேற்கு வங்காள முஸ்லிம்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி ஏமாற்றிய அரசுகளின் செய்திகள், இந்த ஆவணப் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் முஸ்லிம்களின் துயர வாழ்வைக் குறித்து உதாரணத்துடன் தயாரிப்பாளர் விவரிக்கிறார். கடந்த இடதுசாரி அரசும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலையை மாற்ற எதுவும் செய்யவில்லை என்ற மூத்த போலீஸ் அதிகாரி நஸ்ருல் இஸ்லாமின் பேட்டியும் இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
முந்தைய இடதுசாரி அரசு மற்றும் தற்போதைய மம்தா அரசிற்கு நஸ்ருல் இஸ்லாம் என்றால் பிடிக்காது. அதேவேளையில் இந்த ஆவணப் படத்தை திரையிட தடை விதித்த அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு சமூக -கலாச்சார அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் ஆதரவு தெரிவித்ததாக தஸ்திதார் கூறியுள்ளார். மே. வங்காளத்திற்கு வெளியே ஆவணப் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து தருவதாக பட்வர்தன் கூறியுள்ளார். மே. வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், எதிர்க்கட்சியான சி.பி.எம்.மும் தவிர இதர கட்சியினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித  உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினேன்.
இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னை தீரும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார் அன்புமணி ராமதாஸ்.

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு

திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகள் மூலம் மீட்டனர் . ஆனால் இகுழந்தை மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தற்போது சொல்ல முடியவில்லை. அவர் ஆரணி அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை குழியில் இருந்து மீட்டாலும் , இவர் உயிரோடு நலமுடன் திரும்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் 10 மணி நேரம் ஈடுபட்டனர், 


ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டினர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் நேரடியில் :
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஞானசேகர் புலவன்பாடிக்கு சென்றார். அங்கு மீட்பு பணியை முடுக்கி விட்டார்.அடுத்து , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தவு பிறப்பித்தார்.மாவட்ட எஸ்.பி., முத்தரசி சம்பவ இடத்தில் முகாமிட்டார். இதற்கிடையில் கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

இந்தியாவிலேயே முதல் மாநிலம் எது?.

sep 26/2013:இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது.


  • உண்மையில் 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், 
  • சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கப்படுவதில்,இந்தியாவில் முதல் மாநிலமாகவும்
  •  69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதில்  இந்தியாவில் முதல் மாநிலமாகவும்,
  • பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடமாகவும்,
  • அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது. 
  • கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.
  •  5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ததில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும் குஜராத் முன்னிலை வகிக்கிறது.              

இந்தியாவின் NO 1 மாநிலம் கோவா!

Sep 28/2013: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.

தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.


இந்தியாவில்  உள்ள மொத்தம் 28 மாநிலங்களில்  கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு: ஆனால், ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. குஜராத்திற்கு 12வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சி யடைந்த  மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.