Sunday, November 29, 2015

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி மாநிலம் தழுவிய பிரச்சார பயணம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீர்நிலைகளை காக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.28 முதல் டிசம்பர் 13 வரை  குமரி முதல் சென்னை வரையிலான எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவரின் மக்களை சந்திப்போம் பிரச்சார பயணம் குமரி மாவட்டம் கன்னியாகுமரி களியக்காவிளையில் இருந்து தொடங்கியது.

முத்துப்பேட்டை கொலை வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் கைது.

முத்துப்பேட்டை மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது.

முத்துப்பேட்டை அருகே:த.மு.மு.க ஹைதர் அலி அவர்கள் சென்ற கார் பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)

முஸ்லிம் என்பதால் ஆபாசமாக ஏசினார்கள் : காவல்துறையால் தாக்கப்பட்டது தொடர்பாக எழுத்தாளர் பழனி ஷஹான் விளக்கம்!.

நான், பழனி ஷஹான். பல இலக்கிய மற்றும் அரசியல் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன். சில இதழ்களுக்காக, அரசியல் பிரமுகர்களை நேர்காணல் செய்து வழங்கியுள்ளேன். மேலும், இணைய இதழ்கள் சிலவற்றிற்கு செய்தி சேகரித்துத் தரும் பணியையும் செய்து கொண்டுள்ளேன்.

Saturday, November 28, 2015

இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........


                                        

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.

Thursday, November 26, 2015

முத்துப்பேட்டை அருகே பயங்கரம்


முத்துப்பேட்டை அருகே உள்ள வடகாடு கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். அ.தி.மு.க. பிரமுகர். திருத்துறைப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. இணை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் முத்துப்பேட்டை ஒன்றிய  கவுன்சிலராகவும்  உள்ளார். 

முத்துப்பேட்டை ‪தமுமுக: நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை நகர  ‪தமுமுக  சார்பாக இன்று 26.11.2015 காலை 10 மணியளவில் ஆசாத் நகர் கடைவீதியில் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Saturday, November 14, 2015

முக்கிய அறிவிப்பு PASSPORT - ECNR

முக்கிய அறிவிப்பு PASSPORT  ECNR பெறமுடியாதவர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு 

                  நமது நாட்டில் பலர் (படிக்காவர்கள்) ECNR பெற முடியாமல் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஓர்  அறிய வாய்ப்பு. 
               தங்கள்  அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் , தாங்கள் பாஸ்போர்ட்க்கு தேவையான   ஆவணங்களை  எடுத்து சென்று அங்கு  18/- செலுத்தி  ECNR க்காக ஒரு  படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் 15 -தினத்தில் ECNR பதிவுசெய்து
PASSPORT வீட்டுக்கு வந்து சேரும்.
இது  தீபாவளிக்கு பின்  15 -தினங்களுக்கு மட்டுமே. உடனடியாக 
பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும் 

முத்துப்பேட்டை: SDPI கட்சியின் நகர கூட்டம்

                       முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம் நகர தலைவர் சேக் முகைதீன் தலைமையில் நகர துணை தலைவர் காதர் முகைதீன், செயலாளர் முகமது மாலிக், இணை செயலாளர் நெய்னா முகமது  ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது .

Tuesday, November 10, 2015

தீரர் திப்புவின் பிறந்த தினம்-கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூர், நவ.10-
18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

மதுக்கூரில் பதற்றம்!

இன்று காலை தஞ்சை தெற்கு மதுக்கூர் நகரில்

த.மு.மு.க ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனம் மீது கொலைவெறி தாக்குதல்!

அதிரையில் விபத்துக்குள்ளானவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சவுதியில் பணி புரியும் சகோதரர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான செய்தி!

சவுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு அரசு-சார் பணிகளை எளிதாக்கவும், கஃபாலத் பித்தலாட்டங்களை முறியடிக்கவும் புதிய அடையாள அட்டை வழங்க சவுதி அரசவை முடிவு செய்துள்ளது



மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை பெரிய கடை தெரு,  பூ கொய்யா இல்லத்தில்

Monday, November 9, 2015

பிகார் தேர்தல் இந்தியாவின் வெற்றி!

ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?

பிகார் தேர்தல் முடிவு: வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி- எஸ்.டி.பி.ஐ அறிக்கை

பிகார் தேர்தல் முடிவு மத்தியில் ஆளும் பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று எஸ்.டி.பி.ஐ கூறியுள்ளது.

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை, 
பட்டுக்கோட்டை ரோடு,

Sunday, November 8, 2015

முத்துப்பேட்டை:தமுமுக & மமக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

முத்துப்பேட்டை நவ 07: தமுமுக & மமக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் மமக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது அவர்கள் தலைமையிலும்,
மமக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,மமக மாவட்ட இளைஞர் அணி துணை                 செயலாளர் முகம்மது பைசல்,தமுமுக நகர செயலாளர் சம்சுதீன்,மமக செயலாளர் ஹாமீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

Saturday, November 7, 2015

முத்துபேட்டை அருகே விபத்து


இன்று முத்துப்பேட்டையகோபாலசமுத்திரம் அருகில் இருந்து நாச்சிகுளம் சென்று கொண்டு இருந்தது  ஆட்டோ விபத்தில் சிக்கியது

முத்துப்பேட்டை:கேம்பஸ் ஃப்ரண்ட் கொடியேற்று நிகழ்ச்சி

மாணவர்களின் எழச்சியே!                                       தேசத்தின் வளர்ச்சி!! 



மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டையி, சின்ன கட்சி மரைக்காயர் தெரு

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Friday, November 6, 2015

இந்திய பணியாளர்களுக்கு விசா நிறுத்தியது குவைத் !!!

    




வளைகுடா நாடுகளில் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து பணிப்பெண் உள்ளிட்ட வீட்டு வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 

முத்துப்பேட்டை:பொதுமக்கள் கடும் அதிருப்தி

முத்துப்பேட்டையில் இன்று பேரூரட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது

முத்துப்பேட்டை: SDPI கட்சி கோரிக்கை மனு

முத்துப்பேட்டை: கொய்யா தோப்பு பகுதியில் இரவு நேரங்களில் வெளிசம் இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.

முத்துப்பேட்டை:சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் பேரூராட்சியில் மனு


முத்துப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் நேற்று பேரூராட்சியில் புகார் மனு அளித்தார். முத்துப்பேட்டை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில்


Thursday, November 5, 2015

ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு கோரியும், லோக் ஆயுக்தாவை பலப்படுத்த கோரியும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குருசரண் சப்ரா (Gurusharan Chhabra)
மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

பிரபல இயக்குனர் குந்தன் ஷா தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப ஒப்படைத்தார்!.


நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதையும், பட்டி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு

Tuesday, November 3, 2015

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை, திம்லத் தெரு 

முத்துப்பேட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி நேற்று காலமானார்!

                    முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை 
கிராமத்தை சேர்ந்தவர் தியாகி முத்துதேவர்(97), சுதந்திபோராட்ட தியாகியான இவர் இந்திய தேசியராணுவத்தில் நேதாஜி படை பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர். ராணுவ பணிக்கு பிறகு ஜாம்புவானோடை தர்கா அஞ்சலகத்தில் 20-ஆண்டுகள் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றினார். பின்னர் ஹோமியோபதி டாக்டராகி மருத்துவம் பார்த்து வந்தார். முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் 5வருடம் ஹிந்தி பண்டிட்டாகவும் பணிபுரிந்துள்ளார். 
தற்பொழுது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதார்ர்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 5- மகன்கள் 2-மகள்கள் உள்ளனர்.

மௌத் அறிவிப்பு

முத்துப்பேட்டை சின்ன கட்சி மரைக்காயர் தெரு

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக முத்துப்பேட்டையில் இலவச B.M.I முகாம்.

ஆரோக்யமான மக்கள்! 
வலிமையன தேசம்!!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃப் இந்தியாவின் ஆரோக்யத்திற்கான தேசிய பிரச்சாரத்தின்