Sunday, October 31, 2010

உணரப் படாத தீமை சினிமா!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?


இல்லையெனில்…
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’




சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.


கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.


முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.


அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.


நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள், சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்.. அப்பப்பா பட்டியல் நீள்கிறது! இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.



ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.


விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?” என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.


‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம். இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம்.


சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.


வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள், வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு, நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்! எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக!


நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.


சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!


முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!


கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.


கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். “கருத்தம்மா’ என்று படமெடுத்தாலும், அதில், “செவத்தம்மாவை’ போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.


எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம்.


அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.


நன்றி- சுவனத்தென்றல்.காம்.

Monday, October 25, 2010

நாகரிகத்தின் கோரமுகம்! இராக்கில் அமெரிக்க செய்த அட்டுழியம்




இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'

சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்,  அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில்  வியப்பென்ன இருக்கிறது?

நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.

கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார்.

 அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.
இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.

ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா!
உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற  குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?

இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?


நன்றி:
தினமணி 

Thursday, October 21, 2010

மசூதிகளில் இருக்கும் ஒலிப் பெருக்கிகளை என்ன செய்வது? சிவ சேனா கேள்வி!!!

மசூதிகளில் இருக்கும் ஒலிப் பெருக்கிகளை என்ன செய்வது? சிவ சேனா கேள்வி!!!


மசூதிகளில் இருக்கும் ஒலிப் பெருக்கிகளை என்ன செய்வது? சிவ சேனா கேள்வி!!!


மும்பை: மும்பையில் நடந்த தசரா பேரணியின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட
ஒலிபெருக்கிகள் அதிக ஒலி எழுப்பியதற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், மசுதிகளின் மேல் இருக்கும் ஒலிப்பெருக்கிகள் குறித்து ஏன் எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பத்திரிக்கையான சாமனாவில் வெளியிடப்பட்டுள்ளதாவது,

பென்டி பஜார், பெஹ்ரம்பாலா ஆகிய பகுதிகளில் உள்ள மசுதிகளில் இருக்கும்
ஒலிப்பெருக்கிகள் மூலம் பாங்குச் சத்தம் காதை அடைக்கிறது. இதனால் குழந்தைகளால்
நிம்மதியாக படிக்கமுடியவில்லை. மேலும், மக்களின் தூக்கத்திற்கும் இடையூறாக
இருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவாஜி பூங்காவில் நடந்த தசரா பேரணியில் மும்பை நீதிமன்றம் நிரணயித்த டெசிபல்
அளவை தாண்டியதற்காக தாதர் போலீசார் கட்சித் தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்கள் 500 டெசிபல் அளவைத் தாண்டிவிட்டனர்.
எங்களுக்கும் சட்டம் தெரியும். எங்களுக்கு யாரும் சட்டம் சொல்லித் தரத்
தேவையில்லை. எங்கள் உணர்வுகளை சட்டம் மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்
நாங்களும் சட்டத்தை மதிப்போம் என்று அதில் வெளிவந்துள்ளது

--
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்..

அஸ்கர்
மாதவலாயம்.
****************************************************************************************************************************************************
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி
கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக"
அல் குர்ஆன் 14:41.
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وَقِنَا عَذَابَ النَّارِ
"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை
விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" Ameen

From:
TM-POLITICS

Sunday, October 17, 2010

உயிர்காக்க‌ உதவுங்கள் - Need Medical Help

Dear Sir,


These are H. Ashraf Ali's (Blood cancer patient) Medical report, his age is only 17, Please go through the attachment and help him for the treatment.


Thank you
 




 
 
Bank Details.


1)M.Hajeth Basha
A/C No:2090 1010 0099 767
Axis Bank - Pondicherry Branch


2)H.JarinaBegham
A/C 829598087
Indian Bank,Ariyur Branch A-043
Pondicherry

தொடர்ப்புக்கு:


M.ஹாஜித்பாஷா
2.645 இரயில்வே ஸ்டெஷன் வீதி
கண்டமங்கலம் அஞ்சல் - 605102
விழுப்புரம் தாலுக்கா.
செல்: 9965859965  9965859965

FROM:
TMPOLITICS

இலவசமாக M.E/M.Tech படிக்க:GATE நுழைவு தேர்வு

From: Islamic Service <service.islam@gmail.com
இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

*இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE
நுழைவு தேர்வு*

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம்
போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால்
நடத்தப்படும் தேர்வாகும்.

இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும்
மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது.

இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய
தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.

இதில்
முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட
ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்
அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை
கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை
பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech,
Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில்

நாம்
தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த
கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும்
(கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது).

இந்த
கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது.

நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு
எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த
உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு
படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில்
வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு
ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd
படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம்,

இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும்,

அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான்,

உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.

தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (
www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது.

*பெற்றோர்களே!*
நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால்
இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை
அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை
கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள்.
மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து
பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின்
சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில்
சேருங்கள் இன்ஷா அல்லாஹ்
பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல
வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து
சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில்
சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு
தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க
வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று
இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும்,
படிப்பை வாங்கமுடியாது,

வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல
வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,

எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின்
மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து
படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

*S.சித்தீக்.M.Tech *
*TNTJ மாணவரணி*
*GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்*
*விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :* அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
http://onlinegate.iitm.ac.in/iitweb

*விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :* சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட

State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
*விண்ணப்பத்தின் விலை :* ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :*

Chairman, GATE
Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,

*மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் :* 044-2257 8200
(சென்னை IIT)
*தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :*

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும்
இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

*தேர்வு நடைபெறும் தேதி :* ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,

*தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி :* மார்ச் 15
GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க

*அஹமது இப்ராஹிம் -
9841464521*

அல்லது E-mail to sithiqu.mtech@gmail.com <mailto:sithiqu.mtech@gmail.com

நன்றி:
"TAMIL MUSLIM POLITICS" tmpolitics@googlegroups.com.

Saturday, October 2, 2010

அயோக்கியத் தீர்ப்பு

அயோக்கியத் தீர்ப்பு

குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச்
சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என
சொந்தம் கொண்டாடினான்.

குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.

மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.

“எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.

“செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.

“போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.

“சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம்
போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.

மாலையில் பஞ்சாயத்து கூடியது. செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல
சாட்சிகளோடு  வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான்
குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள்.
குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.

அதிகம் பேர் சொன்னதை வைத்து மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு
ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.

மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே
இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.

“பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.

“குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து
கொடுக்குமா? யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும்
இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.

நன்றி:

http://mathavaraj.blogspot.com/2010/09/blog-post_30.html

பாபரி மஸ்ஜித்-அரசியல்தனமான தீர்ப்பு



ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.

மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...

அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். 

அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!


நன்றி-தினமனி 

பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு-இந்தியாவில் நீதி செத்து விட்டது:







என் இஸ்லாமிய அன்புச் சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!அல்லாஹ்வுக்காக பொறுமையை மேற்கொள்வீராக! சுவனத்தை தட்டிச்செல்ல பொறுமையை மேற்கொள்வீராக! இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (அருள்மறை குர்ஆன் 7:199)

அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். (எதிரிகளை விஞ்சும் வகையில்) பொறுமையில் நிலைத்திருங்கள். (சத்தியத்திற்காகத் தொண்டு செய்திட) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருங்கள்”(அருள்மறை குர்ஆன் 3:200)
யார் பொறுமையை மேற்கொள்கிறார்களோ மேலும் மன்னிக்கவும் செய்கிறார்களோ அவர்களின் அந்தச் செயல் திண்ணமாக உறுதி மிக்க (வீரச்) செயல்களைச் சேர்ந்ததாகும்’ (அருள்மறை குர்ஆன் 42:43)

நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் துன்பத்தைக் கண்டால் மனம் வெறுக்கும் காரியம் நிகழக் கண்டால் அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால் (எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்வார்கள்! (நூல்: இப்னு மாஜா)

வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழிதவறவே மாட்டார்கள். (உமர்(ரலி) நூல்:ரஜீன்)

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள். திண்ணமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’ (அருள்மறை குர்ஆன் 2:153)






நாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வைச் சார்ந்தவர்கள் எனவே இன்றைய தினம் பொறுமைதான் நமக்கு சிறந்தது!
எங்கள் இறைவா அநீதி இழைக்கப்பட்ட எங்கள் சமுதாயத்திற்காக எங்கள் மீது உன் அமைதியையும் பேரருளையும் இறக்குவாயாக! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
சுப்ஹானல்லாஹ்!
அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹு அக்பர்!