Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Friday, February 10, 2012
ஃபலஸ்தீன்:காதர் அத்னானின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது
Monday, February 6, 2012
தேர்தலை விரைவில் நடத்த ஹமாஸ்-ஃபத்ஹ் ஒப்பந்தம்
Friday, February 3, 2012
காஸாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது செருப்பு வீச்சு
பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன.
இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர்.
அதில் 2 பேர் பான் கி மூன் கார் மீது செருப்புகளை வீசினர். மேலும் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை பான் கி மூன் சந்திக்கவில்லை என்பதால் அவரது காரை போகவிடாமல் மனிதச் சங்கிலியாக மாறி மறித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து போகச் செய்தனர்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறைகளில் வாடும் உறவினர்களை சந்திக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பான் கி மூனிடம் கோரிக்கை விடுக்கத் தான் இங்கு வந்தோம் என்று போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜமால் பர்வானா தெரிவித்தார். பான் கி மூன் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர் பாலஸ்தீனிய கைதிகளின் உறவினர்களை சந்திக்க மறுக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் சுமார் 7,000 பாலஸ்தீனியர்களை சிறைபிடித்து வைததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, January 28, 2012
இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை
Tuesday, January 3, 2012
ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியாவுக்கு துருக்கியிலும் அமோக வரவேற்பு
Friday, July 1, 2011
சியோனிச தாளத்துக்கு ஆட்டம் போடும் பிரிட்டன்
Monday, June 20, 2011
பலஸ்தீனர்களின் வாழிடங்களைத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை
Saturday, June 18, 2011
காஸா முற்றுகை சர்வதேச சமூகத்தின் மெத்தனப் போக்கின் விளைவே
Wednesday, June 15, 2011
பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்
Friday, June 10, 2011
இஸ்ரேலிய வதை முகாமில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் கைதிகள் !
Wednesday, January 26, 2011
துரோகம்:கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஃபலஸ்தீன் அரசு - அம்பலப்படுத்தும் அல்ஜஸீரா!!!
மஸ்ஜிதுல் அக்ஸா நிலைப்பெற்றிருக்கும் கிழக்கு ஜெருசலத்தில் பெரும்பாலான
பகுதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் அரசு ஒப்புக்கொண்டது என்ற தகவல்
வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் போது ஃபலஸ்தீன் அரசு இந்த
வாக்குறுதியை இஸ்ரேலுக்கு அளித்தது என அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி
கூறுகிறது.
ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் அன்றைய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்
சிபி லிவ்னி, அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காண்டலிசா ரைஸ், முன்னாள்
ஃபலஸ்தீன் பிரதமர் அஹ்மத் க்வரியா ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையின்
போதுதான் ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு மாற்றமான முறையில் இஸ்ரேலுக்கு
அடிபணியும் விதமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி
வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
"யூத வரலாற்றில் மிகப்பெரிய ஜெருசலத்தை உங்களுக்கு தருவதாக நாங்கள்
வாக்குறுதியளிக்கிறோம்"- இது எரகாத் லிவ்னியிடம் கூறிய வார்த்தைகள்.
1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்து பின்னர்
தொடர்ந்து குடியேற்றங்களை கட்டிவந்த ஜெருசலத்தில் ஒரு பகுதியைத் தவிர இதர
பகுதிகள் அனைத்தையும் இஸ்ரேலுக்கு தாரை வார்ப்பதாக இந்த ஒப்பந்தத்தில்
முடிவெடுக்கப்பட்டது.
ஜபல் அபூ கனீம் என்ற பகுதியை மட்டும்தான் ஃபலஸ்தீன் அரசு கோரியுள்ளது.
1948-49 போர்காலத்தில் அகதிகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது தொடர்பானது இரண்டாவது
ஒப்பந்தம். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் வீதம் 10 வருடங்களில் ஒரு
லட்சம் பேரை ஏற்றுக்கொள்கிறோம் என இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால், போர்
காலக்கட்டத்தில் இஸ்ரேலிலிருந்து வெளியேறியவர்களும், அவர்களின் வாரிசுகளான
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் கூறியபொழுதும் அதனை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்விதமாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும், 2010 ஆம் ஆண்டிற்குமிடையே இஸ்ரேல், ஃபலஸ்தீன்,
அமெரிக்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் 16,076 ஆவணங்கள் அல்ஜஸீராவுக்கு
கிடைத்துள்ளன. நான்கு பகுதிகள் அடங்கிய இதன் ஒரு பகுதி மட்டும்தான் அல்ஜஸீரா
நேற்று முன்தினம் வெளியிட்டது. மீதமுள்ள பகுதிகள் வருகிற நாட்களில் வெளியாகும்.
ஆனால், அல்ஜஸீரா வெளியிட்ட ஆவணங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கிறார் எரகாத்.
நாங்கள் ஒன்றையும் மறைக்கவில்லை எனவும், இதில் பெரும்பாலும்
இட்டுக்கட்டப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். இது ஃபலஸ்தீன் அரசுக்கெதிரான
சதித்திட்டம் என அஹ்மத் க்வரியா தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகள் குறித்தும் அரபுலீக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக
ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவிக்கிறார்.
2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
மூலம் தோல்வியை சந்தித்தது. தாக்குதல் நடத்தும் விபரத்தை இஸ்ரேல் முன்னரே
மஹ்மூத் அப்பாசுக்கு தெரிவித்திருந்ததாகவும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடந்த விபரத்தை அன்றைய இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட்
உறுதிச்செய்துள்ளார்.
ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அப்பாஸும் அவருடைய கூட்டாளிகளும்
இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கான ஆதாரம்தான் இவை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமி
அபூஸுஹ்ரி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Friday, December 10, 2010
காசா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் விமான தாக்குதல்
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிகையில், "மத்திய காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்கையும் வடக்கு காசாவில் நெகவ் பகுதியில் உள்ள முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது' என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் எஷ்கோ பகுதி மீது ஹமாஸ் இயக்கம் பீரங்கி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில் உள்ளூர்வாசி ஒருவர் காயம் அடைந்தார். முன்னதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் தலைவர் கபி அஷ்கனேஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் "காசாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அண்மையில் எல்லையில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இது தொடரும். கடந்த காலங்களில் பாதுகாப்பு படை எல்லையில் தீவிரமாக செயல்பட்டதைப் போல இப்போதும் செயல்பட தயாரக இருக்க வேண்டும்' என்றார்.
அவர் இவ்வாறு பேசிய சில மணிநேரங்களில் விமான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Friday, November 12, 2010
பலஸ்தீனர்களின் பொழுதுகள் எவ்வாறு கழிகின்றன?
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை முஸ்லிம்களாகிய நமக்கு முன்
நிற்கிறது என்பது நமக்கு நினைவு உள்ளதா? *
ஒரு பலஸ்தீன் சகோதரனின், ஒரு பலஸ்தீன் பெண்மணியின், ஒரு பலஸ்தீன்
குழந்தையின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகிறது தெரியுமா? நாம் கழிக்கும் ஒரு
சாதாரண நாள் போலவா அது கழிகிறது?
*இல்லவே இல்லை!
**அவர்களின் ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு நிமிஷங்கள்... போராட்ட கணங்கள்...
இந்தப் படங்களைப் பாருங்கள் புரியும்...*
