Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, July 11, 2011

பிரபல்யமாகாத சில WEB BROWSER -கள் பற்றி


Internet Explorer -க்கு  அடுத்து  Fire Fox, Chrome, Opera, Safari போன்ற பிரவுசர்கள்  தான் உள்ளன என்று நம்மில் பெரும்பாலனவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,  இன்டர்நெட் உலகில் மேலும்  பல பிரவுசர்கள் - மேற்குறிப்பிட்ட பிரபல்யமான  பிரவுசர்களை விட - பல விஷயங்களில் நேர்த்தியாக  செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன  என்பதே உண்மை. 
அந்த வரிசையில் ....

1.அரோரா (Arora): ஒரு Open Source Programe  ஆகிய இது -  Windows, Mac, Linux போன்ற  ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது.  POP UP விளம்பரங்களைத் தடுப்பது, PRIVATE BROWSING, பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது போன்ற  ஒரு சாதாரண  பிரவுசருக்குத்தேவையான  பல அடிப்படை வசதிகளை தன்னகத்தே  கொண்டுள்ளது. CHROME பிரவுசரின்  தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். கடந்த  ஏப்ரலில் தான் அப்டேட் செய்யப்பட்டது. இதன் சைஸ் 10.2 MB ஆகும் .....  இலவசமும் கூட!
இணைய தள முகவரி:
http://code.google.com /p/arora/downloads/list

2.கேமினோ (Camino): MAC operating சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசரான இது,  ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. MAC பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்று. எளிமையானது;  மிகச் சிறிய அளவே  இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கின்றது.
இணைய தள முகவரி : http://caminobrowser. org/download/


3. பிலோக் (Flock): WINDOWS, MAC மற்றும் LINUX  சிஸ்டங்களில் இயங்கக்கூடியது.  FIREFOX பிரவுசரின்  அடிப்படையில் இயங்குவதால் FIREFOX பிரவுசரை உபயோகித்தவர்கள் இதனை வெகுஎளிதாக கையாளலாம். FIREFOX போன்று பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினையும் தருகிறது. Face Book, Twitter, My Space, You Tube, Flicker, Blogger, G Mail மற்றும் Yahoo Mail போன்றவற்றிற்கு நேரடியான  இணைப்பையும் வழங்குகிறது.  Photo Sharing, Updated News, Search Engine ஆகியவைகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் அளவு 12.8 M.B.
இணைய தள முகவரி: http://www.flock.com

4. கே–மெலான் (KMeleon): WINDOWS சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் ஓர் open source பிரவுசரான  இதுவும்,  ஜெக்கோ தொழில் நுட்பத்திலேயே  செயல்படுகிறது. இதனை நம் வசதிக் கேற்றவாறு  SET செய்யலாம். நமக்குத் தேவைப்படும்  தளங்களை மிகவும் வேகமான முறையில் பெற்றுத் தருகிறது.  ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் அளவு 5.8 M.B.
இணைய தள முகவரி: http://kmeleon.sourceforge.net/
5. மேக்ஸ்தான் (Maxthon): இதுவும்  WINDOWS இயக்கத்திலேயே  செயல்படுகிறது. சீனாவில் மிகவும் பிரபல்யமான  பிரவுசர்.  இதன் அளவு 6.4 M.B. இலவசமும் கூட. இதன் பிரவுசிங் மிகவும்  வேகமாக உள்ளது. ஒரு பிரவுசருக்கு தேவையான எல்லாவித   அடிப்படை வசதிகளும்  இதில் உள்ளது.
இணைய தள முகவரி:  http://www.maxthon.com /download.htm
6. பேல் மூன் (Pale Moon): WINDOWS ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்  செயல்படுகின்ற இதுவும்  ஜெக்கோ தொழில் நுட்பத்திலேயே  இயங்குகிறது. FIREFOX பிரவுசரின்  கட்டமைப்பை  கொண்டுள்ளதால் FIREFOX  -இன்  Extensions, Theams   மற்றும் Personas போன்றவை   இந்த பிரவுசரிலும் செயல்படுகின்ற   விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற  பிரவுசர்களை விட இப்பிரவுசர் 25% கூடுதல் வேகம் கொண்டது  என்று இந்நிறுவனத்தின்  அறிக்கை கூறுகிறது. இதன் அளவு 7.7 M.B. 
இணைய தள முகவரி: http://www.palemoon.org

ஆக, பிரபல்யம் என்று  பெயர்வாங்கிய Internet Explorer, Fire Fox, Chrome போன்ற  பல பிரவுசர்கள், இன்றைய காலகட்டத்தில்  பலவகையான  வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருவதை காணும் போது  மேற்குறிப்பிட்ட அதிக பிரபல்யமாகாத  இந்த  பிரவுசர்களையும் உபயோகிப்படுத்திப் பார்த்தால் வைரஸ்களின்  தாக்கம் குறைவாகவே தான்  இருக்கும் என்று தோன்றுகிறது.

Sunday, July 10, 2011

தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க

SOFTWARES - என்னும் மென்பொருட்கள் கணினிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று!  நமது வேலை பளுவை  குறைக்கவும் இன்னும்  பல  அதிக வசதிகளுக்கும் மென்பொருட்களையே நாம் நம்பி இருக்கின்றோம்.  

மென்பொருட்கள் இல்லாத  கணினிகளை  வெறும் குப்பைக்கு சமம் என்றே சொல்லலாம். இந்த மென்பொருட்களை பிரபலமான பல  கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து, விலை நிர்ணயம் செய்து நம்மிடம் விற்பனை செய்கிறது.  

இவ்வகையான மென்பொருட்களை, விலைக்கு வாங்கி,  உபயோகிக்கையில் -    நம்முடைய கணினி எவ்வித  பிரச்சினையுமில்லாமல்  பாதுகாப்புடன் செயல்பட ஏதுவாகிறது. 

ஆனால் நம்மில் பெரும்பாலானோர்  எந்த  மென்பொருளையுமே  பைசா செலவில்லாமல் CRACK   அல்லது இணையத்தில் நிரம்பி வழிந்து கொட்டி கொண்டிருக்கும்  இலவச மென்பொருட்களையே தரவிறக்கம் செய்து  உபயோகிக்கிறோம்.



இப்படியான   இலவச மென்பொருட்களை தரவிறக்கி, உபயோகிக்கும் போது சில MALCIOUS  மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிப்படைய வாய்ப்புள்ளது. Anti Virus மென்பொருளாலும்  இவ்வகை, MALCIOUS -  மென்பொருட்களை கண்டறிய முடியாமல் போவதால் நமது  கணினி மேலும் மேலும்  பாதிப்படைந்து  நாளடைவில் முற்றிலும் செயலிழந்துப்போகும் நிலை ஏற்படும்.


ஆக  இந்த பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக  MICROSOFT நிறுவனம், MALCIOUS மென்பொருட்களை கண்டறிந்து நீக்குவதற்காக ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். 


--- Malcious Software Removal என்னும் இந்த மென்பொருளை தரவிறக்கம்  செய்து கணினியில் பதியும் போதே இந்த மென்பொருள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும்.

--- கணினியின் அனைத்து மென்பொருட்களுடன், Executable File - கள் யாவும்  ஸ்கேன் செய்யப்படும்.

--- அப்படி தீங்கு விளைவிக்கக்கூடிய மென்பொருட்கள்  ஏதேனும் கணினியில் கண்டறியப்பட்டால்,  அதை உடன் அழித்து விடும்.

 --- கணினியில் தீங்கு விளைவிக்கும்  எந்த  MALCIOUS மென்பொருளும் இல்லாத பட்சத்தில், அதாவது கணினியின்  அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருக்குமேயானால், 'கணினியின் எந்த மென்பொருளும் பாதிக்கப்படவில்லை'  என்ற செய்தியையும் தரும்.

Tuesday, June 28, 2011

இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்!

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம்!  இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.


மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம். எனக்கு ஆங்கிலம் தெரியும், அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.

நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்http://translate.google.com/  என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu)  மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language)  இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழி பெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழி பெயர்ப்பின் தரம் மற்ற மொழி பெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்.

Wednesday, June 15, 2011

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மதுரை: மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துள்ளது.


பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என நம்பப்டுகிறது.

தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை நமது கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நமது கணணியில் இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ( விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட் ) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எபிக் ஆகிய பிரவுசர்கள் இந்திய மார்க்கெட்டைக் குறி வைத்து உருவாகி அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.

அதேசமயம், இந்திய சந்தையை மைக்ரோசாப்ட் குறி வைப்பது முதல் முறையல்ல. பொனடிக் கீபோர்ட், இந்திய மொழிகளுக்கான இன்டிங் லாங்குவேஜ் இன்புட் டூல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இமெயில், மெசஞ்சர் ஆகியவற்றிலும் இந்திய மொழிகளை அது ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.