Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Sunday, December 13, 2015
மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி
பத்திரிக்கைச் செய்தி
Friday, December 11, 2015
முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.
Sunday, November 29, 2015
Saturday, November 7, 2015
Monday, October 26, 2015
Tuesday, November 5, 2013
Tuesday, October 15, 2013
தினமணியின் தலையங்கம்:விஷ(ம)ம் நிறைந்த கருத்து
திருப்பதி பிரம்மோற்சவத்தில் சுவாமி வீதிவலத்தின்போது குடையில் குண்டு வெடிக்கச் செய்யவிருந்த திட்டத்தையும் சென்னையில் ஒரு இந்துமதப் பிரமுகரைக் கொலை செய்யும் திட்டத்தையும் முறியடித்துள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள்.
ஆந்திர மாநிலம் புத்தூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தீவிரவாதிகள், வீட்டை வெடிக்கச் செய்வோம் என்று மிரட்டியபோது, அருகில் குடியிருந்தவர்களை தாற்காலிகமாக வெளியேறச் செய்து, வீட்டுக்குள் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி அனைவரையும் உயிருடன் பிடிப்பதில் தமிழ்நாடு காவல்துறை கையாண்ட உத்திகளையும் நாம் பாராட்டியாக வேண்டும்.
இருப்பினும், 2011 அக்டோபர் 28-ஆம் தேதி மதுரை திருமங்கலம் அருகே, பாஜக தலைவர் அத்வானி செல்லவிருந்த பாதையில், தரைப்பாலத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நாளிலேயே, தீவிரமான விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டிருந்தால், மதுரையைச் சேர்ந்த இந்த மூவரையும் எப்போதோ கைது செய்திருக்க முடியும். காவல்துறை அப்போது மெத்தனமாக செயல்பட்டது என்ற நினைப்போடுதான் இப்போது பாராட்ட வேண்டியுள்ளது.
ஆந்திர மாநிலம், புத்தூரில் இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தங்கியிருந்துள்ளனர். புத்தூரிலிருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இவர்களைப் பற்றி இப்போதுதான் தமிழ்நாடு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம், சேலம் ஆடிட்டர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் பரிசு என கடந்த ஜூலை 24-ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. இந்த நடவடிக்கையால் நிறைய துப்புகள் கிடைத்திருக்கும் என்பது உறுதி.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதைக் காட்டிலும், மாநில காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவதுதான். பல வழக்குகளில் இவர்களைக் கைது செய்யும்போது ஏற்படும் பரபரப்பு, விரைவிலேயே நீர்த்துப் போகிறது. தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அவர்கள் அப்பாவிகள் என்று கூறி, களத்தில் இறங்கவும், காவல்துறையினரின் பொய்வழக்கு என்று குறை சொல்லவும் மனித உரிமை அமைப்புகள் நிறைய இருக்கின்றன.
அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த குழுக்கள், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் முழுவதையுமே இதுபோன்று அநியாயமாக கைது செய்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த சமுதாயத்தையும் மதச்சார்பற்ற மக்களையும் பீதியில் ஆழ்த்துகின்றன. குண்டுவெடிப்பு சில உயிர்களைத்தான் பலி கொள்ளும். இதுபோன்ற மனித உரிமையாளர்களின் அக்கறை - சமூகப் பிளவையே ஏற்படுத்தக்கூடியவை.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் இளைஞர்கள்தான். இவர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று காவல்துறை நிரூபிப்பது உடனடியாக சாத்தியமில்லை. இவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்று தெரிந்திருந்தாலும்கூட, நீதிமன்ற நடைமுறைக்குத் தேவைப்படும் ஆதாரங்களைத் திரட்ட காவல்துறைக்கு கால அவகாசம் தேவைப்படும். அதற்காக இவர்களை மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே போன்றோர் சொல்வதைப் போல அப்பாவி என்று சொல்வதும், இவர்களை சிறையில் அடைத்ததை அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் மீது அடையாளப்படுத்தி, மனித உரிமை அமைப்புகள் களத்தில் குதிப்பதும் தீவிரவாதத்தை எதிர்கொள்ளத் தடையாக இருக்கும்.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என்பதாலேயே, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தைப் பழிப்பதோ, தீவிரவாதிகளாகப் பார்ப்பதோ மிகவும் கொடுமை. சில யானைகளுக்கு மதம் பிடிக்கிறது. அதற்காக, எல்லா யானைகளையும் ஒதுக்கியா விடுகிறோம்? நடுநிலையாளர்கள் இந்தப் பிரச்னையில் கவனமாக இருக்க வேண்டும். மத நல்லிணக்கத்தையும், இணைந்து வாழ விரும்பும் உணர்வையும் கொண்ட முஸ்லிம்களின் மனம் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
பிடிபட்டிருக்கும் தீவிரவாதிகளிடம் முறையான விசாரணை நடத்தி, தமிழகத்தில் ஊடுருவி இருக்கும் இந்த பயங்கரவாதப் போக்கு சல்லி வேர், ஆணி வேர் இல்லாமல் பிடுங்கி எறியப்பட வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டின் நிம்மதியைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதில் அரசும் காவல்துறையும் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சிப்பவர்களும் தண்டனைக்குரியவர்களே!
தினமணியின்-தலையங்கத்தை படிக்க பொதுவான கருத்தாக இருந்தாலும் விஷ(ம)ம் நிறைந்த கருத்து ---இந்த பயங்கரவாதப் போக்கு சல்லி வேர், ஆணி வேர் இல்லாமல் பிடுங்கி எறியப்பட வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டின் நிம்மதியைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.என்ற கருத்தை நான் வழி மொழிகிறேன் அதே சமயம் நாம் அந்த சல்லி வேரை வெந்நீர் ஊற்றி அழித்தொழிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம். நமது இந்திய திரு நாட்டில் பல முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆயுத பயிற்சி வழங்குவதோடு நாங்கள் தாம் தேச பக்தர்கள் என்று இதில் அவர்களுக்கு பம்மாத்து வேறு எனவே யாராக இருந்தாலும், என்ன ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இது போன்ற இயக்கங்களை மீண்டும் தடை செய்தால் நம் இந்தியா ஒளிரும் மிளிரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Friday, October 11, 2013
மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும் – குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார்!
கொச்சி: நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்தி பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
கொச்சிக்கு வருகை தந்த ஆர்.பி. ஸ்ரீகுமார் தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது: வழக்குகளை அழித்தொழிக்கவே மோடியை பிரதமராக்க பா.ஜ.க. படாத பாடு படுகிறது. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் தற்போது அச்சத்தால் மெளனம் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே மோடி தங்களது பாதுகாவலன் என்ற எண்ணத்தை ஏற்படுத்த பா.ஜ.க. மற்றும் மோடியால் முடிந்துள்ளது.
சங்க் பரிவார் அல்லாத சாதாரண இந்துக்கள் மத்தியிலும் அத்தகையதொரு பிரச்சாரம் செல்வாக்கு பெற்றுள்ளது. அவ்வளவு தூரம் நாட்டு மக்களின் உள்ளங்கள் வகுப்புமயமாக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தின் பொய்யான வளர்ச்சிவாதங்கள் ஒரு புறம் வேகமாக பரப்புரை செய்யப்படுகின்றன.
தற்போது மூன்று வகையான மக்கள் நாட்டில் உள்ளனர். 1. என்ன நடந்தாலும் சங்க் பரிவாரத்தையும், மோடியையும் ஆதரிப்பவர்கள். 2. நடுநிலையான மோடியை எதிர்ப்பவர்கள். 3. மோடியை மகானாக கருதும் கற்பனையில் உழலுபவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரத்திற்கு உபயோகித்தது போலவே அனைத்து விதமான பிரச்சார உத்திகளையும் பயன்படுத்தி இந்த 3-வது பிரிவினரை ஈர்ப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
அதில் அவர்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார்கள். குஜராத்தில் 90 சதவீத ஹிந்துக்களும் வகுப்புமயமாக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
Saturday, September 28, 2013
பாஜகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ்
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினேன்.
இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னை தீரும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார் அன்புமணி ராமதாஸ்.
200 அடி குழியில் விழுந்த குழந்தை ; 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு
திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகள் மூலம் மீட்டனர் . ஆனால் இகுழந்தை மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தற்போது சொல்ல முடியவில்லை. அவர் ஆரணி அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை குழியில் இருந்து மீட்டாலும் , இவர் உயிரோடு நலமுடன் திரும்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.
புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் 10 மணி நேரம் ஈடுபட்டனர்,

ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டினர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் நேரடியில் :
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஞானசேகர் புலவன்பாடிக்கு சென்றார். அங்கு மீட்பு பணியை முடுக்கி விட்டார்.அடுத்து , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தவு பிறப்பித்தார்.மாவட்ட எஸ்.பி., முத்தரசி சம்பவ இடத்தில் முகாமிட்டார். இதற்கிடையில் கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

Saturday, February 11, 2012
ஊழலுக்கு புரோக்கர் வேலை செய்யும் சோ!
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஆச்சார்யார். இவரை கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சி நியமித்தது.
இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து 08.02.2012 அன்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ’’ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது.
அதாவது இவருக்கு அரசின் தலைமை வழக்கறிஞ்சர் பதவியை லஞ்சமாக கொடுத்து விட்டு அதற்க்கு பதிலாக ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி பாரதிய ஜனதாகட்சி நெருக்கடி கொடுத்துள்ளது. நேர்மையான ஆச்சாரியார் தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் தலைமை வழக்கறிஞசர் என்ற மணி மகுடம் தேவையில்லை என்று தூக்கி எரிந்து விட்டார்.
முதல்வர் ஜெயாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கறிஞசர் என்கிற பதவியே போதும் என்றும் அந்த வழக்கை நேர்மையாக செய்தது முடிப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார். நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்த ஜெயா மற்றும் அவரது கூட்டம் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இந்த கேவலமான காரியத்திற்கு ஜெயாவுக்கும் BJPக்கும் இடையில் தூது போன புரோக்கர் யார் தெரியுமா? அவர்தான் நமது திருவாளர் துக்ளக் சோ. இவர் தன்னை மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக்கொண்டு இதுபோல் புரோக்கர் வேலை செய்து வருகிறார்.
Friday, February 10, 2012
அந்த மாணவனின் கையில் யார் கத்தியைக் கொடுத்தது?
நேற்றைய தொலைக்காட்சிகளிலும், இன்றைய பத்திரிகைகளிலும் இதுவே முக்கிய செய்தி. தன்னை நோக்கி கத்தியுடன் வந்த மாணவன் இர்ஃபானைப் பார்த்து டீச்சர் உமாமகேஸ்வரிக்கு வந்த பயமும், பதற்றமும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்று வந்திருக்கிறது. அதனை எதிர்கொள்ள, தப்பிக்க அல்லது முறியடிக்க கூடவே சிந்தனைகளும் முளைக்கின்றன.
“அந்தச் சிறுவன் ஒரு மனநல நோயாளி”, “அவனைத் தூக்கில் போட வேண்டும்”, “வளர்ப்பு சரியில்லை எனவே பெற்றோரையும் தண்டிக்க வேண்டும்”, “சினிமாக்களும், தொலைக்காட்சிகளும்தான் இதுபோன்ற வன்செயல்களுக்கு வித்திடுகின்றன” இப்படியான கருத்துக்கள் அதிகமாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
“யாரும் பெயில் கிடையாது என்னும் பெயரை சம்பாதிக்க பள்ளிகள் மாணவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகளே காரணம்”, “ மார்க்குகளை மட்டுமே முக்கியமாகக் கருதும் இந்தக் கல்விமுறையே காரணம்”, “தொடர்ந்த கட்டாயங்களால் ஏற்படும் மன அழுத்தம் இதுபோன்ற குற்றங்களுக்கு கொண்டு செல்கிறது” என நிதானமாக கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
இவைகள் வெறும் உணர்ச்சிகளின் தரப்பிலிருந்தும் அல்லது முற்றிலும் அறிவின் தரப்பிலிருந்தும் சமூகத்தின் முன்னே நடத்துகிற உரையாடல்களாகத் தெரிகின்றன. தற்காலிகமான ஆனால் உடனடியான தீர்வுகளுக்கான அல்லது நிரந்தரத்தீர்வுகளுக்கான வழிகளை ஆராய்வதாக இருக்கின்றன. இவைகள் யாவிலும் உண்மைகளின் கூறுகள் இருப்பினும், மனித மனங்கள் பற்றி நிறைய பேச வேண்டியிருகிறது நாம். ஒரு கொலை, அதன் பின்னணி, கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவர், ஆயுதம், சாட்சிகள் என்ற ரீதியில் இதனை ஒரு கேஸ் கட்டுக்குள் அலசிடமுடியாது.
கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் மகள் தொலைக்காட்சியில் பேசுவதைப் பார்க்க கஷ்டமாயிருந்தது. “எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. எல்லார்ட்டயும் அன்பா இருப்பாங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லும்போது நமக்கும் தொண்டை அடைக்கிறது. எப்பேர்ப்பட்ட இழப்பு அந்த குடும்பத்துக்கு. இனி அதை யாரால், எப்படி திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட முடியும்? அந்தக் கேவல்களை எப்படி நிறுத்த முடியும்?
“நான் தவறு செய்துவிட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் என் பெற்றோர்களையும் பார்க்க விரும்பவில்லை” என இர்ஃபான் அளித்துள்ள வாக்குமூலம், அவன் தன்னை உலகிலிருந்தே துண்டித்துக் கொள்ள முயல்பவனாகக் காட்டுகிறது. “அந்த டீச்சர் கதறியது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது” எனச் சொல்வதில் அவன் அடையும் சித்திரவதை இருக்கிறது.
இப்படிப்பட்ட இர்ஃபான் கையில் கத்தியையும் அவனது சிந்தையில் தன் டீச்சரைக் கொல்ல வேண்டும் எனகிற வெறியை யார் திணித்தது? இரண்டுநாளாய் கத்தியை தனது புத்தக்கட்டுக்குள் வைத்து திட்டமிட்டு இருந்திருக்கிறான். தக்க தருணம் எதிர்பார்த்திருக்கிறான். ஒரு குத்து அல்ல. மாறி மாறி குத்தியிருக்கிறான். கையெடுத்துக் கும்பிட்ட பிறகும் குத்தியிருக்கிறான். அவ்வளவு ஆத்திரம் அவனுக்குள் எப்படி விதைக்கப்பட்டது? இதுதான் பெரும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் என் மனைவி செய்தியை படித்துவிட்டு, “இப்போல்லாம் பிள்ளைங்கள எதுவும் சொல்லவே பயமா இருக்கு. உடனே அழுது தள்ளிருவாங்க. நிப்பாட்டவே மாட்டாங்க.” எனச் சொல்லி வந்தவள், “ஆனா, எல்லோரையும் பொதுவா சத்தம் போட்டா அமைதியா இருப்பாங்க. அல்லது சிரிக்கக்கூடச் செய்வாங்க” என்றாள். “அதே மாதிரி, தனியா அழைத்துப் போய் கடுமையாப் பேசினாலோ, புத்திமதி சொன்னாலோ கேட்டுக்குவாங்க. அழல்லாம் மாட்டாங்க. ஆனா அதுக்குல்லாம் எங்க நேரம்? ஒரு வகுப்பிலேயே நாப்பது ஐம்பது புள்ளைங்க இருக்காங்க” என்றும் சொன்னாள். இந்த இடம்தான் வெளிச்சம் காட்டுவதாக இருக்கிறது.
இன்றைய குழந்தைகள் பொதுவெளியில் தங்களுக்கு ஒரு தோல்வியோ, அவமானமோ நிகழ்ந்தால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். தவறுகளை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்கிறார்களோ அதுபோல தண்டனைகளையும் மற்றவர்களுக்குத் தெரியாமலேயே அனுபவித்துவிட தயாராய் இருக்கிறார்கள். வெளிப்படையாய் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். மனித மனத்தின் பொதுவான தன்மைகள் இவற்றிலிருப்பினும் இன்றைய குழந்தைகள் மிக தீவீரமாகவும், நுட்பமாகவும் இவ்விஷயத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் உலகில் அவர்கள் தங்களை மட்டுமே மிக அதிகமாக நேசிக்கிறார்கள். அதல் சிராய்ப்புகள் வருவதைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தங்களிடமிருக்கும் இந்த அன்பை எப்படி உலகம் முழுமைக்கும் அவர்களை பரிமாற வைப்பது என்பதுதான் இன்றைய சமூகத்தின் சவால். நிகழ்காலத்தின் கேள்வி. டீச்சர் உமா மகேஸ்வரியின் மரணம் இரத்தம் சிந்த சிந்த படுகொலையாக நிகழ்த்தப்பட்ட புள்ளி இதுவாகவும் தெரிகிறது.
ஒருவேளை, நேற்று வகுப்பறையில் உட்கார்ந்திருந்த உமாமகேஸ்வரி டீச்சர், அந்த மாணவன் உள்ளே நுழைந்ததும், “வா, இர்ஃபான் முதல் ஆளா கிளாஸுக்கு வந்திருக்கியே. சந்தோஷமாயிருக்கு. இப்படி இருந்தா நீ எவ்வளவோ சாதிக்கலாமே” என்கிற தொனியில் பேசி முகம் மலர்ந்து வரவேற்றிருந்தால் அந்தக் கத்தி இர்ஃபானின் பையிலேயே இருந்திருக்கலாம். உமா மகேஸ்வரி அவர்களும் இப்போது ஒரு வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்திருக்கலாம். நானும், நேற்றைய பதிவுக்கு nellaiconspiracy என்னும் நண்பர் கேட்டிருந்ததற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்திருக்கலாம்.
யோசித்துக்கொண்டே இருக்கிறேன். கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன.
Saturday, February 4, 2012
நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!
இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
"நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 2012 பிப்ரவரி 5ம் தேதி,
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்புகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபான விற்பனையும் செய்யக்கூடாது. விதிமுறை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."
மேற்கண்டவாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது
குடும்ப! ஆணவ! மதவாத அரசியலில் சிக்கித்தவிக்கும் தமிழகம்!
குடும்ப அரசியல்: திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினா, அழகிரியா என்ற விசயத்தில் பெரும் சர்ச்சை நடந்தது. அதனால் கருணாநிதி மிகவும் மனம் உடைந்து பேசினார்.
பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. என்று சொன்னார் தமிழ் இன (ஈன)தலைவர் கருணாநிதி.
இவர் எப்படி? அண்ணாவிற்கு பின் கட்சியில் இருந்த மூத்த தலைவர்களை புறம்தள்ளி முன்னுக்கு வந்தார் என்பது யாவரும் அறிந்ததே. கட்சிக்காக மாடாய் உழைத்த எத்தனையோ உண்மையான தலைவர்கள் இருக்க மகன்அழகிரி, ஸ்டாலின், மகள் கனிமொழி, பேரன் மாறன் என்று மொத்த குடும்பத்தையும் கொண்டு வந்தார்.
மஞ்சள் பையோடு அரசியலுக்கு வந்த கருணாநிதியின் குடும்பம் இப்போது ஆசியாவிலே பெரும் பணக்காரர்கள் வரிசையில் உயர்ந்து நிற்கிறது. இதுவெல்லாம் யார் பணம்? நிச்சயமாக உழைத்து சம்பாதித்தது இல்லை எல்லாமே மக்கள் பணம்.
ஆணவ அரசியல்: ஜெ தளுக்கி, குலுக்கி உடலை காட்டி நடித்து பணம் சம்பாதித்து, எம்.ஜியாரை மயக்கி அரசியலுக்கு வந்தவர். இவர் பார்பனர் என்பதால் இயல்பான ஜாதி வெறி. நடிகை என்பதால் எல்லோரையும் தொட்டு நடிக்க வேண்டும் அதில் தீட்டு பார்க்க முடியாது.
அதனால் அரசியலுக்குள் வந்ததும் தனது ஆஸ்தான பார்பன குருக்கள் சொல்வதை கேட்டுசட்டமன்ற கட்டிடத்தை மாற்றினார். அமைச்சர்கள் எல்லோரையும் காலில் விழுந்து நமஸ்காரம்செய்யவைத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் இங்கும் அங்கும் பந்தாடினார்.
தனது அரசியல் குருக்களாக கோமாளிகளான சோவையும், சுப்பிரமணிய சுவாமியையும் நியமித்தார். இப்போது தனது கூட்டணியில் உள்ள எதிர்கட்சி தலைவரையும், M.L.A களையும் தனக்கு அடங்கி போகச்சொல்லி ஆணவம் செய்கிறார். கேள்விகள் கேட்கத்தான் எதிர்கட்சி என்பதை மறந்து தனக்கு அடிமை சாசனம் எழுதச்சொல்கிறார்.
வெத்து வெட்டு விஜயகாந்து: ஈழத்து இனஅழிப்பு, கூடங்குளம், தமிழக மீனவர் படுகொலை, எதிலும் வாய்திறக்காத எதிர்கட்சி தலைவர். பஞ்சாயத்து தேர்தலில் அம்மா கலட்டி விட்டதால் கடும் தோல்வியை சந்தித்தார். ஜெ சொன்னமாதிரி இவர் ஆதிமுக உடன் கூட்டு சேர்ந்ததால்தான் இத்தனை சீட்டுக்களும், எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தும் என்பது உண்மையே.
சினிமாவில் கைநீட்டி, நாக்கை கடித்து ரவுடி மாதிரி வசனம் பேசிய இவர் அதை அட்ச்சாரம் பிசகாமல் சட்டமன்றத்திலும் செய்து முடித்துள்ளார். இவரது சினமா வசனம் எல்லாம் அங்கே பலிக்கவில்லை. இவருக்கு ரவுடி மாதிரி பேசத்தானே தெரியும் ஆனால் திமுக, அதிமுகவில்இருப்பதில் பெரும்பான்மையினர்கள் ரவுடிகல்தானே. அதனால் இவரது பேச்சு அங்கே எடுபடவில்லை.
காங்கிரஸ் கோமாளிகள்: இந்த கட்சியில் தொண்டர்களே கிடையாது என்கிற அளவுக்கு தலைவர்கள் நிறைந்த கட்சி. அதிமுகாவுக்கு அடுத்து அடிமைகள் நிறைந்த கட்சி என்று இதை சொல்லலாம். சோனியா எந்த திசையில் கையை காட்டினாலும் ஓடும் மாடுகள்தான் இவர்கள்.
இந்த மாடுகளோடு, மாட்டை வைத்து கட்சி நடத்தும் ஹிந்துத்துவா மாடுகளும் ஒன்றாய் சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்க சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள்.காங்கிரஸ்காரர்களுக்கு சோனியா தெய்வம், அதிமுக.காரர்களுக்கு ஜெ தெய்வம். மற்றபடி இவர்களுக்கு மக்களை பற்றி எந்த கவலையும் கிடையாது.
source:sinthikkavum.net

Friday, February 3, 2012
கூடங்குளம் அணு உலை விவகாரம்: காங்- மனிதநேய மக்கள் கட்சி மோதல்
சென்னை: கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. 14 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக அங்கு அணு மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப்பகுதி மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை என்பதை நிபுணர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக விரோதிகள் சிலர் இதை எதிர்த்து வருகிறார்கள். இது வெளிநாட்டு சதியாக இருக்குமோ என்ற அச்சம் கூட உள்ளது. முதல்வர் விலை இல்லா மிக்சி, கிரைண்டர், வழங்குவதாக அறிவித்துள்ளார். அதற்கு மின்சாரம் மிகவும் தேவை என்றார் அவர்.
பின்னர் பேசிய மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. அவர்களது அச்சத்தைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அது இதுவரை ஏற்கப்படவில்லை.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடங்கினால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 300 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். 1.75 சதவீத மின்சாரம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கே தேவைப்படும் என்றார்.
இதற்குப் பதிலளித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன்,கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழகத்திற்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று பல்வேறு நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர் தவறான தகவல் தருவது கண்டனத்திற்குரியது என்றார்.
தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்- இந்து முன்னணியினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதை காங்கிரஸ் பாராட்டி உள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன், காங்கிரசார் யாரையும் பாராட்டவில்லை. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கூட கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். தாக்குதல் நடத்தியவர்கள் யாரையும் அவர் பாராட்டவில்லை என்றார்.

Wednesday, February 1, 2012
சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல் குறித்த விவரம்...
சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
அதற்கு சந்திரகுமார் மீண்டும் எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக
கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.
இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.
அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார். இதற்கு அதிமுக
உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.
இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பெரும் அமளியாக இருந்தது.
இதைத் தொடர்ந்தே தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்
Friday, January 27, 2012
ஜெ. சொத்துக் குவிப்பு: மறுபடியும் மொதல்ல இருந்தா...?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
முதல்வர் ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குக் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்தும் நோக்கம்தான் இதில் தெரிகிறது. 8 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கச் சொல்வது ஏன் என்பது புரியவில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குமூலம் பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் விசாரணையைத் தொடங்கக் கோருவது சரியல்ல, இதுதொடர்பான அரசாணை ஏற்கத்தக்கதல்ல.
இந்த அரசாணையானது, அரசியல் சட்டத்தின் 173வது பிரிவை கேள்வி கேட்பதாக உள்ளது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Saturday, September 24, 2011
சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்
சென்னையிலிருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த ரன்வேயில் தரையிறங்க எத்தனித்தது. அப்போது ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிரு்பபதைப் பார்த்த ஏர் இந்தியா விமானி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் விமானத்தை தரையிறக்காமல் அப்படியே மேலே ஏற்றி விட்டார். ஏர் இந்தியா விமானம் மட்டும் தரையிறங்கியிருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 216 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அத்தனை பேரும் ஏர் இந்தியா விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பினர்.
பின்னர் சிறிது நேரம் ஏர் இந்தியா விமானம் வானில் வட்டமிட்டபடி இருந்தது. பின்னர் ஜெட் ஏர்வேஸ் விமானம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அது பத்திரமாக தரையிறங்கிய பின்னரே விமான நிலையத்தில் அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.
இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
விசாரணைக்கு உத்தரவு
இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)