Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Showing posts with label குஜராத். Show all posts
Showing posts with label குஜராத். Show all posts
Tuesday, November 5, 2013
Saturday, November 2, 2013
Tuesday, October 29, 2013
குஜராத்தில் முஸ்லிம் மாணாக்கர்களை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுப்பு!
அஹமதாபாத்: குஜராத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முஸ்லிம்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ஹீரா மோமின் என்ற ஐந்து வயது முஸ்லிம் சிறுமியை அஹமதாபாத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க சிறுமியின் பெற்றோர் விண்ணப்பித்தனர். ஆனால் இப்பள்ளி நிர்வாகம் "முஸ்லிம் மாணாக்கர்களுக்கு இப்பள்ளியில் இடமில்லை" என்று கூறி அச்சிறுமியை பள்ளிக்குள் சேர்க்க அனுமதி மறுத்து விட்டது.
இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி அப்பள்ளி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
Monday, October 28, 2013
குஜராத் இனப்படுகொலை: மோடிக்கு எதிரான மனுவில் இன்று தீர்ப்பு!
அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்.ஐ.டி.) அறிக்கைக்கு எதிராக கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி அளித்த மனுவின் மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
Friday, February 10, 2012
தொடர்புக்கு குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி
அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை தொடர்பான தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையை ஏன் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை? என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மோடி அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.
மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யாதது மனித உரிமை மீறல் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்யாதது குறித்து மாநில அரசு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என ஆக்டிங் தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.
2005-ஆம் ஆண்டு என்.சி.ஹெ.ச்.ஆர்.ஒ(தேசிய மனித உரிமை கமிஷன்) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கை கிடைத்து இவ்வளவு காலம் கழிந்த பிறகும் சட்டசபையில் அதனை தாக்கல் செய்யாதது 1993-ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை மீறிய செயலாகும் என பெஞ்ச் சுட்டிக்காட்டியது. கலவரத்தில் கொல்லப்பட்ட 500 க்கும் அதிகமான மத நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என கடந்த புதன்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மதநிறுவனங்களை மட்டும் புறக்கணித்துவிட்டு வீடுகளுக்கும், வியாபார ஸ்தாபனங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதற்கான மோடி அரசின் தீர்மானம் அரசியல் சட்டத்தின் 14,25,26 பிரிவுகள் உறுதி அளிக்கும் அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த
இனப்படுகொலை:எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை கேட்டு ஸாக்கியா ஜாஃப்ரி உள்பட 3 பேர் மனு தாக்கல்
அஹ்மதாபாத்:ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் சிறப்பு புலனாய்குழு(எஸ்.ஐ.டி) அறிக்கையின் நகல்களை கோரி ஸாக்கியா ஜாஃப்ரி, சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி. தனது கணவரின் உயிரைக் காக்கத் தவறியதாக முதல்வர் நரேந்திர மோடி, மூத்த அரசியல்வாதிகள் 62 பேர் மற்றும் போலீஸார் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், ஸாக்கியா ஜாஃப்ரி. இவரது புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கும்படி 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடியிடம் இருமுறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மோடி மீது குற்றம் சுமத்தப்படுமளவுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று தெரிவித்தது. இதன் பின்னர் இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க ‘நீதிமன்றத்தின் நண்பராக (அமிகஸ்க்யூரி)’ ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் அளித்த அறிக்கை, சிறப்புப் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு விஷயங்களிலிருந்து வேறுபட்டு இருந்தது. இதன் பின்னரே ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு குறித்து விசாரிக்கும்படி குஜராத் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் அறிக்கையை பிப்ரவரி 8-ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மோடி மீது குற்றம் ஏதும் சுமத்தப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதிகாரபூர்வமாக தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்த அறிக்கையின் நகலை தனக்கு அளிக்கும்படி ஸாக்கியா ஜாஃப்ரி வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற்றுள்ளதா என்றும், அறிக்கையின் முடிவு இறுதியானதுதானா என்றும் கேட்டிருந்தார்.
இந்த மனு மீது பிப்ரவரி 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸாக்கியா ஜாஃப்ரி, பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின்படி மோடி மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை எனில், அது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சிறப்புப் புலனாய்வு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜாஃப்ரியின் மகன் தன்வீர் ஜாஃப்ரி, விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் விசாரணை அதிகாரியே நீதிபதியாக செயல்பட்டால் தாங்கள் எதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
Tuesday, February 7, 2012
ஹரேன் பாண்டியா கொலை வழக்கு: மறு விசாரணை கோரும் மனு தள்ளுபடி
அஹ்மதாபாத்:குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறுவிசாரணை கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதே மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அனத் தாவே இம்மனுவை தள்ளுபடிச் செய்தார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச்26-ஆம் தேதி ஹரேன் பாண்டியா சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் மீதான கொலை குற்ற பிரிவை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் மறு விசாரணை நடத்தவேண்டும் என கோரி ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ரிதி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசும், சி.பி.ஐ -யும் அறிவித்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடிச் செய்தது.
Saturday, September 3, 2011
ஹரேன் பாண்டியா கொலை: சந்தேக முள் மீண்டும் மோடியை நோக்கி!
காந்திநகர்:குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 முஸ்லிம் இளைஞர்களை “இவர்கள் குற்றம் செய்ததை நிரூபிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்று கூறி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து சந்தேகத்தின் முள் மீண்டும் மோடியை நோக்கித் திரும்பியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்று 2007 டிசம்பரில் ஹரேன் பாண்டியாவின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது.
கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாண்டியாவின் உறவினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
2003 மார்ச் 23ம் தேதி ஹரேன் பாண்டியா அஹமதாபாதில் லோ கார்டனில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதற்காக வெளியே வந்த பாண்டியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலையைச் செய்தது முஸ்லிம்கள்தான் என்று அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து சிறையிலடைத்தது மோடி அரசு.
ஆனால் என் மகனைக் கொலை செய்தது மோடிதான் என்று பட்டவர்த்தனமாக அறிவித்தார் பாண்டியாவின் தந்தையும், ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர உறுப்பினருமான விட்டல் பாய். கேசுபாய் பட்டேலின் ஆதரவாளரும், எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமாக இருந்த ஹேரேன் பாண்டியாவுக்கும், மோடிக்கும் ஒரு காலத்திலும் ஒத்துப்போனது கிடையாது.
2001 இறுதியில் முதல்வராகப் பொறுப்பேற்ற மோடிக்கு 2002 பிப்ரவரிக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அவர் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை விட்டுத் தருமாறு பாண்டியாவிடம் கேட்டார். ஆனால் பாண்டியா மறுத்து விட்டார். இதனால் இவ்விருவரின் பகைமை அதிகரித்தது.
2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் மோடிக்கும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கும் உள்ள பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் முன்பு பாண்டியா வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் மோடியின் ஆபத்தான எதிரியானார். இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்
Friday, July 8, 2011
குஜராத்தில் நல்லாட்சி ஹிந்துதுவாவின் திரிபுவாதம்!
இந்தியாவில் குஜராத்தில்தான் நல்லாட்சி நடக்கிறது என்று சிலர் கூறிவருகின்றனர். இவர்கள் மோடியின் பயங்கரவாத ஹிந்துத்துவா ஆட்சியை, சதி திட்டங்களை, குற்றங்களை மறைக்க திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த "குஜராத் ராஜபக்சே'யின் ஆட்சியில் – 17 ஆயிரம் கோடி ரூபாய் குளம் வெட்டும் ஊழல், 260 கோடி ரூபாய் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழல், 600 கோடி ரூபாய் மீன் வளர்ப்பு திட்ட ஊழல் என ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கிராமங்களில் வறுமையின் கோராத்தாண்டவம்; மக்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு நகரங்களை நோக்கி ஓடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்கள் தாராளமாக ஒதுக்கப்படுகின்றன.அவர்களுக்கு அங்கே 5 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது.
அன்று மன்னர்கள் ஆட்சியில், இப்படித்தான் ஊர்கள் "தானமாக' உயர்ஜாதி முதலாளிகளுக்கு (சதுர்வேதி மங்கலங்கள்) வழங்கப்பட்டன. அங்கே மன்னனின் எந்த வரி விதிப்பும் நடைமுறைக்கு வராது. அன்று சதுர்வேதி மங்கலங்கள். இன்று அதற்குப் பெயர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
டாட்டாவின் "நா÷னா' கார் தயாரிப்புக்கு – உற்பத்தி செலவைவிட மோடி கூடுதல் மானியம் தருகிறார். நிலத்தைப் பறிகொடுத்த மக்கள், அரசிடமிருந்து இன்னும் இழப்பீட்டுத் தொகை கிடைக்க வில்லை என்று கதறுகிறார்கள். முஸ்லிம்கள் இனப்படுகொலை வழக்கில், மோடிக்கு "நீரோ மன்னர்' என்று பட்டம் சூட்டியது உச்ச நீதிமன்றம் (ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்தவன் நீரோ).
இதே நரேந்திர மோடி குஜராத்தில் "லோக் அயுக்தா' என்ற ஊழல் மீட்புக் குழுவை அமைக்க மறுத்து விட்டார் என்பது அசாரேவுக்கு தெரியாது போலும். மக்கள் உயிர்வாழ அடிப்படை தேவையான தண்ணீர் பஞ்சம், சமையல் ஆயில் தட்டுபாடு இதுதான் குஜராத்தின் இப்போதைய நிலை.
இந்தியாவில் ஊழலில் முதலிடம் வகிக்கும் ஒரு மாநிலம்தான் குஜராத்.
மற்றபடி நம்பர் ஒன் மாநிலம் என்பது ஹிந்துதுவாவின் பொய் பிரச்சாரம்

குஜராத் இனப்படுகொலை ஆவணங்களை அழித்த மோடி அரசு!
அஹ்மதாபாத்: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நடந்த கால அளவிலான ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து நானாவதி கமிஷன் போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
எந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதுக்குறித்து தெளிவான அறிக்கையை அளிக்குமாறு குஜராத் இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பியிடம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
எந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டன என்பதுக்குறித்து தெளிவான அறிக்கையை அளிக்குமாறு குஜராத் இண்டலிஜன்ஸ் கூடுதல் டி.ஜி.பியிடம் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மாநில உளவுத் துறையின் ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக பயங்கரவாதி மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் சரத் வக்கீல் நானாவதி கமிஷனிடம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தலையிடக்கோரி இனப்படு கொலையில் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ஜன் சங்க்ராம் மஞ்ச் நானாவதி கமிஷனை அணுகியிருந்தது. பத்து தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டுமென நானாவதி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Thursday, July 7, 2011
மாணவியை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய ஆசிரியை!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா (6) . இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்) கடும் ஆத்திரம் அடைந்தார்.
சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.
பின்னர் விஜயா அவளிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் அவளது தோழிகள் அவளது பெற்றோரிடம் ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறி விட்டனர்.
இதையறிந்ததும் சுவேதாவின் பெற்றோர் பள்ளியில் வந்து தட்டி கேட்டனர். இதையறிந்த மற்ற பெற்றோர்களும் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை விஜயா கைது செய்யப்பட்டார்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் அப்பள்ளி அரசு அங்கீகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளியின் அறங்காவலர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tuesday, July 5, 2011
பொய் சொல்லும் மோடி அரசு! காங்கிரஸ் கண்டனம்!
அஹ்மதாபாத்: :2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்றுகுவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர்.
இக்காலக் கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள்தாம் அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும். ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்கவேண்டும்.
அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்கவேண்டும். ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன?ஆவணங்கள் வழக்கின் சட்டநடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)