Showing posts with label சமுதாய செய்திகள். Show all posts
Showing posts with label சமுதாய செய்திகள். Show all posts

Friday, December 11, 2015

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !


சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.
முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.

Sunday, July 10, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதில் நிகாப் அணிந்த ஒரு சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்குப் பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாகக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த விதத் தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும் முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்குகின்றனர் என்கிறார்.



மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை. எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும் அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.



தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும் போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஒரு தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு மனிதன் அந்தப் பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும் வேலைஞானம் இல்லாததும்தான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளைப் பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தைச் சந்தித்துத்தானே ஆகவேண்டும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும் செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டு விடுகிறார். 

Wednesday, July 6, 2011

சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பரில் தொடங்கும்-முஸ்லிம்கள் செய்யவேண்டியது:

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று இந்தக் கணக்கெடுப்பின் போது சாதியின் உட்பிரிவுகளும் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை விவரம் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வறுமை கோட்டுக்கு கீழே வாழுவோர் கணக்கெடுப்பும் நடத்த மத்திய மந்திரி சபை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழுவோர் கணக்கெடுப்பு 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தும் வகையில் எடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பணி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை முதல்முதலாக திரிபுரா மாநிலம் கடந்த வாரம் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வரும் டிசம்பர் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வரும் ஊழியர்களிடம் ஏற்கனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான விண்ணப்பத்திலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த விண்ணப்பத்தில் கூடுதலாக விவரங்களை ஊழியர்கள் குறித்துக்கொள்வார்கள்.


மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் விடுபட்டவர்களிடம் அனைத்து விவரங்களும் பெறப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு விண்ணப்பத்தில், பெயர், பாலின், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, திருமண நிலை, தொழில், வருமானம், சொத்து, சொந்த வீடா, வாடகை வீடா? என்ன சாதிப்பிரிவு? (ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்..டி.) சாதியின் உட்பிரிவு, உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் என்றால் எந்த சாதி என்ற விவரம், சாதியைக் குறிப்பிட விருப்பம் இல்லை என்றால் நோ காஸ்ட் (என்.சி.) என்ற விவரம் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

டிசம்பர் மாதம் தொடங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பணி 40 நாட்களில் முடிக்கப்படும்.

முஸ்லிம்கள் செய்யவேண்டியது:


தமிழ் நாட்டில் சூன்-டிசம்பர் மாதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது...
அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு....



இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        செய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்சர்
·        ஷேக்
·        மாப்பிள
·        துத்திகோலா
முக்கிய குறிப்பு:
     ராவுத்தர்மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும்....
     ஜாதியை குறிப்பிடும்போது "சாயிபுபட்டாணிஷரீப்பரிமா என்றெல்லாம் குறிப்பிடாதீர்....
இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்...


--
முஸ்லிம் மெயில்ஸ் குழுமம் வாயிலாக வெளிவரும் எல்லா ஆக்கங்களுக்கும் அனுப்புனரே பொறுப்பாளியாவார். தொடர்புக்கு muslimmails@gmail.com



Sunday, July 3, 2011

முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தொலைகாட்சி சேனல் மூன் டி.வி. / Moon TV



வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும் நல்கியருளத் துஆ செய்கிறோம்.
 
பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம் கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு இருந்து வந்தது.
 
தமிழக முஸ்லிம்களின் வாட்டத்தையும் தேட்டத்தையும் போக்கும்வகையில் மூன் தொலைக் காட்சி (Moon T.V.) கடந்த 20-03-2009 முதல் தனது 24 மணிநேர ஒளிபரப்பை வெற்றிகரமாகத் தொடங்கிச் செயல்பட்டுவருகிறது.
 
இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களை முதன்மைப்படுத்தி மூன் டி.வி. நிறுவனமும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
  • இறைவனின் திருப் பெயரால், 
  • இஸ்லாமிய கீதங்கள், 
  • இன்று ஒரு நபிமொழி, 
  • சிந்திப்போமா, 
  • கி.பி.570 முதல், 
  • எளிய முறையில் திருக் குர்ஆன் கற்போம், 
  • இணையிலா இறைமொழி, 
  • இறைவனிடம் கையேந்துங்கள், 
  • கிராஅத் போட்டி, 
  • தீன் ஒளி, 
  • ஷரீஅத் சட்டங்கள், 
  • இறை நேசர்கள் 


முதலிய பல நிகழ்ச்சிகள் மிக அருமையாகவும் சுவையாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
  • இளைஞர்கள் சுய முன்னேற்றம்,
  • ஆளுமை வளர்ச்சி, 
  • கல்வி, 
  • மருத்துவம், 
  • தொழில் முன்னேற்றம், 
  • மருத்துவம், 
  • மகளிர் அழகுக் கலை, 
  • சமையல், 
  • செய்திகள், 
  • முக்கிய நிகழ்வுகள் 
முதலான பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.
 
அமீரகத்தில் துபை அரசின் அதிகாரப்பூர்வ கேபிள் நெட்வொர்க் அமைப்பான இ-விஷன் வழியாக மூன் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
 
இலங்கை உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிக்கும் எண்ணற்ற தமிழர்களால் கண்டுகளிக்கப்படும் தொலைக் காட்சியாக மூன் டி.வி. விளங்குகிறது.
 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாகப் பன்னூற்றுக் கணக்கான ஊர்களில் மூன் டி.வி. தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.
 
உலகெங்கிலும் வாழ் தமிழர்களுக்குக் குறிப்பாகத் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் மூன் டி.வி.க்குப் பேராதரவும் பெரும் ஒத்துழைப்பும் தரவேண்டியது நமது கடமையும் பொறுப்புமாகுமென்பதைத் தாங்கள் நன்குணர்வீர்களென நம்புகிறோம்.
 
தமிழகம்வாழ் அன்புச் சகோதரர்களும் கடல் கடந்து கடமையாற்றும் நமது அருமைச் சகோதரர்களும் தங்களது சொந்த ஊர்களில் மூன் டி.வி. நிகழ்ச்சிகளை நம் உற்றாரும் உறவினரும் மற்ற நண்பர்களும் கண்டு பயன் பெறும் வகையில் தங்கள் ஊர்களிலுள்ள கேபிள் நெட்வொர்க் அன்பர்களை அணுகி மூன் டி.வி. தெரியும் வகையில் ஏற்பாடு செய்துதந்துதவக் கேட்டுக் கொள்தல் வேண்டுமெனப் பணிவன்போடு விழைகிறோம்.
 
கேபிள் நெட்வொர்க் அன்பர்களிடம் தெரிவிக்க வேண்டிய தொழில் நுட்ப விவரங்கள்:
------------------------------------------------------------------------------------------------------------------------
Satellite: INSAT-2E @ 83 Degrees, Band: C, Downlink Frequency: 4031 MHz
Symbol rate: 7.440 MSPS, FEC: 7/8, Modulation: QPSK,  Polarization: Vertical
------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்கூறு நல்லுலகத்தினர்அனைவரும் குறிப்பாகத் தமிழறிந்த முஸ்லிம்கள் மூன் டி.வி. நிகழ்ச்சிகளைக் கண்டு பெரும் பயன் பெற்றிடும் வகையில் மேற்கூறிய பணியை ஒரு சமுதாயச் சேவையாகவே ஆற்றி உதவிட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
வசதியும் வாய்ப்புமுடைய சமுதாயப் புரவலர்கள், வணிகப் பெருந்தகையினர் நிகழ்ச்சிகளுக்கு Sponsorship மற்றும் விளம்பரங்கள் தந்துதவவும் விழைகிறோம்.
 
இஸ்லாமியர்களால் இஸ்லாமியரை முதன்மைப்படுத்தி நடைபெற்றுவரும் நல்லதோர் தொலைக் காட்சி நிறுவனம் நிலைபெற்று நீடுபுகழ் உற்று நெடிய பயன் சமுதாயத்திற்குத் தொடர்ந்து வழங்கிட அன்புகூர்ந்து அவசியம் உதவுக.
 

இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்!

 போர்ப்ஸ்கஞ்ச்: பீகார் மாநிலம், போர்ப்ஸ்கஞ்ச் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு கிராம மக்கள் மீது இந்திய பயங்கரவாத போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

பயங்கரவாத போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக மக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலையை மறித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டது.


இதற்கு, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி, கட்டுமானப் பணி நடந்தது. கோபம் கொண்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். நிலவரம் கைமீறவே,  போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.  ஒரு கட்டத்தில் தீவிரவாத போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்,  26 வயது கர்ப்பிணிப் பெண், ஏழு வயது சிறுவன் உட்பட நான்கு முஸ்லிம்கள்  பலியாகினர். மேலும், கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை, அடித்துத் துவைத்த போலீசார், அவரது முகத்தில் ஏறி நின்று ஆடுவது போன்ற வீடியோ காட்சியும் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


முஸ்லிம் கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக முஸ்லிம்களை கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என மனித உரிமை போராளி ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நேற்று போர்ப்ஸ்கஞ்ச் வந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட அன்சாரி என்ற 16 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அவனை டில்லிக்குக் கொண்டு செல்லும்படி, மாநில காங்கிரஸ் தலைவர் சவுத்ரி கைசரை அறிவுறுத்தினார்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும்,  6மாத பிஞ்சுக்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார்.

சிந்திக்கவும்: தீவிரவாதத்தின், பயங்கரவாதத்தின் மறு உருவம்தான் ஹிந்துத்துவா இயக்கங்களும், இந்திய காவல் துறையும் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொன்று குவித்தது ஒரு கர்ப்பிணி பெண்ணை, ஏழு வயது சிறுவனை. எப்படி இந்த கயவர்களுக்கு ஒரு கர்ப்பிணி பெண்மேல் துப்பாக்கி சூடு நடத்த மனம் வருகிறது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் என்றால் பேயும் இறங்கும் என்பார்களே.


இதுபோல்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்ரை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து தீயில் போட்டு கருக்கினார்கள். அதை குறித்து அவர்கள் பெருமையாக வேறு பேசி கொண்டார்கள் இந்த குழந்தை வெளியே வந்தாலும் ஒரு நாள் எங்கள் கைகளால்தான் சாகப்போகிறது. அதனால் தான் இப்பவே கொல்கிறேன் என்று வீரவசனம் பேசி இருக்கிறார்கள் ஹிந்து பயங்கரவாதிகள்.

மேலும் முஸ்லிம் பெண்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து கற்பழித்து தீ மூட்டி அதில் உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார்கள். இவர்களை மிருகங்கள் என்று சொல்லி வாயில்லா ஜீவன்களை கேவலப்படுத்த விரும்பவில்லை இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள். இந்தியாவை ஆட்டி படைக்கும் ஹிந்து பயங்கரவாதம் குறித்து மக்கள் விழிப்படைய வேண்டும். இதற்கெதிராய் போராட முன்வரவேண்டும்.


Friday, July 1, 2011

சிறுபான்மையினருக்கு கல்வி மறுக்கப்பட்டால் 3 ஆண்டு ஜெயில்; முஸ்லிம்களை ஏமாற்ற மத்திய அரசின் புதிய மசோதா..?


சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மறுக்கப்பட கூடாது என்று சச்சார் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டியின் அறிக்கையை நடைமுறை படுத்த வகை செய்யும் வரைவு மசோதா ஒன்றை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. இந்த மசோதாவின் படி, சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதியை மறுப்போருக்கு 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை அளிக்க முடியும். மேலும் தவறு செய்வோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை எடுத்து வருகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சச்சார் கமிட்டியின் அறிக்கை மத்திய அரசிடம் கையளிக்கப்பட்டு  ஆண்டுகள் பல கடந்த பின்னும், அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்திய முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து சிறு துரும்பையும் அசைக்காத மத்திய அரசு, சிறுபான்மை மக்களை ஏமாற்றும் வகையில் மேற்கண்ட மசோதாக்களை தாக்கல் செய்வதால் முஸ்லிம்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. முஸ்லிம்களின் தனி பிரதித்துவ இடஒதுகீட்டை மத்திய அரசு வழங்குவதே ஒரே தீர்வாகும். அதை செய்யாமல் கண்கட்டி வித்தைகளை காட்டி முஸ்லிம்களை ஏமாற்ற ஆளும் காங்கிரசும், ஆதரவளிக்கும் கட்சிகளும் நினைத்தால், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலையை  மத்தியிலும் ஏற்படுத்த முஸ்லிம்கள் தயங்கமாட்டார்கள் என்பதை மத்திய அரசு உடனடியாக உணர்ந்து கொள்ளுதல் பயனளிக்கும்.  


Wednesday, June 29, 2011

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு


அம்ஸ்டர்டம் : நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸôர் கருத்து


மெல்போர்ன், ஜூன் 28: பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை என்று கருத்து கூறியுள்ளார்.

இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலீஸôரால் சோதனை செய்ய முடியாததால், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்யமுடியாது. ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?.


ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!. 

யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.



முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான்!. அதுதான், அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால்!!. அதுமட்டுமல்ல!!. மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரகமந்திரமாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது!.

கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள்!. பிரிவுகள்!!. ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது!. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரை விட முன்னேறி கொண்டிருகின்றனர்.

ஆனால்......!
ஒரே வேதத்தை கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது!. ஆனால் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே நூற்றுகணக்கான ஜமாத்கள்!. இயக்கங்கள்!. பிரிவுகள்!. மற்றும் பிரிவினைகள்!. ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம்!!. கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருப்பதேன்?. 

தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்விநிலையத்தை தொடங்கி நடத்தியதுண்டா?.

ஆனால்......!
தி.க வின் கி.வீரமணி தொடங்கி, சங்கராச்சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதை கண்டாவது சிந்தித்தோமா?.



அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்......!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே!.

கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100 % கல்வியறிவை பெற்றுள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள் ஓன்று கூட இல்லை!.

கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.

ஆனால்......!
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன!.

40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.

ஆனால்......!
முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்!.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிருஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால்......!
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலிருந்து, ஒரு மில்லியன் முஸ்லிகளுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

ஆனால்......!
ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.

ஆனால்......!
இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால்.....!
1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்!.

மேற்கண்ட அணைத்து புள்ளிவிவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிகொண்டு இருக்கும் அதே வேலை, அதை காது கொடுத்து கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை!. மனம் இல்லை!. அக்கறை இல்லை!!!.

யூதர்களின் கண்டுபிடிப்புக்கள் உலகை மாற்றியதில் சில:
Micro Processing Chip.- Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor - Leo Sziland (Jewish)
Optical Fiber Cable - Peter Schultz (Jewish)
Traffic Lights - Charles Adler (Jewish)
Stainless Steel - Benno Strauss (Jewish)
Sound Movies - Isador Kisee (Jewish)
Telephone Microphone - Emile Berliner (Jewish)
Video Tape Recorder - Charles Ginsburg (Jewish)

யூதர்களால் நடத்தப்படும் சிறந்த தொழில் நிறுவனங்கள்.
Polo - Ralph Lauren (Jewish)
Coca Cola - Jewish
Levi's Jeans - Levi Strauss (Jewish)
Sawbuck's Howard Schultz (Jewish)
Google - Sergey Brin (Jewish)
Dell Computers - Michael Dell (Jewish)
Oracle - Larry Ellison (Jewish)
DKNY - Donna Karan (Jewish)
Baskin & Robbins - Irv Robbins (Jewish)
Dunkin Donuts - Bill Rosenberg (Jewish)
உலகத்தை மீடியா மூலம் ஆட்டிப்படைக்கும் யூத மீடியாக்கள்.
Wolf Blitzer - CNN (Jewish)
Barbara Walters - ABC News (Jewish)
Eugene Meyer - Washington Post (Jewish)
Henry Grunwald - Time Magazine (Jewish)
Katherine Graham -  Washington Post (Jewish)
Joseph Lelyeld - New York Times (Jewish)

எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்!. உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப்போதும் முன்னெடுத்து செல்லுங்கள். முன்னேற்ற கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்!.

எனவே முஸ்லிம்களே ஓன்று படுங்கள்!. கல்வியறிவை பெருக்குங்கள்!. பெறுங்கள்!!. உலகில் தலை சிறந்து விளங்குங்கள்!. இது ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந்தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!!. ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்!!.

ஆக்கம் அதிரை முஜீப்.

 

Tuesday, June 28, 2011

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு மார்க்!


மிழகத்தில்  அதிமுக  ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர்கள் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம்பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.      
 
இதையடுத்து   மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையாவுக்கு வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதித்துவம் இல்லை என்ற குறை ஆங்காங்கே முஸ்லிம் சமுதாயத்தில் எதிரொலித்தது. இந்நிலையில்,     
 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் அவர்களை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். இது ஓரளவுக்கு சந்தோஷமான செய்தி என்றாலும் முஸ்லிம்களின் சதவிகிதத்திற்கு ஏற்ற அளவில் இல்லை. எனவே இன்னும் இரண்டு முஸ்லிம் அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமிக்கவேண்டும். புதிய அமைச்சரின் பணி சிறக்க, அவரால் முஸ்லிம் சமுதாயம் பலன் பெற பிரார்த்திக்கிறோம்.

 

Monday, June 20, 2011

துப்பாக்கி சூடு கர்ப்பிணி பெண், 6 மாத குழந்தை, 5 பேர் பலி!

ஜூன் 19 : பீகார், அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில்பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றார் ஹிந்து பயங்கரவாத இயக்கமான பாரதிய ஜனதாவின் மாநில தலைவரின் மகன் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர் முஸ்லிம் கிராமவாசிகள்.

அவர்கள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி பயங்கரவாத போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணி பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

இதைப்பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையை ஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்கு போராட்டம் நடந்த சென்றோம். அப்பொழுது பழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது. இதில் கர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக கிராம மக்கள் கூறினார்.

மேலும், கைக்குழந்தைகளுடன் குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில்நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா என்ற பெண் கூறினார்.

போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

எல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையைகண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின்அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.

இத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்து விட்டா சிறுபான்மை நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்? மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்புவாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.

கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

போர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிடமகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.

இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில், இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.

சிந்திக்கவும்: இந்தியாவில் ஹிந்து பயங்கரவாதம் எப்படி கட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இன்னும் பிரியாணி ஆக்கி தின்று கொண்டு இருந்தால் ஈழத்தில் தமிழ் மக்களை எப்படி சிங்கள பயங்கரவாதிகள் ஒரு பாரிய இனப்படுகொலை மூலம் அழித்தார்களோ அதே நிலைதான் உங்களுக்கும்.

குஜராத், நெல்லி, பாகல்பூர், பீவாண்டி, இப்படி உங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை பார்த்தும் நீங்கள் திருந்தியதாக தெரியவில்லை. ஈழத்தின் போர்வீக குடிகளான தமிழ் மக்கள் அனாதைகளாக சொந்த நாட்டை அயல்நாடுகளில் அகதிகளாக வாழ்கிறார்களோ அது போல் நீங்களும் வாழவேண்டி வரும்.

இந்தியாவில் இருந்து ஹிந்து பயங்கரவாதத்தை துடைத்தெறிய பெரும்பான்மையான நல்ல இந்து மக்களோடும், இந்து தலைவர்களோடும் இணைந்து செயல்படாதவரை இதை வென்றெடுப்பது கடினம். இந்த ஹிந்து பயங்கரவாதிகளால் இந்தியா சிதறுண்டு போகும் காலம் வெகுதுலைவில் இல்லை என்றே நமக்கு எண்ணத்தோன்றுகிறது.

Friday, June 17, 2011

முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம்


இந்த முஸ்லிம் தேசம் இலங்கை போன்று 27 மடங்கு பெரியது காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிரமிப்பு பிரச்னையைப் போலவே சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு அரச ஒடுக்குமுறை பிரச்சனைகள் உண்டு என்பதும்  பலருக்குத் தெரியாத விஷயம்.  ஏன் சீனாவில் சிங்கியாங் முஸ்லிம் தேசத்தை வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம் விரிவாக
சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம் பிரதேசம்தான் முஸ்லிம் உலகிலும் அதிகமாக அறியப்படாத முஸ்லிம் தேசம் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது பாகிஸ்தான் 523 கி.மீ.தூரத்திலும் இந்தியாவிலிருந்து  3,380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது   18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் 6/1  ஆறில் ஒரு பங்கு.  இது இலங்கை போன்று 27 மடங்கு பெரியது இலங்கை 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது ஆனால் சிங்கியாங் 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுகொண்டது இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி ஆனால் அங்கு முஸ்லிம்கள் பேசமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது.

இதை இன்னொரு முறையில் விளங்குவது என்றால் 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இலங்கையின் அதிலும் 15,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள வடக்கு கிழக்கு அதில் தமிழர் பிரச்சினை பெற்ற உலக கவனத்தை கூட இலங்கை போன்று 27 மடங்கு பாரிய சிங்கியாங் பெறவில்லை என்பதுதான்.
காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும் அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் பக்கம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் ஆக்கிறமிப்பில் உள்ளது 1,41,000 ச.கி.மீ. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்திய என்ற ஜனநாயக மேலாதிக்கம் கஷ்மீரை ஆக்கிரமித்து அடகிவைதுள்ளது போன்று சீனா என்ற கம்யூனிஸ   மேலாதிக்கம் சிங்கியாங் தேசத்தை ஆக்கிரமித்து நிற்கின்றது இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் சுமார் 1,45,000 ச.கி.மீ. பரப்பளவை கொண்டது சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான்.  சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது   ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை காரணம் சீனா அரசு திட்டமிட்டு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுதான்.
காஷ்மீர் உலகின் அரைகுறை கவனத்தை பெற்றிருப்பது போன்று கூட சீனா சிங்கியாங் பிரச்சினை அறியப்படவில்லை அங்கு அடக்கு முறை செய்திகளை உலகம் அறியமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுடன் முஸ்லிம் அமைப்புக்களும் இயக்கங்களும் இது பற்றிய போதுமான தகவல் இன்றி இருப்பதும் ஒரு முக்கியகாரணமாகும்.

1949இல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின் மீது படையெடுத்து அதனை சீனா ஆக்கிரமித்து தன் எல்லைகளை அகட்டி கொண்டது. 1948இல்  பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து எல்லைகளை அகட்டி கொண்டது போன்றுதான் இதுவும் இரண்டு ஆக்கிரமிப்புகும் வயது கிட்ட தட்ட ஒன்றுதான் ஆனால் சீனா சிங்கியாங் ஆக்கிரமிப்பின் அழு குரல் வெளியே கேற்காதபடி சிங்கியாங் முஸ்லிம்களை மிக மோசமாக அடக்கி வைத்திருக்கிறது.
சீனா எவ்வாறு சிங்கியாங் தேசத்தை தன்னுடன் பலவந்தமாக இணைத்து கொண்டது என்பதை கவனித்தால், சிங்கியாங் பிரதேசம் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்டதாக காணப்பட்டது பின்னர் சீனா சீனர்களை திட்டமிட்டு குடியேற்றியது பல நுறு குடியேற்றங்களை உருவாக்கி முஸ்லிம்களை தங்களின் சொந்த மண்னில் அதிகாரமற்ற பொம்மைகளாக்கியது பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை அங்கு குடியமர்த்தியது அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட சிவில் கிராமங்களாக உருவெடுத்தது  இப்போது 2 கோடி மக்கள்தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் தான் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் எனும் சீனர்கள் 1949இல் ஹன் சீனர்கள் தொகை வெறும் 6 சதவீதமாகத்தான் காணப்பட்டது . திட்டமிட்ட குடியேற்றம்  அறுபது ஆண்டுகளில் சீனர்களை 7 மடங்கு அதிகரித்திருக்கிறது.
மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பலம் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது  மக்கள் தொகையில் மாறிய மாறுதல்களை செய்துள்ளமை  இயல்பாக முஸ்லிகள் பலவீனமான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் சீனா தனது இராணுவத்தை இயந்திரத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு அனுப்பவில்லை. மாறாக சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. முஸ்லிம்களின் கையில் இருந்த நகரங்களும் கிராமங்களும் சிறிது சிறிதாக விலைக்கு வாங்கப்பட்டது அவர்களின் பொது நிலங்கள் சீனாவின் அரச சொத்தானது அவை வெளியூர் சீனா  மக்களுக்கு வழங்கப்பட்டது  ஹன் சீனர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது.

இப்போதைய 41 சதவீதம் சீனர்களின் தொகையானது அங்குள்ள ஆக்கிரமிப்பு இராணுவ சிப்பாய்களோ , அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.
சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008இல் 60 பில்லியன் டாலராக காணப்படுகிறது . அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள். சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.
உய்கர் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது வெருப்புடன் நாட்களை கழிக்கின்றனர் . ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் உலக உய்கர் காங்கிரஸ் என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.
சிங்கியாங் பகுதியில் முஸ்லிம்கள் தொடராக எழுச்சி பெருகின்றனர் ஆனாலும் உய்கர்கள் வேரு நாடுகளில் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை. ஆனாலும், இஸ்லாமிய எழுச்சி வளர்ந்து வருகிறது .
ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ஹன் சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியிலும் முஸ்லிம்கள் 90 சதவீதம் இருந்தனர் பின்னர் சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது இந்த திட்டமிட்ட குடியேற்றதின் பின்னர் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீனர்கள் மயமாக்கப்பட்டுள்ளது . இக்கலவரத்தை சீனா தனது இரும்பு கரம் கொண்டு  ஒடுக்கியது . இதன் போது ஒரு இரவில் மட்டும் -10000- பத்தாயிரம் முஸ்லிமகள் காணாமல் போயுள்ளனர் .
சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது. சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து ஹிஜாப் அணிய தடை விதித்தது முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது ஒவ்வொரு நேன்பு மாதத்திலும் இந்த அடக்குமுறைகள் அதிகரிக்கின்றது .  அப்படி இருந்தும் முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத விடையமாகவே இருக்கிறது.
சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீனர்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து முஸ்லிம்களின் பெரும்பான்மையை சிறுபான்மையாக மாற்றியமைத்தது. சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சினர்கள் மூலம் நிரப்பப்பட்டது . மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலை என்ற முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்கள் தொடர்ந்தும் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்கி ஒடுக்குகின்றனர் ஆனால் அன்மையில் ஜெர்மனியில் ஹிஜாப் அணிந்ததற்காக கொடுரமான முறையில் கொல்லபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் வீர பிரதாபம் பெற்ற முஸ்லிம் உலகின் கவனத்தை, மிக பிரமாண்டமான விடையம் பெறாமல் இருப்பது உறக்கத்தை கலைக்கிறது.
குறிப்பு:
சீனாவின் எல்லை நாடுகள்: ஆப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ. இதில் 4 முஸ்லிம் நாடுகள் அமைந்திருக்கின்றன என்பது குறிபிட்ட தக்கது.

Wednesday, June 15, 2011

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்


லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  



இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.
 

Monday, June 13, 2011

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு


ந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை, மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். டெல்லியில் நடந்த அகில இந்திய ஹஜ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்.
 

ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4-வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என்றார். மேலும் ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
நன்றி;மாலைமலர்

Thursday, June 9, 2011

துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்

துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




Wednesday, June 8, 2011

முஸ்லிம் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்; பரோலில் விடுதலையாகி பட்டதாரி பெண்ணை மணந்தார்!


கோவை, ஜூன்.7
கோவை குனியமுத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் காஜா உசேன். இவருடைய மகன் அமானுல்லா (வயது 29). கடந்த 1996ம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற அலிம்ஜார்ஜ் என்பவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமானுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அமானுல்லா, திருமணம் செய்ய முடிவு செய்தார்.கோவை பி.கே.புதூரை சேர்ந்த முகமது ரபி என்பவருடைய மகள் ரிசானா பானுவுக்கும், அமானுல்லாவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.


ரிசானாபானு பி.ஏ. பட்டதாரி பெண், ஆயுள் தண்டனை கைதியான அமானுல்லாவை திருமணம் செய்ய முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெற இருப்பதையொட்டி  பரோலில் விடுவிக்க அனுமதிக்குமாறு அமானுல்லா, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அவருக்கு வருகிற 21ந் தேதி வரை பரோல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 ;30 மணி அளவில் கரும்புக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் அமானுல்லாவுக்கும், ரிசானா பானுவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது 2 1/2 பவுன் தங்கநகையை மணப்பெண்ணுக்கு திருமண கொடையாக அமானுல்லா வழங்கி, திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார். 

திருமணம் முடிந்த பின்பு அமானுல்லா கூறும்போது, இருவரின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த எனக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை கைதிகளை விடுவிப்பதில் முன்பு பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. புதிய அரசு இந்த விஷயத்தில் கருணை காண்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். பரோல் விடுதலை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வருகிற 21ந்தேதி அமானுல்லா மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை கைதியின் திருமணத்தையொட்டி  கரும்புக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  
 
நன்றி; தினத்தந்தி.
மணமக்களுக்கு மண வாழ்த்தை தெரிவிக்கிறோம். , மணமகன் விரைவில் விடுதலையாக பிரார்த்திக்கிறோம்.