Showing posts with label ஹிந்துத்துவ. Show all posts
Showing posts with label ஹிந்துத்துவ. Show all posts

Saturday, November 28, 2015

இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........


                                        

ருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.

முகமது அக்லக்
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.

Sunday, October 25, 2015

Saturday, January 25, 2014

தமிழ்நாட்டில் மத கலவரம்களுக்கு அடிகல் நாட்டும் பா ஜ க!

 கலவரங்களின் வழியே ஆட்சியைப் பிடிப்பது என்பது பா ஜ க வின் வழிமுறை. 
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் இந்து வெறியைத் தூண்டி விட்டுக் கலவரங்கள் நடத்தி அதன் வழியே அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் வழக்கம்..

Wednesday, October 9, 2013

ஷிண்டேவின் கடிதத்தை பா.ஜ.க. முதல்வர்கள் புறக்கணிக்க வேண்டும்! – வெங்கய்யா நாயுடு

பெங்களூர்: “தீவிரவாதத்தின் பெயரால் எந்த அப்பாவி முஸ்லீம் இளைஞரையும் கைது செய்யக் கூடாது” என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் புறக்கணிக்கும்படி பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே முதல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வர் வரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே சிறுபான்மையினரை அரசியல் ஆதாயத்துக்காக வசப்படுத்த முயற்சிக்கின்றனர்.
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்திவிட்டு,பெரும்பான்மை சமூகத்தை அலட்சியப்படுத்துவதே காங்கிரஸின் மதச்சார்பின்மை தத்துவமாகும். ஷிண்டே தனது சுற்றறிக்கையில் “எந்த அப்பாவி முஸ்லீமும்” என்பதற்கு பதிலாக “எந்த அப்பாவியும்” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அவர் தற்போது எழுதியுள்ளது மத சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா, முஸ்லிம்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறார்.
இதுதான் நிர்வாக முறையா? பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே பாரபட்சம் காண்பது சரியல்ல.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

Wednesday, October 2, 2013

வி.ஹெச்.பி. பயங்கரவாதிகளிடமிருந்து கொலைகார ஆயுதங்கள் பறிமுதல்!

நீமுச்: மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள நீமுச் நகரத்தில் வி.ஹெச்.பி. பயங்கரவாதிகளிடமிருந்து கொலைகார ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நகரில் சஞ்சீவனி காலனி பகுதியிலுள்ள ஒரு வீட்டிலிருந்து கூர்மையான வாள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மண்டசூர் டவுனிலிருந்து ஒரு வி.ஹெச்.பி. தலைவர் இந்த ஆயுதங்களை கொண்டு வந்ததாகவும், ஆனால் தாங்கள் வருவதற்குள் அவர் தப்பித்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


“பெருமளவில் கூர்மையான ஆயுதங்களும்,
அவற்றை கூர்மைப்படுத்தும் இயந்திரமும் இந்த வீட்டுக்கு கடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் நாங்கள் இந்த வீட்டை சோதனையிட்டோம்” என்று நகர எஸ்.பி. பங்கஜ் தீக்ஷித் செய்தியாளர்களிடம் கூறினார். “மொத்தம் 50 வாள்களும், ஒரு கூர்மைப்படுத்தும் இயந்திரமும் கைப்பற்றப் பட்டுள்ளன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மகேஷ் குர்ஜார், மெக்ராஜ் லோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வி.ஹெச்.பி.யின் பொறுப்பாளர் நிர்மல்தேவ் நரேலா போலீசார் வருவதை அறிந்தவுடன் தப்பித்துவிட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் போலீசுக்கு அளித்த வாக்குமூலத்தில், “இந்த ஆயுதங்களை நரேலா, ஷ்யாம்  பெஹெல்வான் ஆகிய இருவர் மண்டசூர் டவுனிலிருந்து கொண்டு வந்தனர்” என்று கூறியுள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் இவர்களைப் பிடிக்கும் வேலை மும்முரமாக நடைபெறுகின்றது. அவர்களுக்கெதிராக ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“நரேலாவுக்கேதிராக ஏற்கனவே நிறைய வழக்குகள் நீமுச் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று எஸ்.பி. தீக்ஷித் கூறினார்.

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு: சர்ச்சைக்குரிய கூட்டத்தில் பங்கேற்றதாக பிரகாஷ் ஜாவேத்கர் ஒப்புதல்!

புதுடெல்லி: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க நடந்த ரகசிய கூட்டத்தில் பங்கேற்றதை பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜாவேத்கர் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதனை சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு ஜாவேத்கர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சுதந்திர பத்திரிகையாளர் ஒருவர் ரகசிய கேமரா மூலம் ரகசிய கூட்டத்தின் தகவல்களை வெளிக்கொணர்ந்தார்.
பா.ஜ.க.வின் எம்.பி. பூபேந்திர யாதவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. வழக்கை சீர்குலைக்க முயற்சி என்ற குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துள்ளனர். பிரஜாபதியின் தாயார் நிர்மலா பாயியின் வாக்குமூலத்தை எவ்வாறு திரிக்கலாம் என்பது குறித்து ரகசிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நிர்மலா பாயியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க. பொதுச் செயலாளர் அமித் ஷா இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

Saturday, February 11, 2012

அஜ்மீர் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு


புதுடெல்லி:அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் ஹிந்துத்துவா தீவிரவாதி கேரளாவைச் சார்ந்த சுரேஷ் நாயரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு ஏஜன்சி அறிவித்துள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், மொடாஸா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமறைவாக இருந்து வரும் இதர நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கும் என்.ஐ.ஏ பரிசு அறிவித்துள்ளது.
சுரேஷ் நாயரின் புகைப்படமும், குஜராத் முகவரியும் இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா என்ற ராமச்சந்திரா, அமித் என்ற அசோக், மேஹுல் என்ற மஹேஷ் பாய், சுரேஷ் நாயர் ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. இவர்களில் சந்தீப் டாங்கே, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் 5 லட்சம் ரூபாய் வீதம் பரிசு அளிப்பதாக என்.ஐ.ஏ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்பொழுது பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாய் வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.


2007 அக்டோபர் 11-ஆம் தேதி அஜ்மீரில்  நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். கொலைச் செய்யப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்குமான சுனில் ஜோஷியிடம் இருந்து 2007 அக்டோபர் 10-ஆம் தேதி வெடிக்குண்டை வாங்கி அஜ்மீருக்கு கொண்டு வந்து தர்காவிற்குள் வைத்தது சுரேஷ் நாயர், மேஹுல், பாவேஷ் பட்டேல் ஆகியோர் என என்.ஐ.ஏவும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் கண்டுபிடித்தன. குண்டுவெடிப்புகளின் ரகசியம் வெளியே கசியாமல் இருக்க சுனில் ஜோஷியை கொலைச்செய்த வழக்கிலும் மேஹுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குஜராத்தில் வசித்துவந்த சுரேஷ் போலீஸ் விசாரணையை துவங்கிய பிறகு தலைமறைவாகிவிட்டார். சுரேஷ் நாயர் உள்பட 5 ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து தகவல் அளிக்க விரும்புபவர்கள் ஹைதராபாத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலோ அல்லது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ தலைமையகத்திலோ தகவலை அளிக்கலாம் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.
கீழ்கண்ட மொபைல் எண்களில் தகவல் அளிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:
9654447345, 9654446146, 9868815026, 01140623805, 01129947037,04027764488,+91 8285 100100
அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர் கொள்ளலாம்:

Monday, February 6, 2012

அன்னா ஹஸாரே மீது ஆர்.எஸ்.எஸ் கோபம்


புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் நன்றிக் கெட்டத் தனத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முக்கிய பங்கை வகித்தபோதும் அதனை ஹஸாரே அங்கீகரிக்கவில்லை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சர் சங்க் சாலக்கின் கோபத்திற்கு காரணமாம். பாட்னாவில் அன்னா ஹஸாரேயை கடுமையாக விளாசினார் பாகவத்.
அவர் கூறியது:
“ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே தேசம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தீவிரமாக பங்கேற்றனர். ஆனால் ஏன் ஹஸாரே இதனை அங்கீகரிக்க முன்வரவில்லை என்பது குறித்து எனக்கு புரியவில்லை. தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றி போதும் அன்னா ஹஸாரேயின் இயக்கத்தில் ஓர் அமைப்பு என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக கட்டளை பிறப்பிக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட ரீதியில் ஹஸாரேயின் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வகித்த பங்கினை அங்கீகரிக்க ஹஸாரே தயாராகவில்லை. ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவை பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை சந்தித்ததால் அவர் இவ்வாறு நடந்திருக்கலாம்.
நிதின் கட்கரியை பா.ஜ.க தலைவராக நியமித்தது ஆர்.எஸ்.எஸ் அல்ல. 2009-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜ்நாத் சிங்கை மாற்றக்கோரி பா.ஜ.க தலைவர்கள் என்னை சந்திக்க வந்தனர். ஆகையால் பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கி கொடுத்தோம். பா.ஜ.க தலைவர்கள் பரிந்துரைத்த பல பெயர்களில் கட்கரியும் அடங்குவார். ஹிந்து பயங்கரவாதம் என ஒன்று கிடையாது. தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வகுப்புவாத நிறத்தை அளிக்கும் முன்பு வழக்கை நிரூபிக்கவேண்டும்.” இவ்வாறு மோகன் பாகவத் கூறியுள்ளார்.

Saturday, September 3, 2011

தானே,பன்வேல் குண்டுவெடிப்பு: 2 ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு 10 வருடம் கடுஞ்சிறை


தானே:2008-ல் தானேயிலும், பன்வேலிலும் நடந்த 3 குண்டுவெடிப்புகளின் வழக்கில் ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியுள்ளது.

ஹனுமந்த் கஸ்கரி, விக்ரம் வினய் பாவே ஆகியோர்தான் அந்தத் தண்டனை பெற்றவர்கள். இவர்கள் குற்றவாளிகள் என்று திங்கள்கிழமை நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குண்டுவெடிப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  கொலை முயற்சி, கிரிமினல் சதியாலோசனை, சட்டவிரோத நடவடிக்கை ஆகிய கூடுதல் குற்றங்களிலிருந்து நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
இவர்கள் நடத்திய குண்டுவெடிப்புகளில் 8 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டது. இருவரும் தலா ரூ. 9500 தண்டனைத் தொகை கட்டவேண்டும்.

Friday, July 15, 2011

ஸ்ரீராமசேனாவின் உறுப்பினர்களுக்கு ராணுவ பயிற்சி!

பெங்களூர்: ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்களுக்கு   பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ராணுவ 
தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்து வருகின்றனர். 

மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித் அளித்த ராணுவ பயிற்சிக்கு சமமான பயிற்சியாகும் இது. ஸ்ரீராமசேனாவின் தேர்வு செய்யப்பட்ட 100 உறுப்பினர்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஆயுதங்கள் உபயோகித்து நடத்தும் பயிற்சிக்கு போலீஸ் தடை விதித்துள்ளதால் ஆயுதங்கள் இல்லாமலேயே இத்தகைய பயங்கரவாத தாக்குதல் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்களை கொண்ட ஆயுதப்படையை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 4 அதிகாரிகள் இப்பயிற்சியை அளிப்பதாக பிரமோத் முத்தலிக் தெரிவித்துள்ளார். 

தனது தொண்டர்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பிரமோத் முத்தலிக் கோரியுள்ளார். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை உபயோகிப்பதற்கான அனுமதி இல்லாததால் கர்நாடகா போலீஸின் சிவிலியன் ரைஃபிள்ஸ் ட்ரைனிங் ப்ரோக்ராமில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று திரும்பி வர பிரமோத் முத்தலிக் இளைஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மாநிலத்தின் பல பகுதிகளில் நடக்கும் சிவிலியன் பயிற்சியில் நுழைய ஸ்ரீராமசேனா தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதர மத சமூகங்களுக்கு எதிராக உபயோகிக்கும் தரத்தில் படையை உருவாக்க முத்தலிக் திட்டமிட்டுள்ளார். சமூகத்தில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் வீடியோ காட்சிகளை பயிற்சியில் கலந்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு காட்டப்படுகிறது.

அதே வேளையில் ஸ்ரீராமசேனாவுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸின் சிவிலியன் ரைஃபிள் பயிற்சியில் ஊடுருவ முடியாது என உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர். வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீராமசேனா பயங்கரவாத தாக்குதல் பயிற்சியை துவங்கி பல நாட்கள் கழிந்தபிறகும் போலீஸ் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவில்லை.

Saturday, July 2, 2011

மும்பை இன பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கை!

JULY 02, மும்பை: சிவசேனை தலைவர் பயங்கரவாதி பால் தாக்கரேவின் சொத்துக்களை முடக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்துத்துவா பயங்கரவாதி பால் தாக்கரே தனது கட்சியின் பத்திரிகையான “சாம்னாவில்’ 2008-ல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்.

இந்த கட்டுரை பிகார் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ராஜேஷ்குமார் சிங் என்ற வழக்கறிஞர் பிகார் மாநில ஆரா சப்டிவிஷனல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.


இந்த வழக்கில் ஆஜராகும்படி தாக்கரேவுக்கு பலமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. எனவே தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிபதி எஸ்.பி.எம்.திரிபாதி ஜூன் 27-ம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரௌட், தாக்கரேவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டார்.

சிந்திக்கவும்:  பால்தாக்ரே சிவசேனை என்ற ஒரு பயங்கரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். இது மராட்டியர் அல்லாத மற்ற மாநில மக்களுக்கு எதிரானது இயக்கம் மட்டும் அல்ல முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு இயக்கமும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நடத்திய இன, மற்றும் மதக்கலவரங்கள் எண்ணில் அடங்காது. எந்த அரசும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டியே வந்தது. இந்நிலையில் பீகார் அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.




Friday, July 1, 2011

பாதுகாப்பு ஒத்திகையா? மதத் துவேஷ ஒத்திகையா?


ந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து,தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலை முறியடிப்பது குறித்த ஒத்திகை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் 48 மணி நேர சோதனையை போலீசார் நடத்தினார்கள். அந்த ஒத்திகையில் கூட மதத்துவேஷம் வெளிப்பட்டதைக் காண முடிந்தது. பொதுவாக தீவிரவாதிகளுக்கு மதம் என்பது இல்லை. கோயிலை தாக்க முற்படும் தீவிரவாதி இருக்கிறான் என்றால், மஸ்ஜிதையும்-சர்ச்சையும் தாக்கும் எண்ணமுள்ள தீவிரவாதியும் நாட்டில் இருக்கவே செய்வான். இப்படிப்பட்ட வழிபாட்டு தளங்களை தாக்கும் முயற்ச்சியை முறியடிப்பது காவல்துறை ஒத்திகையின் நோக்கம் என்றால், அந்த ஒத்திகை கோயிலில் மட்டுமன்றி, மசூதி- சர்ச் ஆகியவற்றிலும் நடத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் காவல்துறையோ இந்திய நாட்டில் கோயில்களுக்கு மட்டுமே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பது போன்ற தோற்றத்தை காட்டும் வகையில் கோயிலில் மட்டும் ஒத்திகை நடத்தியுள்ளது.
 

திருச்செந்தூர் கோயிலில்  5இடத்தில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவற்றை அகற்ற காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து  வெடிகுண்டு குழு ஆய்வாளர்  மற்றும் மோப்ப நாய் சகிதமாக அதிரடியாக கோயிலுக்குள் நுழைந்தனர் காவல்துறையினர். இதனால்   கோயிலுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடந்தனர். அவர்களைகோயிலிலிருந்து வெளியேற்றினர். ஒருமணி நேர தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர்  கைப்பற்றினர்.பலமணி நேர தேடுதலுக்குப்பிறகு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த இடம் தெரியவந்தது. ஆபரேஷன் ஹம்லா என்ற இந்த சோதனை வெறும் ஒத்திகை என தெரிந்ததால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர் என்கிறது செய்தி.
 
ஏற்கனவே சங்கபரிவாரங்கள் கோயிலை தாக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி என்று ஓயாமல் ஒப்பாரி வைப்பதும்-  ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு, அந்த கோயிலை தகர்க்க சதி- இந்த கோயிலை தகர்க்க சதி என்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதன் மூலமும் முஸ்லிம்கள் கோயிலை தகர்க்கும் எண்ணமுடையவர்கள் என்ற சிந்தனையை  மக்கள் மனதில் பதிய வைத்துள்ள நிலையில், இந்த ஒத்திகை மூலம் காவல்துறையும் தன் பங்குக்கு முஸ்லிம்கள் மீதான துவேஷ சிந்தனைக்கு வித்திட்டுள்ளதாகவே  மக்களால் கருதப்படுகிறது. ஆனால்  உண்மையில் இதுவரை இந்தியாவில் எந்த கோயிலிலும் தீவிரவாதிகள் தாக்கியதாக சான்றுகள் இல்லை. ஆனால் மசூதிகளும்-தர்காக்களும்-சர்ச்சுகளும் இந்துத்தவா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட    வரலாறுதான் உண்டு. எனவே இனியாகிலும்  தமிழக காவல்துறை நடுநிலை பேணட்டும்.
 
   

வர்ணாசிரமம், ஹிந்துத்துவா நமக்கு தந்த பரிசு! மேலவளவு!

JULY 01 மதுரை, மறக்க முடியுமா மேலவளவை. இங்குதான்வர்ணாசிரம ஹிந்து ஆதிக்க வெறியர்களால் ஆறு தலித் சகோதர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஜாதி வெறியர்கள் எப்படி தோன்றினார்கள், இவர்களிடம் ஜாதி என்ற அந்த விஷ வித்தை விதைத்து எது என்று பார்த்தால் அதுதான் ஹிந்துதுவாவின் அடிப்படை கொள்கை சித்தாந்தமான வர்ணாசிரம கொள்கை.

இந்த கொள்கைதான் ஒரு சாதாரண மனிதனை ஜாதி வெறி கொண்டவனாக மாற்றி ஆறு அப்பாவி உயிர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தது அன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகேசன்.


இவர் மற்றும் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் இதே ஊரைச் சேர்நத ராஜா, செல்லத்துரை, பூபதி, சேவுகமூர்த்தி ஆகிய ஆறு பேரும் கடந்த 1997 ஜூன் 30ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு தீயில் எரிந்து குடிசை வீடுகளுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்ற போது ஆறு பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலவளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.



   

புருலியா ஆயுத மழை! இந்தியாவுக்கு டென்மார் கொடுத்த அடி!

JUNE 01, புதுடில்லி: "புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது' என, டென்மார்க் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில், 1995ல் விமானத்தில் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் கீழே போடப்பட்டன. ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் என, ஏராளமான ஆயுதங்கள் வீசப்பட்டன.

இந்த ஆயுதங்கள் ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்திற்கு போடப்பட்டது. இந்த ஆனந்த மார்க்கம் என்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், டென்மார்க்கை சேர்ந்த கிம்டேவி என்பவருக்கு தொடர்பு இருப்பதை, சி.பி.ஐ., கண்டு பிடித்தது. அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகளின் பேரில், கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க் அரசு முன்வந்தது.

கிம் டேவிக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை. டென்மார்க் அரசின் இந்த முடிவை எதிர்த்து, கிம் டேவி சார்பில் விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த விசாரணை கோர்ட், கிம் டேவியை நாடு கடத்த அனுமதிக்க முடியாது என, தீர்ப்பளித்தது.

இதையடுத்து, டென்மார்க் ஐகோர்ட்டில் இந்த வழக்கு மேல் முறையீடுக்காக சென்றது. இதில், கிம் டேவியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்ற விசாரணை கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்வதாக தெரிவித்த ஐகோர்ட், டென்மார்க் அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


ஐகோர்ட் உத்தரவில்,"இந்தியாவில் உள்ள சிறைகளின் நிலை மற்றும் மனித உரிமை பிரச்னை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிம் டேவி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அங்கு அவர், விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகலாம்' என, உத்தரவிட்டது. இந்த தகவலை தெரிவித்த சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து, டென்மார்க் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறினார்.


Thursday, June 30, 2011

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.



இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!

JUNE 30, புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும். 



தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, அதே நேரம் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு அதரவாக செய்திகளை வெளியிடுவதில் முதன்மை பெற்று வந்துள்ளது. 

ஒவ்வொரு சந்தர்பத்திலும் தினமலர் தன்னை ஒரு ஹிந்த்துதுவா ஆதரவு பத்திரிக்கை என்பதை வெளிப்படியாக காட்டிக்கொள்ள தயங்கியது இல்லை. இவர்களின் ஒருசார்பு எழுத்துக்கள் மூலமாக எத்தனையோ இன, மத கலவரங்களை ஏற்பப்ப்பட்டுள்ளன .

இவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமான செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதுவதில் வல்லவர்கள். கோவை, மற்றும் இன்னபிற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரமாகட்டும், தலித் மக்களுக்கு எதிரான கலவரமாகட்டும் இவர்கள் செய்திகளை திரித்து வெளிட்டே வந்தனர். இதன் காரணமாக இவர்கள் பலமுறை பத்திரிக்கை கவுன்சிலுக்கு இழுக்கப்பட்டவர்கள். 



இவர்கள் மேல் பத்திரிக்கை கவுன்சிலில் பலமுறை வழக்குகள் தொடுக்கப்பட்டு அதற்க்கு மறுப்புகள் வெளியிட்டுள்ளனர். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு செய்திகளை தலைப்பு செய்தியாக்குவார்கள் அதேநேரம் இவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அந்த செய்திக்கு மறுப்பு வெளியிடும் பொது அதை ஒரு மூலையில் சிறிய செய்தியாக போட்டு இருட்டடிப்பு செய்வார்கள். 

அதுமட்டுமல்ல இதுவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக , கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஹிந்துத்துவா வெறியர்களால் நடத்தப்பட்ட மதக்கலவரங்களை திட்டமிட்டு மறைத்தும் இருட்டடிப்பு செய்தும் செய்தி வெளியிட்டு வந்துள்ளார்கள்.  இப்படி பட்ட பத்திரிக்கை தர்மத்தை பேணாத மேல்ஜாதி பார்ப்பன, வர்ணாசிரம வெறி கொண்ட இவர்களை பத்திரிக்கை கவுன்சிலில் தேர்ந்தெடுப்பது இந்தியாவின் பத்திரிக்கை துறையை ஹிந்துதுவாவின் கைகளில் கொடுக்கும் ஒரு சதியாகும் இதை நடுநிலையாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.