Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Thursday, December 10, 2015
புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
Monday, July 11, 2011
அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' !!!
இதனால், பெரும்பாலான கிராமங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மாணவர்களை தக்க வைக்கும் வகையில், இலவச பஸ், சீருடை, நோட்புக் போன்ற திட்டங்களை அறிமுகபடுத்தி வருகின்றன.
இதைதொடர்ந்து, ஒரு சில அரசுபள்ளிகளிலும் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் தேர்வுபெற்ற ஆசிரியரை கொண்டு ஆங்கிலம் கற்பித்து வருகின்றனர். இதற்காக, பள்ளி ஆசிரியர்களே தங்களின் சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவிடுகின்றனர்.
இதன்காரணமாக கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு கிடைத்ததால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் ஜெசிந்தா கூறியதாவது: கடந்த மாதத்தில் இருந்து மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கீலிஷ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஒன்றரை மணி நேரம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் கற்பிக்க ஆரம்பித்த 15 நாட்களிலே ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத்தர ஆலோசித்து வருகிறோம், என்றார்.
Saturday, July 9, 2011
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்குபெறுவோர் கவனத்திற்கு!!!
மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கி வைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பார். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார். அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Wednesday, June 15, 2011
தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
இதுதவிர 26 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முடிவையும் அது நிறுத்தி வைத்துள்ளது.
1. ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி
2. டாக்டர் ஜி.யு.போப் என்ஜினீயரிங் கல்லூரி
3. பத்மாவதி என்ஜினீயரிங் கல்லூரி
4. வி.கே.கே.விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரமே தற்போது ரத்தாகியுள்ளது.
ஏஐசிடிஇ இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்து தனது இணையதளம் மூலம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கல்லூரிகளுக்கு அரசுக் கோட்டாவின் கீழ் இடம் ஒதுக்கப்பட மாட்டாது. அதேசமயம், கல்லூரிக் கோட்டா மூலம் ஏற்கனவே இங்கு படிக்க பெரும் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கியுள்ள மாணவ, மாணவியரின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதுதவிர அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள 26 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
Tuesday, June 14, 2011
1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு
திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது.
ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.
இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.
கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.
2 வாரத்திற்குள் இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Friday, June 10, 2011
சமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போத நடைமுறையில் உள்ள மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் இது நீட்டிக்கப்படவிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார்.
சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.
அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?
சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.
இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. அது யாருக்கு இழப்பு?
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதா?. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?
இப்படி திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.
இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Wednesday, May 25, 2011
முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .
சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி:
94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை
- 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23
) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier's
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18
B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க
இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (chennai New
College,Keelakarai Sathak,mohamed Sathak A,J Academy of arch,chennai)
முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை
கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான
விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை
பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின்
முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன்
(Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று
விண்ணப்பத்தை பெற வேண்டும்.
*B.Arch கலந்தாய்வு (counseling) முறை :* +2 தேர்வில் எடுத்த மொத்த
மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப்
மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6
- ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால்
வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.
உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130
மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்.
இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list)
தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.
இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
*NATA (National Aptitude Test in Architecture)தேர்வு*
இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு
தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு
செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு
எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண்
சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு
புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது,
ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.
NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண்
கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing
Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும்
சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக
மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3
முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80
மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க
முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத
தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த
www.nata.in இணையதளத்தில் உள்ளன.
Monday, May 16, 2011
சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால்
அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை,
முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும்
மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி
பெறுவார்கள்.11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள்
கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.டிப்ளமோ, தொழிற்பயிற்சி
கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி
உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு
மிகாமல் இருத்தல் வேண்டும்.முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு
மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர், ஆதி
திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில்
கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.
பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது
பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2)
பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம்
6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9)
மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10)
சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12)
தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர்
விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின்
வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை
புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும்
புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று
பெற வேண்டும்.
மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற
Monday, May 9, 2011
பிளஸ்டூ ரிசல்ட் வெளியீடு-ஓசூர் மாணவி ரேகா முதலிடம், கள்ளக்குறிச்சி வேல்முருகன் 2வது இட
மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப்
பிடித்தார்.
ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்
தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.
2வது இடத்தில் வேல்முருகன்
கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன்
1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
4 மாணவர்களுக்கு 3வது இடம்
நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி,
ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா
1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ
தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.
Wednesday, May 4, 2011
வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)
குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி
செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம்
செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை
குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல
வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல்
, மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை
துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மருத்துவம்(MBBS,
BDS) , பொறியியல் (B.EB.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு
இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும்
வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை,
அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை
கொடுக்கலாம்.
தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை
மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துகுடி,
திருச்சி, பெரியகுளம், மேட்டுபாளையம் ஆகிய 6 இடங்களில் 11 வேளாண் கல்லூரிகள்
உள்ளன. இதில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள்
பயிற்றுவிக்கபப்டுகின்றன.
*4 ஆண்டு அறிவியல் படிப்புகள் :* B.Sc.(Agriculture, Horticulture, Forestry,
Home Science, Agricultural Engineering)
*4 ஆண்டு பொறியியல் படிப்புகள் :* B.Tech.(Biotechnology) ,
B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy
and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness
management ) ,B.Tech.(Agricultural information technology) .
மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் 11 வேளாண்பல்கலை கழகங்களிலும் மே
முதல் வாரத்தில் விண்ணப்பிக்க படுகின்றன இன்ஷா அல்லாஹ். விண்ணப்பத்தின் விலை
ரூ.600. மே மாதம் கடைசி வாரத்திற்க்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
*விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :*
Agricultural College and Research Institute, Coimbatore - 641 003
Agricultural College and Research Institute, Madurai - 625 104.
Agrl. College and Res. Inst., Killikulam, Tuticorin District- 628 252
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur
Kuttappattu, Trichy - 620 009.
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram
(P.O.), Poovalur (Via),Trichy - 621 712
Horticultural College and Research Inst., Periyakulam - 625 604
Forest College and Research Institute, Mettupalayam - 641 301
*தகுதிகள் :* +2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்,
அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55%
மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு
மிகாமல் இருக்க வேண்டும்
*மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை :* மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின்
மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன்
அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில்
முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.
அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது.
Saturday, April 23, 2011
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல்
நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.
*I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : *
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு :
பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம்,
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar,
Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என
பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என
பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக
சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான்
இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த
பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப்
கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.
*2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு :* பொறியியல்
(B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு.
(மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ
துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group
கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு
பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
*
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : *மருத்துவம் (MBBS,
BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு.
(பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக
மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
*
4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :* B.Com, CA (Charted
accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்
நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
*
5. வரலாறு, பொருளாதாரவியல் : *எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு
தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள்
உள்ளன
*6. Vocational குரூப் : * தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு,
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.
தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
*
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):*
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார்
துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள்
உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil
etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.
டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல்
(B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது
சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும்.
டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா
படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
*
III. சான்றிதழ் படிப்பு (ITI):*
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற
துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த
பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால்
அதிக சம்பளம் கிடைக்காது.
*
10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (*கோரிக்கை:- தயவு செய்து
மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு,
மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து
வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.
Tuesday, April 12, 2011
குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழகங்கள், மற்றும் மாவட்ட வாரியாக கிடைக்கும் இடங்களின் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய :
www.annauniv.edu/tancet2011 (ஏப்ரல் - 1 முதல் ஏப்ரல் 25 வரை இன்ஷா அல்லாஹ்)
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
27/04/2011 (இன்ஷா அல்லாஹ்)
தேர்வு கட்டணம் : ரூ.300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : த
he Secretary, TANCET Examination Centre, Anna University, Chennai - 600 025.
உடனடி விண்ணப்பம் (Spot Registration):
தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழங்களில் விண்ணப்பம் பெற்று உடனடியாக ஹால் டிக்கெட் (Hall Ticket ) பெறலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, சாதி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதிகள் :
M.E/M.Tech - 29/05/2011 (காலை )
MBA - 28/05/2011 ( காலை )
MCA - 28/05/2011 (மாலை)
M.Arch/M.Plan - 29/05/2011 (காலை )
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : ஜூன் 3-வது வாரம் இன்ஷா அல்லாஹ்
M.E/M.Tech படிக்க தகுதிகள் :
B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/
MBA படிக்க தகுதிகள் :
ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
MCA படிக்க தகுதிகள் :
ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 - ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
M.Arch/M.Plan படிக்க தகுதிகள் :
B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Friday, February 25, 2011
துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!
எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது.
சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.
‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு
உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலமாகச் சித்தரித்தனர்.
முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர்.
திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.
இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது.
இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள்தாம்.
முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர்.
மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.
ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.
ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.
புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.
தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.
டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம்.
ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.
இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.
சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது இன்னொன்று.
கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின்
ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன.
ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.
இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.
அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.
மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.
இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.
நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.
Wednesday, January 26, 2011
Scholarship from TN Govt - முஸ்லிம்களுக்கு அரசின் கல்வி உதவி! தவற விடாதீர்!!
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான
2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல் நகல் (xerox)
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal
form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி, பட்ட படிப்பு, பட்ட
மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு (Ph.D)
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து
அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form)
(prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை
பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )
தகுதிகள் :
* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு
கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design
managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology
ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி
வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு
தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
* சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து
பெறப்பட வேண்டும் )
* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து
அனுப்புவது சிறந்தது
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள
(MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க
தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி
செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :
http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm
Sunday, October 17, 2010
இலவசமாக M.E/M.Tech படிக்க:GATE நுழைவு தேர்வு
இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு
*இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE
நுழைவு தேர்வு*
GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம்
போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால்
நடத்தப்படும் தேர்வாகும்.
இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும்
மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது.
இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய
தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.
இதில்
முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட
ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்
அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/
இந்தியாவில் 8 இடங்களில் உள்ள IIT, 20 இடங்களில் உள்ள NIT, டெல்லி பல்கலை
கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை
பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech,
Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில்
நாம்
தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த
கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும்
(கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது).
இந்த
கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது.
நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு
எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த
உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு
படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில்
வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு
ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd
படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம்,
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும்,
அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான்,
உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.
தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (
www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது.
*பெற்றோர்களே!*
நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால்
இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை
அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை
கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள்.
மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து
பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின்
சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில்
சேருங்கள் இன்ஷா அல்லாஹ்
பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல
வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து
சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில்
சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு
தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க
வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று
இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும்,
படிப்பை வாங்கமுடியாது,
வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல
வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,
எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின்
மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து
படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
*S.சித்தீக்.M.Tech *
*TNTJ மாணவரணி*
*GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்*
*விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :* அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்.
http://onlinegate.iitm.ac.in/iitweb
*விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :* சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட
State Bank of India கிளைகள் (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
*விண்ணப்பத்தின் விலை :* ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :*
Chairman, GATE
Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,
*மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் :* 044-2257 8200
(சென்னை IIT)
*தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :*
1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும்
இறுதி ஆண்டு மாணவர்கள்.
2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்
*தேர்வு நடைபெறும் தேதி :* ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
*தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி :* மார்ச் 15
GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க
*அஹமது இப்ராஹிம் -
9841464521*
அல்லது E-mail to sithiqu.mtech@gmail.com <mailto:sithiqu.mtech@gmail.com
நன்றி:
"TAMIL MUSLIM POLITICS" tmpolitics@googlegroups.com.
