Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
Thursday, December 10, 2015
புதிய கல்விக் கொள்கை : வேகமாக இறுகும் மறுகாலனியாக்கம்
ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?
சகிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.
கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். .
அறிந்தது தான். .
Saturday, November 28, 2015
இந்து ராஷ்டிரம்? கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…........
பருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.
Saturday, November 14, 2015
முக்கிய அறிவிப்பு PASSPORT - ECNR
முக்கிய அறிவிப்பு PASSPORT ECNR பெறமுடியாதவர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு
நமது நாட்டில் பலர் (படிக்காவர்கள்) ECNR பெற முடியாமல் கஸ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.
தங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் , தாங்கள் பாஸ்போர்ட்க்கு தேவையான ஆவணங்களை எடுத்து சென்று அங்கு 18/- செலுத்தி ECNR க்காக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் 15 -தினத்தில் ECNR பதிவுசெய்து
PASSPORT வீட்டுக்கு வந்து சேரும்.
இது தீபாவளிக்கு பின் 15 -தினங்களுக்கு மட்டுமே. உடனடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும்
தங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் , தாங்கள் பாஸ்போர்ட்க்கு தேவையான ஆவணங்களை எடுத்து சென்று அங்கு 18/- செலுத்தி ECNR க்காக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் 15 -தினத்தில் ECNR பதிவுசெய்து
PASSPORT வீட்டுக்கு வந்து சேரும்.
இது தீபாவளிக்கு பின் 15 -தினங்களுக்கு மட்டுமே. உடனடியாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகவும்
Tuesday, November 10, 2015
தீரர் திப்புவின் பிறந்த தினம்-கர்நாடகாவில் பதற்றம்
பெங்களூர், நவ.10-
18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
Monday, November 9, 2015
பிகார் தேர்தல் இந்தியாவின் வெற்றி!
ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?
Friday, November 6, 2015
Thursday, November 5, 2015
ராஜஸ்தான்: மதுவிலக்கு கோரிய சப்ரா மரணம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவிலக்கு கோரியும், லோக் ஆயுக்தாவை பலப்படுத்த கோரியும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த காந்தியவாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான குருசரண் சப்ரா (Gurusharan Chhabra)
மதுவிலக்கு போராட்டத்திற்கு மற்றொரு களப்பலியாகியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பட்டினி போராட்டத்தை ஆரம்பித்த அவர் 04-11-2015 அன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
Saturday, October 24, 2015
Tuesday, January 21, 2014
ஆதாரம் இல்லை:பொடா சட்டத்தில் கைதான 3 முஸ்லிம்கள் விடுதலை!
புதுடெல்லி: ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தினார்கள் என்று குற்றம் சாட்டி பொடா கறுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட 3 முஸ்லிம்களை ஆதாரம் இல்லாததால் உ.பி மாநிலத்தின் மொராதாபாத் நீதிமன்றம் விடுதலைச்செய்தது. 2002-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட மக்ஸூத், ஜாவேத், தாஜ் முஹம்மது ஆகிய 3 பேர் விடுதலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
Wednesday, November 6, 2013
Tuesday, November 5, 2013
Tuesday, October 22, 2013
இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு?
புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய திட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் ஆதரவாக உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன், 2008ஆம் ஆண்டே பரிந்துரை செய்திருந்தார். இதை தற்போது நிறைவேற்ற அவர் முனைப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய சட்டம் (ஷரீஅத்) அடிப்படையில் செயல்படும் இந்த வங்கிகளில் பெறப்படும் கடன் தொகைக்கு வட்டி வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடியது.
உலகின் பல்வேறு நாடுகள் இஸ்லாமிய வங்கிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
Saturday, October 19, 2013
குர்பானி இறைச்சி: 12 மாநிலங்களில், 550 கிராமங்களில், 3,30,000 ஏழைகளுக்கு வினியோகம் – ரிஹாப் சாதனை!
புதுடெல்லி: நலிந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ரிஹாப் இந்தியா பௌண்டேஷன் இந்த ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி 3,30,000 ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி உணவு கிட் வழங்கி சாதனை படைத்துள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில், 550 கிராமங்களில் ஏழைகளுக்கு குர்பானி உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நலிந்த சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ரிஹாப் இந்தியா பௌண்டேஷன் கடின முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக அது பல வகைகளில் உழைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு தங்கள் குர்பானி இறைச்சியைக் கொடுக்க விரும்புவோரிடமிருந்து ரிஹாப் வாங்கி 12 மாநிலங்களில் விநியோகித்துள்ளது.
மொத்தம் 85,000 கிலோ இறைச்சி ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், பீகார், ஜார்கண்டு, டெல்லி, உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், தமிழ் நாடு, இராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்களில் 60,000 ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெற்றன.
சமீபத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசப்பர்நகர் மாவட்டத்திலுள்ள ஜோலா, லே, மோன்சொரக்ஸ், கரானா ஆகிய இடங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களுக்கு ரிஹாப் குழு சென்றது.
ரிஹாப் தன்னார்வத் தொண்டர்கள் இந்த முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி சமாதானப்படுத்தினர்.
“கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பெருநாள் தினங்களில் கூட நல்ல உணவு கிடைக்காமல் தவிப்பவர்களுடன் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் ஆதரவாளர்கள், நன்கொடையாளர்களின் பேருதவியால் இதனை நாங்கள் செய்ய முடிந்தது. இந்தத் தடவை 60,000 குடும்பங்களுக்கு 550 கிராமங்களில் நாங்கள் குர்பானி உணவை விநியோகித்தோம். மொத்தமாக 3,30,000 ஏழைகள் இதன் மூலம் பயனடைந்தனர்” என்று ரிஹாபின் பொதுச் செயலாளர் அப்சல் சந்த்ரகண்டி கூறினார்.
Thursday, October 3, 2013
டெல்லி போலீஸ் தீவிரவாதிகளாக்கிய இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை!
புதுடெல்லி: டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது.
கஷ்மீரைச் சார்ந்த ஜாவேத் அஹ்மத் தந்த்ரே, ஆஷிக் அலி பட் ஆகியோரை நிரபராதிகள் என்று கண்டறிந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு அதிகாரிகள் தங்களுடைய பதவி உயர்வுக்காக நடத்திய கைது நாடகம் என்பது தெளிவானதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்ந்து தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய் வழக்குகளில் முஸ்லிம்களை கைது செய்யும் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு பெரும் பின்னடைவாகும்.
2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டி டெல்லி ஸ்பெஷல் போலீஸின் சிறப்பு பிரிவு இருவரையும் கைது செய்தது.
அன்றைய டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இணை கமிஷனராக இருந்த பி.என். அகர்வால், செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்விருவரையும் கொடிய தீவிரவாதிகளாக சித்தரித்தார்.
தரியாகஞ்சில் ஒரு தொலைபேசி பூத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கும்போது இருவரையும் கைது செய்ததாக போலீஸ் கூறியது. இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வந்தவர்கள் என்றும் கதைகளை அளந்தது ஸ்பெஷல் பிரிவு.
ஆனால், டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தவிடுபொடியானது. போலீஸின் வாதங்களுக்கும், ஆதாரங்களுக்கும் இடையே மிகுந்த முரண்பாடுகள் இருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.
இவர்கள் பயணித்ததாக போலீஸ் கூறும் ஸாண்ட்ரோ காரில் ரகசிய அறைகளில் இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், நான்கு 120 ரவுண்ட் தோட்டாக்கள், இரண்டு கிரேனேடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது.
ஆனால், இவ்வளவு ஆயுதங்களை வைக்கும் அளவுக்கு போதிய அறைகள் எதுவும் காரில் இல்லை என்பது நீதிமன்றத்திற்கு தெரிய வந்தது. ஆயுதங்களை கைப்பற்றியபோது காரின் உள்ளே வைத்து எடுத்த ஃபோட்டோக்கள் என்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஃபோட்டோக்களும் போலீசிற்கு எதிர்வினையை உருவாக்கியது.
அந்த ஃபோட்டோக்களில் சிமெண்ட் தரையில் ஃபோட்டோக்கள் வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தபோது அங்கிருந்த எவரையும் சாட்சிகளாக ஆஜர்படுத்த போலீஸால் முடியவில்லை.
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் தாங்கள் அப்பாவிகள் என்பதை நிரூபிக்க நான்கு ஆண்டுகளாக படாத பாடு பட்டபோது, அவர்களை கைது செய்த போலீசுக்கோ பதவி உயர்வுகள் கிடைத்தன.
துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சந்திரிகா பிரசாத் தற்போது இன்ஸ்பெக்டர் ராங்கில் ஸ்பெஷல் பிரிவில் ஒரு டீமை வழி நடத்துகிறார். இன்வெஸ்டிகேஷன் ஆபீசராக இருந்த சஞ்சீவ் யாதவ் கூடுதல் டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர்களான ஹிருதய் பூஷண், லலித் மோகன் நேஜி ஆகியோர் டீம் தலைவர்களாக உள்ளனர்.
அன்றைய இணை கமிஷனர் பி.என். அகர்வால் கடந்த மாதம் டி.ஜி.பி. ரேங்கில் இருந்து ஓய்வு பெற்றார்.
முஸஃபர்நகர் கலவரம்: வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரிக்க மனு!
முஸஃபர்நகர்: முஸஃபர்நகர் கலவர வழக்கு விசாரணையை காணொளி காட்சி (வீடியோ கான்ஃப்ரன்சிங்) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் கெஷல் ராஜ் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை இதைத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், முஸஃபர்நகரில் அண்மையில் சங்க் பரிவார்கள் ஜாட் இனத்தவர்களின் துணையோடு நடத்திய கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கலவரம் தொடர்பாக போலி விடியோவை பதிவேற்றம் செய்ததுடன் பதற்றத்தைத் தூண்டும் வகையில் பேசினார் என சங்கீத் சோம் மீதும், பதற்றத்தைத் தூண்டும் வகையில் பேசினார் என்று சுரேஷ் ராணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கீத் சோம் உராய் மாவட்ட சிறையிலும், சுரேஷ் ராணா பாந்தா மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில்கொண்டு இருவரிடமும் சிறையிலிருந்தபடியே விடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கே.பி. சிங் முடிவு செய்வார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) நடைபெறுகிறது.
Saturday, February 11, 2012
மும்பை இரட்டை குண்டுவெடிப்பு: 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதிச்செய்தது உயர்நீதிமன்றம்
மும்பை:மும்பை இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் என கூறப்படும் 3 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதிச்செய்துள்ளது.
அஸ்ரத் அன்சாரி(32), ஹனீஃப் சையத் அனீஸ்(46), பஹ்மிதா சையத்(43) ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் ஹனிப் அனீஸ், பெஹ்மிதா ஆகியோர் கணவன் மனைவி ஆவர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அப்பீல் மனு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2003 ஜூலை 28-ஆம் தேதி மும்பை இந்தியா கேட்டிலும், ஸவேரி பஸாரிலும் 57 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தை சார்ந்தவர்கள் என கூறப்படும் 3 பேர் இணைந்து குண்டுவெடிப்பிற்கு சதி திட்டம் தீட்டியதாக அரசு தரப்பு வாதிட்டது. ஏழு பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் விடுதலையானார்கள். ஒருவர் அப்ரூவராக மாறினார். இன்னொரு நபர் விசாரணையின் போது மரணமடைந்தார்.
Sunday, February 5, 2012
உ.பி:இரண்டாவது கட்ட தேர்தலில் 118 கிரிமினல் வேட்பாளர்கள்
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது கட்ட சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 118 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களாவர்.
மாநில தேர்தல் கண்காணிப்பு அமைப்பான உத்தரபிரதேஷ் எலக்ஷன் வாட்ச் (யு.பி.இ.டபிள்யூ) வேட்பாளர்களின் குற்ற பின்னணி குறித்து கண்டறிந்துள்ளது.
பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் 337 வேட்பாளர்களில் 35 சதவீதம் பேர் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்பட ஏதேனும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதை யு.பி.இ.டபிள்யூ கண்டுபிடித்துள்ளது.
கவ்மி ஏகதா தள் கட்சியின் சார்பாக மஉ, கோஸி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் முக்தார் அன்ஸாரியின் மீது 15 குற்றவியல் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. ஃபிபனா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உபேந்திரா மீது 11 வழக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக கிருஷிநகரில் போட்டியிடும் ஜாவேத் இக்பால் மீது ஐந்து வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
க்ரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறக்கியதில் முதலிடம் வகிப்பது சமாஜ்வாதி கட்சி ஆகும். இரண்டவாது இடம் சி.எஸ்.பி ஆகும். எஸ்.பி-30, சி.எஸ்.பி-23, பா.ஜ.க-20, காங்கிரஸ்-19, பீஸ்பார்டி- 8, ஐக்கிய ஜனதா தளம்-12 ஆகிய எண்ணிக்கையில் பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 2.74 கோடி ரூபாய் ஆகும். பொருளாதார வளர்ச்சி சதவீதம் 187 சதவீதம் ஆகும். வேட்பாளர்களில் அதிக சொத்துக்களை வைத்திருப்பவர் பி.எஸ்.பியின் ஷா ஆலம் ஆவார். 54.44 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இவர் முபாரக்பூரில் போட்டியிடுகிறார். ஸாஹிபூரில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுபாஷ் 35.32 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 337 வேட்பாளர்களில் 166 பேர் (49 சதவீதம்) இதுவரை வருமானவரி ரிட்டேர்ன் சமர்ப்பிக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Friday, February 3, 2012
உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர்.
சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.
இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர்.
இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது. இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது. சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.
சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.
இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர்.
இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது. இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது. சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.
சிந்திக்கவும்: இப்படி நாட்டை வளப்படுத்த விவசாயிகள் மரம் வளர்த்து, விவசாயம் செய்து மண்ணையும், வளங்களையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார்கள். ஆனால் மன்மோகன் சிங் அரசோ நாட்டின் கனிமவளங்களை சுரண்டி இந்தியாவை அந்நிய முதலாளிகளின் குப்பை கூடையாக மாற்ற திட்டம் தீட்டுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமவளங்களை சுரண்ட காட்டு வேட்டை ஆடுகிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையம் திறந்து கடலை நம்பி வாழும் மக்களின் வயிற்றி அடிக்க முயற்சி செய்கிறது. கூடங்குளம் அணு உலை ஒன்று மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். இது முடிந்ததும் நாடு முழுவதும் 40 அனுவுலைகளை அமைக்க அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஒப்ந்தத்துடன் காத்துக்கிடக்கின்றன. இனி மாவட்டம் தோறும் அனுவுலைகள்தான்.
இந்தியாவுக்கு வந்திருப்பது வல்லரசு என்கிற தாகம். இந்த தாகம் எடுத்தவர்கள் தாகத்துக்கு அருந்துவது எல்லாம் மனித இரத்தங்களைத்தான். இந்த தாகத்தின் காரணமாக ஈழத்திலே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தார்கள். ஈழத்து இன அழிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய புண்ணிய ஆத்மாக்கல்தான் இந்த காந்திய வழி கதர் சட்டைக்காரர்கள். காஷ்மீரில் படர்வது பனிமட்டும் அல்ல இந்த கயவர்களின் அடக்குமுறையும் அழித்தொழிப்பும்தான்.
ஒருபுறம் ஹிந்துத்துவா உண்டாக்க நினைக்கும் மதவாதம் மறுபுறம் கார்பெரெட் முதலாளிகளின் சகவாசம் என்று நாட்டின் வளர்ச்சியை நாசம் செய்கிறார்கள். இந்தியா என்கிற பூஞ்ச்சோலை அணு உலைகளால் சோமாலியாவாக மாறப்போகிறது. உலக நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் அல்லது கழிவுகளை வெளியாக்க, அவைகளை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவுகளை சமாளிக்க கார்பரேட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொர்க்க பூமிதான் ( குப்பை கூடைதான்) இந்தியா. உலக நாடுகளின் குப்பை தொட்டி இந்தியா என்று சொன்னால் மிகையாகாது.
இந்தியாவுக்கு வந்திருப்பது வல்லரசு என்கிற தாகம். இந்த தாகம் எடுத்தவர்கள் தாகத்துக்கு அருந்துவது எல்லாம் மனித இரத்தங்களைத்தான். இந்த தாகத்தின் காரணமாக ஈழத்திலே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தார்கள். ஈழத்து இன அழிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய புண்ணிய ஆத்மாக்கல்தான் இந்த காந்திய வழி கதர் சட்டைக்காரர்கள். காஷ்மீரில் படர்வது பனிமட்டும் அல்ல இந்த கயவர்களின் அடக்குமுறையும் அழித்தொழிப்பும்தான்.
ஒருபுறம் ஹிந்துத்துவா உண்டாக்க நினைக்கும் மதவாதம் மறுபுறம் கார்பெரெட் முதலாளிகளின் சகவாசம் என்று நாட்டின் வளர்ச்சியை நாசம் செய்கிறார்கள். இந்தியா என்கிற பூஞ்ச்சோலை அணு உலைகளால் சோமாலியாவாக மாறப்போகிறது. உலக நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் அல்லது கழிவுகளை வெளியாக்க, அவைகளை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவுகளை சமாளிக்க கார்பரேட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொர்க்க பூமிதான் ( குப்பை கூடைதான்) இந்தியா. உலக நாடுகளின் குப்பை தொட்டி இந்தியா என்று சொன்னால் மிகையாகாது.
Subscribe to:
Posts (Atom)



