Showing posts with label இந்திய. Show all posts
Showing posts with label இந்திய. Show all posts

Thursday, October 10, 2013

முஸஃபர்நகர் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

அலிகர்: முஸஃபர்நகர் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்ததாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முஸஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அண்மையில் சங்க் பரிவார பாசிஸ்டுகளின் உதவியுடன் ஜாட் இனத்தவர்கள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரானத வகுப்புக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளானார்கள். ஏராளமானோரை காணவில்லை.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் ஆதாயம் பெறவே இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ.க.வின் மீது பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோலவே கலவரத்தை உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி தடுக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில் அலிகரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சு விவரம்:
முஸஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அண்மையில் நடந்த வகுப்புக் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள் செயல்பட்டன. இந்த சக்திகள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மக்களை மோத விட்டு வேடிக்கை பார்த்துள்ளன. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் தூண்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு சாதியினரும் மற்றொரு சாதியினரும் சண்டையிட்டுக் கொள்ளும் விதத்தில் அவர்களைத் தூண்டி விட்டு அரசியல்வாதிகள் செயல்பட்டிருக்கிறார்கள்.
சாதாரணமாக, மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று அரசியல் சக்திகள் கருதுகின்றன. அதனாலேயே இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட்டு, அதை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்காத வரையில் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படாது. மாநிலம் வளர்ச்சி பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். உங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம்.
மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் காங்கிரஸ் மட்டுமே அனைத்து மதத்தினரையும் சமூகத்தினரையும் அரவணைத்துச் சென்று மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்குப் பாடுபடும்.
மாநிலத்தில் கட்டாய நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக 2011இல் நடைபெற்ற பாத யாத்திரையில் நான் பங்கேற்றேன். அப்போது இது தொடர்பாக நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நிலம் கையகப்படுத்துதல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. எனவே மக்கள் தங்களுக்கான உரிமையை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றார் ராகுல் காந்தி.

Wednesday, October 9, 2013

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளி!

சூரத்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து, தேடப்படும் குற்றவாளியாக சூரத் காவல்துறை திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சாமியார் ஆசாராம் பாபு ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், சூரத்தைச் சேரந்த இரண்டு சகோதரிகள் ஞாயிற்றுக்கிழமை கொடுத்த புகாரின் பேரில், சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண சாய் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதரிகள் இருவரும் கடந்த 2001-2006 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண சாய் ஆகியோர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் புகாரில் கூறியிருந்தனர்.
புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாராயண சாயை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் ராகேஷ் ஆஸ்தானா தெரிவித்தார்.
நாராயண சாய் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில், குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் ஆஸ்தானா மேலும் கூறினார்.
இதனிடையே, ஜெய்ப்பூரில் கர்தானி பகுதியில் உள்ள ஆசாராம் ஆசிரமம் மீது, பாலியல் புகார்களால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆசிரமத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ், 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

Saturday, September 28, 2013

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு

திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகள் மூலம் மீட்டனர் . ஆனால் இகுழந்தை மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தற்போது சொல்ல முடியவில்லை. அவர் ஆரணி அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை குழியில் இருந்து மீட்டாலும் , இவர் உயிரோடு நலமுடன் திரும்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் 10 மணி நேரம் ஈடுபட்டனர், 


ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டினர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் நேரடியில் :
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஞானசேகர் புலவன்பாடிக்கு சென்றார். அங்கு மீட்பு பணியை முடுக்கி விட்டார்.அடுத்து , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தவு பிறப்பித்தார்.மாவட்ட எஸ்.பி., முத்தரசி சம்பவ இடத்தில் முகாமிட்டார். இதற்கிடையில் கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

இந்தியாவின் NO 1 மாநிலம் கோவா!

Sep 28/2013: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.

தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.


இந்தியாவில்  உள்ள மொத்தம் 28 மாநிலங்களில்  கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு: ஆனால், ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. குஜராத்திற்கு 12வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சி யடைந்த  மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.

Tuesday, September 25, 2012

கலக்கத்தில் பா.ஜ.க:1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!


புதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கிய பாரதீய ஜனதா கட்சியின் இரட்டை வேடம் கலைய உள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க கலக்கமடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏலமுறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்படாததால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து தலைமை ஊழல் தடுப்பு ஆணையர்(சி.வி.சி) சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ விசாரணையை துவக்கியது.


இதுத்தொடர்பாக சி.பி.ஐ 7 வழக்குகளை பதிவுச் செய்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் துவங்கி 1993-2004-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் பின்பற்றிய முறையிலேயே ஐ.மு அரசும் ஒதுக்கீடு செய்ததா? தனியார் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்டன? என்று 7 எம்.பிக்கள் கேள்வி விடுத்தனர். இதுத்தொடர்பாக அவர்கள் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்கு மனு அளித்தனர். அதனை பரிசீலித்த ஜெய்ஸ்வால், மனுவை தலைமை ஊழல் தடுப்பு ஆணையருக்கு அனுப்பி வைத்தார். சி.பி.ஐ விசாரணையை பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சியில் இருந்து துவங்கும்படி கேட்டுக்கொண்டார்.
“நிலக்கரி சுரங்கங்கள் தேசியமய சட்டம் 1973-ஆம் ஆண்டின் படி, நிலக்கரி, மின்சாரம், இரும்பு, சிமெண்டு ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் 1993-ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சி காலம் உள்பட 1993-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 39 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. ஆகவே அந்த காலக்கட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்று சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்துள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று சி.வி.சி ஆணையர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் குட்டு வெளியாகிவிடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. சி.வி.சி ஆணையரின் சி.பி.ஐ விசாரணைக்கான உத்தரவு பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 0 0 0 New

Tuesday, February 14, 2012

இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?

FEB 13: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.  

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சிந்திக்கவும்: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அப்பாவி மக்கள் ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் போடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு ஒடுக்கும். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு பயங்கரவாத படைகளான போலீஸ் மற்றும் ராணுவம் ஏவி விடப்படும். ஆனால் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் ஒரே நாளில் 44 அப்பாவி மக்களை கொன்றவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இந்த வெள்ளை உடை தரித்த அழுக்கு பிடித்த கயவர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் 44 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பயங்கரவாதம்தான். மக்களுக்கு தேவையான உணவுகளை பதுக்கும் பதுக்கல் வியாபாரிகள், போலி மருந்துக்களை தயாரித்து மக்கள் உயிருக்கு உலைவைக்கும் மருந்து கம்பெனிகள், இதுபோன்று உயிர்காக்கும் பணிகளில் உள்ளவர்கள் செய்யும் வேலை நிறுத்தங்கள்ஆகியவற்றால் பாதிக்கபடுவது ஏழை எளிய மக்களின் உயிர்களே. இந்த கயவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். செய்வார்களா இந்த போலி அரசியல்வாதிகள். இல்லையேல் மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வரவேண்டும். 

Saturday, February 11, 2012

பாட்லா ஹவுஸ்:போலி என்கவுண்டர் புகைப்படங்களை பார்த்து சோனியா அழுதார் – குர்ஷித்


ஆஸம்கர்:பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் புகைப்படங்களை பார்த்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கண்ணீர்விட்டு அழுதார் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
உ.பி மாநிலம் ஆஸம்கரில் தேர்தல் பிரச்சார பேரணியில் உரை நிகழ்த்திய குர்ஷித் முஸ்லிம் வாக்குவங்கியை கவருவதற்காக இத்தகவலை வெளியிட்டார்.


அவர் கூறியது: பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்த வேளையில் நான் அமைச்சராக இல்லை. இருந்தபோதிலும் இதனை சோனியா காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். புகைப்படங்களை பார்த்தவுடன் சோனியா காந்தியின் கண்கள் குளமாகின. இவ்விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல சோனியா உத்தரவிட்டார். இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கான கட்டம் வரை உருவானது. ஆனால், மக்களவை தேர்தல் நடக்கும் வேளை என்பதால் நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் சென்றுவிட்டது’ என குர்ஷித் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில் கூறினார்.
2008 செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லி பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்திர சர்மாவும், ஜாமிஆ மில்லியாவின் இரண்டு மாணவர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால், குர்ஷித்தின் பேச்சுக்கு திக் விஜய் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.”சோனியா காந்தி அழவில்லை. அது சல்மான் குர்ஷித்தின் சொந்த கருத்து” என திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

Saturday, February 4, 2012

மேற்குவங்காளம்:மேலும் 19 குழந்தைகள் மரணம்


மால்டா/பங்குரா:கடந்த இரு தினங்களில் மேற்குவங்காள மாநிலத்தின் மால்டா, பங்குரா மாவட்டங்களில் மேலும் 19 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
பங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 குழந்தைகளும், மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 குழந்தைகளும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


பங்குரா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 6 குழந்தைகளும் இறந்ததாக கல்லூரியின் கண்காணிப்பாளர் டாக்டர் பி. குன்டு தெரிவித்தார்.
மூளை வீக்கம், நிம்மோனியா, உடல் எடைக்குறைவு ஆகியன மரணத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. பிறந்து 15 தினங்களே ஆன குழந்தைகளும் இறந்தவர்களில் அடங்குவர் என மால்டா மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர்.எம்.எ.ரஷீத் கூறினார். இத்துடன் கடந்த 16 தினங்களில் மே.வங்க மருத்துவமனையில் குழந்தைகளின் மரண எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

Friday, February 3, 2012

முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்சநீதிமன்றம்


டெல்லி:2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122  லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.



ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.
இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் துறை குற்றம் சாட்டியிருந்தது.
முறைகேடு விற்பனைக்கு அபராதம்
இந்நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.
லைசென்ஸ் வினியோகம் புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும். புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் கங்கூலி,சிங்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, February 1, 2012

பங்களாதேஷ் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்: பி​.எஸ்.எஃப் ஜவான்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை

நியூயார்க்:இந்திய எல்லைக்குள் மாடுகளை ஓட்டி வந்த பங்களாதேஷ் வாலிபரை கர்ண கொடூரமாக சித்திரவதைச் செய்த ஈவு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் எட்டு பேர் மீது விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று பங்களாதேஷைச் சார்ந்த இளைஞரான ஹாபு ஷேக் என்ற அப்துல் ஷேக் தனது கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. வழக்கமாக இரு நாடுகளை சார்ந்த விவசாயிகளும் மாடுகள் உள்பட வியாபாரத்திற்காக இந்த எல்லையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாடுகளுடன் எல்லைக்குள் நுழைந்த அப்துல் ஷேக் உள்ளிட்ட கிராம வாசிகளை பிடித்த பி.எஸ்.எஃப் படையினர் அப்துல் ஷேக்கை மட்டும் பிடித்து வைத்துவிட்டு மற்றவர்களை பங்களாதேஷிற்குள் விரட்டியுள்ளனர். பின்னர் அப்துல் ஷேக்கை நிர்வாணமாக்கி கனத்த தடியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர் உதவிக்காக கூக்குரலிட்ட பிறகும் யாரும் உதவுவதற்கு வரவுமில்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். அவர் அனுபவிக்கும் வேதனையை பார்த்து ரசித்து சிரித்ததுடன் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.



இக்காட்சியை பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவர் வீடியோ பிடித்து அதனை பரப்ப விட்டுள்ளார். இக்காட்சி யூ ட்யூப் இணையதளம் வாயிலாக உலக முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ராமிநகர் காவல் நிலையக்கட்டுப்பாட்டில் உள்ள சார் மவ்ராசி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த எல்லைப் பகுதி பி.எஸ்.எஃபின் 105 பட்டாலியனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி பி.எஸ்.எஸ் ஜவான்களின் சித்திரவதை குறித்து குறிப்பிடுகையில், ’மனிதத் தன்மையற்றது’ என தெரிவித்தார். அவர் மேற்கு வங்காள டி.ஐ.ஜி நபரஜித் முகர்ஜியிடம், பி.எஸ்.எஃப் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பி.எஸ்.எஃப் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஜவான்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகையில், “இச்சம்பவம் மனித உரிமை மீறல்களின் தெளிவான ஆதாரமாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட படை வீரர்கள் மீது இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
கட்லமாரி 2-வது கிராம பஞ்சாயத்தின் தலைவர் முஹம்மது முல்லா கூறுகையில், “இந்தியா-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் சித்திரவதைச் செய்வது புதிய சம்பவம் அல்ல. உள்ளூர் விவசாயிகள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். நான் பலமுறை உயர் அதிகாரிகளிடம் பி.எஸ்.எஃப் ஜவான்களின் கொடுமையை குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் பி.எஸ்.எஃப் எதனையும் கண்டுகொள்வதில்லை. இப்பகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு நடக்கும் எந்த சம்பவமும் ஊடகங்களில் இடம் பெறுவதில்லை” என கூறுகிறார்.
சில அரசு சாரா அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பி.எஸ்.எஃபின் அட்டூழியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஆதிபாசி க்ராமின் ஜனகல்யாண் சமிதியின் ஜஹாங்கிர் ஃபக்கீர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் பி.எஸ்.எஃபின் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவிக்கிறார்.

Tuesday, January 31, 2012

சீனாவுக்கு 'ஷாக்' நியூஸ்..ரூ.50,000 கோடிக்கு 'டஸ்ஸால்ட் ரபேல்' போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

டெல்லி: பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறை . மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த டீல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த நிதியாண்டில் இந்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்று கையெழுத்தாகும். முதல் கட்டமாக 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும். மீதமுள்ள 118 வி்மானங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரித்து அளிக்கும்.

உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக மாறியுள்ள இதைப் பெற ரஷ்யாவின் மிக்-35, லாக்கீட் மாட்டினின் எப்-16 பால்கன், போயிங்கின் எப் 18 ஹார்னட், ஸ்வீடனின் சாப் கிரிப்பன், ஐரோப்பிய போர் விமானமான டைபூன் மற்றும் டஸ்ஸால்ட் ரபேல் ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரபேல் வென்றுள்ளது.

ஈரோபைட்டர் எனப்படும் டைபூன் போர் விமானத்தை ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த நான்கு நாடுகளின் அரசுகளும் இந்திய விமானப்படையின் ஒப்பந்தத்தைப் பெற கடுமையாக முயன்று வந்தன. அதேசமயம், டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானத்திற்கு பிரான்ஸ் அரசு தீவிர ஆதரவு தெரிவித்து செயல்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி இறுதியாக இந்த இரண்டு நிறுவனங்களை மத்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தப் பரிசீலனையில் வைத்தது. இதில் டஸ்ஸால்ட் ரபேல் விமானங்களின் விலை டைபூனை விட குறைவாக இருந்ததாலும், அதன் துல்லியம் சிறப்பாக இருந்ததாலும், பிரான்ஸ் நிறுவனத்திற்கு தற்போது அடித்துள்ளது யோகம்.

மிராஜைத் தந்ததும் டஸ்ஸால்ட்தான்

இந்திய வி்மானப் படைக்கும், டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிறுவனம்தான் மிராஜ் 2000 விமானத்தை இந்தியாவுக்குக் கொடுத்தது. இந்தியாவின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று மிராஜ்தா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேரும்போது இந்திய விமானப்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Saturday, January 28, 2012

பேஸ்புக்:ராணுவத்தினருக்கு இறுதி எச்சரிக்கை


புதுடெல்லி:ட்விட்டர்,பேஸ்புக்,ஆர்குட் உள்பட பல்வேறு சமூக இணையதளங்களில் தங்களின் ஃப்ரொஃபைல்களில் இருந்து ராணுவம் தொடர்பான தனிப்பட்ட விபரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நீக்கம் செய்ய ராணுவ அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.


மூன்று மாதத்திற்குள் தகவல்களை நீக்கம் செய்ய கடந்த அக்டோபர் மாதம் ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. கால அவகாசம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் உரிய கால அவகாசத்தில் தகவல்களை ஃப்ரொஃபைலில் இருந்து நீக்காத ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தரைப்படையைச் சார்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் சோசியல் நெட்வர்க்கில் உள்ள தங்களுடைய ஃப்ரொஃபைல்களில் ராணுவத்தில் உள்ள பொறுப்பு மற்றும் ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்களை சேர்த்துள்ளனர். அதேவேளையில் இத்தகைய இணையதளங்களை உபயோகிப்பதை ராணுவம் தடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் மூலமாக தகவலை கசியவிட்ட குற்றச்சாட்டில் விசாரணைச் செய்யப்பட்ட நான்கு கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகள் என அண்மையில் விசாரணை கமிஷன் கண்டுபிடித்தது.