ஃபலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸ் தனது 28வது தொடக்க விழாவினை கொண்டாடியது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலாம் இன்திஃபாதா எனப்படும் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் அறிவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்றுவரை ஃபலஸ்தீன மக்களின் நம்பிக்கையாக திகழந்து வருகிறது. 1988ல் தொடங்கப்பட்டாலும் அதன் தலைவர்கள் அதற்கு முன்னரே ஃபலஸ்தீன மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தனர்.
Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts
Showing posts with label வளைகுடா செய்திகள். Show all posts
Monday, December 14, 2015
Tuesday, December 8, 2015
Tuesday, November 10, 2015
Friday, November 6, 2015
Monday, July 18, 2011
சவூதி: தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்
சவூதி: செங்கடல் நகரமானஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள் (Passports) முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன. இத்தகவலை ஜெத்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
முறையான பரிகாரங்களை மேற்கொள்ள நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்தையும் மீளமையச் செய்ய 75 நாள்களாவது ஆகலாம் என்று அவர் கூறினார். நிறுவனம் சார்பாக சட்டத் தரணிகள் குழுவொன்று ஜெத்தாவில் முகாமிட்டு ஆகவேண்டிய முறைமைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகங்களை அணுகி புதிய பாஸ்போர்ட் பெற்று கொள்ளும்படி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரியால்களை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாம்.
சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள் (Passports) முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன. இத்தகவலை ஜெத்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
முறையான பரிகாரங்களை மேற்கொள்ள நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்தையும் மீளமையச் செய்ய 75 நாள்களாவது ஆகலாம் என்று அவர் கூறினார். நிறுவனம் சார்பாக சட்டத் தரணிகள் குழுவொன்று ஜெத்தாவில் முகாமிட்டு ஆகவேண்டிய முறைமைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகங்களை அணுகி புதிய பாஸ்போர்ட் பெற்று கொள்ளும்படி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரியால்களை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாம்.
Tuesday, July 12, 2011
துருக்கி தனது இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
துருக்கியில் மூன்றாவது தடவையாக பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப்அர்துகான் இஸ்ரேலுடன் சுமூக உறவை ஏற்படுத்துவதை நிராகரித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸாவுக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேல் மன்னிப்பு கோரவேண்டும், காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். இவைகள் இடம்பெற்றால் இஸ்ரேலுடன் சுமூக உறவு மீண்டும் ஏற்படுத்தப்படும் என்றும் இதில் காஸா மீதான முற்றுகையை இஸ்ரேல நீக்குவது முக்கிய நிபந்தனை என்றும் துருக்கி பிரதமர் அர்துகான் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் தொடர்பான துருக்கியின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவாக
காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியதில் 9 துருக்கிய மனித நேய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து துருக்கிய பாராளுமன்றம் இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது துருக்கி மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள கோரினர். துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 16 வகையான இராணுவ ஒப்ந்தங்கள் நடைமுறையில் இருந்தன . இந்த ஒப்பந்தங்களை உறைநிலையில் வைக்க வேண்டும் என்று அன்று துருக்கி தீர்மானித்தது.
இதை தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் இந்த தனது இராணுவ தாக்குதல் தொடர்பாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்றும். இஸ்ரேல் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொல்லப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காஸா மீதான முற்றுகையை நீக்கவேண்டும். என்று துருக்கி கோரியது.
ஆனால் இவற்றை இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசு புறகணித்து வந்தது . இதை தொடர்ந்து துருக்கிய பிரதமர் தலைமையில் கூடிய துருக்கி உயர் பாதுகாப்பு சபை இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராணுவ உறவுகள் , உடன்படிக்கைகள் என்பன வற்றை முழுமையாக துண்டிக்கும் முகமாக பல படித்தரங்களை கொண்ட ரோட் மெப் ஒன்றை தயாரித்தது .
இந்த ரோட் மெப் துருக்கிகும் இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள 16 வகையான இராணுவ ஒப்பந்தங்களையும் முழுமையாக துண்டிகும் – ‘தாங்கிகள் , யுத்த விமானங்கள் நவீனமாக்கள்’ என்ற 757 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஒபந்தம். $757 million plane and tank modernization project மற்றும் 1.5 பில்லியன் பெறுமதியான ஏவுகணை ஒபந்தம். missile project worth over $1.5 billion- என்பனவும் அடங்கும் முதல் கட்டத்தில் இஸ்ரேல் நடாத்திய கொலைகளை உடனடியாக சர்வதேச சுயாதீனமான விசாரணை நடத்த அனுமதித்து சர்வதேச விசாரணை அதிகாரிகள் இஸ்ரேல் வர அனுமதிக்க வேண்டும். என்று நிபந்தனையிட்டது.
இதை இஸ்ரேல் புறகணித்தாள் துருக்கி திருபிப்பியலைத்த தனது தூதுவரை மீண்டும் இஸ்ரலுக்கு அனுப்பாது. என்று அந்த ரோட் மெப் தொடங்கி இறுதியில் இஸ்ரேலுடன் அனைத்து இராணுவ உறவுகளையும் துண்டிக்க ஏதுவாக அமைந்திருந்தது .
கடந்த ஆண்டில் துருக்கிய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், லி-மொன்டே எனும் பிரான்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ப்ரீடம் புளோடில்லா மீதான இஸ்ரேலியத் தாக்குதலானது, பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் குற்றச்செயலை ஒத்திருக்கிறது. என்றும் இஸ்ரேல் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரல், இழப்பீடு வழங்குதல், சுயாதீனமான விசாரணையொன்றை ஒழுங்குசெய்தல், காஸா மீதான முற்றுகையை நீக்குதல் முதலான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முன்னெடுப்புக்களை இஸ்ரேல் மேற்கொள்ளாத வரையில் அதன் அடாவடிச் செயற்பாட்டை இலகுவாக மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. என்று அவர் தெரிவித்திருந்தார்.
தற்போது இஸ்ரேல் ஒரு விசாரணை ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த விசாரணையை பெரும்பாலானவர்கள் வெறும் கண்துடைப்பாகத்தான் பார்க்கின்றனர். என்பது குறிபிடத்தக்கது .
இதேவேளை துருக்கி பிரதமரின் இஸ்ரேல் தொடர்பான மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு தொடர்பாக தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ள இஸ்ரேல் யுத்த அமைச்சர். விரைவில் வெளிவரும் அறிக்கை காஸா மீதான முற்றுகை சட்டபூர்வமானது என்பதையும், கப்பல்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவானது என்பதையும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
Saturday, July 9, 2011
எகிப்தில் இன்று மிக பெரிய ஆர்பட்டத்திற்கு அழைப்பு
எகிப்தில் இன்று வெள்ளிகிழமை 10 இலட்சம் மக்களை கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு ‘march of a million people’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எகிப்து புரட்சி ஏற்பட்டு ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் புரட்சியின் சில இலக்குகள் மட்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு பிரதான அனைத்து அமைப்புகளும் ஆர்ப்பாட்ட அழைப்பை விடுத்துள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன், ஏப்ரல் 6 இயக்கம் , ஸலபிகள் அமைப்பு , ‘We Are All Khalid Said’ என்ற Facebook குரூப் , மற்றும் அரசியல் கட்சிகள் , சுவஸ் கால்வாய் தொழிலாளர்கள் அமைப்பு போன்ற பிரதான அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதால் இது பாரிய ஆர்பாட்டமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது விரிவாக
இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அங்கு ஏதும் அரசியல் கட்சிகள் சார்பான கோஷங்களை போடவோ சுலோகங்களை தாங்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.
இன்று ஜும்மாஹ்வின் பின்னர் எகிப்து தலைநகர் கெய்ரோவின் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற சிறிய சிறிய மக்கள் ஆர்பாட்டங்களை இராணுவ நிர்வாகம் கடுமையாக கையாண்டமையை கண்டித்தும், ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரின் கூட்டாளிகள் சரியான நீதி விசாரனைகளுக்கு உட்படுத்தப் படுவதில் ஏற்படும் தாமதம் குறித்தும்,மேலும் பல விடையங்கள் குறித்தும் இந்த ஆர்பாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Thursday, July 7, 2011
செங்கடலில் அகதிகள் படகு மூழ்கி செளதிக்கு சென்ற 197 பேர் பலி
அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை, பசி, பட்டியினியிலிருந்து தப்பி செளதியில் தஞ்சம் புக 200 பேர் நாட்டுப் படகில் சூடான் நாட்டின் அதிபா நகரிலிருந்து கிளம்பினர். இந்தப் படகு 4 மணி நேரம் பயணித்த நிலையில் அதில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியதில் 197 பேர் பலியாகிவிட்டனர். 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையே நடந்துவிட்டதாகவும், ஆனால், சூடான் அரசு இப்போது தான் அதை வெளியில் சொல்வதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரான ஏமனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நைஜீரியா, சாட், சோமாலியா, எரித்ரியாவைச் சேர்ந்த 247 பேரை ஏற்றிக் கொண்டு செளதிக்குச் செல்ல இருந்த ஒரு படகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை, பசி, பட்டியினியிலிருந்து தப்பி செளதியில் தஞ்சம் புக 200 பேர் நாட்டுப் படகில் சூடான் நாட்டின் அதிபா நகரிலிருந்து கிளம்பினர். இந்தப் படகு 4 மணி நேரம் பயணித்த நிலையில் அதில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியதில் 197 பேர் பலியாகிவிட்டனர். 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையே நடந்துவிட்டதாகவும், ஆனால், சூடான் அரசு இப்போது தான் அதை வெளியில் சொல்வதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரான ஏமனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நைஜீரியா, சாட், சோமாலியா, எரித்ரியாவைச் சேர்ந்த 247 பேரை ஏற்றிக் கொண்டு செளதிக்குச் செல்ல இருந்த ஒரு படகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Wednesday, July 6, 2011
துருக்கி-லிபிய போராளிகள் அமைப்பை அங்கீகரித்துள்ளது
OurUmmah: துருக்கி லிபியாவின் கடாபிக்கு எதிராக போராடிவரும் போராளிகள் அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சிலை அங்கீகரித்துள்ளதுடன் லிபிய தலைநகர் திரிபோலியில் அமைந்திருந்த துருக்கி தூதுவர் அலுவலகத்தை மூடியுள்ளது அதேவேளை துருக்கி அரபு -துருக்கி வங்கியில் உள்ள லிபியாவின் சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது .
துருக்கி லிபிய சர்வாதிகாரி காடாபியுடன் மிகவும் நெருக்கமான வர்த்தக உறைவை கொடிருந்த நாடு என்பதும் லிபியா மீதான மேற்குலகின் இராணுவ நடவடிக்கைகளை வரவேற்காத நாடாகவும் போச்சின் ஊடாக லிபியாவுக்கான தீர்வு காணப்படவேண்டும் என்றும் கோரி வந்தமை குறிபிடத்தக்கது இந்த நிலையில் சர்வதேச புகழ் பெற்ற அறிஞரான டாக்டர் யூசுப் அல் கர்ழாவி உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் துருக்கி தனது லிபியா தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி லிபிய மக்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக
துருக்கி லிபிய போராளிகளின் கூட்டு அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சில்-The National Transitional Council- என்ற அமைப்பு துருக்கிய மக்களின் உண்மையான மற்றும் சட்டரீதியான பிரதிநிதிஎன்று அந்த அமைப்பை அங்கீகரித்துள்ளதுடன் மொத்தமாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது துருக்கி லிபிய போராளிகளை அங்கீகரித்த 17 நாடு என்பது குறிபிடத்தக்கது .
லிபியாவின் கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அங்கு உரையாற்றும்போது கடாபி அமைதியான முறையில் வெளியேறவேண்டும் லிபிய மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படவேண்டிம் லிபிய இரண்டாக பிரிக்கப்படக் கூடது பேச்சுக்களின் ஊடாக அமைதியான முறையில் கடாபி அதிகாரத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் -Freedom and Justice Party (FJP)- கட்சியும் துருக்கி பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான-The Justice and Development Party (AKP)- கட்சிக்குமிடையில் மிகவும் நெருக்கமான உறவு வலுவடைந்து வருவதாக அரசியல் ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர் இதற்கிடையில் அமெரிக்கா எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் பேசபோவதாக அறிவித்துள்ளது.
Tuesday, July 5, 2011
UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு
இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY / கல்லிவல்லி) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம்.
மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Monday, July 4, 2011
எகிப்து இஹ்வான்களின் முதல் பெண்கள் மாநாடு
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் முதல் பெண்கள் மாநாடு இடம்பெற்றுள்ளது இங்கு உரையாற்றிய அதன்தலைவர் டாக்டர் முஹமத் படேய் – Dr. Mohamed Badei – கடந்த , ஜனவரி 25 ஆம் புரட்சியின் பெண்கள் பங்கு பற்றியமை தொடர்பில் பாராட்டி உரையாற்றியுள்ளார்
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் நடத்தியுள்ள முதல் பெண்கள் மாநாடு இது என்பது குறிபிடதக்கது அதில் பெரும் தொகையான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் முதல் பெண்கள் மாநாட்டின் துவக்க உரையாற்றிய டாக்டர் முஹமத் படேய் இஹ்வானுல் முஸ்லிமீன் எப்போதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமத்துவம் அடிப்படையாக உரிமைகள் முழுமையான அவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது என்று உரையாற்றியுள்ளார்.
பெண்கள் வேறுபட்ட சமூக பாத்திரங்களை கொண்டுள்ளபோதும் அதற்கு அமைவாக முழுமையான சமத்துவ உரிமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். பெண்களின் உரிமைகளை பலப்படுத்த வேண்டும் அதன் மூலம் அவர்கள் பொது துறையில் அதிக பொறுப்புகளை பெற முடியும் குறிப்பாக சமூகத்தின் அடிப்படை பெருமானங்களுடன் மோதாத வகையில் உரிமைகளை பலப்படுத்த வேண்டும். எகிப்தின் புரட்சியின் பின்னரான காலத்தில் இது மிகவும் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மகளிர் நடவடிக்கையாளர்கள் உட்பட எனைய பெண்கள் எகிப்து சமூக மற்றும் அரசியல் போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர் என்றும் நாட்டில் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பை ஸ்தாபிக்க பெண்கள் தொடராக செயலாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாம் பெண்களுக்கு நீதி கொண்டுவந்தது என்று குறிப்பிட்டு சிவில் அரசாங்கத்தை இஸ்தாபிக்க தொடர்ந்து பெண்கள் பங்களிப்புகளை செய்து வரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
Wednesday, June 15, 2011
பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்
ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக, 'அடர்ந்து வளர்ந்துள்ள பயிர்களினூடே பலஸ்தீனர்கள் ஊடுருவிச்சென்று பிரிவினைச் சுவரை அண்மிக்க முடியும் என்ற ஐயப்பாடு நிலவுவதாலேயே இப்பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டன' என இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு கல்கிலியா பிரதேசத்தின் அஸுன் கிராமத்தின் பல தூனம் பரப்புள்ள விவசாய நிலமும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் எரியூட்டி நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான மிகப்பெரும் நிலப்பரப்பு எரியூட்டப்பட்டும் புல்டோஸர்கள் ஓட்டப்பட்டுமாக தொடர்ச்சியாக நிர்மூலமாக்கப்பட்டு வருவதன் மூலம் பலஸ்தீன் விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த அழிப்பு நடவடிக்கையின் விளைவால் நட்டமடையும் விவசாயிகளுக்கோ நிலச் சொந்தக்காரர்களுக்கோ எத்தகைய நட்டஈடும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான தமது சொந்த மண்ணில் இருப்பிடங்களையும் நிலங்களையும் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு அகதிகளாகவும், வாழ்வாதாரத்தையே இழந்துவிட்ட வறியவர்களாகவும் வாழ நேர்ந்துள்ள அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச அமைப்புக்களும், உலக மனித உரிமைகள் அமைப்புக்களும் துரிதமாக முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்கள் விடுக்கின்ற இடையறாத கோரிக்கை, சர்வதேச அரங்கில் ஆங்காங்கே சில அதிர்வலைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை எனத் தெரிகின்றது.
Friday, June 10, 2011
இஸ்ரேலிய வதை முகாமில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் கைதிகள் !
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதை செய்துள்ளது என்று அஹ்ரார் என்ற சிறை கைதிகள் தொடர்பாக ஆராயும் அமைப்பு- The Ahrar prisoner studies center- தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் வதைமுகாமான ஹாசரோன் -HaSharon prison- வதை முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நான்கு பெண் கைதிகளுக்கே சோதனை என்ற பெயரில் இந்த வதை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த வதை அறையில் 10 இஸ்ரேலிய பெண் சிப்பாய்களும் , 5 ஆண் சிப்பாய்களும், குறித்த வதை அறையின் அதிகாரியும் மற்றும் புலனாய்வு பிரிவினரும் இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுகாக அந்த பெண்களின் பெயரை வெளியிடமுடியாது என்று அஹ்ரார் அமைப்பு தெரிவித்துள்ளது விரிவாக
அந்த பெண் கைதிகள் கையடக்க தொலைபேசி வைத்திருப்பதாக கூறி சோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த பெண் கைதிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நிர்வாணப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமின் காவலர்கள் இந்த நான்கு பெண்களையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி சோதனையிட்டுள்ளனர். இதன் போது வதை முகாம் காவலர்கள் நீதிக்கும் , மனித ஒழுக்கத்துக்கும் முரணாக செயல்பட்டுள்ளனர் என்று அஹ்ரார் அமைப்பின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த சோதனை தொடரில் அவர்களின் வதை அறையில் இருந்து தொழுகை உடையுடன் மட்டும் வெளியேற்றபட்டு அவர்களின் வதை அறை சுமார் சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது சோதனையிடப்பட்டுள்ளது. அந்த பெண் கைதிகளின் உடமைகள் தூக்கி வீசப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் படையால் எந்தவொரு கையடக்க தொலைபேசியையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
சோதனை இடம்பெற்ற ஆறு மணிநேரம் அந்த பெண் கைதிகள் நால்வரும் உண்ணவோ, குடிக்கவோ தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்று அஹ்ரார் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tuesday, June 7, 2011
13 வயது பலஸ்தீன் சிறுமி கைது
நெகெவ் பாலைவனச் சிறைச்சாலையின் ஆக்கிரமிப்புக் காவற்படையினர் இன்று 13 வயதான பலஸ்தீன் சிறுமியைக் கைதுசெய்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் ஸல்ஃபித் பிரதேசத்திலிருந்து கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னுடைய தந்தையைச் சந்திப்பதற்காக வந்திருந்த போதே சிறுமி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காஸாவில் உள்ள பலஸ்தீன் கைதிகள் விவகார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸமாஹ் முஸ்லிம் எனும் 13 வயதுடைய பலஸ்தீன் சிறுமி தன் தந்தைக்குக் கொடுக்கவென பல்வேறு பொருட்களை ரகசியமாக எடுத்துச்செல்ல முயன்றார் எனப் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு ஆக்கிரமிப்புக் காவலர்களால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புச் சிறைக் காவலர்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு போலியானது என்றும், சிறுமி எந்தப் பொருளையும் தன்னுடன் கொண்டு செல்லவில்லை என்றும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பலஸ்தீன் சிறைக் கைதிகளைப் பார்வையிட அவர்களின் குடும்பத்தவர்கள் செல்வதைத் தடுத்து நிறுத்துமுகமாகவே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் இத்தகைய பொய்வழக்குகளைச் சோடிக்க முனைவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கதறும் தாயின் முன்னிலையில் பயத்தால் கத்தியழும் 13 வயது அப்பாவிச் சிறுமியை விசாரணை செய்யும் போர்வையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் காவற்துறையினர் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பீர் ஷபா இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றம் சிறுமியை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பலஸ்தீன் கைதிகள் விவகார அமைச்சகம் விசனம் தெரிவித்துள்ளது.
Saturday, June 4, 2011
துனிசியா கடலில் லிபியா அகதிகள் கப்பல் மூழ்கியது; 150 பேர் பலி
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. எனவே, அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதுபோன்று சுமார் 900 பேர் இத்தாலிக்கு சொந்தமான லாம்பேடூசா தீவில் தஞ்சம் அடைய ஒரு கப்பலில் அதிகமாக புறப்பட்டு சென்றனர். அவர்களது கப்பல் துனிசியாவின் கடல் எல்லையில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது.
அதில் பயணம் செய்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்ததும் துனிசியா கடற்பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 600 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 150 பேர் மூழ்கி பலியானார்கள். அவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டன.
மேலும் 150 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்று தெரிய வில்லை. கப்பல் மூழ்கிய தற்கு மோசமான வானிலையே காரணம் என கூறப்பட்டுள்ளது.
Thursday, June 2, 2011
ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா
ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.
மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் செளதியின் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க அணு மின் நிலையங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் 16 அணு உலைகளைக் கட்ட செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.
மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணு உலைகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக சவூதி அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி மாலிபரி தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் 2 அணு உலைகள் கட்டி முடிக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அணு உலைகளைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் 16 அணு உலைகளைக் கட்டி முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு அணு உலையும் இன்றைய மதிப்பில் ரூ. 35,000 கோடி செலவில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை செளதியின் மின் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யுமாம். மேலும் 80 சதவீத மின்சாரம் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமியால் புகுஷிமா உள்ளிட்ட அணு மின் நிலையங்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவு செய்துள்ள நிலையில் செளதி புதிதாக அதற்குள் காலடி வைக்கிறது.
அண்டை நாடான ஐக்கிய அரபு நாடுகள் ரூ. 1 லட்சம் கோடி செலவில் 4 அணு உலைகளைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளை தென் கொரியா கட்டி வருகிறது.
செளதியின் அணு உலைகளை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கட்டித் தரலாம் என்று தெரிகிறது.
பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.
மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் செளதியின் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க அணு மின் நிலையங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் 16 அணு உலைகளைக் கட்ட செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.
மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணு உலைகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக சவூதி அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி மாலிபரி தெரிவித்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் 2 அணு உலைகள் கட்டி முடிக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அணு உலைகளைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் 16 அணு உலைகளைக் கட்டி முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு அணு உலையும் இன்றைய மதிப்பில் ரூ. 35,000 கோடி செலவில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை செளதியின் மின் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யுமாம். மேலும் 80 சதவீத மின்சாரம் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமியால் புகுஷிமா உள்ளிட்ட அணு மின் நிலையங்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவு செய்துள்ள நிலையில் செளதி புதிதாக அதற்குள் காலடி வைக்கிறது.
அண்டை நாடான ஐக்கிய அரபு நாடுகள் ரூ. 1 லட்சம் கோடி செலவில் 4 அணு உலைகளைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளை தென் கொரியா கட்டி வருகிறது.
செளதியின் அணு உலைகளை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கட்டித் தரலாம் என்று தெரிகிறது.
சவூதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!
ரியாத்: சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
source:www.mohamedbunder.tk
Monday, May 16, 2011
அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!
சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள்
மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும்
தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின்
யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான
இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான்
ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு
நிலத்தினடியில் இருக்கிறது.
மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும்
தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின்
யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான
இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான்
ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு
நிலத்தினடியில் இருக்கிறது.
கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான்,
வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங்
மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர
ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின்
எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான்
வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.
ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை
குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின்
அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும்.
ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக்
கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த
கதையாகி விடும்.
ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா
கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான
ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும்
எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத்
தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில்
இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும்
ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும்,
ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது
என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.
இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு
ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது
மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது.
அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல்
மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின்
போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும்
கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில்
வைத்திருப்பதும் முக்கியமானது.
ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான்
பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும்
அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப்
போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது
அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான்
தாலிபானும் அல்-காய்தாவும்.
நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து
விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட
ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான
சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும்
ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு
தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர்.
இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம்
ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா
பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை
எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம்
சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு
தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத
எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச
'அபாயத்தைக்' களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும்,
அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின்
இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.
அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும்
இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா
முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித்
தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத
ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை
ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது
அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற
பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க
விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று
ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த
இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய
ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை
உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க
அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.
என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப் பாடதிட்டமான
இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக
பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க
எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக
சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு
வேறானது.
பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள்
விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது
மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில்
மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல.
அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை
நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.
அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது
அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை
மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால்
ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க
அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள்
மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை
ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.
வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின்
போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை.
முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை
மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய்
தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.
தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின்
முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின்
அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின்
இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின்
மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய
இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.
இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய
ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம்
நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு
ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக்
கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை
கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.
உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா
நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க
அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே நடக்க அனுமதித்தது
என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ* இந்த தாக்குதலை வைத்து
அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை
முக்கியமானது.*
ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த
காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது
விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத்
துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய
சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது
நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது அமெரிக்கா. இப்படித்தான்
விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.
தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக்
மேலும் குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான
அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் –
ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான்
போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை
அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான்
போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக்
கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக்
கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்
என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ
முகம்.
ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில்
பாய்ந்த போதும் சரி – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி;
அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக
இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.
இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக
அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான
'தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை' என்பதே நமது அக்கறைக்கும்
கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா
பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை
உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது
எதார்த்தம் சாமானிய அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.
இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும்
அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான
பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது.
அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும்
மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம்
மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும்
நிகழ்ந்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே
போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல்
வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது
சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப்
பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை
ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான
அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச்
சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள்
இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது 'மனிதாபிமான அடிப்படையிலான'
தலையீடு.
சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப
முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை.
இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத்
தேவையில்லை. இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா
பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும்
இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது
கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே
பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.
கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக
இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக
ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் 'நல்லெண்ண அடிப்படையிலான'
போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா
பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது –
இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.
Monday, May 9, 2011
பாபர் மசூதி வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது
டெல்லி: பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அமைந்து இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அமைந்து இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.
இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகின்றன.
நிர்மோகி அகாரா, அகில் பாரத ஹிந்து மகாசபா, ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை இந்த அப்பீல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல பகவான் ராம் விரஜமான் சார்பிலும் மனு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.
Wednesday, February 2, 2011
எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாகட்டும்!!!
எகிப்து ஒரு மக்கள் புரட்சியின் அருகாமையில் உள்ளது. 30 ஆண்டுகளாக தொடரும்
அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள்
அணிதிரண்டுள்ளனர். தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும்
முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்
துவங்கிவிட்டனர்.
அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள்
அணிதிரண்டுள்ளனர். தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும்
முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்
துவங்கிவிட்டனர்.
ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள்
வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. ஆளுங்கட்சியின் தலைமையகம்
தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து
செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
பல செப்படி வித்தைகளும் பயனற்று போனதால் நகைச்சுவையான நடவடிக்கையொன்றை
மேற்கொண்டார் முபாரக். அது வேறொன்றுமில்லை, ரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்
தலைவரும், இஸ்ரேலுடனான கடத்தல் தொழிலுக்கு இடைத் தரகராகவும் செயல்பட்டுவந்த
வயது முதிர்ந்த உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்ததுதான்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைகேடுகள் நிறைந்த தேர்தலை நடத்தி மீண்டும்
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அதிபராக எழுந்தருளினார் முபாரக். அவருடைய
'மக்கள் ஆதரவை!' உலகம் தற்பொழுது கண்டுக்கொண்டிருக்கிறது.
கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது.
1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை
அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.
1989-இல் ருமேனிய புரட்சியின் ஒரு பகுதியாக ரெவலூஷன் சதுக்கத்தில் திரண்ட
மக்கள் கூட்டத்திற்கு உதாரணமாக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் காட்டப்படுகிறது.
வரலாறு மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரத்தை பழிவாங்க துவங்கிவிட்டது. 1981 ஆம்
ஆண்டு எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஹுஸ்னி செய்யத்
முபாரக் அதி விரைவாக மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்றுவிட்டார். இதர
சர்வாதிகாரிகளைப் போலவே முபாரக், மக்களின் விருப்பங்களை அடக்கி ஒடுக்கி,
தேர்தல்களில் முறைகேடுகளை நடத்தி, ஊழலை வழக்கமாக்கி எகிப்தை சுரண்டி சின்னா
பின்னப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஏகாதிபாத்திய நாடுகளுடனும், சர்வாதிகார அரசுகளுடனும் இணைந்துகொண்டு பொருளாதார
நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டார்.
ஈரானின் ஷா, ருமேனியாவின் செஷஸ்க்யுவாவைப்போல் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சியில்
தொடரலாம் என கருதிய முபாரக்கின் ஆட்சிக்கு மக்கள் புரட்சியின் வடிவில் உருவான
ஆபத்து அவரை ஆதரித்த அந்நிய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு மத்தியில் அரபு நாடுகளிலேயே
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற பதவியை ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திய
அரசு தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 130 கோடி டாலரை அமெரிக்கா
எகிப்திற்கு உதவித் தொகையாக வழங்கிவருகிறது.
இஸ்ரேலுக்கு அடுத்து அமெரிக்கா வழங்கும் அதிக உதவித் தொகையைப் பெறுவது
எகிப்தாகும். ஆனால், இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு உண்மையாகும்.
அடக்குமுறையையும், மக்கள் விரோதத்தையும் வழக்கமாகக் கொண்ட முபாரக் சில
தினங்களுக்கு முன்பாக எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் உருவாகும் வரை
அமெரிக்காவின் உற்றத் தோழனாகவே இருந்தார். கடுமையான மனித உரிமை மீறல்கள், கொடிய
சித்திரவதைகள், அடக்குமுறைகள் இவையெல்லாம் நிகழும்பொழுது முபாரக்கை
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தே வந்தனர்.
எகிப்தில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டத்தின் முன்னணியிலிருப்பது
இளைஞர்களாவர். எகிப்தின் எதிர்காலம் அவர்களின் கைகளில் செல்லும் வேளையில் அங்கு
மக்கள் விரும்பும் அரசியல் வெற்றியை சந்திக்கும்.
முபாரக்கினால் தடைச் செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் இந்த மக்கள்
திரள் போராட்டத்திற்கு பின்னணியிலிருந்து ஆதரவை தெரிவித்து வருகிறது என
செய்திகள் கூறுகின்றன.
முபாரக்கினால் சிறையிலடைக்கப்பட்டுள்ள இஃவான்களின் தலைவர்களும்,
உறுப்பினர்களும் இந்த மக்கள் திரள் போராட்டத்தினால் மகிழ்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர். அல்பராதியின் தலைமையில் புதிய அரசு உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால், அல்பராதி அமெரிக்க ஆதரவாளராக மாறிவிடுவாரோ என்றதொரு சந்தேகமும்
எழுந்துள்ளது.
எகிப்து நாட்டு மக்கள் சர்வாதிகாரத்திற்கெதிராக தங்களை அர்ப்பணித்து நடத்தும்
போராட்டம் வீணாகிவிடாமல் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். இனி முபாரக்கிற்கு
எகிப்தில் இடமிருக்காது. கேவலமடைந்த குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்டு
முபாரக் களத்தை விட்டு வெளியேறும் வேளையில் உலகில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்
கொண்டு ஆட்டம்போடும் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டும்.
ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான
நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். எந்த தேசம்
ஊழல்களிலும், முறைகேடுகளிலும் திளைக்கின்றதோ அந்த தேசம் மனித உரிமைகளையும்,
மக்களின் குடியுரிமைகளையும் அடக்கி ஒடுக்கி பின்னர் குற்றவாளி தேசமாக
பரிணமிக்கும்.
இன்று உலகின் பல ஜனநாயக முகமூடியை அணிந்துள்ள நாடுகளின் நிலைமையும் இதுதான்.
மக்களின் விருப்பங்களை விட ஏகாதிபத்திய சக்திகளுக்கும், கார்ப்பரேட்
சக்திகளுக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தியவர் முபாரக்.
ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்.
விசாரணையில்லாமலேயே பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் பலர்.
நிரபராதிகளான மக்களை விசாரணை இல்லாமலேயே பல ஆண்டுகள் சிறையிலடைத்தவர்.
கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துவிட அவர்
நினைத்தார்.இவையெல்லாம் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளில் மட்டுமல்ல,
ஜனநாயக முகமூடியை அணிந்துக்கொண்டு ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் நாம் காண
இயலும்.
இது சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எகிப்து மக்கள் புரட்சியை
கவனத்தில்கொண்டு இந்நாடுகள் தங்களின் செயல்பாடுகளை மீளாய்வுச் செய்யவேண்டும்.
இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்கூட மனித உரிமை மீறல்களும்,
அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள்,
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும்
நடந்துவருகிறதா? என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகவேண்டும்.
உதாரணமாக கூறவேண்டுமெனில், சமீபத்தில் ட்ரான்ஸ்ப்ரன்சி இண்டர்நேசனல் வெளியிட்ட
பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள்.
எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும்.இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும்.
மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும்
கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.
சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு ஆட்சியாளர்கள்
தயாராகுவார்களா?
Subscribe to:
Posts (Atom)



