Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, December 14, 2015

போராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்


போராட்டத்தின் இலக்கணம் ஹமாஸ்


ஃபலஸ்தீன போராட்ட இயக்கமான ஹமாஸ் தனது 28வது தொடக்க விழாவினை கொண்டாடியது. 1988ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று ஹமாஸ் இயக்கம் தொடங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலாம் இன்திஃபாதா எனப்படும் மக்கள் எழுச்சியின் பின்புலத்தில் அறிவிக்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்றுவரை ஃபலஸ்தீன மக்களின் நம்பிக்கையாக திகழந்து வருகிறது. 1988ல் தொடங்கப்பட்டாலும் அதன் தலைவர்கள் அதற்கு முன்னரே ஃபலஸ்தீன மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தனர்.

Tuesday, October 27, 2015

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, October 23, 2013

புரூனேயில் இனி ஷரீஆ சட்டம்!

பந்தர் செரி பகவன்: தென்கிழக்கு ஆசியாவில் தீவு தேசமான புரூனேயில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமல் படுத்தப்படும் என்று ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கரம் வெட்டப்படும், விபச்சாரம் செய்தவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று சுல்தான் புல்கியா தெரிவித்துள்ளார்.

ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்த சுல்தான் புல்கியா, புரூனேயில் இனி முதல் போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் கருக்கொலை தடை செய்யப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார்.
ஆறு மாதத்திற்குள் ஷரீஆ சட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள சுல்தான், புரூனேயின் மகத்தான வரலாற்றின் ஒரு பகுதியாக ஷரீஆவை அமல்படுத்துவதாக தெரிவித்தார்.
புருனேயில் பிரிட்டீஷ் மாதிரி நீதிமன்றம் உள்ளது. இது குடும்ப தகராறு மற்றும் திருமணம் போன்ற வழக்குகளில் மட்டுமே தலையிடும்.

Tuesday, October 15, 2013

பாலஸ்தீன தலைவர் அணிந்திருந்த உடையில் விஷ தடயங்கள்: சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்கள் அறிக்கை

பாரிஸ்: பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், அணிந்திருந்த உடையில், 'பொலோனியம்' என்ற, விஷத்தின் தடயங்கள் இருந்ததை, சுவிட்சர்லாந்து நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம், பாரீசுக்கு அழைத்து செல்லப்பட்டார். 2004ம் ஆண்டு, நவ., 11ம் தேதி பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். அராபத் மரணம் குறித்து, பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இதற்கிடையே, அராபத் இறக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்கள், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் வெளியிட்டனர். அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான 'பொலொனியம்' இருந்து உள்ளது. ரஷ்ய உளவாளியான, அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில், தேனீர் கோப்பையில் தடவப்பட்ட 'பொலொனியம்' விஷத்தால் கொல்லப்பட்டார். இதே முறையில் தான், அராபத் உடலிலும் 'பொலோனியம்' இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய, பாலஸ்தீன நிர்வாகமும், அராபத்தின் மனைவி சுகாவும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சுவிட்சர்லாந்து நாட்டின், லூசானே பல்கலைக்கழக கதிர்வீச்சு துறை நிபுணர்கள், கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், ரமலாவுக்கு சென்று, அராபத்தின் உடலை வெளியே எடுத்து பரிசோதித்தனர். அராபத் சமாதியில் சில எலும்புகளையும், துணி இழைகளையும் சேகரித்தனர். இந்த ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.


இந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: அராபத், கடைசி நேரத்தில் அணிந்திருந்த உடைகளை, அவரது மனைவி சுகா, ஆய்வுக்காக அளித்திருந்தார். 'புளுடோனியம்-210' இந்த உடை மற்றும் அவரது உடல் ஆகியவற்றிலிருந்து, 75 சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டன. அவரது உள்ளாடை, டூத் பிரஷ், தொப்பி, உள்ளிட்டவைகளில் மேற்கொண்ட ஆய்வில், 'புளுடோனியம்-210' தடயங்கள் இருந்தன. இதன் மூலம், அவருக்கு இந்த விஷம் செலுத்தப்பட்டிருக்கலாம், என சந்தேகம் உள்ளது. இவ்வாறு இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, October 5, 2013

ஏமாளிகள் பட்டியலில் இந்தியா!

Oct 03/2013: இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஒரு ப்ளாஸ்டிக் கைப்பிடி, ஒரு ஏரியல், ஒரு ஆன்டெனாவை கொண்டிருக்கும் இந்த சாதாரண கருவியை தயாரிக்க 1.83 பவுண்டுகள் (183 ரூபாய்) செலவாகும். வெறும் 183 ரூபாய்க்கு உற்பத்தி செய்த இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் 15,000 பவுண்டுகள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) விலைக்கு விற்றிருக்கிறது இந்த நிறுவனம். இந்த கருவியை பல்வேறு நாடுகள் தங்கள் பாதுகாப்புத் துறைக்கு வாங்கிக் குவித்துள்ளன. அந்த ஏமாளிகள் பட்டியலில் இந்தியாவும் உண்டு.



கோல்ஃப் விளையாடும் போது காணாமல் போகும் பந்துகளை கண்டுபிடிக்க உதவும் கருவியைக் காட்டி இதை வைத்து மறைத்து வைத்துள்ள வெடிகுண்டுகள் மற்றும் போதை பொருட்களை கண்டறியலாம் என்று சந்தைப் படுத்துகிறார். இங்கிலாந்து அரசின் முக்கிய துறைகளான ராணுவ அமைச்சகம், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, என மூன்று துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு குளோபல் டெக்னிகல் நிறுவனத்தை ஊக்குவித்துள்ளன.


இந்த வழக்கு விசாரணையின் போது இங்கிலாந்து அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை குளோபல் டெக்னிகல் நிறுவனத்திற்கு ஆதரவளித்ததை ஒப்புக்கொண்டுள்ளது. பெரும் சர்ச்சையையும் இங்கிலாந்து நாட்டிற்கு அவமானத்தையும் கொடுத்திருக்கும் இந்த செயல் நாடாளுமன்றத்திலும் கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் லாபமீட்ட மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. மறுபுறம் இந்த போலிக் கருவிகளை வாங்கிய இந்தியா மாதிரியான நாடுகளின் நிலை வெட்கக் கேடானது 

Monday, February 6, 2012

ஃபேஸ்புக் @ 8


ஹூஸ்டன்:இணையதள நட்புறவு தளங்களில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள பிரபல சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. இந்த எட்டு வருட காலக்கட்டத்தில் விவாதங்கள், புரட்சிகள், உண்மையை வெளிக்கொணரல், நட்புறவின் மறக்கமுடியாத நிமிடங்கள் போன்றவற்றை இந்த நட்புறவு தளம் மூலமாக உலகம் பகிர்ந்துகொண்டது.
‘பலரும், பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் பொது இடம்’ என்ற கொள்கையுடன் இந்த இணையதளத்தை துவக்கிய மார்க் ஸக்கர்பர்க் என்ற ஃபேஸ்புக்கின் சிற்பி கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார் இவ்வளவு தூரம் ஃபேஸ்புக் பிரபலமாகும் என.

2004 பிப்ரவரி நான்காம் தேதி ஃபேஸ்புக் செயல்பட துவங்கியது. அன்று முதல் வயது வித்தியாசம் பாராமல் உலக நாடுகளைச் சார்ந்த ஏராளமானோர் இதில் உறுப்பினர்களாக மாறினர். தற்போது 84.5 கோடி பேர் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களாக உள்ளனர்.
கருத்து சுதந்திரம் தடைச் செய்யப்பட்ட நாடுகளில் ஃபேஸ்புக்கின் வருகை மிகுந்த பயனாக மாறியது. அரபு வசந்தம் தீவிரமடைய ஃபேஸ்புக்கும் முக்கிய பங்கினை வகித்தது.
ஹார்வர்ட் பல்கலை கழக மாணவர்களான மார்க் ஸக்கர்பர்க், எட்வர்டோ ஸவெரின், டஸ்டின் மோஸ்கோவிட்ஸ், கிறிஸ் ஹியூக் ஆகியோர் ஃபேஸ்புக்கின் ஸ்தாபகர்கள் ஆவர். மார்க் ஸக்கர்பர்க் ஃபேஸ்புக்கின் சீஃப் எக்ஸ்க்யூடிவ் ஆபீஸர்(சி.இ.ஒ).
ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் ஃபேஸ்புக் பிறந்தாலும், இதர பல்கலை கழகங்களுக்கும் இது பரவியது. துவக்கத்தில் த ஃபேஸ்புக் டாட் காம் என பெயரிடப்பட்டது. 2008 பிப்ரவரி 4-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரபலமான ஃபேஸ்புக்காக உருவெடுத்தது. காம்பிட் டாட் காம் 2009-ஆம் ஆண்டு நடத்திய சர்வேயில் உலகம் முழுவதும் அதிகமாக உபயோகிக்கும் சோசியல் நெட்வர்கிங் இணையதளம் ஃபேஸ்புக் ஆகும்.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக், இந்தியாவில் 132 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி அமெரிக்க பங்கு சந்தையில் நுழையும் திட்டம் குறித்து மார்க் ஸக்கர்பர்க் அறிவிப்பை வெளியிட்டார்.

Saturday, September 24, 2011

முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்

சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,

20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.

இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.


அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.

ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது. இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போலீஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

மேற்கத்திய நாடுகளை சாடிய ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் : அமெரிக்கா வெளிநடப்பு

ஐ.நா பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசிய ஈரான் அதிபர் முகமது அஹமதி நிஜாத் மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடினார்.
அந்நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதைக் குறை கூறி அவர் அவ்வாறு சாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் பொதுச் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஹிட்லர் செய்த கொடுமைகளை காரணமாக வைத்துக் கொண்டு இஸ்ரேலுக்கு மேற்கு நாடுகள் அசைக்க முடியாத ஆதரவு தந்து வருகின்றன. அதே நேரத்தில் அவை பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்குத் துணை போகின்றன என்று முகமது அஹமதி நிஜாத் கூறினார்.
தன்னுடைய உரையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதல் சந்தேகத்திற்கிடமானது என்றும் இச்சம்பவத்துக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட ஒசாமா பின்லேடனை நீதியின் முன் நிறுத்தாமல் அவரைக் கொன்று கடலில் தூக்கி எறிந்தது ஏன் என்றும் முகமது அஹமதி நிஜாத் கேள்வி எழுப்பினார்.

தங்கள் ஆதாயம், ஏகாதிபத்தியம் ஆகிய இலக்குகளை நிலைநாட்ட மேற்கு நாடுகள் போலித்தனமாகவும் ஏமாற்றுவித்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத் தலையீடுகள் மூலம் பல்வேறு நாடுகளின் அடிப்படைக் கட்டுமானத்தை சீர்குலைப்பதுடன் அந்நாடுகளை பலவீனப்படுத்துகின்றன.
தங்களையே சார்ந்திருக்க வைப்பதன் மூலம் அந்நாடுகளின் வளங்களை மேற்கு நாடுகள் கொள்ளையடித்து வருகின்றன என நிஜாத் கண்டித்தார்.
நிஜாத் உரையைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்க பிரதிநிதி பாதியிலேயே எழுந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனின் 27 நாட்டுப் பிரதிநிதிகளும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
அவரது உரை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பிரதிநிதி மார்க் கோர்ன்பிளெப் தன்னுடைய மக்கள் பற்றிப் பேசுவதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை நிஜாத் கோட்டை விட்டு விட்டார். இழிவான சதிக் கோட்பாடுகளை ஐ.நா பொதுச் சபையில் அவர் அரங்கேற்றியிருக்கிறார் என்று கூறினார்.

Saturday, September 10, 2011

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!


தெஹ்ரான்:  ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு  பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.
கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.

Friday, July 15, 2011

சோமாலியா தொடரும் வறட்சி தொடரும் சோகம்!

 உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் என ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கொமிஷன் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர். 

இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா. விற்கான அகதிகள் உயர் கொமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது, கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார். 

முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர். 

இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது என்று கட்டர்ரஸ் தெரிவித்தார். 

ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.

Tuesday, July 12, 2011

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை பதிவு செய்வது ஒத்திவைப்பு

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விரல் ரேகைகளைப் பதிவு செய்யும் திட்டத்தை அந்நாட்டு அரசு காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
மலேசியாவில் ஏராளமான இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கணக்கெடுத்து விரல் ரேகைகளைப் பதிவு செய்து வைக்க மலேசிய அரசு திட்டமிட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்த இப்பணியை ஒத்தி வைப்பதாக மலேசிய அரசு அறிவித்தது.




இத்தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஸ்ஹமூதின் ஹுசைன், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம், இதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. எனினும் முதலில் உரிய அனுமதியுடன் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து கணக்கெடுத்து, அவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

அடுத்த கட்டமாக சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ளவர்களின் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றார் அவர். மலேசியாவில் கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள், தோட்டப்பணியில் ஏராளமான வெளிநாட்டவர்கள் உள்ளனர். முக்கியமாக இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு தங்கியுள்ளனர். இப்போதும் ஆண்டுதோறும் மலேசியாவுக்கு அதிகமானோர் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்களின் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் இங்கேயே தங்கி விடுகின்றனர். அவ்வாறு தங்குபவர்களை மலேசிய அரசு கண்டறிந்து அவர்களை சொந்த நாட்டு அனுப்பி வைக்கிறது. அவர்களுக்கு சிறைத் தண்டனை போன்றவை வழங்கப்படுவதில்லை.

Saturday, July 9, 2011

எகிப்தில் இன்று மிக பெரிய ஆர்பட்டத்திற்கு அழைப்பு

 எகிப்தில் இன்று வெள்ளிகிழமை  10 இலட்சம் மக்களை கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு ‘march of a million people’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எகிப்து புரட்சி ஏற்பட்டு ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையில் புரட்சியின் சில இலக்குகள் மட்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு பிரதான அனைத்து அமைப்புகளும் ஆர்ப்பாட்ட அழைப்பை விடுத்துள்ளது.  இஹ்வானுல் முஸ்லிமீன், ஏப்ரல் 6 இயக்கம் , ஸலபிகள் அமைப்பு , ‘We Are All Khalid Said’ என்ற Facebook குரூப் , மற்றும் அரசியல் கட்சிகள் , சுவஸ் கால்வாய் தொழிலாளர்கள் அமைப்பு போன்ற பிரதான அமைப்புகள் இதற்கான அழைப்பை விடுத்துள்ளதால் இது பாரிய ஆர்பாட்டமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது விரிவாக

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அங்கு ஏதும் அரசியல் கட்சிகள் சார்பான கோஷங்களை போடவோ சுலோகங்களை தாங்கவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.
இன்று ஜும்மாஹ்வின் பின்னர் எகிப்து தலைநகர் கெய்ரோவின் தஹ்ரீர் -விடுதலை- சதுக்கத்தில் மக்கள் ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற சிறிய சிறிய மக்கள் ஆர்பாட்டங்களை இராணுவ நிர்வாகம் கடுமையாக கையாண்டமையை கண்டித்தும், ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரின் கூட்டாளிகள் சரியான நீதி விசாரனைகளுக்கு உட்படுத்தப் படுவதில் ஏற்படும் தாமதம் குறித்தும்,மேலும் பல விடையங்கள் குறித்தும் இந்த ஆர்பாட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாக இன்று உதயமாகிறது தெற்கு சூடான்!!!

,ஜூபா : ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது. 



வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில், சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது.



கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.  புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். தெற்கு சூடான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி அந்நாட்டிற்கு நேற்று புறப்பட்டுச் சென்றார்.

சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. 

அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.  உலகில், 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின், முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

Thursday, July 7, 2011

செங்கடலில் அகதிகள் படகு மூழ்கி செளதிக்கு சென்ற 197 பேர் பலி

அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை, பசி, பட்டியினியிலிருந்து தப்பி செளதியில் தஞ்சம் புக 200 பேர் நாட்டுப் படகில் சூடான் நாட்டின் அதிபா நகரிலிருந்து கிளம்பினர். இந்தப் படகு 4 மணி நேரம் பயணித்த நிலையில் அதில் தீப்பிடித்துக் கொண்டது.


இதையடுத்து அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியதில் 197 பேர் பலியாகிவிட்டனர். 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையே நடந்துவிட்டதாகவும், ஆனால், சூடான் அரசு இப்போது தான் அதை வெளியில் சொல்வதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரான ஏமனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நைஜீரியா, சாட், சோமாலியா, எரித்ரியாவைச் சேர்ந்த 247 பேரை ஏற்றிக் கொண்டு செளதிக்குச் செல்ல இருந்த ஒரு படகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.




மெக்சிகோவில் சிறையில் இருந்த கணவரை சூட்கேஸில் வைத்து கடத்திய பெண் கைது

செதுமால்: மெக்சிகோவில் சிறையில் இருக்கும் கணவரைப் பார்க்கச் சென்ற பெண் அவரை சூட்கேஸில் வைத்து வெளியே கொண்டு வர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் ஜுவான் ராமிரெஸ் டிஜேரினா. அவரது மனைவி மரியா டெல்மார் அர்ஜோனா (19). சட்விரோதமாக ஆயுதம் கடத்திய வழக்கி்ல் ராமிரெஸுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதையடுத்து அவர் கரீபியன் மாகாணத்தில் உள்ள செதுமால் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்து வருகிறார்.


இந்நிலையில் கணவரைப் பார்ப்பதற்காக மரியா செதுமால் சிறைக்கு சென்றார். திரும்பிச் செல்கையி்ல ஒரு பெரிய சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றார். அவர் ஒரு வித பதற்றத்துடன் காணப்பட்டார். இதைப் பார்த்த சிறைக் காவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

சூட்கேஸில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு மரியா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். உடனே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் சூட்கேஸுக்குள் ராமிரெஸ் தனது கை, கால்களை மடக்கி லாவகமாக படுத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் சிறைக் கைதியை கடத்திச் செல்ல முயன்ற குற்றத்திற்காக மரியாவை கைது செய்தனர்.


Wednesday, June 29, 2011

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு


அம்ஸ்டர்டம் : நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பர்தா குறித்த சட்டத்திருத்தம் தேவை: ஆஸ்திரேலியப் போலீஸôர் கருத்து


மெல்போர்ன், ஜூன் 28: பர்தா அணிவது குறித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஆஸ்திரேலியப் போலீஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் துணைக் கமிஷனர் கார்ல் ஓ கல்லகன், பர்தா, ஹெல்மெட் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளை உபயோகிப்பது குறித்தும் அவற்றை அணிபவர்களை சோதனை செய்வது குறித்தும் உரிய சட்டத்திருத்தம் தேவை என்று கருத்து கூறியுள்ளார்.

இப்போதுள்ள சட்டத்தின்படி முகத்தை மறைத்துள்ள பர்தா போன்ற உடைகளை நீக்கச் சொல்லி போலீஸôரால் சோதனை செய்ய முடியாததால், ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்தான் வாகனத்தை ஓட்டுகிறார் என்பதை உறுதி செய்யமுடியாது. ஆகவே இது குறித்து வாகனச்சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர காவல்துறை அமைச்சர் ராப் ஜான்சனிடம் பேசவுள்ளதாக கல்லகன் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் எந்த வகையான முக மறைப்புகளையும் நீக்கி சோதனை செய்ய வலியுறுத்துவேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Thursday, June 16, 2011

ஆளில்லா விமானம் மூலம் ஏமனை தாக்க அமெரிக்கா திட்டம்!


வாஷிங்டன்: ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல் கொய்தா விடமிருந்து  மிரட்டல் வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது


இன்னும் அல் கொய்தாவினர் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா கூறுகிறது இந்நிலையில் அல்கொய்தாவினரை அழிக்க அமெரிக்காவின் உளவுத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள வஜிரிஸ்தானில் பதுங்கியுள்ள அல் கொய்தாவினரை அமெரிக்கா தனது ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. அதே போன்று ஏமனிலும் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் தாக்க ரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, June 15, 2011

அமெரிக்க நாடாளுமன்ற இணைய தளத்திற்குள் ஊடுருவிய "ஹேக்கர்ஸ்'

வாஷிங்டன், ஜூன் 14: அமெரிக்க நாடாளுமன்ற இணைதளத்தை ஊடுருவி அதிலுள்ள தகவல்களை ஒரு கும்பல் திருடியுள்ளது.

கணினி மற்றும் இணையதளத்தில் முக்கிய தகவல்களை, வைரûஸ பரப்பி அழிப்பது, அவற்றை திருடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரிய தகவல்கள் இல்லாமல் அத்துறைக்கு பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 மிகவும் பாதுகாப்பான முறையில் அமெரிக்காவுக்கு பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவ ரகசியங்கள், தூதர்களின் கருத்துகள் போன்றவற்றை ஹேக் செய்து ஸ்விஸ் பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ஜே விக்கிலீஸ் இணையதளத்தில் வெளியிட்டு அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.








 இதே பாணியில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவிய ஒரு கும்பல், அதிலிருந்த முக்கிய தகவல்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்துள்ளது. அவற்றை "லல்ஸ் செக்யூரிட்டி' என்ற அமைப்பு திருடி, லல்ஸ் செக்யூரிட்டி.காம் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
"" இது அமெரிக்காவுக்கு எதிரான போர். அமெரிக்காவை எங்களுக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாற்ற முறையில் உள்ளன என்பதை உணர்த்தவே இதை செய்தோம்.'' என்று "லல்ஸ் செக்யூரிட்டி'தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சர்வரில் அனுமதியின்றி யாரோ நுழைந்துள்ளதை செனட் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ரகசிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். அமெரிக்காவின் தீவிர பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே இது கருதப்படுகிறது.



இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்


லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  



இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.