Showing posts with label பாபா ராம்தேவ். Show all posts
Showing posts with label பாபா ராம்தேவ். Show all posts

Saturday, September 3, 2011

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு


புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.
அமெரிக்கா, பிரிட்டன், நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ராம்தேவ் சட்டவிரோதமாக பணம் பெறுவதை என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில் மட்டும் ஏழு கோடி ரூபாயை பிரிட்டனிலிருந்து கைப்பற்றியுள்ளது.
ராம்தேவின் பதஞ்சலி யோகா பீடம், திவ்யா யோகா மந்திர் ஆகிய அறக்கட்டளைகளும் சட்டவிரோதமாக பணம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்திலுள்ள லிட்டில் கம்ப்ரரே தீவிலுள்ள ராம்தேவின் உல்லாச பங்களா குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவையல்லாமல் இன்னபிற நாடுகளிலுள்ள ராம்தேவின் சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராம்தேவின் கட்டுப்பாட்டிலுள்ள 50 அறக்கட்டளைகளின் நடவடிக்கைகளும் விசாரணையிலிருந்து தப்பவில்லை.

ராம்தேவின் சட்டவிரோதமான கோடிக்கணக்கான ரூபாய் பணப்போக்குவரத்து குறித்து சமீபத்தில் ரிசர்வ் வங்கி என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. ஆனால் நான் சட்டவிரோதமாக ஒன்றும் செய்யவில்லை என்று ராம்தேவ் ஹரித்துவாரில் கூறினார்.
கடந்த 20 வருட பொதுவாழ்வில் தனக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தான் உரிய பதில்களைக் கூறி வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Monday, July 18, 2011

யோகா ராம்தேவ் மீது கடத்தல் வழக்கு.

யோகா குரு ராம்தேவுக்கு சொந்தமான இயற்கை வைத்திய தொழிற்சாலை அரியானா மாநிலம் நர்னால் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து கடுகு எண்ணெய் பாரத்தை டேங்கர் லாரியில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு எடுத்து சென்றனர். அந்த லாரியையும், அதன் டிரைவர் ஹனுமான் என்பவரையும், கடத்திச்சென்று விட்டதாக ஜெய்ப்பூர் கோர்ட்டில் லாரியின் அதிபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் யோகா குரு ராம்தேவ், அவரது உதவியாளர் பால கிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'ராம்தேவ் உள்பட 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
நன்றி; தினத்தந்தி 

Saturday, July 9, 2011

பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை!

இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்' பாபாராம்தேவ். இவரை பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர். 

இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார்.  காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடிரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன. 



உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும்,  இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் நடத்தினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தைஅமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.



ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது. 

அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான்.ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம்ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள். இது ஹிந்துத்துவா பா.ஜ.க. பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே அல்லாமல் வேறில்லை.

Friday, July 1, 2011

துரத்தும் சி.பி.ஐ.! ஓடும் சாமியார்!

JULY 01, ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்து வந்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா மாஸ்டர் ராம்தேவின் உதவியாளர் இப்போது சிக்கலில் மாட்டி உள்ளார்.

சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பத்து வருடங்களுக்கு முன் ஓட்டை சைக்கிளில் வலம் வந்தவர் இப்பொழுது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.

சமாமியார் ராம்தேவ் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வைத்திருந்தது மற்றும் போலி மருந்து கம்பனிகள் நடத்தி வந்தது பற்றி    சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவரது நெருங்கிய உதவியாளர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கு பொய் தகவல் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், பாபா ராம்தேவுக்கு நெருக்கமான ஆச்சாரியா பால கிருஷ்ணனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், பாலகிருஷ்ணனுக்கு ஹரித்துவார் நகராட்சி அலுவலகம் வழங்கிய இரண்டு பிறப்பு சான்றிதழ்களில் முரண்பாடு உள்ளது.

இது தொடர்பாக, ஹரித்துவார் நகராட்சிக்கு சென்று, பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் ஹரித்துவார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.


Saturday, June 11, 2011

ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி


ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் பாபா ராம்தேவ் ஹிமாலாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்பார்க்க அரசியல்வாதிகளும் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வருவதால் அந்த மருத்துமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நோயாளர்களை சந்திக்க வரும் உறவினர்களை மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்காததால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். நோயாளர்களை நலம் விசாரிக்க வரும் உறவினர்களும் நண்பர்களும் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சாலைவிபத்தில் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தமது சகோதரருக்கு உணவு மற்றும் தண்ணீர்கூட கொண்டுசெல்ல முடியவில்லை; இதற்கான காரணத்தை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, விஐபி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர்தான் எனக்கு விஐபி. அரசு இவ்விசயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு நோயாளரின் சகோதரர் G.C.காசோல் வருத்ததுடன் தெரிவித்தார்.

அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரம்: ராம்தேவ் வெளியிட திக்விஜய் வலியுறுத்தல்

போபால், ஜூன்10: ராம்தேவின் பல்வேறு அறக்கட்டளைக்களுக்கு நன்கொடையாக அளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.




ஊழல்,கறுப்புப் பணம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக கடந்தவாரம் போலீஸôர் அப்புறப்படுத்தி ஹரித்துவாருக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்குக்கு ராம்தேவின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில், போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், பாபா ராம் தேவ் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். ராம்தேவ் நடத்தும் அறக்கட்டளைகள் கறுப்புபணம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.



Friday, June 10, 2011

அரை குறையாக சொத்துக் கணக்கை வெளியிட்ட ராம்தேவ்-மதிப்பு ரூ. 424 கோடி மீதி?

 ஹரித்வார் தனது சொத்து கணக்கை முழுமையாக வெளிடப் போவதாக கூறியிருந்த பாபா ராம்தேவ் நேற்று மாலை அரைகுறையான ஒரு சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.  

அவர் கூறிய கணக்குப்படி பார்த்தால் மொத்தம் ரூ. 424 கோடியாகும்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக களம் இறங்கியுள்ளார் ராம்தேவ். ஆனால் இவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் ராம்தேவ் ஒரு ரவுடி, கூலிப்படையை வைத்து மக்களை திசை திருப்பி வருகிறார். பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ராம்தேவின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளில் குதிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், தனது சொத்து விவரத்தை நேற்று பகிரங்கமாக வெளியிடப் போவதாக ராம்தேவ் கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று மாலை தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரது உதவியாளர் பால்கிருஷ்ணாதான் இந்த விவரங்களை வெளியிட்டார். அதன்படி மொத்த சொத்து மதிப்பாக ரூ. 424 கோடி என்று பால்கிருஷ்ணா தெரிவித்தார்.

அதில், திவ்ய யோக மந்திர டிரஸ்ட்டின் சொத்து மதிப்பு ரூ. 249.63 கோடி. பதஞ்சலி யோக பீடத்தின் மதிப்பு ரூ. 164.8 கோடி. பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட்டின் மதிப்பு ரூ. 10 கோடியாகும்.

இவற்றைத் தவிர வேறு விவரங்களை பால்கிருஷ்ணா தெரிவிக்கவில்லை. மேலும் தங்களது அமைப்பின் பாலன்ஸ் ஷீட் தங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

பால்கிருஷ்ணாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் அவரது பாஸ்போர்ட் போலியானதா என்ற கேள்விகளுக்கும் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனது பாஸ்போர்ட் தூய்மையானது, நான் இந்தியன்தான் என்று கூறினார். தொடர்ந்து கேள்விகள் குவியவே அவர் எழுந்து போய் விட்டார். சற்று நேரத்தில் பாபா ராம்தேவும் எழுந்து சென்று விட்டார்.

Thursday, June 9, 2011

ராம்தேவ் ஓர் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் – ப.சிதம்பரம்!


அன்னா   ஹசாரேயைப்போல் தானும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்ற ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

“கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் புத்தூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உச்சமன்றமான அகிலபாரத பிரதிநிதி சபா ஓர் கூட்டம் நடத்தியது. அதில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2-ஆம் தேதி ஊழலுக்கு எதிரான முன்னணியை அமைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. பாபா ராம்தேவ் அதன் ஆதரவாளர். எனவே ராம்தேவின் இந்தச் செயலுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருக்கிறது” என தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
“சில ஊடகங்கள் அன்னா ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் பிரச்சாரங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்” எனவும் சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், “ஊழலுக்கு எதிராக பொதுஅமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதிகளையும், பொறுப்புகளையும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைப்பதை ஆதரிக்க மாட்டேன்” என சிதம்பரம் கூறினார்.


Wednesday, June 8, 2011

ஆயுத போராட்டதிற்கு அழைப்பு விடுக்கும் பயங்கரவாத சாமியார்!!

JUNE 8, மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.


இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம்.  இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.


அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்
: இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதம், இவர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் என்பதே ஒரு கண்துடைப்பு.  இவரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

இவருக்கு சொந்தமாக வெளிநாட்டில் ஒரு சொகுசு தீவே இருக்கிறது.
இது ஒன்றும் இவர் உழைத்து சம்பாதித்தது இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் பணம்.

இந்த மக்கள் பணத்தை வைத்துதான் இவர் தனி விமானத்திலும், ஹெலிஹாப்டர்களிலும் சுத்துகிறார். மேலும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களில் வளம் வருகிறார்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ போராட்டங்களில் போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது எல்லாம் யாரும் ஆயுதத்தோடு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவேண்டிய சூழல்கள் இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இருந்ததும், யாரும் அப்படி செய்யவில்லை.


ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் ஆயுதம் தூக்கி இருக்கவேண்டும். ஏன் என்றால் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட இந்திய அரசு ஆயுதம் கொடுத்து உதவியது.

காஷ்மீரிலே மக்கள் அமைதி போராட்டம் நடத்தினார்கள் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.  ஆனால் அந்த மக்களும் ஆயுதம் எடுக்கவில்லை.


ஆனால் போலீஸ் தடியடி கூட முறையாக நடத்தவில்லை இவர்களே ஒருவர்மீது ஒருவர் விழுந்தது காயம் பாட்டதுதான் அதிகம் என்று நேரடி செய்திகள் சொல்கின்றன.

இவர்கள் தங்கள் ஹிந்த்துதுவாவை நிலை நிறுத்த ஒரு ஆயுத போராட்டத்திற்கு தயாராவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பயங்கரவாதி பால்தாக்ரேயை கைது செய்யச்சொல்லி கோர்ட் ஆர்டர் இருந்தும் கைது செய்ய முடியவில்லை. பயங்கரவாதி பால்தாக்ரே சொன்னான் என்னை தொட்டால் மும்பையே பற்றி எறியும் என்று.


அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


அதுபோல் பாபர் மசூதியை உடைத்து கலவரம் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி ஆகியோர் மீது கடுமையான வழக்குகள் இருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆனால் ஒரு தடியடிக்கு எதிராக ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராட்டமாம். இந்தியா எந்த அளவுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கிறது என்பதை இப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.




Monday, June 6, 2011

இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள்!! மோடி அறிவிப்பு!!

ஆமதாபாத், ஜூன் 6:   பாபா ராம்தேவோடு   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்:  *   இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றது இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் யாராலும் மறுக்க முடியாது.


*   உங்கள் தலைமையில் குஜராத் இனப்படுகொலைகளை நடத்தினீர்களே, ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்தீர்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் இல்லை என்று மறுப்பதற்கில்லை.


*   நீங்கள் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் ரத யாத்திரை என்று ஒரு ரத்த யாத்திரை நடத்தினார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.


*   மீரட், பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், இப்படி இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

*   உங்கள் காவி பயங்கரவாதிகள் 'ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவர் குழந்தைகள் இருவரையும்' கொடூரமாக எரித்து கொன்றார்களே, அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான் மறுக்க முடியாது.


*   கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி, கன்னியாஸ்திரி பெண்களை கற்பழித்தீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான நாள்தான்


*   பாபர் மசூதி என்ற பிறமத வழிபாட்டு தளத்தை உடைத்து, இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர் குலைதீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.


*   உங்கள் "ஹிந்துத்துவா காவி ஆட்சியை" இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டும் என்று 'சம்ஜாஉதா ரயில் குண்டு' வெடிப்பு முதல் 'மக்கா மஸ்ஜித் தொடர் குண்டு வெடிப்புகள் வரை நடத்தினீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.




*   இவையெல்லாவற்றையும் மறைக்க பாபா ராம்தேவ் என்ற ஓலை பாம்பை அனுப்பி, ஊழல் ஒழிப்பு நாடகம் போடுகிறீர்களே அதுவும் இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள்தான்.

*   ஒரு சாதாரண தடி அடி நடத்தியதற்கு, இப்படி குதிக்கும் 'இந்த காவி பயங்கராவாதி மோடிதான்' குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான 'ஒரு மாபெரும் இன அழிப்பையே' முன்னின்று நடத்தினார்.

*   இந்த மோடியை, 'இந்திய சிந்தனையாளர்கள்' ஸ்ரீலங்கா இனப்படுகொலை 'பயங்கரவாதி ராஜபக்சே' உடன் ஒப்பிடுகிறார்கள். இவரது ஆட்சியில்தான் லஞ்சம், ஊழல், குடிநீர் பற்றாக்குறை இப்படி மக்கள் அவதிப்படுகின்றனர்.

*   இந்த 'காவி பயங்கரவாதிகள்' ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் ஊழலும், லஞ்சமும் மலிந்து, குடுமிச்சண்டை நடக்கிறது அதைப்பற்றி இதுவரை யாரும் வாய்திறக்கவில்லை.

*   இவரது பயங்கரவாதத்தை பார்த்த மேற்க்கத்திய நாடுகள் இவருக்கு விசா வழங்க மறுத்து கேவலப்படுத்தியது. இந்தியாவின் ஒரு மாநில முதல்வருக்கு வெளிநாட்டு விசா மறுக்கப்பட்டது மொத்த இந்தியாவிற்கே அவமானம்.

*   இப்படி பட்ட யோகியர்தான் சொல்கிறார் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் மீது தடி அடி நடத்தியது தவறு என்று. இதை சொல்ல இவருக்கு எந்த யோகிதையும் இல்லை.

*   மேலும் இந்த ஊழல் எதிர்ப்பு என்பதே ஹிந்துத்துவாவை இந்தியாவில் நிலை நிறுத்தும் ஒரு பார்பன தந்திரமே அல்லாமல் வேறில்லை. இந்த நரபலி நாயகர்களை கடும் சட்டம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

Sunday, June 5, 2011

ராம்தேவ் உண்ணாவிரதம்: எகிப்து புலிளும், இந்தியப் பூனைகளும்!


காற்றடைத்த பலூன் ஒரே நாளில் உடைந்துவிட்டது.

ராம்தேவிடம் கெஞ்சியும், கொஞ்சியும் பார்த்த மன்மோகன் அரசு நேற்று இரவில் மிஞ்சிவிட்டது.  ஜாலியாக களைகட்டியிருந்த  உண்ணாவிரதப் பந்தலில், ராம்தேவை கைதுசெய்ய டெல்லி போலீஸின் முஸ்தீபுகள் தெரிந்தன. மேடையிலிருந்து துள்ளி பக்தகோடிகள் மத்தியில் குதித்து, வீராவேசமாகப் பேசினார் யோக குரு. சினந்த பக்த கோடிகள்  போலீஸின் மீது கற்களை வீசினர். டெல்லி போலீஸ் அதன் முகத்தை லேசாய்த்தான் காட்டியது. சில கண்ணீர்ப் புகைகுண்டுளும், சில லத்திகளும் போதுமானதாய் இருந்தன. அவ்வளவுதான். “ஊழலை ஓழிக்காமல் உஜ்ஜய்னி திரும்ப மாட்டேன்”, என்றும், “என் கடைசி மூச்சு வரை கறுப்புப் பணத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடருவேன்” என்றும் சூளுரைத்த யோக குருவை காணாமல் ஆக்கிவிட்டனர் போலீஸார். திசை தெரியாமல் பக்தகோடிகள் தெறித்து ஓட,  ராம்லீலா மைதானம் காலியாகிப் போனது.

போராடுகிற தொழிலாளர்களை, இதே டெல்லியில், இதே போலீஸ் எத்தனையோ முறை கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறது. ஈவிரக்கமின்றி அடக்குமுறைகளை ஏவியிருக்கிறது. அப்போதெல்லாம் நடிக நடிகையரின் உடல்களிலும், அந்தரங்கங்களிலும் மோப்பம் பிடித்துக் கிடந்த  தொலைக் காட்சிகள் மூச்சுவிடாமல் இன்று காலையிலிருந்து ஒரே ராம்தேவ் பஜனை செய்துகொண்டு இருக்கின்றன. அதிலும் இந்த  என்.டி.டிவி, டைம்ஸ்நவ் போன்ற இந்தியாவின் பிரதான ஆங்கிலச் செய்தி தொலைக் காட்சிகள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை. எதோ வானமே இடிந்துவிட்டது போல “ஐயோ, ஐயோ” என பெரும் கூப்பாடு போட்டு தொலைக்கின்றன.


“காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை” என்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். "எமர்ஜென்ஸி காலத்து இந்தியா போலிருக்கிறது” என்று பதறுகிறார் அத்வானி . “ஜனநாயகம் செத்துவிட்டது” என்கிறார் சமூக ஆர்வலர்களின் கொம்பாக முளைத்திருக்கும் அன்னா ஹசாரே.  “மன்மோகன் உடனடியாக ராஜினாமாச் செய்ய வேண்டும்” வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள் வலதுசாரி அறிவுஜீவிகள். எல்லோரையும் தேடித் தேடி குரல்களை சேகரித்துக் கொண்டு இருக்கின்றன ஊடகங்கள்.

ஒரு  சாதாரணமான போராட்டத்தை  ஊதி ஊதிப் பெருக்க வைத்த ஊடகங்களுக்கும், வலதுசாரிக் கும்பல்களுக்கும் கண்முன்னால் அந்தப் போராட்டம் மிகச் சாதாரணமாக முடிந்து போனதை தாங்கிக்கொள்ளமுடியாத பொருமல்கள் தெரிகின்றன. அவர்கள் கட்டியிருந்த மனக்கோட்டைகள் எல்லாம் மண்கோட்டையாகித் தரைமட்டமானப் பார்க்க முடியாத பதற்றம் இது. எதாவது செய்து, போராட்டத்தை உசுப்பி விட முடியுமா என பார்க்கிறார்கள். இங்குதான் புலிகளைப் பார்த்து பூனைகள் சூடு போட்டுக்கொண்ட கதை வருகிறது.  அதுவும் காவிப்பூனைகள்!

சமீப காலங்களில் எகிப்தில் ஆரம்பித்து சில வளைகுடா நாடுகளில் ஆளும் அரசுக்கெதிராக மாபெரும் மக்கள் திரள் அந்நாட்டின் தலைநகர்களில் சங்கமித்து பெரும் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வுகளை விவாதித்த ‘டைம்ஸ்நவ்’ தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர், “இந்தியாவில் இதுபோன்ற மக்கள் எழுச்சிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா?” எனக் கேட்டார். அது விளையாட்டான கேள்வி அல்ல. அதிலிருந்துதான்  அன்னா ஹசாரேவும், ராம்தேவும் புறப்பட்டு வந்தார்கள்.

கடுமையான விலைவாசி உயர்வும், பெரும் ஊழல்களும் மலிந்த காங்கிரஸ் ஆட்சி மக்களிடம் இருந்து தனிமைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதுதான் தருணம் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற வலதுசாரிக்கும்பல்கள்  தங்கள் திட்டத்தை வகுக்கின்றனர். தாங்கள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்தால் மக்களின் ஆதரவு பெரிதாகக் கிடைக்காது என்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு புனிதர்கள் போன்றிருக்கும் அன்னா ஹசாரே, ராம்தேவின் பின்னால் நின்று ஊழலுக்கு எதிரான போர்களை நடத்த முன்வருகிறது. அப்போதும்  மக்களை வாட்டும் விலைவாசி உயர்வை அவர்கள் கையிலெடுக்கவில்லை. நாடு, நாட்டின் பெருமை, அதற்கு களங்கம் சேர்க்கும் ஊழலை மட்டுமே பேசினார்கள். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை முன்வைக்காமல்  நாட்டை முன்வைத்துத்தான் வலதுசாரிகள் எப்போதும் மக்களைத் திரட்டுவார்கள். அதுதான் நடந்தது.

இரண்டு போராட்டங்களையும் அவர்கள் இந்தியத் தலைநகரை குறிவைத்தே நடத்தினார்கள். இணையம், தொலைக்காட்சிகளில் பெருமளவுக்கு செய்திகள் பரிமாறப்பட்டன. மக்களின் ஆதரவை திரட்டினார்கள். இதன் அரசியல் அறிந்த/அறியாத மக்கள் “தேவன் வந்துவிட்டான்’ என ஆரவாரம் செய்தனர். அன்னா ஹசாரேவுக்கு திரண்ட ஆதரவு உற்சாகம் தந்தது. அடுத்து ராம்தேவை உசுப்பி விட்டனர்.  ஊடகங்கள் மூலம் அலப்பறை செய்தனர். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பியினரையும், ராம்தேவின் பக்தகோடியினரையும் மெல்ல மெல்ல டெல்லியில் திரட்டி, மக்கள் வெள்ளத்தைக் காட்டி, ‘மாபெரும் கிளர்ச்சி’யாக்கிட நினைத்தனர். இதைத்தான் முந்தைய பதிவில் அரசியல் விபரீதம் என குறிப்பிட்டு இருந்தேன். எல்லாம் பொசுக்கென்று போனது.  வஞ்சக  மூளை கொண்ட அரசு முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டது.  அதைத் தாங்க முடியாத வேகத்தைத்தான் இன்றைய கூச்சல்களில் பார்க்க முடிகிறது.

காங்கிரஸ் அரசு மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் துயரங்களிலும், வலியிலும் தோய்ந்து எழுந்த போராட்டங்களுக்குத்தான் கிளர்ச்சிகள் என்று பெயர். இதுபோன்ற ஜிகினாப் போராட்டங்களுக்கும்  புறவாசல் முயற்சிகளுக்கும் அல்ல.

நன்றி :www.mathavaraj.com

ஹிந்துத்துவா புழுதியில் உருவெடுத்த சாமியார் பாபா ராம்தேவ்!

புதுதில்லி, ஜூன் 5- யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது,  என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் நடத்தினர்.

இதன் காரணமாக இந்திய மக்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை தீவிரவாத அமைப்பாக பார்க்கும்  இந்நிலையில், இவர் அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகளுக்கு யோகா சொல்லி கொடுக்கும் குருவாக பணியாற்றுகிறார்.


இவரை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்க பார்கிறார்கள்.  காவி ஹிந்த்துதுவா தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவே இந்த உண்ணாவிரத முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ், விஎச்பி அமைப்புகள்,  அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதுவும் செய்துவிட முடியாது.

இந்த ஹிந்துத்துவா அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் அதன் காரணமாகவே உள்நாட்டிலேயே தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி அதைவைத்து மத மாச்சாரியங்களை உண்டாக்க திட்டமிட்டனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் மத சண்டையை உண்டாக்கி, ஹிந்து பேரினவாதம் பேசி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் ஒரு அபாயகரமான வேலையை செய்கிறார்கள்.

சிறிலங்காவில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவே தலைவர் பிராபாகரன் தலைமையில் 35 வருட கால ஆயுத போராட்டம், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு ஆயுத போராட்டத்தை தொடங்கினால் இந்தியா தாங்காது. 

அதுபோல், இந்தியா என்பது பல மதம், இன, மொழி, மக்கள் வாழும் ஒரு மதசார்பற்ற நாடு இதை ஹிந்து நாடு ஆக்குகிறோம் என்று குழப்பத்தை உண்டாக்குவது பெரும் அழிவில் கொண்டுபோயி நிறுத்தும்.


மேலும், பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே,  இதுமாதிரி உண்ணாவிரதங்களை உண்டாக்கி ஹிந்துத்துவா தங்கள் மீது உள்ள களங்கத்தை துடைத்து விட முடியாது.

ஆர்.எஸ்.எஸ்.  பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியா முழுவதும் நடத்திய தீவிரவாத செயல்களுக்கு தண்டிக்கபட்டே ஆவார்கள். இதில் சட்டம் தன் கடமையை எப்படி செய்கிறது என்பதை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.

நள்ளிரவில் ராம்தேவ் அதிரடி கைது-காவி தீவிரவாதிகளின் இரண்டாவது நாடகமும் முடிவுக்கு வந்தது.


டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர்.உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவருடன் சங் பரி்வார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமிய, ஜைன மதத்தவரும் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கானோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ராம்தேவை சமாதானப்படுத்த அரசுத் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் தனது நடவடிக்கைகளில் ராம்தேவ் உறுதியாக இருந்ததால் அவை தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் போலீஸார் திடீரென ராம்லீலா மைதானத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவைத் தாண்டி ஒரு மணியளவில் போலீஸார் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திற்குள் புகுந்து சுற்றி வளைத்தனர். ஒரு குழுவினர் ராம்தேவ் அமர்ந்திருந்த மேடையை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தி வந்தவர்கள் மேடையை சுற்றி வளைத்து ராம்தேவை கைது செய்வதிலிருந்து தடுக்க முயன்றனர். இதனால் மேடையில் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேடையிலிருந்து குதித்தார்

ஒரு கட்டத்தில் ராம்தேவ் மேடையிலிருந்து கீழே குதித்து ஆதரவாளர்களுடன் நின்று கொண்டார். இதையடுத்து போலீஸார் கடுமையாக போராடி ராம்தேவை அவர்களிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் ஆதரவாளர்களைக் கலைத்தனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ராம்தேவை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து அப்புறப்படுத்திக் கூட்டிச் சென்றனர்.

டேராடூன் கொண்டு செல்லப்பட்டார்

கைது செய்யப்பட்ட ராம்தேவை டெல்லியை விட்டு வெளியேற்றிட போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை பாலம் விமான நிலையத்திற்கு ராம்தேவ் கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர் மூலம் அவரை டேராடூனுக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

டெல்லிக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் டெல்லிக்கு ராம்தேவ் வந்து போராட்டத்தை தொடருவார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

Saturday, June 4, 2011

இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்

டெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

\
இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இப்போது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. ராம்தேவின் போராட்டத்துக்கு பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து, உண்ணாவிரத மையத்துக்கு ஆட்களைக் கூட்டி வருவது வரை எல்லா வேலைகளையும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தான் பார்த்து வருகின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது.

பாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால்.. முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.

முதலில் அவர் ஒழுங்காக யோகா சொல்லித் தருகிறாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது. அவரது யோகா முறைக்கு பல யோகா விற்பன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் நாம் மறக்கக் கூடாது.


இந்த உண்ணாவிரதத்துக்கு எவ்வளவு ஏற்பாடுகள் பாருங்கள், எவ்வளவு செலவு.. இந்த உண்ணாவிரத்தில் ஆடம்பரமே முன் நிற்கிறது. கிட்டத்தட்ட 'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்'. இதனால் என்ன பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது கூட அவருக்கு சரியாகத் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

அன்னா ஹசாரே போன்ற உண்மையிலேயே மக்களுக்காக பாடுபடும் தலைவர்கள், ராம்தேவுடனான தொடர்பை துண்டிக்குக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!

JUNE 4,  நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். 

ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம். 
இது எப்படி இருக்கு?   இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

ஏற்கனவே ஒரு காந்தியவாதி ஊழலுக்கு எதிராக களத்திற்கு வந்தார் அவரை பற்றிய வண்டவாளங்கள் வெளிவந்த உடன் ஹிந்து பாசிஸ்டுகள் தங்களது நேரடி ஆதரவாளரை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

இவராவது நல்லவராக இருப்பாரா? என்று எண்ணு வதற்கு முன்பே இதோ வெளி வந்து வந்து விட்டது





இந்த பாவப்பட்ட கோடீஸ்வரனின் ஜகஜால வண்டவாளங்கள் இதோ!

இந்த மகான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவுரங்காபாத் கிராமத்தில் பதஞ்சலி என்ற யோஹபீடம் நிறுவுவதற்கு உள்ள நான்கு ஹேக்டர் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை கள்ளத்தனமாக பதிவு செய்து கையகப்படுத்தியுள்ளார். 
இது சம்மந்தமான ஆவணங்களை உத்தரகாண்ட் மாநில சப் டிவிசியன் மஜிஸ்ட்ரேட் கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு சொத்துக்களை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.


இந்த சாமியாருடைய திருட்டுத்தனத்திற்கு எதிராக முன்னால் பஞ்சாயத் தலைவர் எஸ். ஷவ்ஹானும்,  இப்போதைய தலைவர் சரண் சிங்கும் 
வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 





இதனால் ரூர்கி மாவட்ட மஜிஸ்ட்ரேட் ஹர்பீர் சிங் அவர்கள் நேரில் சென்று பத்திரங்களில் உள்ள கைரேகை, மற்றும் பட்டா, போன்ற ரெவேன்யு ஆவணகளை சோதித்து பார்த்து இவர் செய்துள்ள கள்ளத்தனத்தை நிருபித்துள்ளார். 

இந்த நிலத்தோடு அல்லாமல் மேலும் அதிகமான ஹேக்டர் அரசுக்கு சொந்தமான நிலங்களை இவர் களவாடி உள்ளார் என்று சப் டிவிசன் மஜிஸ்ட்ரேட் அவர்கள் கலக்டருக்கு புகார் செய்துள்ளார்.

இந்த பிரச்னை பெரிய விவாதமாக ஆனவுடன்
 இப்போது ஊழலுக்கு எதிராக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கொண்டு வந்து இருக்கும் இரண்டாவது இறக்குமதியான  இந்த பண்டார, பரதேசி ராம்தேவ்தான் கைவசப்படுத்திய நிலத்திற்கு பதிலாக விவசாயிகளுக்கு வேறு நிலம் கொடுக்கிறேன் என்று கலக்டருக்கு பதில் அனுப்பி உள்ளார்.

இவருடைய நிறுவனம்
 ஹரித்துவாரில் மொத்தமாக ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இந்த சாமியார்களுக்கு  இவ்வளவு பணம் எப்படி வந்தது? ஏற்கனவே காந்தியவாதி கள்ள பணத்திற்கு எதிராக நடத்தின நாடகத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் செலவானது. 
இப்போது இந்த பாவப்பட்ட கோடீஸ்வரன் நடத்தும் நாடகத்திற்கு பதினெட்டு கோடி செலவு செய்வதாக வெளிபடையாக சொல்கிறார்கள் என்றால் உண்மை நிலை என்னவாக இருக்கும். 



இவர் நடத்தும் இந்த நாடக மைதானத்தில் ஆயிரத்தி ஐநூறு ஏர் கூலர். முந்நூறு கழிப்பறைகள், நானூறு டிஜிட்டல் ஸ்க்ரீன், நானூறு படுக்கைகள், நூறு அம்புலன்சுகள் என்று பலகோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள்.


மேலும், உடனுக்குடன் செய்திகளை தெரிவிக்க பலகோடிகள் கோடிகள் செலவில் தனியாக டவர்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த நாடக மைதானம் முழுவதும் ஹிந்து பாசிடுகளால் நிரம்பி வழிவதில் இருந்தே தெரிகிறது இவரை ஆட்டுவிப்பது ஆர்.எஸ்.எஸ் தான் தெள்ளத் தெளிவாகிறது. நல்லவர்கள் ஒரு ஆள் கூட இந்த பாசிஸ்ட்களின் கூடாரத்தில் இல்லை.

சாமியார் பாபா ராம்தேவ் என்கிற ஓலை பாம்பு!!

JUNE 4, ஊழலுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சாமியார் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப்போவது, பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கருத்து தெரிவித்தார்.

திக்விஜய் சிங் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது, பாபா ராம்தேவை சன்னியாசி என்று சொல்ல முடியாது. அவர் ஒரு நல்ல வியாபாரி.

யோகா சொல்லி கொடுப்பதற்கு கூட அவர் விதம், விதமாக பணம் வசூலிக்கிறார். யோகா வகுப்பில் முன்வரிசையில் இருக்க ரூ.50 ஆயிரம் வசூலிக்கிறார். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கடைசி வரிசையில்தான் இருக்க முடியும்.


இது வியாபாரம் இல்லாமல் வேறு என்ன?  ராம்தேவால் காங்கிரஸ் குழப்பமோ, பீதியோ அடைய வில்லை. ஊழலை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிந்திக்கவு: ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதால் ஊழலை ஒழித்து விட முடியாது. இவர் யோகா ஒருவியாபாரி, இவர் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா பயிற்சியாளர்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமுடி பாரதிய ஜனதா பார்ட்டி. அந்த கட்சி இந்தியாவில் செத்தபாம்பாகி போன நிலையில், இந்த செத்த பாம்பு ஒரு ஓலை பாம்பை காட்டி அரசை பயம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஊழலை உண்மையில் ஒழிக்க யார் புறப்பட்டாலும் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.  அதே நேரம் இதை அரசியலாக்கி ஆதாயம் தேடநினைக்கும்
ஹிந்துத்துவா மதவெறி கட்சிகளை நாம் அனுமத்திக்க முடியாது.

இந்த சாமியார் ராம்தேவ் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 1100 கோடிகளுக்குமேல் எப்படி அதிபதி ஆனார்.  ஒரு பண்டார,  பரதேசிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது.

நிச்சயம் நியாயமான முறையில் சம்பாதித்ததாக இருக்க முடியாது என்பது உண்மை. இந்த சாமியாரை ஹிந்துத்துவா களம் இறக்கியிருப்பதால் இந்த பார்பன நாளிதழ்கள் இவரை தூக்கி பிடிக்கின்றன அவ்வளவே.

Thursday, June 2, 2011

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் தாக்கு

டெல்லி: கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.




ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.


இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.
உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.