Saturday, December 11, 2010

மலேகாவ்ன் குண்டு வெடிப்பு: 'உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சினார் ஹேமந்த் கர்கரே'-திக்விஜய் சிங்!

டெல்லி: மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் பெண் சாமியார் பிரக்யா உள்பட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்படுவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு முன், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்கரே இவ்வாறு கூறியதாக திக்விஜய் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த கர்கரே மாலேகாவ்ன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து அதில் தொடர்புடைய பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தார்.

இந்த வழக்குக்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை கர்கரே தலைமையிலான குழு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தேடி சேகரித்து வழக்கை உறுதிப்படுத்தியது. ஆனால், வழக்கு மிக முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில் மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மறைவுக்குப் பின் இந்த வழக்கில் தொய்வு ஏற்படத் தொடங்கியது. தற்போது கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் சாதாரண குற்றவாளிகள் நிலைக்கு மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே தனது உயிருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தான் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் இருப்பதாகவும் கர்கரே தன்னிடம் தெரிவித்ததாக திக்விஜய் சிங் இப்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவு 7 மணிக்கு கர்கரே என்னை எனது மொபைல் போனில் தொடர்பு கொண்டு கவலையுடன் பேசினார். அப்போது பேசிய கர்கரே, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ததில் இருந்தே எனக்கும் எனது குடும்பத்தினரின் உயிருக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. நானும் என் குடும்பத்தினரும் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையி்ல் உள்ளோம். மலேகாவ்ன் வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்க்கும் தரப்பினரிடமிருந்து எனக்கு மிரட்டல் வருகிறது என்றார்.

மேலும் இந்த வழக்கில் அவரது விசாரணை குறித்தும் நேர்மை குறித்தும் பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியதால் கர்கரே மிகவும மணம் புண்பட்டுப் போயிருந்தார். இதை அவரது குரலை வைத்தே என்னால் உணர முடிந்தது.

அவ்வாறு பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே மும்பை தாக்குதலில் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற தகவல் வந்தவுடன் இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே அதை விட்டுவிட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார். காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ளே புகுந்த அவரது நெஞ்சில் தீவிரவாதிகளின் குண்டுகள் பாயந்தன. அதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்துலேவைத் தொடர்ந்து திக்விஜய்:

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்க பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும் நினைவுகூறத்தக்கது.

அந்துலேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவி விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
 

காங்கிரûஸ தொடர்ந்து எதிர்ப்பேன்: இயக்குநர் சீமான் பேச்சு;

வேலூர், டிச. 10: காங்கிரஸ் கட்சியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். அதுதான்
எங்கள் கொள்கை என்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை  விடுதலையான திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
   வேலூர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த சீமான் வெள்ளிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


   அதைத் தொடர்ந்து அவர் பேசியது:

   5 மாதங்கள் நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் எனது தொழில் மற்றும் அரசியல் கட்சிக்கு
இழப்பு ஏற்பட்டது. அடக்குமுறை ஒழியும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து பேசுவேன். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

   1.76 லட்சம் கோடி ஊழல் புரிந்த ஆ. ராசாவுக்கு பரிந்து பேசுகிற கருணாநிதி ஜனநாயகத்தைப் பற்றி பேச அருகதையற்றவர். 2 முறை தவறாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறு என்று தெரிந்தும் என்னை சிறையில் அடைத்த தமிழக அரசு மீது வழக்கு  தொடருவேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் அரசு நடந்து கொள்கிறது.    காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன், ஹசன் அலி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.


   காங்கிரஸ் நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் எங்கு சென்றாலும் எதிர்ப்பேன். அதுதான் எங்களது கொள்கை.   கருணாநிதியும், மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி ஆகியோர் நாட்டு மக்களுக்கு உழைத்தது போதும். அவர்கள் ஓய்வு பெறட்டும். ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் விரைவில் மலரும் என்றார் அவர்.  கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் பாலா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், வேலூர் நகரச் செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஃபலஸ்தீனர்களை கடத்தும் இஸ்ரேல் ராணுவம்!!!

காஸ்ஸா : குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டைக் கூறி இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்யப்படும் ஃபலஸ்தீன் இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை திருடி விட்டு உடலை வழியில் எறிந்துவிட்டுச் செல்லுகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஸ்வீடன் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான ஆஃப்டன்ப்ளேடட்(Aftonbladet) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.



உடல் உறுப்புகளை திருடவும் அவற்றை சர்வதேச சந்தையில் விற்பதற்கும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குகரையிலிருந்தும், காஸ்ஸா முனையிலிருந்தும் கைதுச்செய்யப்படும் ஏராளமான ஃபலஸ்தீனர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டது ஆய்வில் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் டொனால்ட் போஸ்ட்ரம் கூறுகிறார்
.




நப்லஸிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினரால் பிடித்துச்செல்லப்பட்ட ஃஹாலித் என்ற இளைஞனின் இறந்துப்போன உடல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. ஜனாஸாவை குளிப்பாட்டும்போது உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்களை பரிசோதித்தபொழுதுதான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது. பல குடும்பங்களும் இத்தகைய சூழல் தங்களுக்கும் நேர்ந்ததை தன்னிடம் விவரித்ததாக ஆஃப்டன்ப்ளேட்டின் செய்தியாளர் கூறுகின்றார். பிலால் என்ற இளைஞரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச்சென்று நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தது. 5 நாள்கள் கழித்துதான் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் நடந்த உடல் பரிசோதனையில் அவருடைய வயிறு கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய உறுப்புகளெல்லாம் திருடப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் ராணுவத்திற்கெதிராக உடல் உறுப்புகளை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுபற்றிய தெளிவான விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்திற்கு தொடர்பிருப்பதாகவும் அப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.




இப்பத்திரிகைச் செய்தியைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தால் கடத்திச்செல்லப்பட்டு கொலைச்செய்யப்படும் ஃபலஸ்தீனர்களின் உடலை பரிசோதனைச்செய்யப்போவதாக ஃபலஸ்தீனர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.


News: Thejas

குஜராத் கொலைகளுக்கு அனுமதி அளித்தது நரந்திர மோடி" : DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.


கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்றக் கலவரங்களின்போது முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதில் மோடிக்குத் தொடர்பில்லை" என்று சிறப்புப் புலனாய்வுக்குழு (Special Investigation Team - SIT) வெளியிட்டுள்ள அண்டப்புளுகு வெள்ளை அறிக்கைக்கு எதிராக, குஜராத் முதலமைச்சர் மோடியின்கீழ் காவல் துறையில் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர் குரலெழுப்பியுள்ளார்.

குஜராத்தில் இனப்படுகொலைகளை நடத்திய சங்பரிவார குண்டர்களே "மோடிதான் கொல்லச் சொன்னார்" என்று வெளிப்படையாகவும் பெருமையாகவும் ஒப்புக் கொண்ட பின்னரும் அம்புகளான அந்த குண்டர்கள் மீதும் எய்தவரான குஜராத் முதல்வர் மோடியின் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்றுப்போய் "மோடி ஓர் அப்பாவி" என்று அறிக்கை வெளியிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினரை என்னவென்பது?

சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் அறிக்கையை எதிர்த்து ஒருகுரல் எழுந்து உரத்து ஒலிக்கிறது.கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குஜராத் காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் (DGP-புலனாய்வுப் பிரிவு) ஜெனரல் ஸ்ரீகுமார் கடந்த திங்களன்று (6.12.2010) திருவனந்தபுரத்தில் நடந்தேறிய ஒரு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மோடியை அப்பாவியாக அடையாளப் படுத்துவதற்கு, குஜராத்தில் இயங்கும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, SITஇன் தலைவர் ஆர் கே ராகவனை வளைத்துப் போட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பாரதீய ஜனதா கட்சித் தலைவருக்கு எதிராகவும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தி, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் பட்டியலிட்டு எழுதிய முப்பது பக்கக் கோரிக்கை மனுவையும் இக்கூட்டத்தில் அவர் வெளியிட்டார். "முஸ்லிம்கள் கொத்து-கொத்துகளாகக் கொல்லப்பட்டு, அழித்தொழிப்பு நிறைவேறும்வரை கைகட்டி வேடிக்கை பார்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டவர் மோடிதான்" என்ற உண்மையை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் முன்னாள் DGP ஜெனரல் ஸ்ரீகுமார்.

அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கட்டளைகளின்படி செயல்பட மறுப்புத் தெரிவித்ததால் ஸ்ரீகுமாருக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு மறுக்கப் பட்டது. இவர் டிஜிபி ஆகப் பதவி உயர்வு பெற்றதே தனிக்கதை.கோத்ரா கலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்த நாநாவதி கமிஷன்முன் ஆஜராகி, குஜராத் அரசுக்கு எதிராகப் பல தகவல்களை ஆகஸ்ட் 2004இல் ஸ்ரீகுமார் அளித்தார். அதனால், 2005இல் அவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு கொடுக்கவில்லை.

அதை எதிர்த்து மத்திய நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்றாண்டு விசாரணைக்குப் பின்னர், கடந்த 2008 மே மாதம் 2ஆம் தேதியன்று - அதாவது ஸ்ரீகுமார் ஓய்வு பெற்ற பின்னர் - டிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப் பட்டார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல் மோடிக்கு ஏற்ற தலைமைச் செயலராக இருந்த ஜி.எஸ்.சுப்பாராவ் என்பவர், "மாநிலத்தில் காவல்துறை வலுவாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில், அடிக்கடி போட்டுத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும் அதற்கு, "அப்பாவிகளைச் சுட்டுக் கொல்வது இந்தியக் குற்றவியல் சட்டம் 120-பி பிரிவின்படி குற்றமாகும்" என்று தான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது ஸ்ரீகுமார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்துப் புலனாய்வுத்துறையினர் (IB) விசாரித்தால் இன்ன இன்ன மாதிரிதான் சொல்ல வேண்டும் என்று ஸ்ரீகுமாரின் உயரதிகாரி பீ.ஸீ. பாண்டே வற்புறுத்தியுள்ளார். அதை ஸ்ரீகுமார் பதிவு செய்து வைத்துள்ளார். தன்னை அடிபணிய வைப்பதற்காகவே தனக்கு வரவேண்டிய பதவி உயர்வுக்கு, தன் ஜூனியரான அஹமதாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர் கௌசிக்கை குஜராத் அரசு தேர்வு செய்து நியமித்தது என்று ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

குஜராத் காவல்துறையில் 1972இல் சேர்ந்த ஸ்ரீகுமார், 2002ஆம் ஆண்டின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் துவங்கிய, 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை நடைபெற்றுத் தொடர்ந்து கொண்டிந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2002வரை குஜராத் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கூடுதல் இயக்குனராகப் பணியாற்றினார்.

குஜராத்தில் புலனாய்வுத்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றியபோது குறிப்பெடுத்து வைத்திருந்த பல முக்கிய அம்சங்கள் அடங்கிய, 620 பக்கங்களுக்கும் அதிகமான வாக்குமூலப் பிரமாணங்களை, சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்குத் தாம் சமர்ப்பித்ததாகவும் அவற்றை (SIT) கண்டு கொள்ளாமல் முற்றாகப் புறக்கணித்து, வேண்டுமென்றே வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார் ஸ்ரீகுமார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, "எதிர்கட்சி தலைவர்கள் சங்கர் சிங் வாகேலா மற்றும் ஓராண்டுக்குப் பின்னர் கொலை செய்யப்பட்ட கேபினட் மந்திரி ஹரேன் பாண்டியா போன்றவர்களின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்யும்படி மோடி எனக்குக் கட்டளையிட்டார்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

"இங்கு இதை நான் மீண்டும் மேலெழுப்புவதற்குக் காரணம் யாதெனில் மோடியைப் புனிதப் படுத்த முயலும் SITஇன் இந்த அறிக்கை, இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கும் தனித்துவத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கை, நமது ஜனநாயகத்தின் அடித்தளங்களை ஆட்டிப் பார்ப்பதாக உள்ளது என்பதாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விளைவுகளை உருவாக்கும் என்பதாலும்தான்" என்று ஸ்ரீகுமார் கூறினார்.

மேலும், "குஜராத் கலவரங்கள் இந்தியாவில் பல்வேறு கொடூரமான வன்முறைத் தாக்குதல்களுக்கு வழிவகுத்தன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், அவற்றைப்போல் மேலும் பல கொடுமையான நிகழ்வுகளுக்கு உந்துதலாக அமைந்து விடும்" என்றும் அவர் எச்சரித்தார்.


மதக் கலவரங்களின்போது நடந்த குற்றங்களை மறுவிசாரணை செய்ய மார்ச் 2008இல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மூலம் இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அமைக்கப்பட்டது. குஜராத் கலவரத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் ஜாஃப்ரியின் மனைவி ஸகிய்யா நஸீம் ஜாஃப்ரியின் புகார் மனுவை ஆய்வு செய்திட, கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம், சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வுக்கு ஆணையிட்டது.

ஸ்ரீகுமார் தமது வாக்குமூலப் பிரமாணத்தில், அரசாங்க அதிகாரிகள் அந்தக் கலவரத்தில் பங்கு வகித்து, பொதுமக்களுள் 100-130 பேரை நரோதபடியா எனும் இடத்திலுள்ள காவல் நிலையத் தலைமையகத்தின் எதிரில் வைத்துக் கொன்றொழித்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி மேலும் விளக்கம் கேட்டோ விசாரிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. மோடி உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாதங்களை சிறப்புப் புலனாய்வுக்குழு (SIT) அப்படியே ஏற்றுக் கொண்டு, உண்மைகளை மூடிமறைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

தான் வழங்கிய ஆதாரங்கள் இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, ஜாஃப்ரி விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையின் 87 பாராக்களில் 36 பாராக்கள் தனது வாக்குப்பிரமாணத்தின் மூலப் பகுதிகள்தாம் என்றும் ஸ்ரீகுமார் கூறினார் "திருமதி ஜாஃப்ரியின் புகார் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எனது ஆதாரங்களைப் பொய்யாக்கும் சதித் திட்டத்துடன் இந்த நீதிமன்ற விசாரணையின் துவக்கம் முதலே முயன்று வருகின்றனர்" என்றும் "உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நியமிக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT), மோடியின் குஜராத் காவல் துறையின்கீழ் இயங்கும் ஒரு துணைக் குழுவாகவே செயல் பட்டு வந்தது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் கலவரத்துக்கு முன்னர், 1990 மற்றும் 1998 ஆண்டுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்பதற்காக மத்திய அரசாங்க விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டவர் ஸ்ரீகுமார். "இந்துத்துவ இயக்கச் செயல்வீரர்கள் சட்ட விரோதமான செயல்பாடு எதிலும் ஈடுபடவில்லை; நீங்கள் சந்தேகத்திற்குரிய முஸ்லிம் போராளிகள்மீது கவனம் செலுத்தினால் போதும்" என்று மோடி தன்னிடம் கூறியதாகவும் ஸ்ரீகுமார் குறிப்பிட்டுள்ளார். தான் பிறப்பால் ஒரு ஹிந்து என்றும் சனாதன தர்மமான ஹிந்துத்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதன் போதனைகள்தாம் தனக்கு இந்துத்துவ வெறியர்களுக்கு எதிராகப் போராட உந்துதலாக உள்ளது என்றும் ஸ்ரீகுமார் கூறுகிறார்.

சரித்திரத்தில் முதுநிலை பட்டம் படித்துள்ள ஸ்ரீகுமார், இந்தியக் காவல் சேவை(Indian Police Service - IPS)யில் இணைவதற்கு முன்னர் காந்தியச் சிந்தனைகளையும் படித்துள்ளார். "உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படும்வரை எந்த ஒரு விசாரணைக்கும் முற்றுப் புள்ளியில்லை" என்று தான் நம்புவதாகவும் "உண்மை குற்றவாளிகள் ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

"மிகவும் கீழ்த்தரமான இரண்டு நிகழ்வுகள், நடந்தேறிய பாவகாரச் செயல்கள் ஆகியன தன்மானமுள்ள எந்தவோர் உண்மையான ஹிந்துவுக்கும் மிகப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தும். ஒன்று தகர்க்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகிய பாப்ரி மஸ்ஜித் நிகழ்வு. இரண்டாவது சிறுபான்மை சமுதாயத்திற்கெதிரான இனப்படுகொலை. இவ்விரண்டு சாத்தானியச் செயல்களும் பீஜேபி எனும் கட்சியின் தீவிரவாத குண்டர்களால் அதன் தலைவர்கள் என அறியப்பட்டவர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது" என்று அவர் கூறினார்.

உண்மையைப் புதைக்க முயலும் சிறப்புப் புலனாய்வுக்குழு(SIT)வின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிட சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து வருவதாக ஸ்ரீகுமார் கூறினார். "ஏனெனில், இக்குற்றவாளிகள் சட்டமுறைப்படி தண்டிக்கப் படவில்லையென்றால் நடுவுநிலை முஸ்லிம்களின் நிலமை விரக்தியாலும் கவலையாலும் இன்னும் மோசமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் அது, தீவிரவாத சிந்தனைக்கும் செயல்களுக்கும் வழிவகுத்திடும்" எனக்கூறி முடித்தார் ஸ்ரீகுமார்
 
நன்றி: புதிய  தென்றல் 

Friday, December 10, 2010

அயோத்தி: ஜன.28-ல் மறுபரிசீலனை மனுக்கள் மீது விசாரணை

லக்னோ, டிச.10- அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.



நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது.


மேலும், அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை

நாகப்பட்டினம், டிச. 9: நாகை மாவட்டம், சீர்காழியில் சிறுவனைக் கொலை செய்து, சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்குத் தூக்குத் தண்டனை மற்றும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சீர்காழி வட்டத்துக்குள்பட்ட வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த பாலு மகன் குமார் (31). கொத்தனார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு சீர்காழி அருகே அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் சுமார் ஒரு மாத காலம் கட்டுமான வேலைகளைச் செய்தார்.

வீட்டில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் ஒரு மாதத்துக்குப் பின்னர், 2002-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி காலை அந்த வீட்டுக்குச் சென்ற குமார்,     வீட்டிலிருந்த 10 வயதுச் சிறுவனையும், 12 வயது சிறுமியையும் ஜன்னல் கம்பியில் இணைத்துக் கட்டிவிட்டு, வீட்டில் இருந்த 13 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனிடையே, கட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவனும், சிறுமியும் தங்களை விடுவித்துக் கொண்டு தப்பிக்க முயன்றதைக் கண்ட குமார், அவர்கள் 2 பேரின் கழுத்தையும் அரிவாளால் அறுத்தார். பின்னர், 13 வயதுச் சிறுமியின் கழுத்தையும் அரிவாளால் அறுத்துவிட்டு, வீட்டிலிருந்த 15 பவுன் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு தலைமறைவானார்.

தாக்குதலில் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கழுத்து அறுபட்டதால் பேச முடியாத நிலையிலிருந்த 2 சிறுமிகளும், வீட்டுக்கு வெளியே வந்து, உதவி கோரினர். உடன் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் குணமடைந்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குமார், சுமார் 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

இதனிடையே, வழக்கு சிபிசிஐடி போலீஸôருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸôர், 2008-ம் ஆண்டு குமாரைக் கைது செய்தனர்.




காசா மீது இஸ்ரேல் தீவிரவாதிகள் விமான தாக்குதல்



ஜெருசலேம், டிச. 9: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிகையில், "மத்திய காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் ஆயுதக் கிடங்கையும் வடக்கு காசாவில் நெகவ் பகுதியில் உள்ள முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது' என்றார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் எஷ்கோ பகுதி மீது ஹமாஸ் இயக்கம் பீரங்கி தாக்குதல் நடத்தியது ஹமாஸ். இதில் உள்ளூர்வாசி ஒருவர் காயம் அடைந்தார்.  முன்னதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் தலைவர் கபி அஷ்கனேஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் "காசாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. அண்மையில் எல்லையில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இது தொடரும். கடந்த காலங்களில் பாதுகாப்பு படை எல்லையில் தீவிரமாக செயல்பட்டதைப் போல இப்போதும் செயல்பட தயாரக இருக்க வேண்டும்' என்றார்.


அவர் இவ்வாறு பேசிய சில மணிநேரங்களில் விமான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பணவீக்கம் 8.69 சதவீதமாக உயர்வு-உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் ஆபத்து



புது தில்லி, டிச.9: தொடர்ந்து 7 வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த உணவுப் பணவீக்கம் நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.69 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய வாரத்தை விட கணிசமான இந்த உயர்வு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.




வெங்காயம், பழங்கள் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 8.60 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு உணவுப் பணவீக்கம் சரிந்தது அதுவே முதல் முறை. கடந்த ஆண்டு இதே காலத்தில் உணவுப் பணவீக்கம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.
உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதோடு, தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஆலோசனைக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நடப்பாண்டு குறுவை சாகுபடி அளவு 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணப் பயிர்களான பருத்தி, கரும்பு ஆகியவற்றின் விளைச்சல் 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போது ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று கூற முடியாது. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் (மார்ச்) பணவீக்க விகிதம் 5 சதவீதம் முதல் 6 சதவீத அளவுக்கு குறைந்துவிடும் என்று டியோலைட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சந்தோ கோஷ் தெரிவித்தார்.


கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிர் ஆகியவை காரணமாக ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் உணவுப் பணவீக்கத்தை விட அதிகரிக்கும் என்று தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 89 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆசிய சந்தையில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதத்தில் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்த்தப்படாததால், அதன் தாக்கம் ஏதுமில்லை.
மகாராஷ்டிரத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக ஆக்ஸிஸ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் செüகதா பட்டாச்சார்ய தெரிவித்தார்.




நடப்பு நிதி ஆண்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 7.5 சதவீத அளவுக்குக் குறையும் என்று தலைமை  பொருளாதார ஆலோசகர் கெüசிக் பாசு தெரிவித்தார்.


வெங்காயத்தின் விலை 25.8 சதவீதமும், பழங்களின் விலை 18.31 சதவீதமும், பால் விலை 17.76 சதவீதமும் உயர்ந்திருந்தது. இதேபோல முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தன. பருப்பு விலை 10 சதவீதம் குறைந்திருந்தது. கோதுமை விலை 3 சதவீதம் குறைந்திருந்தது.


உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் ஆபத்து 

மது, மாது, கேளிக்கை நடனத்துடன் சவூதி இளவரசர்களின் விருந்து : விக்கி லீக்ஸ்



லண்டன் : மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது வளைகுடாவில் குற்றச் செயல்கள் மட்டுமல்ல, மது, மாது, கேளிக்கைகள் கிடைப்பதும் அரிது. அதிலும் குறிப்பாக சவூதி அரேபியாவில் இதையெல்லாம் நினைத்து கூட பார்க்கவே முடியாது என்று அனைவரும் சொல்வது உண்டு. அந்த சித்திரத்தை உடைக்கும் முகமாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பழமைவாத சவூதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க தூதரகங்களில் நடைபெற்ற உரையாடல்களை வெளியிட்டு ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி பரபரப்பாக்கும் விக்கிலீக்ஸின் புதிய தகவலை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திகை வெளியிட்டுள்ளது. ஜித்தாவிலுள்ள தூதரகங்களிலிருந்து வெளியான செய்திகளின் படி அல் துனைன் குடும்பத்தினர் கடந்த ஆண்டு ஹலோயின் விருந்து ஒன்றை பதுங்கு குழியில் உள்ள ஹாலில் கொடுத்துள்ளனர்.

ஆனால் அச்செய்தியில் விருந்து கொடுத்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் அவ்விருந்தை அமெரிக்க குளிர்பான நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் செய்ததும் தெரிய வந்துள்ளது. சவூதி அரேபிய சட்டத்தின் படி மது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தும், அவ்வறையின் உள்ளே நிறைய மது பாட்டில்கள் பரிமாறப்பட்டன. விருந்துக்கென்றே தருவிக்கப்பட்ட பிலிப்பைன் பெண்கள் புடை சூழ ஆட்டம் பாட்டத்துடன் கேளிக்கைகள் நடந்துள்ளது.

இது போன்ற விருந்துகளில் கொக்கைன் மற்றும் ஹஷிஷ் பயன்படுத்துவது சாதாரணமானது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்கேபிளில் சவூதியில் உள்ள இளவரசர்கள் மற்றும் ஷேக்குகள் வீடுகளில் உள்ள கீழ் தளத்தில் பலத்த காவலை விலக்கி பார்த்தால் உள்ளே பார், டிஸ்கோ, கிளப் என அனைத்தும் உள்ளதாக கார்டியன் பத்திரிகை 
தெரிவித்துள்ளது.

அவ்விருந்தில் 20 முதல் 30 வயதுள்ள 150 சவூதி ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டதாகவும் சவூதியின் சாதாரண இரவு நேர விருந்தில் காணப்படுவதை போல் ஏராளமான மதுவுடன், இளம் தம்பதிகள் பிரத்யேக பாடகர் பாடலுக்கு நடனமாடினர். நைஜீரியாவை சேர்ந்த வாலிபர்கள் தான் பொதுவாக சவூதி இளவரசர்களின் வீடுகளில் காவல் காப்பார்கள் என்றும் சவூதியில் உள்ள சுமார் 10,000 இளவரசர்களில் அனைவரையும் இது போல் குறை சொல்ல முடியாது என்றாலும் இன்னும் என்னென்ன ரகசியங்கள் வெளிவருமோ என்ற கலக்கம் சவூதிய அரச குடும்பத்தினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

Thursday, December 9, 2010

ஊழல் பற்றி புகார் செய்ய தனி இணையதளம்



புதுதில்லி, டிச. 9: ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை
(Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது.
இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான விடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.


மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும் என்றார் அவர்.



ஊழலற்ற நடைமுறை, பொது வாழ்வில் ஒழுக்கம் போன்ற தார்மிக நெறிகள் குறித்த கல்வி பள்ளிகளில் பாடமாகச் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். மற்றொரு மத்திய கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீகுமாரும் இந்த கருத்தரங்கில் பேசினார்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல்  "விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.

நன்றி: தினமணி 

மீரா சங்கரிடம் சோதனையிட்டதை ஏற்கமுடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா

புதுதில்லி, டிச.9: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரிடம் சோதனை நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் இதை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.



கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணா, இந்திய அரசால் இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.



மீரா சங்கர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று மிஸ்ஸிஸிப்பியில் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் உடல் முழுவதும் சோதனையிடப்பட்டார். தான் தூதர் எனக் கூறியும் அவரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பால்டிமோர் செல்வதற்காக மீரா சங்கர் ஜாக்ஸன்-ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையம் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானநிலைய அதிகாரிகளிடம் தூதரக ஆவணங்களை மீரா சங்கர் காட்டியுள்ளார். எனினும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீரா சங்கரை கைகளால் உடல் முழுவதும் சோதனையிட்டதாக நேரி்ல் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட இந்திய நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அமெரிக்க விமானநிலையங்களில்  இதுபோன்ற சில அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

செப்டம்பரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலின் பிறந்த தேதியும், அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள மற்றொரு பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததால் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளால் அமைச்சர் பிரபுல் படேல் விசாரிக்கப்பட்டார். தற்போது மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனையிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா.வில் ஈரான் விஞ்ஞானி நியமனத்தை அமெரிக்கா தடுத்தது

வாஷிங்டன், டிச.7: ஐ.நா.வின் பருவநிலை மாறுபாடு குழுவின் முக்கிய பதவியில் ஈரான் விஞ்ஞானியை நியமிப்பதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றி அந்நாட்டுக்கு அதிர்ச்சியையும், தலைவலியையும் ஏற்படுத்தி வரும் விக்கி லீக்ஸ் இணையதளம், இப்போது ஈரான் விஞ்ஞானியின் நியமனத்தைத் தடுத்ததாக வெளியிட்டுள்ள தகவல், அமெரிக்காவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.



ஈரானின் பிரபல விஞ்ஞானி ஜாஃபரி. அவர் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறார். ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு முக்கிய விஞ்ஞானிகளாலும் அவர் மதிக்கப்படுபவர். அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரியாகவும் உள்ளார். இவரை ஐ.நா.வின் பருவநிலை மாறுபாட்டு குழுவுக்கான வளரும் நாடுகளின் இணைத் தலைவர் பதவியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை அந்தக் குழுவின் தலைவரும், விஞ்ஞானியுமான ஆர்.கே. பச்செüரி எடுத்துவந்தார்.
ஆனால் இதை அமெரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. ஐ.நா.வில் ஈரானைச் சேர்ந்த ஜாஃபரியை நியமிக்கக்கூடாது என்று நெருக்குதல் அளித்தனர். இதை பச்செüரியால் மீற முடியவில்லை. ஜாஃபரிக்குப் பதிலாக ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியை நியமித்தார் என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.




இந்தத் தகவல் ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மீதான அதன் கோபம் இதனால் மேலும் அதிகரித்துள்ளது.
பச்செüரி மறுப்பு: ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை பச்செüரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐ.நா.வின் முக்கிய பதவியில் திறமையின் அடிப்படையில் முறையாகத்தான் ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி நியமிக்கப்பட்டார். இதில் சந்தேகம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவலுக்கு எல்லாம் அமெரிக்கா உடனடியாகப் பதில் அளித்து வந்தது. ஆனால் ஈரான் விஞ்ஞானி நியமனம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலை அமெரிக்கா இதுவரை ஏற்றோ, மறுத்தோ கருத்து தெரிவிக்கவில்லை.

நன்றி:தினமணி  

Wednesday, December 8, 2010

வாரணாசி குண்டு வெடிப்பு : ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பா?


வாரணாசி, டிச. 7
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வா யன்று மாலை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் காயமடைந்தனர். வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஷீட்லா கட் பகுதியில் தினந்தோறும் நடைபெறும் சிறப்புமிக்க தீப ஆராதனை நிகழ்ச்சியைக் காண செவ்வாயன்று மாலை ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.40 மணியளவில் இந்த ஆராதனை நிகழ்ச்சி துவங்கும். செவ்வாய்க் கிழமையும் நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருந்த போது 6.25 மணியளவில், தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சற்று தொலைவில் குண்டு வெடித்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 150 மீட்டர் சுற்றளவிற்கு அதன் பாதிப்பு இருந்தது. இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 1 வெளி நாட்டவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதர விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்த்துதுவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடத்த சில வருடங்களாக நடந்த தொடர் குண்டு விடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கபடும் இந்த வேளையில் அதில் குழப்பத்தை ஏற்படுத்தவும், மீண்டும் அயோத்தியில் ராமர் கோவில் கேட்டுவோம் என்று கூறி ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்த குண்டு நடத்தபட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கபட்டு வருவதாகவும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
 
 

கர்காரே கொலை:அதிகாரிகளை திணறடிக்கும் உயர்நீதிமன்றத்தின் கேள்விகள்???

மும்பை,டிச.7:மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே கொலை வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் மஹாராஷ்ட்ரா அரசையும், போலீஸ்-ரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளை திணறடித்துள்ளது.

கர்காரேயின் கொலையை இண்டலிஜன்ஸ் பீரோவும்(ஐ.பி) ஹிந்துத்துவா அமைப்புகளும் இணைந்து நிறைவேற்றியதாக கூறி பீகார் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகாந்த் யாதவும், சமூக ஆர்வலர் ஜோதி படேக்கரும் அளித்த மனுக்களை பரிசீலிக்கும் பொழுது மும்பை உயர்நீதிமன்றம் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் தடுமாறவைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கர்காரே கொலைத் தொடர்பாக மஹாராஷ்ட்ரா முன்னாள் போலீஸ் ஐ.ஜி எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற புத்தகத்தில் எழுப்பிய கேள்விகளைக் குறித்து பதில் அளிக்கவேண்டுமென நீதிபதிகளான பி.ஹெச்.மார்லாபள்ளெ, யு.டி.ஸால்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மும்பையை தாக்க பாகிஸ்தானிலிருந்து ஒரு குழுவினர் வருவது குறித்து ஐ.பிக்கு முன்னரே தகவல் கிடைத்தும் கூட அதனை அரசுக்கோ, மேற்கு கடற்படையினருக்கோ ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?

தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சதித்திட்டத்தைக் குறித்து ஏன் விரிவாக விசாரிக்கவில்லை?

கர்காரேயை கொன்றவர்கள் மராத்தி மொழியில் பேசியதாக கூறும் உண்மையை மறைத்தது ஏன்?

கர்காரே கொல்லப்படும் வரையிலான தாக்குதல் நடத்தியவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஏன் கண்காணிப்பிற்கு உள்ளாக்கவில்லை?

ஆகியன உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளில் முக்கியமானவையாகும். இக்கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பாலிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாக்குதல் தொடர்பாக க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரும், அரசால் நியமிக்கப்பட்ட பிரதான் கமிட்டியும் நடத்திய விசாரணையை விமர்சித்த நீதிமன்றம், உண்மையை கண்டறிவதில் இவை இரண்டும் தோல்வியை சந்தித்ததாக கூறியது.

தாக்குதல் நடந்தபொழுது இண்டலிஜன்ஸ் அறிக்கையை பிரதான் கமிட்டி கேட்டபொழுதும் அளிக்காதது ஏன்?

அத்தகையதொரு கமிட்டி அறிக்கையால் என்ன பயன்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கர்காரேயை கொன்ற கும்பலில் ஒருவர் மராத்தி மொழி பேசியதை கேட்டதாக மஹாராஷ்ட்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டு ஆணைய தலைவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பூஷன் கக்ரானி கூறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தீவிரவாதி மராத்தி மொழியில் பேசினார் என்றால் அவர் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை என்பது உறுதியாகும்.

தாஜ், ஓபராய் ஹோட்டல்களிலும், நரிமான் ஹவுஸிலும் இருந்த தீவிரவாதிகள் நடத்தி தொலைபேசி உரையாடல்கள் தீவிரவாத எதிர்ப்பு படை பதிவுச்செய்ய துவங்கியது கர்காரே கொல்லப்பட்ட பிறகாகும். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என நீதிபதி பி.ஹெச்.மார்லாபள்ளெ கேள்வியெழுப்பினார்.

சி.எஸ்.டி ரெயில்வே ஸ்டேசனில் முக்கிய ப்ளாட்ஃபாமில் பொருத்தப்பட்டுள்ள 16 சி.சி. டி.வி கேமராக்கள் தாக்குதல் நடக்கும்பொழுது செயல்படவில்லை எனக் கூறும் போலீசாரின் வாதத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.

தாக்குதல் நடப்பதற்கு முன்பு அதனை பழுதாக்கியது யார்? என்றும் மார்லாபள்ளெ கேள்வி எழுப்பினார்.

தாக்குதல் தொடர்பாக 35 சிம் கார்டுகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய காபினெட் செயலாளர் வழியாக ஐ.பி துணை இயக்குநர் பிரபாகர் அலோக்கிடம் ஒப்படைத்த பிறகும் இவ்விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆனால், ஐ.பிக்கு தினந்தோறும் கிடைக்கும் தகவல்கள் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை எனவும், எனவே அதனை முக்கியமாக கருதவேண்டாம் என்பதும் அரசுதரப்பு வழக்கறிஞரின் பதிலாகும்.

முஷ்ரிஃபின் நூலில் எழுப்பட்ட சந்தேகங்கள் முக்கியமானதாகும் என கருத்துத் தெரிவித்த நீதிமன்றம் அவற்றை எழுப்ப ஒரு குடிமகன் என்ற நிலையில் அவருக்கு உரிமையுண்டு எனக் கூறியது.

விசாரணை நடைபெறும் வேளையில் முஷ்ரிஃபும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை அரசால் அளிக்கமுடியாது எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
 

நீளும் 'ரத்தக்கறை'; அமீத்ஷா மீது மேலும் ஒரு கொலை வழக்கு

குஜராத்தின் முதல்வரும் நரவேட்டையில் புகழ் பெற்றவருமான நரேந்திர மோடியின் சகாவும், முன்னாள் அமைச்சருமான அமீத்ஷா, சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு, சிறை சென்று பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் குஜராத்திற்கு வெளியே தங்கியிருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சொராப்தீன் போலி என்கவுண்டர் பிரச்சினையால் பதவியும் பறிபோய் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கும்  அமீத்ஷாவுக்கு மேலும் ஒரு சோதனை!

சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்பவர் போலீசாரால்  2006 ஆம் ஆண்டு என்கவுடன்டரில்  கொல்லப்பட்டார். சொராப்தீன் வழக்கின் முக்கிய சாட்சி இவர் என்பதால்தான் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலை நடைபெறும் போது அமைச்சராக இருந்த அமீத்ஷா, இக்கொலைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சில  நாட்களில் போலீஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியனுடன் [இவர் சொராப்தீன் என்கவுண்டர் வழக்கில் கைதாகி இப்போது சிறையில் இருக்கிறார்]  13  முறை தொலைபேசியில்  பேசியுள்ளார் என்றும், இதன் மூலம் துளசிராம் போலி என்கவுன்டரிலும் அமீத்ஷாவுக்கு தொடர்பு இருக்கிறது என்பது உறுதியாகிறது என்றும், துளசிராம் போலி என்கவுண்டர்  வழக்கையும் சி.பி.ஐ. க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும், இவ்வழக்கு தொடர்பாக அமீத்ஷாவை சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதிக்கவேண்டும் என்றும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது.

சி.பி.ஐ.யின் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; 'பினிசிங்' தான் சரியில்ல. என்ற மக்களின் கமெண்டுக்கு இடம்தராமல், அமீத்ஷாவின் போலி என்கவுண்டர்களை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உரிய தண்டனை பெற்றுத் தருவதில் இறுதிவரை சி.பி. ஐ. உறுதியாக இருக்கும் என நம்புகிறோம். 

-- 

Monday, December 6, 2010

ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011

*ஐஐடியில் பொறியியல் (B.E/B.Tech) படிக்க IIT-JEE 2011*
அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை *B.E/B.Tech
*சேர்த்தாலும்
தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும்
படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில்
அதிகமாகவே உள்ளது. கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில்
நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு
உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம்
ரூபாய் சம்பளத்தில் வேலை, இலவசமாக வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு,
கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம்
இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின்
பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

தனியார் கல்லூரிகளை விட இங்கு கல்வி கட்டணம் குறைவு, வசதி இல்லாத
மாணவர்களுக்கு மத்திய அரசின் இலவச கல்வி உதவி தொகை (ஐஐடி-யில் படிக்கும்
முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை
அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று
கொடுக்கப்படுகின்றது. படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில்
வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத
சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை
வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும்
உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

*இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
*இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

*இட ஒதுக்கீடு :* ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட
வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

*IIT-JEE 2011 :* தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த
மாணவர்கள் 2011 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின்
(IIT-JEE 2011) விண்ணப்பம் விணியோகிகப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய
விபரங்கள் அட்டவணை இடம் பெற்றுள்ளது). மேலும் விபரம் www.jee.iitm.ac.in இந்த
இணையதளத்தில் உள்ளது

*யார் இந்த தேர்வை எழுத முடியும்?*

2010-ல் தேர்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2011-ல் தேர்வு எழுத உள்ள மாணவர்கள்
இந்த தேர்வை எழுதலாம். மாணவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே IIT-JEE தேர்வு
எழுத முடியும். +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள், +2
வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள். 3 ஆண்டு டிப்ளமோ படித்த
மாணவர்கள். +2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

*இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?*

இது வருடா வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை
பார்த்தால் பாடத்தின் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என
அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும்.
மேலும் CBSC-யின் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற
தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும்.
குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும்.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம்,
இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும்,
அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான்,
உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.
மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த
தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது
நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள்
நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ். தேர்வை பற்றி மேலும்
விபரம் அறிய மற்றும் உங்கள் சந்தேகங்களுக்கு *sithiqu.mtech@gmail.com* இந்த
மெயிலுக்கு தொடர்புகொள்ளவும்

*- S.சித்தீக்.M.Tech
*

*IIT-JEE 2011 **தேர்வை பற்றிய விபரம்*

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :

டிசம்பர் – 20 இன்ஷா அல்லாஹ்

(ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி *டிசம்பர்* 15)

தேர்வு நடைபெறும் தேதி

ஏப்ரல் – 10

இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி

மே – 25 இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Chairmen, JEE, IIT Madras, Chennai - 600036

Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

சென்னை ஐ.ஐ.டி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி
கிளைகள்

விண்ணப்பத்தின் விலை :

Rs.1,000,

(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய

www.jee.iitm.ac.in/online2011

வயது வரம்பு

அக்டோபர் 1, 1986 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

பாப்ரி மஸ்ஜித்:பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான தீவிர பிரச்சாரம் இன்று துவங்குகிறது...


புதுடெல்லி,டிச.6:'

பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற முழக்கத்தை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அளவிலான தீவிர பிரச்சாரம் இன்று டெல்லியில் துவங்குகிறது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததைக் குறித்து விசாரணையை மேற்கொண்ட லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசின் போக்கை கண்டித்து டெல்லி ஜந்தர்மந்தரில் முன்னுறூக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று தர்ணாவில் ஈடுபடுவர்.

ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியதின் நினைவு தினமான இன்று(டிசம்பர்-6) துவங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம் இதே ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் கரங்களால் கொலைச் செய்யப்பட்ட இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் இரத்த சாட்சி தினமான ஜனவரி 30 ஆம் தேதி முடிவடையும்.

'பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவோம்! மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்போம்' என்ற முழக்கத்துடன் டிசம்பர் 10 ஆம் தேதி தீவிரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படும்.

பாப்ரிமஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்டவெளிச்சமான சூழலில்தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொள்கிறது.

மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டி பிரச்சாரம், ஆவணப்பட வீடியோ காட்சிகள் விநியோகம், கண்டன பேரணிகள், தர்ணாக்கள் ஆகியன இப்பிரச்சார வேளையில் நடத்தப்படும். இன்று காலை 11 மணிக்கு ஜந்தர் மந்தரில் துவங்கும் தர்ணா மதியம் 2 மணிக்கு முடிவடையும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், சமூக-மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆகியோர் தர்ணாவில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்துவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Friday, November 12, 2010

கண்திருஷ்டி


1. கண்திருஷ்டி என்றால் என்ன?
தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)
'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?
கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.
கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)


3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?
கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)


கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.
'அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?
எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.
'ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)
மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.


5. ஓதிப்பார்த்தல்
:
கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.
'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)
'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.
'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)


நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.
நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)

'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)
இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


6. ஓதிப்பார்க்கும் முறை:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

7. நடை முறை:
நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.
இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது

பலஸ்தீனர்களின் பொழுதுகள் எவ்வாறு கழிகின்றன?

*பலஸ்தீன் எனும் புனித பூமியை நாம் அனைவரும் மறந்து விட்டோமா? அதை யூத
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க வேண்டிய கடமை முஸ்லிம்களாகிய நமக்கு முன்
நிற்கிறது என்பது நமக்கு நினைவு உள்ளதா? *

ஒரு பலஸ்தீன் சகோதரனின், ஒரு பலஸ்தீன் பெண்மணியின், ஒரு பலஸ்தீன்
குழந்தையின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகிறது தெரியுமா? நாம் கழிக்கும் ஒரு
சாதாரண நாள் போலவா அது கழிகிறது?
*இல்லவே இல்லை!
**அவர்களின் ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பு நிமிஷங்கள்... போராட்ட கணங்கள்...
இந்தப் படங்களைப் பாருங்கள் புரியும்...*