Thursday, April 28, 2011

கிராம்பு மருத்துவ குணங்கள்

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய்,
கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள்,
கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி
மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு
போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு
வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு
வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச்
சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும்,
சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன்
அளிக்கிறது.

* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால்
ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால்
வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள்
வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக
சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை
எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும்
எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச்
சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்
சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக்
கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம்,
ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட
ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை
வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால்
தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம்
குறைந்து குணம் கிடைக்கிறது.

* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த
நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள்
தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத்
தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
நன்றி:மருத்துவர்.மு.சாதிக்

Wednesday, April 27, 2011

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?

"நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த
அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில்
பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில்
சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி
எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு
பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின்
மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி
என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண
முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான்
பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை"
சன்சீவ் பட் - படம் தெஹெல்கா
குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்
முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த
சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள
பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை
தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத்
தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின்
ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக்
கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும்,
இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும்,
அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி
பகிரங்கமாக உத்திரவிட்டார்.
அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின்
மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம்
கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம்
குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை
வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள்
வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும்
மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.
கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில்
இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி
28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின்
முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே
முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின்
தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள
நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு
அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப்
படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்
என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர்
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார்.
ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர்
பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட
இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.
முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான
பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட
முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து
வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை
மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத்
துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு
எரித்துள்ளனர்.
இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று
ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த
கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும்,
கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல்
நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற
தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை
போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட
மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற
போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ
பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட்
தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
"எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த
அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை
கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது
பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற
வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ
மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது
மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக
வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா
இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக்
கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில்
சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின்
பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது"
2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த
படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன்
ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின்
பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக்
கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து
பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப்
பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு
நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும்.
தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.
ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட
முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால்
மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள்
மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை
நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு
வந்து விட்டன. மோடியின் பொருளாதார 'சாதனைகளின்' ஒளியில் தான் கருகிப்
போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக
மறந்து விடத் துடிக்கிறார்கள்.
குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும்
தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே
பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த
அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால்,
ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை
கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – "இன்னும்
எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?"
(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு
மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து
கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும்
கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக
விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின்
பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த
இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று
சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.
வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம்
இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த
பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ்
மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும்,
அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர்
துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை
என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.
ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள்
துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.
நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம்
திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான்
நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும்
கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை
விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான
நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது
போடுவீர்கள்?
____வினவு:

Saturday, April 23, 2011

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.*

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல்
நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

*I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : *

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு :
பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம்,
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar,
Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என
பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என
பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக
சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான்
இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த
பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப்
கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

*2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு :* பொறியியல்
(B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு.
(மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ
துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group
கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு
பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.
*
3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : *மருத்துவம் (MBBS,
BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு.
(பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக
மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது
*
4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :* B.Com, CA (Charted
accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்
நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.
*
5. வரலாறு, பொருளாதாரவியல் : *எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு
தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள்
உள்ளன

*6. Vocational குரூப் : * தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு,
பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.
தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.
*
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):*
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார்
துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள்
உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil
etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.
டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல்
(B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது
சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும்.
டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா
படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.
*
III. சான்றிதழ் படிப்பு (ITI):*
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற
துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த
பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால்
அதிக சம்பளம் கிடைக்காது.

*
10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (*கோரிக்கை:- தயவு செய்து
மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு,
மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து
வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

Tuesday, April 19, 2011

நமது மூளை: சுவாரசியமான சில உண்மை!

"மனிதன் தனது மூளையால் ஓவியங்களை வரைகிறானே தவிர, கைகளால் அல்ல" என்றார்
உலகப் புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோஒருவர் சிறு தவறு செய்தாலும்
அனிச்சையாக, `மூளையிருக்கா?' என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா
செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப்
போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது,
மூச்சுவிடுவது, நினைவுகள்,
உணர்வுகள், இதயத் துடிப்பு,
வளர்ச்சி, செக்ஸ்… ஏன், உயிரும் கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது.
ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள'
பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப்
பார்ப்போம்…அதிர்ஷ்ட நடிகைஇங்கிலாந்து நாடக நடிகையான ரியான்னன்
பிரைதெர்க் (வயது 28), ஒருநாள் தனது மூளையில் ஏதோ வெடிப்பதைப் போல
உணர்ந்தார். தொடர்ந்து
அவருக்குக் கடுமையான தலைவலியும், வாந்தி உணர்வும் ஏற்பட்டன.
பரிசோதனையில் அவரது மூளையில் `சப்அராக்னாய்டு' ரத்தக் குழாய் சேதம்
அடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்நிலை
ஏற்பட்டவர், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். தனது இறுதிச்
சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்த ரியான்னன், தனது நகைகளையும்
உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். கடைசியில், `ரிஸ்க்' எடுத்து
ஓர் அறுவைச்சிகிச்சைக்கு உடன்பட்ட அவர், பின்னர் முழுமையாகக் குணமடைந்து
இயல்பு நிலையை அடைந்தார்.மூளைக்கு உணவு
மத்திய தரைக்கடல் பகுதி கடல் உணவுகள், மூளைக்கு நன்மையளிப்பவையாக உள்ளன
என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணையை
அதிகமாகச் சாப்பிடுவது, வயதால் ஏற்படும் மூளைப் பாதிப்பைக்
குறைக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
மீனும், மூளைக்கு நல்லது.மூளைச் சாவு
`எலக்ட்ரான் செப்பல்லோகிராமில்'
பார்க்கிறபோது மூளை செயல்பாடு இல்லாத நிலையே `மூளைச் சாவு'
எனப்படுகிறது. அப்போது அனைத்து தன்னிச்சையான, தன்னிச்சையற்ற
செயல்பாடுகளும் நின்று போகின்றன. அதில் வலி உணர்வும் அடக்கம்.
மருத்துவரீதியான மரணத்தில், ரத்த ஓட்டம், சுவாசம், இதயத் துடிப்பு
ஆகியவையும் நின்று விடுகின்றன. மூளைச் சாவு ஏற்படும்போதுதான் உறுப்பு
தானம் செய்யப்படுகிறது.மூளையும், அளவும்
வயது
வந்த மனிதன் – 1.360 கிலோ கிராம்
யானை – 4.780 கி.கி
ஒட்டகச்சிவிங்கி – 680 கிராம்
ஆந்தை – 2.2 கிராம்
பாம்பு – 0.1 கிராம்
பல்லி – 0.08 கிராம்
புலி – 265 கிராம்
மேக்பீ பறவை – 5.8 கிராம்
திமிங்கலம் – 7,800 கிலோ கிராம்
***பிறந்த குழந்தையின் மூளை எடை 400 கிராம்.ஒரு மனிதனின் எடையில்
மூளையின் பங்கு 2 சதவீதம்.மூளையின் 25 சதவீதம், பார்வையுடன்
தொடர்புடையது.இதயத்தில்
இருந்து 20 சதவீத ரத்தம் மூளைக்குப் பாய்கிறது.அமெரிக்க முன்னாள்
ஜனாதிபதிகளில் 11 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 4
பேருக்கு
பணியின்போது அது நேர்ந்தது.மூளைக்கு 10 நொடிகள் ரத்தம் பாயவில்லை
என்றால் மயக்கம் வந்துவிடும்.ஆறு வயதில் மூளை முழு எடையை எட்டுகிறது.

Monday, April 18, 2011

அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை!



மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை,  இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். இன்று  இந்தியாவின்  நாயகர் போல முன்னிற்கிறார்.  தேசத்தின் ஊழல் கறையை அகற்ற வந்த உத்தமர் அவர்  என்று முழக்கங்கள் கேட்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஃபேஸ்புக், டுவிட்டர் என எங்கெங்கு காணினும் ‘அன்னா ஹசாரே;, ‘அன்னா ஹசாரே’.  திடுமென இப்படியொருவர் எங்கிருந்து குதித்து வந்தார் என்று யாரும் கேட்கவில்லை. மக்கள் அனைவரும் அவர் பின்னால் திரண்டு நிற்பதாய் என்.டி.டி.வி, டைம்ஸ் நௌவும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவர்தான் நம் நம்பிக்கை என கைகாட்டுகின்றன.  சாத்தூரின் ஒருச் சின்ன டீக்கடையில் பேப்பர் படிக்கும் நான்கைந்து பேரின் விடிகாலைப் பேச்சில் இப்போது அன்னா ஹசாரேவும் இருக்கிறார்.

எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத்தான் அவரும் பேசினார். “ஊழலை ஒழிக்க முடியும்” என பேசியபோதெல்லாம்  ஏளனமாய் சிரித்த அலுவலக நண்பன் இப்போது அன்னா ஹசாரேவின் விசிறி. ஊழலை அதிகாரபூர்வமாக்கிவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டே வேதனைப் பட்டபோது, “ஆமாம், வேறு என்ன செய்ய முடியும்?” என அங்கலாய்த்தவர்கள் இப்போது அன்னா ஹசாரேவின் பேரை உச்சரித்தபடி  ஊர் ஊருக்குக் கூட்டம் நடத்துகிறார்கள். மக்களின் மனமாற்றங்கள்  இங்கு ‘உடனடி’யாக நடந்துவிடுகின்றன.


நீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக்  கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும்,  சினிமா  நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள்.  தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன.  ஊழலில் திளைக்கும்  காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன.  இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையில்லாதவை. அன்னா ஹசாரே என்னும் தேவதூதர் வந்து ஊழல் பற்றிப் பேச வேண்டும். அதற்காக காத்திருந்தார்கள் போலும்.

ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பால் மசோதா வரைவை தயாரிக்கும்  கமிட்டியில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும் என அன்னா ஹசாரே கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசு அதனை நிராகரித்து, ஒரு குழுவை அமைக்க முன்வந்ததும், ஹசாரே காலவரையற்ற  தன் உண்ணாவிரதத்தை ஒருநாள் துவக்கினார். தொலைக்காட்சிகள் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தன.  அவ்வளவுதான் சடசடவென எங்கும் தீப்பற்றிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வேண்டும்.  அது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தொட்டு நின்ற பிறகு  வந்தது. அன்னா ஹசாரேவும் வந்துவிட்டார். இனி ஊழலை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாய்  வரிந்து கட்டி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.

இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி,  வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம்.  பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்  இருக்க ஆரம்பித்தார்.

நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும்.  அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன  என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில்  வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.

ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும்  ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின்  உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே  உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.  ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக  பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது.  இது விதி.  இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும்  கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.

இப்படி ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த மசோதா சரியாக நிறைவேற்றப்பட்டால்,  ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தக் கூடும். ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் இன்னொரு புறம். இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை நாளைக்கு  அமல்படுத்தப் போகிறவர்கள். சிரிப்பாக இல்லை?

இந்த தேசத்தில் திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே? இதோ, மதுரையில்  அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது? நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம்.  ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி  அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து  நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம்.

அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி,  இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை  கண்டாரோ?

இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம்.  அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? 

நன்றி:www.mathavaraj.com 

Saturday, April 16, 2011

கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பெயர்களை வெளியிட முடியாது


புதுதில்லி, ஏப். 15: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்கள் அனைத்தும் இரு நாடுகளுக்கு இடையேயான இரட்டை வரிவிதிப்பைத் தவிரிக்கும் ஒப்பந்தம் மூலமாகப் பெறப்பட்டிருப்பதாகவும், அதனால் பெயர்களை வெளியிடுவது இயலாத செயல் எனவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.
எனினும் ஜெர்மனியின் லீக்டென்ஸ்டைன் வங்கியில் பணத்தைப் பதுக்கியிருக்கும், இப்போது விசாரிக்கப்பட்டு வரும் 6 பேரின் பெயர்களை வெளியிட அரசு சம்மதித்திருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
நீதிபதி சுதர்ஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவர்கள் மீது விசாரணை தொடங்கப்படும்வரை அவர்களது பெயர்களை வெளியிட முடியாது என்று கோபால் சுப்பிரமணியம் அப்போது கூறினார்.
இந்தக் கருத்தால் திருப்தியடையாத நீதிபதிகள், கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை வெளியிடுவதற்கு எந்தச் சட்டம் தடையாக இருக்கிறது என்பதை வழக்கு அடுத்தமுறை விசாரணைக்கு வரும்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ராம்ஜேத்மலானி தவிர, பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி. கேபிஎஸ் கில், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோரும் இந்த வழக்கில் மனுதாரர்களாவர்.
இதற்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பெயர்களை அரசு பெற்றிருக்கிறது. எனினும் அவற்றை வெளியிடுவதில் அரசுக்கு விருப்பமில்லை என கோபால் சுப்பிரமணியம் கூறினார்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் அந்தப் பெயர்களை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

Friday, April 15, 2011

மோடிக்கு புகழாரம்:ஆதரவாளர்கள் அன்னா ஹஸாரேவை விட்டு விலகுகிறார்கள்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை புகழ் நரேந்திர மோடியை புகழாரம் சூட்டியதற்கு அன்னா ஹஸாரே அளித்த விளக்கம் அவருடைய ஆதரவாளர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை விட்டு விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
குஜராத்தின் கிராம வளர்ச்சித்திட்ட முன்மாதிரியை கவனத்தில் கொண்டு தான் மோடியை புகழ்ந்ததாக நாட்டிய கலைஞரும், சமூக சேவகருமான மல்லிகா சாராபாய்க்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹஸாரே குறிப்பிட்டிருந்தார்.

குஜராத்தில் அடிப்படை உண்மையின் வெளிச்சத்தில் மோடியின் கிராம வளர்ச்சி முன்மாதிரியைக் குறித்து தாங்கள் கேள்வி எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் இணந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஹஸாரேவின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்து நரேந்திரமோடி கடிதம் எழுதியிருந்தார்.
வகுப்பு வாதத்தையும்,அரசியலையும் குறித்து தெளிவில்லாத விளக்கத்தை ஹஸாரே அளிக்கிறார். 2002 முஸ்லிம் இனப் படுகொலையில் குஜராத் அரசின் பங்கினைக் குறித்து ஹஸாரே பேசக்கூட இல்லை என சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தங்களின் குற்றங்களை மறைப்பதற்காக குஜராத்தில் வளர்ச்சி என்ற மாயையை அடையாளங்காண வேண்டுமென அவர்கள் ஹஸாரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள், தொழிலாளிகள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மோடியின் அரசு செயல்படுகிறது. குஜராத்தில் ஏகாதிபத்திய ஆட்சிக்கு புகழாரம் சூட்டிய ஹஸாரேவின் நடவடிக்கை எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மக்கள் சிவில் உரிமை(பி.யு.சி.எல்) தலைவர் ஜெ.எஸ்.பந்தூக் வாலா, மனித உரிமை இயக்க இயக்குநர் பிரசாந்த், பேராசிரியர் ஃபெடரிக் பிரகாஷ், ரோஹித் பிரஜாபதி, திருப்பதி ஷா, நந்தினி மஞ்சரேக்கர் ஆகியோர் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். மோடியை புகழ்த்தியதை வாபஸ் பெற மல்லிகா சாராபாய் ஹஸாரேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Thursday, April 14, 2011

அன்னா ஹசாரே!! காந்தியவாதியா? காவிவாதியா?


ஏப்ரல் 14, இந்த வாரம் முழுவதும் பத்திரிகையில் நிறைந்து நின்ற நபர் அன்னா ஹசாரே, யார் இவர்? இத்தனை நாள் இவர் எங்கே இருந்தார்.

இதுபோன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. ஊழல் நடப்பது நம் நாட்டில் ஒன்றும் புதிதல்ல.

இதற்க்கு முன்பும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு வாங்கிய ஆயுதத்திலும், கார்கில் யூத்தத்திலே கொல்லப்பட்ட வீரர்களுக்கு வாங்கிய சவபெட்டிகளிலும், கொள்ளை அடித்தார்கள்.

அப்போது இந்த அன்ன ஹசாரே எங்கு இருந்தார்?. இப்போது நடந்த ஜி ஊழலின் தொடக்கமே பாரதிய ஜனதா கட்சிகாரர்கள் ஆட்சியில்தான். அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்?.


குஜராத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்ததே ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொள்ளபட்டர்களே அப்போது இவர் எங்கே போனார். இன்றும் அந்த கயவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்து இருக்கிறார்களே மோடியின் ஆட்சியில் ஊழலும், மதவாதமும் தலைவிரித்தாடுதே அவர்க்களுக்கு எதிராக இந்த காந்தியவாதி என்ன செய்தார்?.

இந்தியா முழுவதும் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றார்களே அப்போது இந்த காந்தியவாதி எங்கு இருந்தார்? இந்தியாவின் ஆண்மகன் கர்கரே கொல்லப்பட்டாரே அப்போது இவர் எங்கு போயிருந்தார்?.

இதை செய்த காவிபயங்கரவாதிகள் இப்போதும் வெளியில், அப்பாவி மக்கள் இப்போதும் ஜெயிலில் இது இந்த வெத்து வேட்டு காந்தியவாதிக்கு தெரிய வில்லையா? தெரிய! விரும்ப வில்லையா?.

ஏன்? இந்த கேள்விகள் நம் மனதில் எழுகின்றது என்றால்! இந்த காந்தி வேடம் போடும் நபர் நடத்தின ஊழல் எதிர்ப்புக்கு முழு ஆதரவு கொடுத்தவர்கள் நம் தேசபிதா மகாத்மா காந்தியை கொன்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கூட்டத்தினர்கள்.

இந்த காந்திய வேடதாரி! இப்போது புறப்பட்டது குண்டு வெடிப்புகளில் சிக்கித்தவிக்கும் ஹிந்து தீவிரவாதிகளை காப்பாற்றவா? நாட்டை காப்பாற்றவா? இந்த அன்ன ஹசாரே
போராட்டத்தை இந்த பார்பன ஊடகங்கள் ஒரு பெரிய விசயமாக தூக்கி பிடிக்கும் போதே சந்தேகம் வந்தது. அது இப்ப நிரூபணம் ஆகிவிட்டது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு! "எலிக்கும் பூனைக்கும் கல்யாணமாம்" அது போல்தான் இருக்கிறது "காந்தியவாதிக்கு காந்த்திஜியை கொன்றவர்களுடன் கூட்டு" இது எப்படி இருக்கு?

இவர்களை தோலுரிக்கும் வரை முரசு முழங்கிக் கொண்டே இருக்கும்.......
 

Wednesday, April 13, 2011

14 வது சட்டமன்ற தேர்தல்-உங்களை விற்காதீர்கள்!

இன்று 14-வது சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களைத் தமிழகம் தேர்ந்தெடுக்க இருக்கும் நாள். 234 சட்டப்பேரவைக்கான இடங்களுக்கு 2,748 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர்தான் பெண்கள் என்பது வருத்தத்தையும், 240 பேர் அதிகாரப்பூர்வமாகத் தங்களைக் கோடீஸ்வரர்கள் என்று அறிவித்துக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியையும் அளிக்கிறது.
பணக்காரர்கள் தேர்தலில் போட்டிபோடக் கூடாதா, கோடீஸ்வரர்கள் களமிறங்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒன்றிரண்டு பேர் களமிறங்கினால் பரவாயில்லை. அதிக அளவில் களமிறங்கி இருக்கிறார்களே, இவர்கள் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயியை, தினக்கூலித் தொழிலாளியை, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை இழுத்துப் பிடித்து அவஸ்தைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவார்களா, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிப்பார்களா என்று யோசித்துப் பார்க்கும்போது, அதிர்ச்சியுடன் அச்சமுமல்லவா மேலோங்குகிறது.
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என்று எல்லா ஆறுகளும் மணல் கொள்ளையால் வறண்டு போய்க் கிடக்கின்றன. பல கிராமங்களிலும், நகரங்களிலும் குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஆனால், தமிழகம் முழுவதும் கோடீஸ்வர வேட்பாளர்களின் உபயத்தால் பணம் மட்டும் தண்ணீராகச் செலவழிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமாகத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பணம் 53 கோடி ரூபாய் என்றால் அதில் வேட்பாளர்கள் விநியோகம் செய்ய இருந்த பணம் தமிழகத்தில் மட்டும் 41 கோடி ரூபாய். களமிறங்கி இருப்பவர்களில் பலர் கோடீஸ்வரர்களாயிற்றே, பிறகு பணம் புரளாமலா இருக்கும்?
பணப் பட்டுவாடா என்றால் இது சாதாரணப் பட்டுவாடாவாக இல்லை. கார்ப்பரேட் கலாசாரம் பரவிவிட்டிருப்பதன் அடையாளமாகத் திட்டமிட்டு ஏதோ ரேஷன் விநியோகம் செய்வதுபோல பல இடங்களில் பணப் பட்டுவாடா நடைபெற்றிருக்கிறது. நூறு வாக்காளர்களுக்கு ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டு, அவருக்கு உதவியாக மூன்று பேர் நியமிக்கப்பட்டும் பணம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள் கொள்கையற்றவையாகி விட்டன. சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ஐந்து ஆண்டுகளில் காவிரிப் பிரச்னை தீரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவில்லை, மின்வெட்டுத் தொடர்கிறது, நெசவாளர்கள் நலிந்துபோய்க் கிடக்கிறார்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது, சிறு தொழில்கள் நலிந்து வருகின்றன, விவசாயிகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்குக் கேட்பது?

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஊர்ஊராகப் போய் என்ன பேசியிருக்க வேண்டும்? மத்திய ஜவுளித்துறை அமைச்சரான பிறகு தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை முன்னேற என்னென்ன திட்டங்கள் வகுத்தேன், ஒன்றன்பின் ஒன்றாக மூடிக்கொண்டு வரும் நூற்பாலைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுச் செயல்பட நான் உதவினேன் என்றல்லவா சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்? "ஜெயலலிதா பத்து ஆண்டு ஆட்சி செய்தாரே, உங்களுக்கு இலவசமாக ஏதாவது தந்திருக்கிறாரா? ஒரு குன்றுமணி, ஒரு கொண்டை ஊசி தந்திருக்கிறாரா? நாங்கள் இலவசமாகத் தருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்க அவருக்கு வெட்கமாக இல்லை?
திருவாரூர் முத்துவேலர் மகன் கருணாநிதியாக, பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு அனல் தெறிக்கும் வசனங்களை எழுதிய மு. கருணாநிதியாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் கருணாநிதியாக 1962-ல் தஞ்சாவூரின் பெரும் தனவந்தர் பரிசுத்த நாடாரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது அவருடைய உயரமென்ன, வெற்றியின் மகத்துவம் என்ன?
இன்று, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, ஐந்து முறை முதல்வராக இருந்தவர், 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், தனது சொந்த ஊரில் வெற்றி பெறத் தனது மகனையும், மகளையும் தெருத்தெருவாக அலையவிட்டு வாக்குச் சேகரிக்கிறார் என்றால், தானே 5 நாள்கள் கிராமம் கிராமமாகத் தள்ளாத 87 வயதில் "இதோ மண்ணின் மைந்தன் வந்திருக்கிறேன்' எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்' என்று வாக்காளர்களிடம் கெஞ்சுகிறார் என்றால், முதல்வர் கருணாநிதியின் இன்றைய உயரம் என்ன? அவரது மரியாதைதான் என்ன?
ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே...
பணம்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று சொன்னால், பிறகு மக்களாட்சி இருந்தால் என்ன இல்லாமல் போனால்தான் என்ன? கோடீஸ்வரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததுபோல பணக்காரர்களுக்கும், வருமானவரி செலுத்துபவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமே...

மக்களாட்சி முறை வாக்குச் சீட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி. இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்த ஆட்சியைத் தூக்கி எறிந்து மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பு என்பதுதான் மக்களாட்சி முறையின் சிறப்பு.
நல்லவர்கள் யாரும் போட்டி போடவில்லையே, களத்தில் இருக்கும் இரண்டு பேருமே நல்லவர்கள் இல்லையே, இதற்கு அது மாற்று, அதற்கு இது மாற்று என்று நாங்கள் வாக்களித்து ஓய்ந்ததுதானே மிச்சம்... என்று 13 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்து சலித்தபடி 14வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.
நல்ல தலைவர்களை உருவாக்குவதும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், நல்லவர்களுக்குத்தான் வாக்களிப்பது என்று தீர்மானிப்பதும் வாக்காளர்களின் கையில்தானே இருக்கிறது? தோல்வி அடைவார் என்று கருதப்படும் நல்லவர், வல்லவராக இல்லாவிட்டாலும் வெற்றியடையச் செய்யும் சக்தி உங்களது வாக்குச் சீட்டுக்கு உண்டே, அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?
மாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை. தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவதற்கு ஒப்பானது. மத்தால் தயிர் கடையும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி கயிற்றை இழுத்துக்கொண்டே இருந்தால், உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தாலும், மக்களாட்சி முறை தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால், நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இன்றைய தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பணத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்கிற அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் நம்பிக்கையைத் தகர்க்க முடியும். அடுத்த தேர்தலில், எந்த வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து ஏமாற மாட்டார்கள்.
வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைத் தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்!

நன்றி:தினமனி

Tuesday, April 12, 2011

முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: பிரவீண் குமார் எச்சரிக்கை

சென்னை, ஏப். 11: சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார்.




வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்ட தொகுதிகளின் நிலவரங்களை கையில் வைத்துக் கொண்டே ஆணையம் இவ்வாறு கூறியுள்ளதாகக் கருத்து நிலவுகிறது.



 யார் தகவல்கள் அளிப்பார்கள்? ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொதுப் பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் என தனித்தனியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.





 அவர்கள் தரும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்தும், பொதுவாக வரும் புகார்களின் தன்மையைக் கொண்டும் முறைகேடுகளின் அளவு நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



 புனித ஜார்ஜ் கோட்டையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியது:



 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கருதினால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த பிறகும்கூட அதை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்தலை அறிவிக்க முடியும்.



 தேர்தல் பிரசாரம் முடிவுற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.



 பணம், பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ள தொகுதிகளின் விவரங்கள் ஏதும் கணக்கெடுக்கப்படவில்லை. பணப்பட்டுவாடா குறித்து சில தொகுதிகளில் அதிகளவு புகார்கள் வருகின்றன என்றார் பிரவீண் குமார்.



 எவ்வளவு பணம் பறிமுதல்? தமிழகத்தில் வாகன சோதனைகள் மூலம் இதுவரை ரூ.33.11 கோடி ரொக்கமாகவும், ரூ.12.58 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களைக் காட்டியதைத் தொடர்ந்து, ரூ.5.18 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.





 தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 61 ஆயிரத்து 20 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதில், அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது உள்ளிட்ட புகார்கள் 55 ஆயிரத்து 254. உரிய அனுமதியில்லாமல் வாகனங்களை இயக்கியதாக 2 ஆயிரத்து 850 புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.



 பணம், பரிசுப் பொருட்கள் அளித்ததாக 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த வழக்குகளின் எண்ணிக்கை 641 ஆக இருந்தது என்றார் பிரவீண் குமார்.



 வாக்களிப்பதற்காக பணம், பரிசுப் பொருட்களைப் பெற்றால் கொடுத்தவருக்கும், வாங்கியவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு


     தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

   பெரும்பாலும் மாணவர்கள் பட்ட  படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்சி பெறுமாரு கூறுங்கள். இந்த மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும். 


மாணவர்களே! தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

தேர்வை பற்றிய விபரங்கள்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :   
தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழகங்கள், மற்றும் மாவட்ட வாரியாக கிடைக்கும் இடங்களின் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது

ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய :

 www.annauniv.edu/tancet2011 (ஏப்ரல் - 1 முதல் ஏப்ரல் 25 வரை இன்ஷா அல்லாஹ்)

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 

27/04/2011 (இன்ஷா அல்லாஹ்)
தேர்வு கட்டணம் : ரூ.300

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  த

he Secretary, TANCET Examination Centre, Anna University, Chennai - 600 025.

உடனடி விண்ணப்பம் (Spot Registration):

  தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழங்களில் விண்ணப்பம் பெற்று உடனடியாக ஹால் டிக்கெட் (Hall Ticket ) பெறலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, சாதி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதிகள் :  
M.E/M.Tech -  29/05/2011 (காலை )
MBA -  28/05/2011 ( காலை )
MCA - 28/05/2011 (மாலை)
M.Arch/M.Plan - 29/05/2011 (காலை )

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : ஜூன் 3-வது வாரம்  இன்ஷா அல்லாஹ்
    
M.E/M.Tech  படிக்க தகுதிகள் : 

B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics  etc....) படித்தவர்கள்.  இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBA படிக்க தகுதிகள்  : 

ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MCA படிக்க தகுதிகள்  : 

ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 - ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Arch/M.Plan படிக்க தகுதிகள்   :  

B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


நன்றி :S.சித்தீக்.M.Tech 

Friday, April 1, 2011

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் வெளியீடு

இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37
கோடி, பெண்கள்
58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது.
இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த
10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின்
மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1
கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான் ,
வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும்
எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள்
வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38
கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை
உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின்
மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான
அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை
உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல்
நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618
பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப்
பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண்
குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும்
பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக்
பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37
,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு
சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள்
நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள்
நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10
ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக்
குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04
சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது.
பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46
சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5
சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ்
நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

நன்றி: தாட்ஸ் தமிழ் . காம்

Thursday, March 31, 2011

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை
தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று
குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை
உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு பகுதியை
முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக அன்பளிப்பாக அளித்தார். அன்றிலிருந்து அந்தப்
பகுதியிலுள்ள முஸ்லிம்கள் அங்கே தொழுது வந்தனர்.
இதற்கிடையில் அந்தக் கட்டடத்தின் அடித்தளமும், இரண்டாவது மாடியும், மூன்றாவது
மாடியும் சி.ஓ.எஸ். என்ற அறக்கட்டளைக்கு விற்கப்பட்டுள்ளன.
இந்த அறக்கட்டளையைச் சார்ந்தவர் தன் மனைவி வள்ளி என்பவரின் பெயரில் ஒரு நிதிக்
கம்பெனியை முதல் மாடியில் தொழுகை நடக்கும் இடத்தில் துவக்க திட்டமிட்டார்.அந்த
இடத்திற்குப் பதிலாக அடித்தளத்தில் ஒரு இடத்தை முஸ்லிம்கள் தொழுவதற்காகத்
தருவதாகச் சொன்னார்.
முஸ்லிம்கள் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வழக்கறிஞர்கள் போர்வையில் வந்த சில
குண்டர்கள் இன்று மஸ்ஜிதின் வாசலை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
மஸ்ஜிதின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தனர். அருகிலுள்ள கடை வியாபாரிகள்
உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வந்த காவல்துறையினரோ அந்தக்
குண்டர்களுக்குப் பாதுகாப்பு தந்தனர்.
செய்தியைக் கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்
சகோதரர்கள் உடனே சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். ஆனால் நிறைய முஸ்லிம்கள் அங்கே
கூடி நின்று குண்டர்கள் பட்டப் பகலில் மஸ்ஜிதின் அடையாளங்களைத்
தகர்த்துக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சுற்றி
காவல்துறையினரும் ஒன்றும் செய்யாமல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரிலேயே இந்த
அக்கிரமங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
களத்தில் புகுந்த பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் உடனே அந்தக் குண்டர்களைத்
தடுத்து நிறுத்தி,காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் இந்தச் செயலைக் கண்டிக்கும் விதமாக சாலை மறியலில் முஸ்லிம்கள்
ஈடுபட்டனர். அதன்பின் ளுஹர் தொழுகையை சாலையின் நடுவிலேயே தொழுதனர்.பின்னர்
பாப்புலர் ஃப்ரண்ட் சென்னை மாவட்டச் செயலாளர் ஷாஹித் என்பவரும், தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆலம் என்பவரும் இந்தச் சமூக விரோதிகளுக்கெதிராக
காவல்துறையிடம் புகார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த அக்கிரமத்திற்குப் பொறுப்புடைய அத்தனை பேர் மீதும் குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யப்படும் வரை முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
*Popular Front - Chennai *

சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு
அவசிய நிமித்தமாக வெளியே வரும் நிலை
ஏற்பட்டால் வழங்கப்படுவதுதான் 'பரோல்' என்பதாகும். இந்த பரோல் விசயத்தில் கூட
அரசு முஸ்லிம்கள் விசயத்தில் பாராமுகமாக நடந்து வருகிறது.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜாகிர் உசேன் சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கொலை வழக்கு தொடர்பாக 1999 ம் ஆண்டு
முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
என்னை தமிழக அரசாணைப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று
விண்ணப்பித்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண
கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை
செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த
1 ம் தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம்
நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

இதற்கு சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு
தெரிவித்தார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக
போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில்
அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை
பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக
மட்டுமல்ல, அவர் ஈடுபட்டிருந்த குற்றத்தின் தன்மையையும் கருதும்போது அவருக்கு
ஒரு மாதம் பரோல் அளிப்பது நல்லதல்ல என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும்
கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி,

ஜாகிர் உசேன் பரோல் கேட்பது தனது திருமணத்துக்காகத்தானே தவிர வேறெதற்கும் அல்ல.
எனவே 3 நாட்களுக்கு பரோல் அளித்து உத்தரவிடுகிறேன்.அவருக்கு தேவையான போலீஸ்
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஜாஹிரின் ஒரு மாத கால பரோல் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்பு அரசுப்
பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கூறிய காரணத்தில் ஒன்று, ''ஜாஹீரை வெளியே கொண்டு
வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல்
நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு
மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்
என்பதாகும்.

தமிழகத்தில் 1 ,04 ,783 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், ஜாஹிரின்
பாதுகாப்புக்கு போலிஸ் கிடைக்க மாட்டார்களாம். நல்ல வேடிக்கைதான் போங்க.
போலீஸ் கிடக்கவில்லை என்றால் அரசியவாதிகள் பின்னாடி பாதுகாப்புன்ற பேருல ஒரு
படை போலீஸ் அலையுதே; அதிலிருந்து ரெண்டு பேரை போடவேண்டியதுதானே! மேலும்,
ஜாஹிரின் குற்றத்தின் தன்மை குறித்தும் ப்ளீடர் பேசுகிறார். இதுபோன்ற கொலைக்
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பாக பரோலில் வந்ததே இல்லையா? அல்லது
பிளீடருக்கு தெரியாதா? பிளீடரின் உப்புச்சப்பில்லாத காரணத்தின்
அடிப்படையில் ஒரு திருமணம் செய்யவுள்ளவருக்கு மூன்று நாள் பரோல் என்பது
மாபெரும் அநியாயமாகும்.

கடந்த காலங்களில், ஜாஹிரை விட கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு
வழங்கப்பட்ட பரோலை பார்வைக்கு வைக்கிறோம்;


- கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற
சாமியார் பிரேமானந்தாவுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
- இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள இவருக்கு 6
நாட்கள் பரோலில் விடுதலை.
- மதவெறியை தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு 15
நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள்
தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை
செய்த மும்பை நீதிமன்றம்.

இவ்வாறு பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன்
மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள்
பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின்
சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!

Thursday, March 17, 2011

சாதிக் பாட்ச மரணம்! கொலையா தற்கொலையா!


2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மர்ம மரணம்.
ஏ.எம்.சாதிக் பாட்சா சென்னையில் இன்று (16-3-2011) அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளி வந்துள்ளது. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குநரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான சாதிக் பாட்சா ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர். 

கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளை அச்சுறுத்தி நிலங்களை அபகரிப்பது, சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்துவது, அமைச்சரின் பினாமியாக செயல்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சாதிக் பாட்சா மீது உள்ளன. 

பெரம்பலூர் கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்திலும் 2010 டிசம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக கிடைத்த பணம் சாதிக் பாட்சா மூலம் வெவ்வேறு தொழில்களில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் தெரிய வந்தன. 
இந்நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கேள்விக்குரியதாகும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள ராசாவின் பினாமியாக செயல்பட்ட சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டுமென்றும்,
உண்மை விவரங்களை நாட்டுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்திட வேண்டுமென்றும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகள் சாதிக் பாட்சாவின் மரணத்தை பயன்படுத்தி தப்பிக்க வழி வகுக்காது இருக்க சிபிஐ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Wednesday, March 16, 2011

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும்


சென்னை, மார்ச் 15- ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்,  மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.
ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).
இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும். 
விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.  
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  
மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, March 13, 2011

ஆன்லைன் வாக்காளர் பதிவுப்பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?



எனக்கு  கிடைத்த தகவல் தங்களுக்கு மிக்க பயனுறும் என்பதன் அடிப்படையில் இங்கு சமர்பிக்கிறேன்! கீழ்கண்ட லிங்கிற்கு சென்று நம் வாக்காளர் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள இயலுகிறது!

உங்கள் பெயர் பதிவுகளை சரிபார்க்க:---

http://www.elections.tn.gov.in/eroll/  

Friday, March 11, 2011

குண்டுவீச்சில் 9 குழந்தைகள் பலி; ஒபாமா வருத்தம் தீர்வாகுமா?


ப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க நா[நே]ச நாட்டுப்படையினர், இரண்டு நாட்களுக்கு முன் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவி குழந்தைகள் 9 பேர் கொல்லப்பட்டனர். எனவே, இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க படையின் தளபதி லெப்டினன்ட் டேவிட்டும், அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, குழந்தைகள் பலியானதற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 

ஒபாமாவின் இரங்கல் இறந்து போன குழந்தைகளை மீட்டுத் தந்துவிடுமா? என்ற அதிர்வலை எழாமல் இல்லை. மேலும், அமெரிக்க படையினரின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜனநாயகத்தை  நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் நாடு பிடிக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஒபாமா மறுபரிசீலனை செய்வாரா? 

Wednesday, March 9, 2011

அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி; அன்று சொன்னது அர்த்தமற்றது!

டவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி' என்று முழங்கி கடந்த தேர்தல் வரை தனிக்கடை போட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்பார்த்த 'வியாபாரம்' நடக்காததால், வழக்கமான அரசியல்வாதிகள்  போல் கொள்கையை தூக்கி மூட்டை கட்டிவிட்டு, போயஸை நோக்கி நடையைக் கட்டி நாற்பத்தியொரு தொகுதிகளை அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
கடந்த தேர்தல் வரை  விஜயகாந்த் கட்சிக்கு கணிசனமான வாக்கு கிடைத்ததற்கு அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிரான வாக்குகளும், மாற்றத்தை விரும்பும் சிலரின் வாக்குகளும் தான் காரணமாக  அமைந்தது. அதோடு சில இடைத்தேர்தலில் அண்ணாதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்ததும் விஜகாந்தின் வாக்கு வங்கி உயர காரணமாகியது. ஆனால் இப்போது விஜயகாந்த் தனது கொள்கையை விட்டு கூட்டணி கண்டுள்ளதால் அவருக்கு இருப்பதாக கூறப்படும் எட்டு சதவிகித வாக்கில் இறங்குமுகமே ஏற்படும் என்கின்றன்றனர் அரசியல் ஆய்வாளர்கள். மேலும் விஜயகாந்திற்கு அதிமுக ஒதுக்கியுள்ள சீட்டுக்கள் மிக மிக அதிகம் என்றும், பாமகவை கழகங்கள் மாறி மாறி வளர்த்து விட்டது  போல், விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா தன்னையறியாமலேயே அடித்தளம் அமைத்து தந்துவிட்டார் என்ற கருத்தும் அரசியல் அரங்கில் நிலவுகிறது.
அடுத்து அரசியல்வாதிகள் அணிமாறுவதும், அணி சேர்வதும் சகஜம்தான் என்றாலும், கூட்டணி வைத்து போட்டியிடுபவர்களை கடந்த காலங்களில்  கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். அதிலும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவரின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். ராமதாஸ் பற்றி விஜயகாந்த் அன்று;
'அஞ்சு வருசத்துக்கு வேட்டிய[திமுக] துவைச்சுப் போடுறது; அஞ்சு வருசத்துக்கு சேலைய[அதிமுக] துவைச்சுப் போடுறது இதெல்லாம் ஒரு பொளப்பா'..?
கூட்டணி சேர்வது பற்றி விஜயகாந்தின் சூப்பர் விளக்கம் அன்று;
''திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளோட கொள்கை என்ன தெரியுமா? கூட்டுச்சேர்; கொள்ளையடி;பங்குபிரி என்பதுதான்'!
அப்ப விஜயகாந்த் அதிமுகவோட கூட்டுச்சேர்ந்தது இதுக்குத்தானான்னு நாம கேட்கல; அப்பாவி வாக்குவங்கி கேக்குறான். விஜயகாந்த் பதில் சொன்னா நல்லாருக்கும்!

Friday, March 4, 2011

வீண் விரயம் செய்யாதீர்கள்.

இறைவனால் உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் உடல்
அமைப்பிற்கு ஏற்றவாறும், அவைகளின் மனம் ஒப்புமாறும் உண்டு வாழ்வதற்குத் தேவையான
உணவு வகைகளை தாவரங்கள், கால்நடைப் பிராணிகள் மூலம் இறைவனே ஏற்படுத்திக்
கொடுத்தான்.

அனைத்து வகை உயிரினங்களும் தன்னுடையத் தேவைக்குப் போதுமான அளவு உண்டுப்
புசித்து தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றன.

மனிதர்களாகிய நாமும் இறைவன் நமக்கு அளித்த பொருள் வளத்திலிருந்து போதுமான அளவு
உண்டுப் புசித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் ஸகாத் எனும் ஏழை நிதியை
பொருளீட்ட முடியாத வறிய நிலையிலுள்ளோருக்கு மனமுவந்து வழங்குவதுடன் எஞ்சி
இருக்கும் பொருளாதாராத்தை வீண் விரயம் செய்யக் கூடாது என்பதில் கவனத்துடன்
செயல்பட வேண்டும். வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன்
6:141.

*தேவைக்கு** **மீறி** **சமைப்பதும்**, **மிஞ்சுவதைக்** **கொட்டுவதும்.*

மனிதனுடைய உள்ளத்தில் இதுப் போதாது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று
சொத்து சேர்ப்பதிலிருந்து நாவுக்கு சுவையானத் தீணிப் போடுவது வரை எல்லா
நிலைகளிலும் எல்லை இல்லாத ஆசையை விதைத்து பொருளாதாரத்தை விரயமாக்கச் செய்வது
ஷைத்தானின் வேலையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள்
மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்).
யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். திருக்குர்ஆன்
4:36

உள்ளத்திற்கு கடிவாளமிட்டு எந்த தேவைக்கும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்தக்
கொண்டு போதுமென்ற சிந்தனையை யார் உருவாக்கிக் கொள்வாரோ அவரே இறைவனின்
திருப்பொருத்தத்திற்கு உகந்த அடியாராவார் இறைவனின் அடியானின் பக்கம் ஷைத்தான்
நெருங்க மாட்டான். ...உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (
மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். திருக்குர்ஆன் 15:40

*இன்றுப்** **பார்க்கின்றோம்.*

எதை உண்ணுவது என்றுக் கூட முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல வகை உணவுகளை பணக்கார
வீடுகளில் தயார் செய்து அளவுக்கு மீறிப் பறிமாறுவதும் அதனால் உண்ண முடியாமல்
மீதம் வைப்பதை குப்பையில் கொட்டுவதும் அவர்களது அன்றாட வழக்கமாகி விட்டது.

யதார்த்தமாக மிஞ்சுவது என்பது வெறு

வேண்டுமென்றே வெரைட்டிகளை அதிகப்படுத்தி உண்ண முடிமாமல் கொட்டுவது என்பது வேறு.

இதில் இரண்டாவது நிலையே இன்று வசதி படைத்தவர்களின் வீடுகளில் அதிகபட்சம் நடந்து
வருகிறது. சமைக்கும் பொழுதே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் ( முஸ்லீமாக
இருந்தாலும், முஸ்லீமல்லாதோராக இருந்தாலும் ) சிறிதை சேர்த்து சமைக்கச்
சொல்கிறது ஈகை குணத்தை வலியுருத்தும் இஸ்லாம். அபூதர்ரே ! நீர் குழம்பு
சமைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக ! அதன் மூலம் உமது
அண்டை வீட்டாரை கவனிப்பீராக ! என்று கருணை நபி(ஸல்) அவர்கள் உபதேசம்
செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட பொழுது
இதிலிருநது பக்கத்து வீட்டு யூத குடும்பத்திற்கும் கொடுத்தீர்களா ? என்று
கேட்டு விட்டு அண்டை வீட்டாரை எனது வாரிசாக்கி விடுவாரோ என்று எண்ணும் அளவுக்கு
ஜிப்ரீல் என்னிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார் என்று நபி (ஸல்)அவர்கள் கூற
நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அவர்களது
வீட்டாரிடம் கூறினார்கள் ஆதார நூல்: திர்மிதீ

உணவு வகைகளும், அளவும் கூடுதலாக இருக்கிறதென்றுக் கருதி சமையலறையிலேயே சிறிதை
பக்கத்து வீட்டாருக்காக ஒதுக்குவதில்லை சமைப்பது அனைத்தும் டைனிங் ஹாலுக்குப்
போய் கைகளால் புறட்டப்பட்டு மிஞ்சுவது குப்பைக்குப் போய் விடுகிறது.

*விருந்துகளிலும்** **இதே** **நிலை.*

ஒரு காலத்தில் விருந்துகளில் தயார் செய்யப்படும் பிரியானி உணவில் இறைச்சி இட்டு
சமைப்பார்கள். அதனுடன் வெங்காயம் தயிர் கலந்த ஊறுகாய் ஒன்று மட்டும் அதிகமாக
சேர்த்து கொள்வார்கள்.

அது சிறிது காலத்தில் வசதி படைத்தவர்களின் விருந்தில் முன்னேற்றம் அடைந்து
முட்டை சேர்க்கப்பட்டது,

இன்று அதுவும் முன்னேற்றம் அடைந்து அவைகளுடன் சிக்கன் ஃப்ரை, அல்லது சிக்கன்
சிக்ஸ்டி ஃபைவ் சேர்க்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் அதனுடன் காடை, கொக்கு ஃப்ரை ஐட்டங்களும் சேர்க்கப்படலாம்.

பெரும்பாலும் விருந்துகளுக்கு பிரபலங்கள் அழைக்கப்படுவதால் வெரைட்டிகளை
அதிகப்படுத்துகின்றனர் விருந்தினர் அதிலொன்றும், இதிலொன்றுமாக கை வைத்து விட்டு
அப்படியே விட்டு விடுகின்றனர் அவைகளும் பெருமளவில் குப்பைகளுக்கே செல்கின்றன.

*இஸ்லாம்** **தடை** **செய்கிறது.*

இவ்வாறு செய்வதை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது எந்தளவுக்கென்றால் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறுத் துண்டு உணவைக் கூட
எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச் சொல்கிறது இஸ்லாம் ...உங்களில் ஒருவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து
விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும்
அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம் என்று அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)
அவர்கள் அறிவுருத்தினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள். நூல்கள்:
முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி.

ஒரு சிறுத் துண்டைக் கூட ஷைத்தானுக்கு விட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகையில்
தட்டை, தட்டையாக கொண்டுப் போய் குப்பையில் தட்டலாமா ? சிந்தித்தால் சீர்
பெறலாம்

விருந்துகளுக்கு அழைக்கப்படுபவர்களில் ஏழைகளும் இருக்க வேண்டும் என்று ஏற்றத்
தாழ்வுகளைக் கலைந்து சமநிலைப படுத்திய இஸ்லாம் வலியுருத்துவதுடன் ஏழைகள்
அழைக்கப்படாத விருந்தே விருந்துகளில் வெறுக்கத்தக்கது என்றும் கண்டிக்கிறது
இஸ்லாம். வலீமா விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு
ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக
அபூஹூரைi(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

ஏழைகள் என்பவர்கள் எங்கிருந்தோ தேடிக் கண்டுப் பிடித்து அழைத்து வரப்படுபவர்கள்
அல்ல மாறாக ஒவ்வொரு பணக்காரர்களின் குடும்பத்திலும் ஏழைகள் இருக்கின்றனர்
அவர்களும் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதிகபட்சம் உணவுகள் குப்பைக்குப்
போகாது.

ஆனால் விருந்துகளில் கலந்து கொள்ள வரும் பிரபலங்கள் இந்த ஏழைகளைக் கண்டால்
முகம் சுளிக்கலாம் என்றுக் கருதியேப் பெரும்பாலும் இரத்த உறவுகளாகிய ஏழைகள்
அழைப்பதில்ல. அழைத்தாலும் இவர்களுடன் அல்லாமல் வேரொறு ஹாலுக்கு
அனுப்பப்படுவார்கள் அதனால் அவர்களது உணவுகளை குப்பையில் கொட்ட வைத்து அல்லாஹ்
அவர்களை ஷைத்தானின் தோழர்களாக்கி விடுகின்றான்.

அல்லாஹ் மனிதனுக்குப் பொருள் வளத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த மனிதன்
தன்னுடைய சுகபோகத்திற்காக, சுயநலனிற்காக தனக்குப் பொருள் வளத்தை வழங்கிய
அல்லாஹ்வை மறந்து அதை வீண் விரயம் செய்து ஷைத்தானின் தோழனாகி விடுகின்றான்.