Thursday, June 2, 2011

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா

ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலிய ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான செளதி இப்போது பெட்ரோலி கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே தனது மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.


ஆனால், மின்சாரத்தில் தேவை மிக மிக அதிகமாகி வருவதாலும், எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை மிக மிக அதிகமாக இருக்கும் என்றும் கருதும் செளதி, அந்த எண்ணெய்யை ஏற்றுமதி செய்யாமல் அதை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்று கருதுகிறது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் செளதியின் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மின் உற்பத்திச் செலவைக் குறைக்க அணு மின் நிலையங்களைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் 16 அணு உலைகளைக் கட்ட செளதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அணு உலைகளைக் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாக சவூதி அணுசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் கனி மாலிபரி தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 2 அணு உலைகள் கட்டி முடிக்கவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 அணு உலைகளைக் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டுக்குள் 16 அணு உலைகளைக் கட்டி முடிக்க செளதி முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு அணு உலையும் இன்றைய மதிப்பில் ரூ. 35,000 கோடி செலவில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை செளதியின் மின் தேவையில் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யுமாம். மேலும் 80 சதவீத மின்சாரம் தொடர்ந்து பெட்ரோலிய எண்ணெய் அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படும்.




ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமியால் புகுஷிமா உள்ளிட்ட அணு மின் நிலையங்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவு செய்துள்ள நிலையில் செளதி புதிதாக அதற்குள் காலடி வைக்கிறது.

அண்டை நாடான ஐக்கிய அரபு நாடுகள் ரூ. 1 லட்சம் கோடி செலவில் 4 அணு உலைகளைக் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணு உலைகளை தென் கொரியா கட்டி வருகிறது.

செளதியின் அணு உலைகளை அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கட்டித் தரலாம் என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்ற கொடூரக் காட்சிகள்-முழுமையாக வெளியிடுகிறது சேனல் 4

லண்டன்: இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மிகக் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய வீடியோவை முழுமையாக வெளியிடப் போவதாக லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சேனல் 4தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சேனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சேனல் 4.


உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் தாக்கு

டெல்லி: கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.




ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது.


இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.
உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.

ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள்

சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் பாஸ்வேர்ட்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.

கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன், சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால்,சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.


அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள்.

இந்த நிலையில், ஜிமெயில் பாஸ்வேர்ட்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவூதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!


ரியாத்: சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.


இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Wednesday, June 1, 2011

பிரதமரும் 2ஜி விசாரணை வளையத்தில்?

புதுதில்லி, மே 31: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக  முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர்  ஆ. ராசா கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக  திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஆ. ராசாவின் சார்பாக  தில்லி உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பாக மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்போது, இந்த விவகாரத்தில் தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





இந்த முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. அடிப்படையில் ராசா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜாமீன் மனு  விசாரணைக்கு வரும்போது தனது வாதத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டுப் பேசவும் சில முக்கிய ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். குறிப்பாக 18 முக்கிய கடிதங்களை வைத்து அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று தெரியவருகிறது.



இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும். மேலும் இந்தக் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் ஆ.ராசாவால் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. 2  ஜி அலைகற்றை ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் அவர் முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.



"இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி' என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளார். இவை தவிர  மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு தான் எழுதிய கடிதங்களையும் ராசா ஆதாரமாகக் காட்டக் கூடும் என்று தெரிகிறது. இது போன்ற வாதங்களை முன் வைக்கும்போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.





கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா 4 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். இந்த விசாரணைக்காக பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு  நீதிமன்றத்துக்கு நாள்தோறும் அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந் நிலையில் இந்த விவகாரத்தில்  ஜூன் மாதத்தின் இரண்டாவது  அல்லது  மூன்றாவது வாரத்தில் சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையில் யார், யாருடைய பெயர்கள் இடம் பெறுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாமீன் மனு மீதான ஆ.ராசாவின் வாதம், பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் 2ஜி முறைகேடுகள் பற்றிய சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே காணப்படுகிறது.

Tuesday, May 31, 2011

மரியம் பிச்சை விபத்து வழக்கு-பிடிபட்ட லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்து வழக்கில், ஆந்திராவில் வைத்துப் பிடிபட்டுள்ள லாரி டிரைவர் ஷேக் ரகமதுல்லாவிடம் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை, எம்.எல்.ஏ பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். வழியில் பாடாலூர் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


வழக்கமாக இதுபோல விபத்துக்களில் சிக்கும் லாரிகளின் டிரைவர்கள், உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விடுவார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் போய் சரணடைவார்கள். ஆனால் இந்த விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் லாரியுடன் தப்பி விட்டார்.

இதனால் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்ததாகும். அந்த லாரியை அன்றைய தினம் ஓட்டி வந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் ரகமதுல்லா ஆவார்.

அன்றைய தினம் தூத்துக்குடியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்தபோது பாடாலூர் அருகே அமைச்சரின்கார் மீது மோதி விட்டார் ரகமதுல்லா. பின்னர் அவர் நேராக விஜயவாடா விரைந்தார். அங்கு தனது உரிமையாளரிடம் லாரியை ஒப்படைத்து நடந்ததைக் கூறினார்.

இதையடுத்து ரகமதுல்லாவை அவரது வீட்டில் போய் இருக்குமாறு கூறிய அவரது உரி்மையாளர், லாரியுடன் மேற்கு வங்கம் சென்று ஜிப்சத்தை இறக்கினார்.

இந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்து அவர்கள் ரகமதுல்லாவை பிடித்தனர். தற்போது அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விட்டனர். இங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணைக்குப் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு ரகமதுல்லாவை அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ள லாரியும் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.


Wednesday, May 25, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி:
94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை
- 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23
) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier's
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க

விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான்
இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (chennai New
College,Keelakarai Sathak,mohamed Sathak A,J Academy of arch,chennai)
முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை
கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான
விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை
பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின்
முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன்
(Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று
விண்ணப்பத்தை பெற வேண்டும்.

*B.Arch கலந்தாய்வு (counseling) முறை :* +2 தேர்வில் எடுத்த மொத்த
மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப்
மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6
- ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால்
வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130
மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list)
தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.
இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

*NATA (National Aptitude Test in Architecture)தேர்வு*

இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு
தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு
செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு
எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண்
சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு
புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது,
ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.

NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண்
கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing
Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும்
சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக
மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3
முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80
மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க
முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத
தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த
www.nata.in இணையதளத்தில் உள்ளன.

Saturday, May 21, 2011

வெந்தயம் தரும் வனப்பு

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். [1 வது வகை பொடி]ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை
வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி
செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட
நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

2. [2 வது வகை பொடி] கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்]
100 கிராம்
வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.

அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு வைத்து
கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2வது] வகை பொடியை
1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

4. தினமும் காலையில் [1வது] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்
சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.

5. பேதி போகும்போது மோரில் [1வது] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால்
பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1வது] வகை பொடி + சிறிய
வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

7. சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த
சமயம் [1 வது வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு
கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து
செல்லவும்.

8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன்,
கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும்
அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து
மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி
[நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம்.
சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,
பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு
பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி,
வெங்காயம்+ தயிர்
சேர்த்து சாப்பிட ருசி சூப்பர்.

11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வது வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின்
நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும்
இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்
இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப்
போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய்
வந்தவர்கள்
அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற
வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பது நல்லது.

14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக
இருக்கும்
கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில்
மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

15.மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு,
வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

16.வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில்
இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

17.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான
பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்

18.பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும்,
தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக்
கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்

19.அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப்
படுபவர்களுக்கு
உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று
அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு
முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை
வீதம் பின்பற்றவேண்டும்.

20.பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால்
வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு
பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல்
உஷ்ணத்தால் பருக்கள்
வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று
நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.

Monday, May 16, 2011

அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள்
மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும்
தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின்
யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான
இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான்
ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு
நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான்,
வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங்
மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர
ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின்
எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான்
வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.


ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை
குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின்
அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும்.
ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக்
கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த
கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா
கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான
ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும்
எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத்
தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில்
இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும்
ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும்,
ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது
என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.


இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு
ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது
மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது.
அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல்
மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின்
போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும்
கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில்
வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான்
பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும்
அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப்
போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது
அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான்
தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து
விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட
ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான
சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும்
ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு
தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர்.
இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம்
ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா
பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை
எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம்
சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு
தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத
எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச
'அபாயத்தைக்' களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும்,
அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின்
இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.


அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும்
இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா
முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித்
தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத
ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை
ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது
அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற
பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க
விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று
ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த
இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய
ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை
உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க
அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப் பாடதிட்டமான
இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக
பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க
எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக
சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு
வேறானது.


பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள்
விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது
மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில்
மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல.
அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை
நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது
அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை
மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால்
ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க
அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள்
மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை
ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின்
போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை.
முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை
மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய்
தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.


தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின்
முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின்
அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின்
இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின்
மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய
இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.


இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய
ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம்
நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு
ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக்
கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை
கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா
நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க
அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே நடக்க அனுமதித்தது
என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ* இந்த தாக்குதலை வைத்து
அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை
முக்கியமானது.*


ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த
காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது
விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத்
துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய
சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது
நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது அமெரிக்கா. இப்படித்தான்
விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக்
மேலும் குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான
அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் –
ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான்
போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை
அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான்
போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.


அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக்
கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக்
கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்
என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ
முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில்
பாய்ந்த போதும் சரி – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி;
அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக
இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.


இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக
அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான
'தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை' என்பதே நமது அக்கறைக்கும்
கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா
பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை
உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது
எதார்த்தம் சாமானிய அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும்
அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான
பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது.
அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும்
மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம்
மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும்
நிகழ்ந்துள்ளது.


பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே
போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல்
வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது
சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப்
பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை
ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான
அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச்
சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள்
இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது 'மனிதாபிமான அடிப்படையிலான'
தலையீடு.


சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப
முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை.
இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத்
தேவையில்லை. இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா
பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும்
இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது
கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே
பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக
இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக
ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் 'நல்லெண்ண அடிப்படையிலான'
போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா
பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது –
இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி

2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால்
அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை,
முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும்
மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி
பெறுவார்கள்.11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள்
கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.டிப்ளமோ, தொழிற்பயிற்சி
கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி
உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு
மிகாமல் இருத்தல் வேண்டும்.முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு
மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர், ஆதி
திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில்
கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.
பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது
பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2)
பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம்
6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9)
மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10)
சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12)
தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர்
விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின்
வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை
புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும்
புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று
பெற வேண்டும்.
மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற

Sunday, May 15, 2011

அத்துமீறிப் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்

இஸ்லாமாபாத், மே 14: தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.

11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.



"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.





 சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.



 "அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?



 பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.





 அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.



 பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.


அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.



 டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.



 பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.



 இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.  



Saturday, May 14, 2011

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

அதிமுக- (160)- 150
தேமுதிக-(41)- 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09
இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08
மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02
புதிய தமிழகம்- (03)- 02
கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01
இந்திய குடியரசு கட்சி- (01)- 01
பார்வர்டு பிளாக்- (01)- 01
சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00

திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):
திமுக- (119)- 23
காங்கிரஸ்- (63)- 05
பாமக- (30)- 03
விடுதலை சிறுத்தைகள்- (10)- 00
கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00
வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00
பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00

பாஜகவும் படுதோல்வி:

193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


Friday, May 13, 2011

நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்?

சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:
1. மின்வெட்டு

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.


தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

2. விலைவாசி உயர்வு

இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.


விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

3. குடும்பத்தினரின் ஆதிக்கம்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.


மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.

4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்

அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.


கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.

5. ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.



உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.


இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.

குற்றச்சாட்டுக்களில் கரைந்து போன நலத் திட்டங்கள்:

முதல்வர் கருணாநிதியின் பிடியில் இந்த ஆட்சியின்போது திமுகவும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை என்பதே பொதுவான திமுகவினரின் வருத்தமாக உள்ளது. ஆளாளுக்கு நாட்டாமை செய்ததும், ஆடியதுமே இன்று ஆட்சியைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய தோல்வியையும் சந்திக்க நேரிட்டு விட்டதாக உண்மையான திமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.


இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசுதான் என்று கூறும் அவர்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்த ஏழைகள் எத்தனையோ பேர் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டாத வாய்களே இல்லை, இலவச டிவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒன்று, அதேபோல கான்க்ரீட் வீடு கட்டி்த தரும் திட்டம் மிக அற்புதமான திட்டம். இப்படி பல நலத் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்திக் காட்டியது.

ஆனால் இந்த நலத் திட்டங்களையெல்லாம் மறைக்கும் அளவுக்கு ஊழல் புகார்களும், குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்துப் போனதால் திமுகவின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


ஜெயலலிதா மாபெரும் வெற்றி: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தனித்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது அதிமுக. இதனால் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனித்தே ஆட்சியமைக்கவுள்ளார்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

விஜயகாந்தின் தேமுதிக யாரும் எதிர்பாராத வகையில் 26 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2வது இடத்தைப் பிடித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அந்தக் கட்சி கைப்பற்றவுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 தொகுதியிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.


ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக:

திமுக கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெறும் 24 இடங்களை மட்டுமே பிடிப்பதன் மூலம் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தையே திமுக எட்டியுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்துள்ளது.

கூட்டணி ஆட்சி இல்லை-அதிமுக:

இந் நிலையில் அதிமுக தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை கூறுகையில், ஆட்சியை கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பகிர்ந்து கொள்ளாது. அதிமுக முழு பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே அம்மா தனியாகவே அமைச்சரவையை அமைப்பார் என்றார்.

இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டவை-224:

அதிமுக 147
தேமுதிக 25
சிபிஎம் 8
சிபிஐ 7
மமக 2
சமக 2
கொங்கு இளைஞர் பேரவை 1
புதிய தமிழகம் 2
குடியரசுக் கட்சி 1
பார்வர்ட் பிளாக் 1

திமுக 21
காங்கிரஸ் 5
பாமக 2

இது தவிர மேலும் 5 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது.
ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. இங்கு திமுக, அதிமுக இரு தரப்பினருடனும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

Thursday, May 12, 2011

உச்ச நீதி மன்றத்தின் தடை ஆறுதல் அளிக்கிறது!! பாப்புலர் பிரான்ட்!!


May 11, புதுடெல்லி: இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மூன்றாக பங்குவைத்து அளிக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த கேலிக்கூத்தான தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை விசித்திரமானது என குறை கூறிய உச்சநீதிமன்றம் வழக்கை மறுபடியும் விசாரிக்கவேண்டும் என கருத்துத்தெரிவித்துள்ளது.

வகுப்புவாத சிந்தனையுடன் அளிக்கப்பட்ட பாரபட்சமான அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக்குறித்து கவலைக்குள்ளான மதசார்பற்ற வட்டாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆறுதலை அளிக்கும்விதமாக அமைந்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் தொடர்பான வழக்கில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானதும், நீதியற்றதுமாகும். நீதியை தாமதிப்பது நீதியை மறுப்பதற்கு சமம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விரைவாக விசாரணையை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புவதாக கே.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவிஅவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.


வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.

இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்தநான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள்குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது. 


சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை. 

அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.

எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

நன்றி. வஸ்ஸலாம்.

திருமதி ஏ.கே. மைமூன் பீவி
எண் 1, ஃபாத்திமா நகர்,
வாத்தியாப் பள்ளித் தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம். 
அலைபேசி: (+91) 9894342457

வங்கிக் கணக்கு விபரம்:
A/c # : 007101000018803
Bank: Indian Overseas Bank
Branch: Portonovo - 0071
District: Cuddalore

மேலதிக விபரங்களுக்கு...
ஏ.கே. அப்துல் பாரீ (அண்ணன்) (+91) 9003608064
எஸ். அப்துல் ஹமீத் (மச்சான்) (+901) 9944030796
ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (மகன்) (+91) 8870159878
ஏ. லியாகத் அலீ (தங்கை மகன்) (+91) 9597783844

Monday, May 9, 2011

பிளஸ்டூ ரிசல்ட் வெளியீடு-ஓசூர் மாணவி ரேகா முதலிடம், கள்ளக்குறிச்சி வேல்முருகன் 2வது இட

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர்
மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப்
பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.

2வது இடத்தில் வேல்முருகன்

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன்
1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி,
ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா
1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ
தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.

பாபர் மசூதி வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது

டெல்லி: பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அமைந்து இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று  நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகின்றன.

நிர்மோகி அகாரா, அகில் பாரத ஹிந்து மகாசபா, ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை இந்த அப்பீல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல பகவான் ராம் விரஜமான் சார்பிலும் மனு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.