Saturday, February 4, 2012

இஸ்ரேலை எதிர்ப்பவர்களுக்கு ஈரான் உதவும் – காம்னஈ



டெஹ்ரான்:உலகின் புற்றுநோயான இஸ்ரேலை எதிர்க்கும் எந்த நாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் ஈரானின் உதவி கிடைக்கும் என ஈரானின் ஆன்மீக உயர்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
இஸ்ரேலுக்கு எதிராக போராடும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்விற்கும், ஃபலஸ்தீனின் ஹமாஸிற்கும் ஈரான் உதவியுள்ளது. இனி எவரேனும், இஸ்ரேலை எதிர்க்க களமிறங்கினால் அவர்களுக்கும் ஈரான் உதவும். இஸ்ரேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு. அதனை 
வெட்டி எறியவேண்டும் என காம்னஈ கூறினார்.



மேலும் அவர் கூறியது:
அண்டை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுகிறது என குற்றம் சாட்டுவது சரியல்ல. ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறித்து தெளிவான கொள்கை இல்லாத அமெரிக்கா அச்சுறுத்துவது, அவர்களின் தோல்வியை காண்பிக்கிறது.
ஈரானின் கச்சா எண்ணெய்க்கு தடை ஏற்படுத்துவதும், தாக்குதல் மிரட்டல் விடுப்பதும் அமெரிக்காவிற்கு பத்து மடங்கு இழப்பை உருவாக்கும். அணு சக்தி திட்டத்தில் எங்களின் நிலைப்பாட்டை மாற்ற தடைகள் மூலம் முடியாது. உரிய நேரத்தில் மேற்கத்தியர்களுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும். தடை ஈரானுக்கு தன்னிறைவை அதிகரிக்கச் செய்யும். ஈரானை தாக்கினால் வேதனையான விளைவுகள் அமெரிக்காவிற்கு ஏற்படும். உங்களின் தடையின் தீவிரத்தை பொறுத்து ஈரானுக்கு தன்னிறைவு ஏற்படும். ராணுவ துறையின் மீது தடை விதித்து இருக்காவிட்டால் ஈரான் ராணுவ ரீதியாக முன்னேற்றத்தை அடைந்து இருக்க இயலாது. இவ்வாறு காம்னஈ கூறினார்.
ஏப்ரல் துவக்கத்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பெனேட்டா நம்புவதாக சில ஆவணங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காம்னஈ ஈரானின் முடிவை வெளியிட்டுள்ளார்.

Friday, February 3, 2012

கூடங்குளம் அணு உலை விவகாரம்: காங்- மனிதநேய மக்கள் கட்சி மோதல்

சென்னை: கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. 14 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக அங்கு அணு மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப்பகுதி மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை என்பதை நிபுணர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக விரோதிகள் சிலர் இதை எதிர்த்து வருகிறார்கள். இது வெளிநாட்டு சதியாக இருக்குமோ என்ற அச்சம் கூட உள்ளது. முதல்வர் விலை இல்லா மிக்சி, கிரைண்டர், வழங்குவதாக அறிவித்துள்ளார். அதற்கு மின்சாரம் மிகவும் தேவை என்றார் அவர்.

பின்னர் பேசிய மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. அவர்களது அச்சத்தைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அது இதுவரை ஏற்கப்படவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடங்கினால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 300 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். 1.75 சதவீத மின்சாரம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கே தேவைப்படும் என்றார்.

இதற்குப் பதிலளித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன்,கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழகத்திற்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று பல்வேறு நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர் தவறான தகவல் தருவது கண்டனத்திற்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்- இந்து முன்னணியினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதை காங்கிரஸ் பாராட்டி உள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன், காங்கிரசார் யாரையும் பாராட்டவில்லை. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கூட கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். தாக்குதல் நடத்தியவர்கள் யாரையும் அவர் பாராட்டவில்லை என்றார்.

காஸாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது செருப்பு வீச்சு

பெய்ட் ஹனௌன்(பாலஸ்தீனம்): இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர்.

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன.

இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர்.

அதில் 2 பேர் பான் கி மூன் கார் மீது செருப்புகளை வீசினர். மேலும் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை பான் கி மூன் சந்திக்கவில்லை என்பதால் அவரது காரை போகவிடாமல் மனிதச் சங்கிலியாக மாறி மறித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து போகச் செய்தனர்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறைகளில் வாடும் உறவினர்களை சந்திக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பான் கி மூனிடம் கோரிக்கை விடுக்கத் தான் இங்கு வந்தோம் என்று போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜமால் பர்வானா தெரிவித்தார். பான் கி மூன் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர் பாலஸ்தீனிய கைதிகளின் உறவினர்களை சந்திக்க மறுக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் சுமார் 7,000 பாலஸ்தீனியர்களை சிறைபிடித்து வைததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்சநீதிமன்றம்


டெல்லி:2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122  லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.



ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.
இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் துறை குற்றம் சாட்டியிருந்தது.
முறைகேடு விற்பனைக்கு அபராதம்
இந்நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.
லைசென்ஸ் வினியோகம் புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும். புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் கங்கூலி,சிங்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!




இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.
குறிப்பிட்டதொரு மேல்ஜாதியினரால் நடத்தப்படும் தினமலர் என்ற நாளேடு, கடந்த 29-01-2012 அன்று "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" என்று தலைப்பிட்டு, வன்னியர்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில்,

1) வன்னியர்கள் வறுமை காரணமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

2) சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் சண்டைக்கும், அடாவடிக்கும் பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளதன் காரணமாக வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர்.

3) சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ள வன்னியர்கள் பலர், தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தங்களை, "கவுண்டர்" என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.





4) அரசியில் ரீதியாக வளர்ச்சி கண்டுள்ள பலர் தங்களை, "வன்னியர்" என அரசியலுக்காக வெளியில் கூறினாலும், தங்கள் சமூகத்தினர் மத்தியில், "கவுண்டர்" என அடையாளம் காட்டுவதை தான் பெருமையாக கருதுகின்றனர். "கவுண்டர்" என வலம் வரும் பலர், தற்போது தங்களை, "கொங்கு வேளாள கவுண்டர்" என, மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர்.

என்று வன்னியர்களை அவமானப்படுத்தும் விதத்திலும் இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதியுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது பெரும்பான்மை சமூகமான வன்னியர்களைக் குறித்து பிறசமூகத்தவர்களிடம் தவறான கருத்துருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வேண்டுமென்றே தினமலர் இவ்வாறு எழுதியுள்ளதை நடுநிலையாளர்களும் அரசியல் தலைவர்களும் கண்டிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

"மாட்டுக்கறி சாப்பிடும் மாமீ நான்" என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து, நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. தங்கள் அபிமான தலைவர் குறித்த அவதூறான செய்தி காரணமாக உணர்ச்சிவயப்பட்ட தொண்டர்கள் அவ்வாறு செயல்பட்டுள்ளதை முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்தனர். ஆனால், ஒட்டுமொத்த வன்னிய சமூகத்துக்கு எதிராக தினமலர் நாளேடு சாதியக்குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக எழுதியுள்ளதை நியாயாவன்கள் எவரும் கண்டிக்கவில்லை.

சமூக குழப்பம் ஏற்படுத்தும் விசமிகளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யலாம் என்றிருக்கும்போது தினமலர் நாளேடு ஆசிரியரையும் ஏன் அவ்வாறு குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலடைக்கக்கூடாது? என்பதே சட்டத்தை மதிக்கும் மக்களின் விடைதெரியா கேள்வியாக உள்ளது.
ஈழத்தமிழர்கள் கொத்துகொத்தாக குண்டுவீசி அழிக்கப்பட்ட போர்ச்சூழலில் தமிழீழ துரோகி கருணாவின் பேட்டியை தொடராக வெளியிட்டு மகிழ்ந்தது தினமலர்.

அதுபோல், இசுலாமியர்கள் குறித்து மாதமொன்று என்றளவில் மததுவேச நச்சுக்கருத்தை விதைத்து தீவிரவாதம் வளர்த்து வருகிறது. கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்கள் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர்நாடி பிரச்சினை. இவ்விசயத்தில் போராட்டதாரர்களுக்கு உதவும் கிறித்தவ தொண்டு நிறுவனங்களையும் கொச்சைபடுத்தி VHP, RSS போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதைப்போல் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபவதற்காக கிறித்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக பொய்க்கருத்தை பரப்பி வருகிறது.

"வன்னியர்கள் நிலை: தினமலர் தரும் விளக்கம்" எனும் செய்தியை மறுநாள் 30.01.2012 வெளியிட்ட தினமலர். "சுயநலமாக செயல்படும் ஒரு சிலரின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டும் வகையில் தான், 'வாழ்வாதாரத்தை உயர்த்த கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்'' என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. யாருடைய மனதையும் புண்படுத்தும்படி இந்த கட்டுரை வெளியிடப்படவில்லை. வன்னியர்களின் பின்தங்கிய நிலையை வெளிப்படுத்தும் வகையில் வெளியான இந்த கட்டுரை, சிலருடைய மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அப்படி யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறோம்." என்று சப்பைக் கட்டியுள்ளது ஏற்கக் கூடியதல்ல.

ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாறினால் உயர்ந்தவராகலாம் என்ற சாதிய குரோத மனப்பான்மையை ஊக்குவித்து சமூகங்களிடையே கலகம் ஏற்படுத்தல், மதத்துவேசம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுதல், ஆபாசம், மூடநம்பிக்கை என்று தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்திய பண்பாட்டிற்கும் எதிராகச் செயல்பட்டு வரும் தினமலர் நாளேட்டை இந்திய பத்திரிக்கை கவுன்ஸிலும், தமிழக அரசும் இதுவரை தடை செய்யாமல் வேடிக்கை பார்த்து வருவது இரண்டு கோடி வன்னியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக!


தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சித்தலைவரான முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த்தும் நேருக்குநேர் வாதப் பிரதிவாதம் செய்து மோதிக்கொண்ட செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.



தகுதியற்ற தேமுதிகவினருடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதை, “நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி” என்று கூறியுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்.

"விஜயகாந்த் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கவில்லை என்றால் தேமுதிக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப் பேரவைக்குள் போயிருக்க முடியாது. இப்போதுதான் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டணி சம்பந்தமாக கருத்து சொல்கிறேன்." என்று செய்தியாளர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர். 
சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.  

இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர். 

இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது. இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது. சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.


சிந்திக்கவும்: இப்படி நாட்டை வளப்படுத்த விவசாயிகள் மரம் வளர்த்து, விவசாயம் செய்து மண்ணையும், வளங்களையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார்கள். ஆனால் மன்மோகன் சிங் அரசோ நாட்டின் கனிமவளங்களை சுரண்டி இந்தியாவை அந்நிய முதலாளிகளின் குப்பை கூடையாக மாற்ற திட்டம் தீட்டுகிறது.



சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமவளங்களை சுரண்ட காட்டு வேட்டை ஆடுகிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையம் திறந்து கடலை நம்பி வாழும் மக்களின் வயிற்றி அடிக்க முயற்சி செய்கிறது. கூடங்குளம் அணு உலை ஒன்று மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். இது முடிந்ததும் நாடு முழுவதும் 40 அனுவுலைகளை அமைக்க அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஒப்ந்தத்துடன் காத்துக்கிடக்கின்றன. இனி மாவட்டம் தோறும் அனுவுலைகள்தான்.

இந்தியாவுக்கு வந்திருப்பது வல்லரசு என்கிற தாகம்இந்த தாகம் எடுத்தவர்கள் தாகத்துக்கு அருந்துவது எல்லாம் மனித இரத்தங்களைத்தான். இந்த தாகத்தின் காரணமாக ஈழத்திலே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தார்கள். ஈழத்து இன அழிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய புண்ணிய ஆத்மாக்கல்தான் இந்த காந்திய வழி கதர் சட்டைக்காரர்கள். காஷ்மீரில் படர்வது பனிமட்டும் அல்ல இந்த கயவர்களின் அடக்குமுறையும் அழித்தொழிப்பும்தான்.

ஒருபுறம் ஹிந்துத்துவா உண்டாக்க நினைக்கும் மதவாதம் மறுபுறம் கார்பெரெட் முதலாளிகளின் சகவாசம் என்று நாட்டின் வளர்ச்சியை நாசம் செய்கிறார்கள். இந்தியா என்கிற பூஞ்ச்சோலை அணு உலைகளால் சோமாலியாவாக மாறப்போகிறது. உலக நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் அல்லது கழிவுகளை வெளியாக்க, அவைகளை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவுகளை சமாளிக்க கார்பரேட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொர்க்க பூமிதான் ( குப்பை கூடைதான்) இந்தியா.  உலக நாடுகளின் குப்பை தொட்டி இந்தியா என்று சொன்னால் மிகையாகாது. 

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்


சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.


அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.
சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.
சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். முதல் நாளே வலி இருக்காது. 3 நாட்களில் பூரண குணம் தெரியும்.

9/11 அச்சம் – பணியை இழந்த முஸ்லிம் விமானி


லண்டன்:பிரிட்டனின் முக்கிய விமான நிறுவனத்தில் பணிபுரிந்த முஸ்லிம் விமானி ஒருவர் செப்டம்பர் 9/11 போன்ற தாக்குதலை நடத்தக்கூடும் என்று குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இதுவரை எந்த குற்றசாட்டும் பதிவு செய்யப்பட வில்லை. எனினும் விமானத்தை இந்த விமானி தவறுதலாக பயன்படுத்தக்கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விமானியை பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும் அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் சம்பந்தப்பட்ட விமானியிடம் தங்களுடைய மேலதிகாரிகள் செப்டம்பர்(9/11) சம்பவத்தைப் போன்று தாங்கள் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுவதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று இது தொடர்பான வழக்கு நடந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இது குறித்து தொடர்புடைய விமானி தெரிவித்துள்ளதாவது; ‘நான் விமானத்தைக் கட்டிடங்களுக்குள் செலுத்திவிடுவேன் என்று அவர்கள் நம்புவதாகவும். மேலும் தனது இனம் மற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இந்த பணி நீக்கம் நடந்துள்ளதாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தன்னால் நிறுவனத்திற்கு கெட்டப்பெயர் வந்துவிடும் என்று தான் அஞ்சுவதாக நீதிமன்றத்தில் தனது மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும்’ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 2, 2012

அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஜோடிக்கும் கர்நாடகா பாஜக அரசு


பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக்கு இடையே பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஆஜர்படுத்த அரசு தரப்பு முயற்சித்து வருகிறது.
ஆவணங்களின் நகல்களை எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு அளிக்காமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மஃதனியின் வழக்கறிஞர் பி.உஸ்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு வாதம் பூர்த்தியானதை தொடர்ந்து எதிர்தரப்பின் பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



குற்றப்பத்திரிகையில் இருந்து தனது பெயரை விடுவிக்க கோரி மஃதனி அளித்த மனுவின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது அரசு தரப்பு புதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முயன்றது. சட்டவிரோத செயல்கள் தடைச்சட்டத்தின் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் மஃதனியின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிநாத் அரசுகளின் அனுமதி தேவையில்லை என்றும், prima facie(ஆரம்பகட்ட)ஆதாரங்கள் இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மஃதனிக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு புரிய வைக்க கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதேவேளையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் ஆவணங்களின் நகல்களை எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு அளித்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை கூட அரசு தரப்பு கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் பி.உஸ்மான் குற்றம் சாட்டினார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கில் புதிய ஆதாரங்களை தாக்கல் செய்வது குறித்து கேள்விப்பட்டது இல்லை என உஸ்மான் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்


காபுல்: ஆப்கனிஸ்தானில் தற்போது நாடோ படைகளின் வெளியற்றதிற்க்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபானின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டிஅமெரிக்காவில் இருந்து வெளி வரும் டைம்ஸ் பத்திரிக்கை நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இது குறித்து கேட்கப்பட்டபோது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கிம்மிங்க்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செயதார்.அனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பின் ஆப்கானில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த பல்வேறு வாய்புகள் குறித்த அறிக்கையே என்றார்.



அதை முழுமையான ஆய்வறிக்கை அல்ல என்று ஜிம்மி கூறினாலும் இவ்வறிக்கை அமெரிக்காவின் தோல்வியை காட்டுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருஹ்டுகின்றனர்.ஹமீது கர்சாயின் அரசு மற்றும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது என்ற தாலிபானின் வாதத்துக்கு வலு சேர்பதாக இவ்வறிக்கை உள்ளது.

நேட்டோவின் கடைசி படைகள் 2014  ம்  ஆண்டு வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில் இவ்வறிக்கை அமெரிக்காவுக்கு மிகவும்  பின்னடைவாக கருதபடுகிறது.இவ்வறிக்கை குறித்து  கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தாம் ஆப்கானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளது.

Wednesday, February 1, 2012

சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கும் இடையே கடும் காரசார மோதல் மூண்டது. இதன் இறுதியில் விஜயகாந்த் உள்ளிட்ட 

தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக கருதப்படும் இந்த மோதல் குறித்த விவரம்...

சட்டசபை இன்று கூடியதும் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா எழுந்து இதுகுறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு சந்திரகுமார் மீண்டும் எழுந்து இதை ஏன் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்யவி்ல்லை.அப்போதே செய்திருக்கலாமே என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும் என்று ஆவேசமாக 



கூறினார். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்றும் விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.

இதைக் கேட்டு எழுந்த விஜயகாந்த் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படி வெற்றி பெறும் என்பது பற்றி அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதற்கு மீண்டும் எழுந்த ஜெயலலிதா தே.மு.தி.க.,விற்கு தனித்து போட்டியிட திராணி உள்ளதா. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. டெபாசிட் இழந்தது என கூறினார். இதற்கு அதிமுக 

உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி ஒலி எழுப்பினர்.

இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பெரும் அமளியாக இருந்தது.

இதைத் தொடர்ந்தே தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்

நிலபேர ஊழல்:எடியூரப்பாவின் அப்பீல் தள்ளுபடி


பெங்களூர்: நிலபேர ஊழல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பெங்களூர் அருகேயுள்ள அரகெரே, தேவரசிக்கன ஹள்ளி, கெட்டத ஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) கையகப்படுத்திய நிலத்தை விடுவித்து தனது மகன்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா, மருமகன் சோஹன்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குரைஞர் சிராஜின் பாஷா மற்றும் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் தனி மனு தாக்கல் செய்தனர்.


இது தொடர்பான விசாரணை லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்தபைரே ரெட்டி, எடியூரப்பாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
பத்ரா மேலணை திட்டப் பணிகள் தொடர்பாக எடியூரப்பா மீது மதச்சார்பற்ற ஜனதா தள செய்தித் தொடர்பாளர் ஒய்.எஸ்.வி.தத்தா, லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து திங்கள்கிழமை விசாரித்த லோக் ஆயுக்த போலீஸார், ஆர்.என்.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணி ஒப்பந்தம் அளித்துள்ளதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இது எடியூரப்பாவுக்கு ஆறுதலை அளித்தது. இந்நிலையில் நில முறைகேடு வழக்கில் மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது அவரது ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்களாதேஷ் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்: பி​.எஸ்.எஃப் ஜவான்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை

நியூயார்க்:இந்திய எல்லைக்குள் மாடுகளை ஓட்டி வந்த பங்களாதேஷ் வாலிபரை கர்ண கொடூரமாக சித்திரவதைச் செய்த ஈவு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் எட்டு பேர் மீது விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி புதன்கிழமை அன்று பங்களாதேஷைச் சார்ந்த இளைஞரான ஹாபு ஷேக் என்ற அப்துல் ஷேக் தனது கிராமத்தைச் சார்ந்த சில நபர்களுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்த எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. வழக்கமாக இரு நாடுகளை சார்ந்த விவசாயிகளும் மாடுகள் உள்பட வியாபாரத்திற்காக இந்த எல்லையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாடுகளுடன் எல்லைக்குள் நுழைந்த அப்துல் ஷேக் உள்ளிட்ட கிராம வாசிகளை பிடித்த பி.எஸ்.எஃப் படையினர் அப்துல் ஷேக்கை மட்டும் பிடித்து வைத்துவிட்டு மற்றவர்களை பங்களாதேஷிற்குள் விரட்டியுள்ளனர். பின்னர் அப்துல் ஷேக்கை நிர்வாணமாக்கி கனத்த தடியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர் உதவிக்காக கூக்குரலிட்ட பிறகும் யாரும் உதவுவதற்கு வரவுமில்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். அவர் அனுபவிக்கும் வேதனையை பார்த்து ரசித்து சிரித்ததுடன் மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.



இக்காட்சியை பி.எஸ்.எஃப் ஜவான் ஒருவர் வீடியோ பிடித்து அதனை பரப்ப விட்டுள்ளார். இக்காட்சி யூ ட்யூப் இணையதளம் வாயிலாக உலக முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ராமிநகர் காவல் நிலையக்கட்டுப்பாட்டில் உள்ள சார் மவ்ராசி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த எல்லைப் பகுதி பி.எஸ்.எஃபின் 105 பட்டாலியனின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி பி.எஸ்.எஸ் ஜவான்களின் சித்திரவதை குறித்து குறிப்பிடுகையில், ’மனிதத் தன்மையற்றது’ என தெரிவித்தார். அவர் மேற்கு வங்காள டி.ஐ.ஜி நபரஜித் முகர்ஜியிடம், பி.எஸ்.எஃப் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பி.எஸ்.எஃப் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஜவான்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுக்குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகையில், “இச்சம்பவம் மனித உரிமை மீறல்களின் தெளிவான ஆதாரமாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட படை வீரர்கள் மீது இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளது.
கட்லமாரி 2-வது கிராம பஞ்சாயத்தின் தலைவர் முஹம்மது முல்லா கூறுகையில், “இந்தியா-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வேலிகள் இல்லை. பி.எஸ்.எஃப் ஜவான்கள் சித்திரவதைச் செய்வது புதிய சம்பவம் அல்ல. உள்ளூர் விவசாயிகள் எப்பொழுதும் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். நான் பலமுறை உயர் அதிகாரிகளிடம் பி.எஸ்.எஃப் ஜவான்களின் கொடுமையை குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் பி.எஸ்.எஃப் எதனையும் கண்டுகொள்வதில்லை. இப்பகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதால் இங்கு நடக்கும் எந்த சம்பவமும் ஊடகங்களில் இடம் பெறுவதில்லை” என கூறுகிறார்.
சில அரசு சாரா அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பி.எஸ்.எஃபின் அட்டூழியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஆதிபாசி க்ராமின் ஜனகல்யாண் சமிதியின் ஜஹாங்கிர் ஃபக்கீர் கூறுகையில், “எல்லைப் பகுதியில் பி.எஸ்.எஃபின் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவிக்கிறார்.

இடிந்தகரை வீரமங்கைகளிடம் புறமுதுகிட்ட இந்து முன்னணி!

கூடங்குளம் அணு மின்நிலயம் தொடர்பாக 4வது காட்ட பேச்சு வார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் என மத்திய நிபுணர் குழு அறிவித்திருந்தது. இதில் மத்திய நிபுணர் குழு சார்பாக  முத்துநாயகம் தலைமையில், 12 பேர் வந்திருந்தனர்.

அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் மக்கள் தலைவர் உதயகுமார் தலைமையில் கிராமத்து மக்கள் ஜீப், மற்றும் வேன்களில் வந்தனர். இவர்கள் வந்த வாகனங்கள் கலெக்டர் அலுவுலகத்தில் நுழையும் பொழுது அங்கே திட்டமிட்டு காத்திருந்த சுமார் 20 இந்து முன்னணியினர் கிராம மக்கள் வந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டனர். 

கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் மக்களுக்கும் மத்திய நிபுணர் குழுவுக்கும் நடக்க இருந்த பேச்சு வார்த்தையில் இந்து முன்னணியினருக்கு என்ன வேலை. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை காந்திய வழியில் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாக கூடங்குளம் மக்கள்விளங்குகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.



இப்படி அமைதி வழியில் போராடும் ஒரு மக்களை  வலுக்கட்டாயமாக  கலவர பாதைக்கு அழைத்து சொல்லும் ஒரு வேலையை இந்து முன்னணி செய்துள்ளது.  இந்து முன்னணிகலவரக்காரர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதும் அந்த மக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடங்குளம் பகுதியை சேர்ந்த வீரமான கிராமத்து பெண்கள் இந்து முன்னணிகாடையர்களுக்கு பதில் அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. 

இந்த பேச்சு வார்த்தையில் புகுந்து கலவரத்தை உண்டாக்குவதன் மூலம் கூடங்குளம் மக்களின் அமைதி போராட்டத்தை பற்றிய ஒரு தவறான கருத்துருவாக்கத்தை ஏற்ப்படுத்த இந்து முன்னணி மற்றும் தினமலர் நாளிதளின் கூட்டு சதியாகவே இதை பார்க்க முடிகிறது. 4வது கட்ட  பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதல் கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடுதினமலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. இந்து முன்னணிகாரர்களுடன் தினமலர் நிருபர்கள் கேமிரா சதவீதம் காத்திருந்தனர். 

முதலில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் இந்து முன்னணி குண்டர்கள்தான். இருந்தாலும் தினமலர் அதையெல்லாம் படம் பிடிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் கற்களை தூக்கி வைத்து கொண்டிருக்கும் படத்தை செய்தியாக வெளியிட்டு தன் அரிப்பை தீர்த்து கொண்டது. அந்த பெண்கள் கன்னியாகுமரி இடிந்த கரையை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டு. உதயகுமார் ஏன் இடிந்தகரை பெண்களை இந்த பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்தார் என்று கேட்டிருகிறது.

ஏன் இடிந்தகரை பெண்களை கூட்டி வந்தால் என்ன தவறு. அது மட்டுமல்லாது அணுவுலை எதிர்ப்பு மக்கள் தலைவர் உதயகுமார் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் இந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயுத பயிற்சி எடுத்து திட்டமிட்டு கலவரம் செய்வது  இந்து முன்னணி இயக்கத்திற்கு வேண்டுமால் பழக்கமாக இருக்கலாம் அதற்காக  மக்கள் போராட்டங்களை குறித்து அவதூறு பரப்ப தினமலருக்கும், இந்து முன்னணிக்கும் என்ன  தகுதி இருக்கிறது. தமிழர்கள் அறிவார்கள் தினமலர் மற்றும் இந்து முன்னணியின் யோக்கிதை பற்றி. 

இடிந்தகரை பெண்களை பார்த்து ஏன் தினமலரும், இந்து முன்னணியும் பயப்பட வேண்டும். உதயகுமார் நிறைய ஆண்களை கூட்டி வருவார் நாம் கலவரம் செய்து அவர்களை ஜெயிலில் தள்ளிவிட்டால் இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்யலாம் என்று எண்ணிய தினமலர், இந்து முன்னணியின்  சதி திட்டத்தை இடிந்தகரை மீனவ குலத்து வீர மங்கைகள் முறியடித்தனர். வழக்கம்போல் காலதாமதமாக வந்த போலீசார், இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பினர். பின், இந்து முன்னணியினர், 10 பேரை கைது செய்தனர்.