Wednesday, October 2, 2013

மியான்மரில் கலவரம் பரவுகிறது!: 70 வீடுகள் தீக்கிரை! மூதாட்டி படுகொலை!...

யங்கூன்: மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் மீண்டும் கலவரம் பரவுகிறது. நேற்று முன் தினம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய புத்த தீவிரவாதிகளை போலீஸ் விரட்டியடித்திருந்தது.
இந்நிலையில் தாந்த்வியில் உள்ள தப்யான்சயிங் கிராமத்தில் நேற்று மதியம் மீண்டும் திரண்ட புத்த தீவிரவாதிகள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். இதில் 70 வீடுகள் தீக்கிரையாகின. 94 வயது மூதாட்டி ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார்.


கலவரம் நிகழ்ந்த பகுதிக்கு இரவு வெகுநேரம் கழித்து வந்த மியான்மர் அதிபர் தைன் ஸைன் அதிகாரிகளுடன் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை சூழல் நீடிக்கும் இப்பகுதிக்கு முதன் முறையாக அதிபர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் புத்த தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட தாந்த்வி, மோங்டோ ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டார்.
கடந்த சனிக்கிழமை ராக்கேன் மாநிலத்தில் புத்த தீவிரவாதிகள் மீண்டும் முஸ்லிம்கள் மீதான வன்முறையை துவக்கினர். கமான் முஸ்லிம் கட்சியின் தலைவர் க்யோஸான் ஹியாவின் வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மாற்றக் கோரியபோது வாய்த் தகராறு எழுந்தது.
க்யோஸான் புத்த மதத்தை அவமதித்து விட்டார் என்ற பொய்யான செய்தி பரவியதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் திரண்டு அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகளையும், மஸ்ஜிதையும் தகர்த்தது.
க்யோஸானிடம் போலீஸ் விசாரணை நடத்தி விடுவித்தது. புத்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து முஸ்லிம்கள் நேற்று முன்தினம் வீடுகளிலிருந்து வெளியே வரவில்லை. தாந்த்வியில் மூன்று தினங்களுக்கு முன்பு இது போன்றதொரு சம்பவத்தில் ஏராளமான முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. கடந்த ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரத்தில் 237 பேர் கொல்லப்பட்டனர்.

விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை புறக்கணிக்கப்பட்டது!

Sep 30/2013: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாட உலக மத பாராளுமன்ற அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளையான வி.ஹெச்.பி.ஏ. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்த விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை புறக்கணிக்க ஏற்கனவே உலக மத பாராளுமன்ற (Council for World Parliament of Religions)அமைப்பு தீர்மானித்திருந்தது.



இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள எந்த ஹிந்துத்துவா அமைப்புகளுடனும் தங்களுக்கு தொடர்பில்லை என்று விசுவ ஹிந்து பரிஷத்தின் அமெரிக்க கிளை கூறியிருந்தது. ஆனால், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி (C.A.G.) உலக மத பாராளுமன்ற அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் VHPA மற்றும் இந்தியாவில் உள்ள VHPக்கும் இடையேயான உறவுகளை விவரிக்கும் ஏராளமான ஆதாரங்களை குறிப்பிட்டிருந்தது.

பிரிவினையை தூண்டும் அமைப்புகளை புறக்கணிக்கவும், விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாடவும் உலக மத பாராளுமன்ற  அமைப்பு (Council for World Parliament of Religions) எடுத்த முடிவை C.A.G.யின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ராஜா சுவாமி பாராட்டியுள்ளார். இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரும் சுப்ரமணிய சுவாமிதான் VHPA. (Vishwa Hindu Parishad of America) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முக்கிய உரையை நிகழ்த்தி உள்ளார் ன்து குறிப்பிடத்தக்து.

Saturday, September 28, 2013

மோடி சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபணம்! வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத்திற்கு இடமில்லை!

புதுடெல்லி: மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இப்பொழுது மீண்டும் மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கை மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் மத்திய அரசின் நிதி வழங்க வேண்டும் என்று  சிபாரிசு செய்து மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
ஆனால்,ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது தொடர்பான அறிக்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் குஜராத்திற்கு 12-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.
கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பீகார் உள்ளிட்ட சில மாநிலங்கள் கூடுதல் மத்திய அரசின் நிதிக்காக பின்தங்கிய மாநில அந்தஸ்தை கோரிய பொழுது நிதியமைச்சகத்தில் முக்கிய நிதி ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் தலைமையில் இது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு கமிட்டியை நியமித்தது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.
தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.
பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மத்திய நிதி அனுமதிக்கும்போது பட்டியலில் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலங்களின் வளர்ச்சிக்கான தேவை, வளர்ச்சிப் பணிகள் நடத்துவதில் பொறுப்புணர்வு ஆகியவற்றை பரிசோதித்து நிதி வழங்க வேண்டும் என்று கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரகுராம் ராஜன் கமிட்டி தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார். அறிக்கையின் விவரங்கள் பற்றி அவர் கூறியதாவது:
மொத்தம் உள்ள 28 மாநிலங்கள் பல்நோக்கு குறியீட்டு எண் (எம்.டி.ஐ.) அடிப்படையில் வளர்ந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்கள் (குறைந்த வளர்ச்சி), பின்தங்கிய மாநிலங்கள் என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
நிதி ஒதுக்கீடு பற்றி கமிட்டி அளித்துள்ள பரிந்துரையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படையாக நிலையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களின் தேவைகள், மேம்பாட்டுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநிலங்களுக்கு அடிப்படை நிதி ஒதுக்கீடான 0.3 சதவீததத்தை மேலும் அதிகரிக்க சம்பந்தப்பட மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் அவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க இரட்டை பரிந்துரை செய்யப்படும்.
இந்த இரண்டு பரிந்துரைகளை செயல்படுத்தும்போது, சிறப்பு அந்தஸ்தின் கீழ் குறிப்பிட்ட மாநிலங்கள் கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்பதை தவிர்க்க முடியும் என்றார்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.) வகுத்துள்ள அடிப்படையில் தனிநபர் நுகர்வு, வறுமை விகிதம் மற்றும் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்ய எடுத்து கொள்ளப்படும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் மாநிலங்களின் பின்தங்கிய நிலைமையை கணிக்கும் பல்நோக்கு குறியீட்டு எண் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 0.6 புள்ளிகள் மற்றும் அதற்கும் மேல் புள்ளிகள் பெற்ற மாநிலங்கள் பின்தங்கியவையாகவும், 0.6 முதல் 0.4 வரையிலான புள்ளிகளைக் கொண்ட மாநிலங்கள் வளரும் (குறைந்த வளர்ச்சி) மாநிலங்களாகவும் 0.4 புள்ளிக்குக் கீழ் உள்ள மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்களாகவும் கருதப்படும்

மே.வ. முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் ஆவணப் படம்: மம்தா அரசு தடை!

கொல்கத்தா: மேற்கு வங்காள முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் டாக்குமெண்டரி படத்திற்கு (ஆவணப் படம்) மம்தா பானர்ஜி அரசு தடை விதித்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் சவ்மித்ரா தஸ்திதாரின் ‘முஸல்மானேர் கதா’ (Musalmaner Katha – முஸ்லிம்களின் நிலை) என்ற டாக்குமெண்டரிக்கு மாநில அரசின் திரைப்பட தலைமையகமான நந்தனில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்சர் சான்றிதழ் இல்லை என்று கூறி டாக்குமெண்டரியை திரையிடக் கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போலீஸ் உத்தரவிட்டது. ஆனால், இதே டாக்குமெண்டரி, கொல்கத்தா ப்ரஸ் கிளப்பிலும், புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும் திரையிடப்பட்டது.
நந்தன் 3-வது எண் ஹாலில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு சென்சர் சான்றிதழ் தேவையில்லை என்ற நிலையில் வேண்டுமென்றே
இத்தடையைப் போட்டுள்ளது மம்தா அரசு. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உள்ளடக்கி 25க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை தஸ்திதார் தயாரித்துள்ளார்.
இது தொடர்பாக தஸ்திதார் கூறுகையில், “இம்மாதம் 24-ஆம் தேதி இரவு நேரத்தில் அமலாக்கப் பிரிவைச் சார்ந்த 2 அதிகாரிகள் வந்து ஆவணப் படத்தின் டி.வி.டி. நகலை கேட்டனர். இதன் மூலம் ஆவணப் படத்தை திரையிட தடை விதித்தன் பின்னணியில் உள்ள சதித் திட்டம் தெளிவாகிறது. டாக்குமெண்டரியை தயாரிப்பவர் அரசின் ஊதுகுழலாக செயல்பட்டால் மட்டுமே திரையிட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.


பல தசாப்தங்களாக மேற்கு வங்காள முஸ்லிம்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி ஏமாற்றிய அரசுகளின் செய்திகள், இந்த ஆவணப் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் முஸ்லிம்களின் துயர வாழ்வைக் குறித்து உதாரணத்துடன் தயாரிப்பாளர் விவரிக்கிறார். கடந்த இடதுசாரி அரசும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலையை மாற்ற எதுவும் செய்யவில்லை என்ற மூத்த போலீஸ் அதிகாரி நஸ்ருல் இஸ்லாமின் பேட்டியும் இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
முந்தைய இடதுசாரி அரசு மற்றும் தற்போதைய மம்தா அரசிற்கு நஸ்ருல் இஸ்லாம் என்றால் பிடிக்காது. அதேவேளையில் இந்த ஆவணப் படத்தை திரையிட தடை விதித்த அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு சமூக -கலாச்சார அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் ஆதரவு தெரிவித்ததாக தஸ்திதார் கூறியுள்ளார். மே. வங்காளத்திற்கு வெளியே ஆவணப் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து தருவதாக பட்வர்தன் கூறியுள்ளார். மே. வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், எதிர்க்கட்சியான சி.பி.எம்.மும் தவிர இதர கட்சியினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித  உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினேன்.
இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னை தீரும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார் அன்புமணி ராமதாஸ்.

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு

திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகள் மூலம் மீட்டனர் . ஆனால் இகுழந்தை மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தற்போது சொல்ல முடியவில்லை. அவர் ஆரணி அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை குழியில் இருந்து மீட்டாலும் , இவர் உயிரோடு நலமுடன் திரும்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் 10 மணி நேரம் ஈடுபட்டனர், 


ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டினர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் நேரடியில் :
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஞானசேகர் புலவன்பாடிக்கு சென்றார். அங்கு மீட்பு பணியை முடுக்கி விட்டார்.அடுத்து , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தவு பிறப்பித்தார்.மாவட்ட எஸ்.பி., முத்தரசி சம்பவ இடத்தில் முகாமிட்டார். இதற்கிடையில் கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

இந்தியாவிலேயே முதல் மாநிலம் எது?.

sep 26/2013:இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத் இருப்பது போன்ற மாயையை மோடியும் பிஜேபியும் ஏற்படுத்தி வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பிலும் சுகாதாரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் குஜராத் இருக்கிறது.


  • உண்மையில் 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும், 
  • சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கப்படுவதில்,இந்தியாவில் முதல் மாநிலமாகவும்
  •  69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதில்  இந்தியாவில் முதல் மாநிலமாகவும்,
  • பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடமாகவும்,
  • அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது. 
  • கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.
  •  5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்ததில் இந்தியாவில் முதல் மாநிலமாகவும் குஜராத் முன்னிலை வகிக்கிறது.              

இந்தியாவின் NO 1 மாநிலம் கோவா!

Sep 28/2013: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.

தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.


இந்தியாவில்  உள்ள மொத்தம் 28 மாநிலங்களில்  கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு: ஆனால், ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. குஜராத்திற்கு 12வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சி யடைந்த  மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.

Tuesday, September 25, 2012

இஸ்ரேல்: பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்!


"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில்புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதைஅன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள்பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பதுஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும்பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமாமுன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !


 
இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும்மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள்இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன்மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டுநூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவேஆயிரக்கணக்கான மக்கள்ஜோர்டானுக்கும்லெபனானுக்கும்எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள்நிலங்கள்ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம்பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில்,பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.
 
இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும்அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்துபாலஸ்தீன பிரதேசங்கள்இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போதுமெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும்அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடுஇன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாகஇரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டுஎங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலைமருத்துவமனை போன்ற வசதிகளுடன்பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பனசர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள்அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில்அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும்யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும்நகரங்களுக்கு வேலை தேடி செல்வதைஇஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடுபாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.
 
மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன மக்களின் நிலை. அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையேபல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயேஇஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.
 
மிக உன்னிப்பாக கவனித்தால்ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில்பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில்மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யாமற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும்கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால்இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும்தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம்குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகுஇந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம்அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்துஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள்மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால்அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால்அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள்அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்துஅங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கிபின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.

கலக்கத்தில் பா.ஜ.க:1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!


புதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கிய பாரதீய ஜனதா கட்சியின் இரட்டை வேடம் கலைய உள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க கலக்கமடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏலமுறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்படாததால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து தலைமை ஊழல் தடுப்பு ஆணையர்(சி.வி.சி) சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ விசாரணையை துவக்கியது.


இதுத்தொடர்பாக சி.பி.ஐ 7 வழக்குகளை பதிவுச் செய்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் துவங்கி 1993-2004-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் பின்பற்றிய முறையிலேயே ஐ.மு அரசும் ஒதுக்கீடு செய்ததா? தனியார் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்டன? என்று 7 எம்.பிக்கள் கேள்வி விடுத்தனர். இதுத்தொடர்பாக அவர்கள் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்கு மனு அளித்தனர். அதனை பரிசீலித்த ஜெய்ஸ்வால், மனுவை தலைமை ஊழல் தடுப்பு ஆணையருக்கு அனுப்பி வைத்தார். சி.பி.ஐ விசாரணையை பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சியில் இருந்து துவங்கும்படி கேட்டுக்கொண்டார்.
“நிலக்கரி சுரங்கங்கள் தேசியமய சட்டம் 1973-ஆம் ஆண்டின் படி, நிலக்கரி, மின்சாரம், இரும்பு, சிமெண்டு ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் 1993-ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சி காலம் உள்பட 1993-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 39 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. ஆகவே அந்த காலக்கட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்று சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்துள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று சி.வி.சி ஆணையர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் குட்டு வெளியாகிவிடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. சி.வி.சி ஆணையரின் சி.பி.ஐ விசாரணைக்கான உத்தரவு பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 0 0 0 New

இவர்கள் நாட்டின் பாதுகாவலர்களா? ஐ.எஸ்.ஐயின் கைகூலிகளா?


SEP 24: முஸ்லிம்கள், முஸ்லிம் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தி வேட்டையாடும் உளவுத்துறையின் அறிக்கைகளுக்கு பின்னால்  செயல்படுபவர்கள் மத்திய அரசு பீடங்களில் உள்ள RSS அனுதாபிகளே.

மத்திய இண்டலிஜன்ஸ் பீரோவான  ஐ.பியின் முன்னாள் இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமையில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பே முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை உண்டாக்கும் விசயங்களை திட்டமிட்டு செய்து வருகிறது.

இந்த அமைப்பு கன்னியாகுமரியில் இருந்து செயல்படும் விவேகானந்த கேந்திரத்தின் கீழ்வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஏமகனாத் ரானடே என்பவர் தலைமையில் 1972 ல் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில்  டெல்லி உள்ள  சாணக்யா புரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில்தான் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 

மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன்  இந்திய இண்டலிஜன்ஸ் பீரோவான ஐ.பியின் முன்னாள் தலைவர்கள்,  உளவுத்துறையான ‘ரா’வின்  முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ காலால் படை தலைவர்கள், முன்னாள் விமானப்படை தலைவர்கள், முன்னாள் கப்பல் படை தலைவர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள்,  முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் இந்த இயக்கத்தின் தலைமை பதவிகளில் உள்ளனர்.




இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில்தான் முஸ்லிம் இயக்கங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டை கூறும் உளவுத்துறையின் அறிக்கைகள் அதிகமாக வெளியாகினஆர்.எஸ்.எஸ். நடத்திய மலோகேன், அஜ்மீர், சம்ஜோதா ரயில், மக்கா மஸ்ஜித், ஆகிய குண்டு வெடிப்புகளை முஸ்லிம்கள் மீது திசை திருப்பி விட்டவர்களும் இவர்களே. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறைகளில் அடைப்பட்டனர். 

இந்தியாவின் பல மாநிலங்களில் உண்மைக்கு புறம்பாக ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இந்த வேலைகளைகன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் செயல்படும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் என்கிற அமைப்பே செய்து வந்தது. இதன் பின்னணியில்தான்அதிராம் பட்டினத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞ்சர் வெங்காய ஏற்றுமதி வியாபாரி அன்சாரியின் கைதும் அடங்கும். இதுவரை மற்றைய மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியவர்கள் இப்போது தமிழகம் வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத செயல்களுக்கு துணை புரியும் இந்த அமைப்பின்அறிக்கைகளை முதலில் வெளியிடுவது இவர்களின் கைகூலிகளான தினமலர், தினமணிபோன்ற பத்திரிக்கைகளே. த்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் இந்த அமைப்புதான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் உளவுத்துறை என்பது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வளர்ச்சிக்கு துணை புரிவார்கள் ஆனால் நம்நாட்டு உளவுத்துறையோ நமக்கு சாபக்கேடாக அமைந்துவிட்டது