Monday, January 17, 2011

சுனில்ஜோஷி:கொன்றது ஆர்.எஸ்.எஸ், உறவினர்களை பறிகொடுத்தது முஸ்லிம் குடும்பம்!!!

புதுடெல்லி,ஜன.17:ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் பயங்கரவாதியுமான சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்தான் என்ற உண்மை வெளியானபோது மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் ஒரு முஸ்லிம் குடும்பம் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கையை கழிக்கிறது.

சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதற்கு பிறகு தேவாஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுதர்கேதாவில் முஸ்லிம் வீடுகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வீடுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து இரண்டு பேரை தீவைத்துக் கொளுத்திக் கொலைச் செய்துள்ளனர்.


ஷெராஜ் பீவியின் கணவர் 65 வயதான ரஷீதும், 27 வயதான மகன் ஜலீலும் கொலைச் செய்யப்பட்டவர்களாவர். இதர மகன்களான ராஷிஷிற்கும், அஷ்பாக்கிற்கும் குண்டடிப்பட்ட போதும் அவர்கள் மரணிக்கவில்லை. மகளோ உடல் பாதி வெந்துபோன நிலையில் உயிர் தப்பியுள்ளார்.

ஜோஷியை கொலைச் செய்ததற்கு பிறகு அதனை காரணங்காட்டி முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்கிய சம்பவம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

2007 டிசம்பர் 29-ஆம் தேதி ஜோஷி கொலைச் செய்யப்பட்ட அடுத்த நாளில் சுதர்கேதாவில் தாக்குதலை நடத்தியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட ஹிந்து வெறியர்கள் கோபத்துடன் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். "எல்லோரையும் எரித்துக் கொல்லுங்கள்" என வெறிப்பிடித்த கூட்டம் கத்தியதாக ஷெராஜ்பீ நினைவுக் கூறுகிறார்.

"எனது வீட்டை சுற்றிவளைத்த ஹிந்துத்துவ வெறியர்களிடம், ஏன் எங்களை நீங்கள் தாக்குகின்றீர்கள்? என நான் கேட்டேன். பதில் கூறாத அவர்கள் எவரும் வீட்டிலிருந்து வெளியேறி விடாதவாறு வீட்டின் வெளியே கதவுகளை மூடினர்." ஹிந்துத்துவ வெறியர்களின் கூட்டத்தை வழிநடத்தியவாறு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வருவதை ரஷீத் வீட்டிற்கு வெளியேயிருந்து பார்த்துள்ளார்.

ஹிந்துத்துவ வெறியர்களில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். வீட்டிற்குள் சாப்பிட்டுக்கொ ண்டிருந்த ஜலீலை வெளியே இழுத்துச்சென்று தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதனை தடுப்பதற்கு சென்ற அஷ்பாக்கையும், ராஷிஷையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ரஷீதின் இளைய சகோதரி ஐந்து வயது அஸ்மாவிற்கு உடலில் காயமேற்பட்டது. 90 சதவீதம் உடல் கருகிய ஜலீல் பதினொன்று தினங்களாக எம்.ஒய் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கடும் வேதனையை அனுபவித்து மரணித்துள்ளார்.


ஜோஷி கொலைச் செய்யப்பட்டு மறுதினம் ஹிந்துத்துவ அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன. முழு அடைப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

ஜோஷியைக் கொலைச் செய்தது 'சிமி' அமைப்புதான் என போலீஸ் அறிவித்துள்ளது. இது ஹிந்துத்துவ வெறியர்களுக்கு மேலும் வெறியைத் தூண்டியுள்ளது. தாக்குதல்களுக்கெதிராக முஸ்லிம்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு பதிவுச் செய்தபோதும் போலீசாரும், ஆர்.எஸ்.எஸ்காரர்களும் இணைந்து வழக்கை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

பான்வர்சிங், மஹிபால் சிங், ஓம்பிரகாஷ், ஜஸ்வந்த்சிங், ராஜ்பால் சிங் ஆகியோர்தான் தாக்குதலை நடத்தி முஸ்லிம்களைக் கொலைச் செய்த குற்றவாளிகள். வழக்கை வாபஸ் பெறாமல் உறுதியாக இருந்ததால் குற்றவாளிகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி தேவாஸ் செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துள்ளது. வழக்கு தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

குற்றவாளிகளின் அச்சுறுத்தலால ஷெராஜ்பீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூட முடியவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
 

துபாய்:சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது!!!


துபாய்,ஜன.16:பள்ளிக்கூடம் செல்லும் பேருந்தில் வைத்து 4 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்த காம வெறிப்பிடித்த 3 இந்தியர்களை துபாய் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

துபாய் நாத்-அல்-ஷீபாவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் இந்தியாவைச் சார்ந்த சிறுமி கல்வி பயின்று வந்துள்ளார். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடைகளை அவரது தாயார் மாற்றியபொழுது இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்வாஸல் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் அவரது தாயார். பின்னர் என்னவோ ஏதோ என பயந்து இந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிறுமியை காண்பித்துள்ளனர். அப்பொழுது டாக்டர், சிறுமியை பரிசோதித்துவிட்டு, சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார் பர்துபாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பள்ளி சென்று வந்த பஸ்ஸின் ஓட்டுநர், க்ளீனர், அட்டெண்டர் ஆகியோர்தான் வெறிப்பிடித்து இத்தகைய அக்கிரமமான குற்றத்தை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைதுச் செய்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த காம வெறிபிடித்தவர்கள் மேலும் எவரையேனும் இத்தகைய பாதக செயலுக்கு ஆட்படுத்தியுள்ளனரா? என்பதுக் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த பாதகச் செயலை நடத்தியவர்கள் சமூகத்தின் வைரஸ்கள் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்பான் அல் தமீமி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட நிர்வாகிகள் இந்த தவறு நிகழ்ந்ததற்கு காரணமான பொறுப்பிலிருந்து தப்பிக்கவியலாது. ஒரு பெண் பணியாளரை பேருந்தில் நியமிக்காதது பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும். இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தாஹி கல்பான் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளிக்கூட நிர்வாகிகள்தான் என துபாய் போலீஸ் துணைத்தலைவர் மேஜர் ஜெனரல் கமீஸ் மதார் தெரிவித்துள்ளார். சிறுமிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல 3 ஆண் பணியாளர்களை நியமித்தது அறிவுக்கு பொருந்தாது என அவர் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் நிகழும்பொழுது உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு துபாய் போலீஸ் குற்றவியல் புலனாய்வு தலைவர் மேஜர் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

உசார் ஐயா!! உசார்!! காமசூத்ரா வைரஸ்!!!

லண்டன்: கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம்ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. 



அது போன்ற வைரஸ் மீண்டும் அதேபெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில் வந்துள்ளது. இது போன்ற வைரஸ்கள் நீங்கள் புதிதாக ஏதாவது சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்யும் போது வருகின்றன.எனவே கம்ப்யூட்டரில் இதுபோன்ற வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களை அழித்துவிட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர் இத்துறை வல்லுநர்கள்
 

Sunday, January 16, 2011

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய கறுப்பு பணம்: அரசியல்வாதிகளின் பெயர்களை மறைப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி, ஜன. 14: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிடாதது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, நீதிபதி எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது.

 ராம் ஜெத்மலானி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவாண் வாதாடும்போது, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பெயர்களை மத்திய அரசு வெளியிடாமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
 மத்திய அரசு சார்பில் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி அரசுத் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.
 இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இது வரி விவகாரம் மட்டும் தொடர்புடையது அல்ல, பல்வேறு முக்கிய பிரச்னைகள் இதில் அடங்கியிருக்கிறது. வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் பெயர்ப் பட்டியல் மத்திய அரசிடம் இருக்குமானால், அதை வெளியிடாமல் ரகசியம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
 இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பிடம் விளக்கம் கேட்க காலஅவகாசம் தேவை என்று சொலிசிடர் ஜெனரல் கோரினார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
 கறுப்புப் பணம்: வரிஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்றழைக்கப்படும் லீக்டென்ஸ்டைன் நாட்டில் செயல்படும் சுவிஸ், ஜெர்மனி நிறுவன வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
 அந்த நாட்டு விதிகளின்படி, வெளிநாட்டினரின் வங்கிக் கணக்குகள் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் நாடுகளால்கூட அந்த வங்கிக் கணக்கு விவரங்களைப் பெறமுடியவில்லை.
 லிடென்ஸ்டின் நாட்டில் சுவிஸ், ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த சுமார் 15 வங்கிகள் உள்ளன. இதில், எல்.டி.ஜி. என்ற வங்கியில்தான் வெளிநாட்டினர் பெருமளவில் பணத்தை குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 இதனிடையே, ஜெர்மனி அரசு, தன்னுடைய உளவுத் துறை மூலம் எல்.டி.ஜி. முன்னாள் ஊழியர் மூலம் அந்த வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளது. சுமார் 1,400 வெளிநாட்டினர் அந்த வங்கியில் கறுப்புப் பணத்தை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 87 பேர் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது.
 அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, நார்வே, சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஜெர்மனியிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றுள்ளன. இதே விவரங்களை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருப்பதாக ஜெர்மனி அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
 ஜெர்மனி அரசிடம் இருந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசு பெற்று விட்டதாகவும், ஆனால், அந்த தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 இந் நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலை ரூ.2.54 உயர்வு: விலைவாசி மேலும் அதிகரிக்கும் அபாயம்!

புதுதில்லி, ஜன.15: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரொல் விலையை உயர்த்தி அறிவித்தன. லிட்டருக்கு ரூ. 2.50 முதல் ரூ. 2.54 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இது இரண்டாவது முறையாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ரூ. 2.50 என்ற அளவிலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிட்., லிட்டருக்கு ரூ.2.54 என்ற அளவிலும் விலையை உயர்த்தி அறிவித்தன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.2.53 என்ற அளவில் உயர்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மத்தியில், மிகப்பெரிய உயர்வாக ரூ. 2.94 முதல் 2.96 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றத்துக்குப் பிறகு, டெல்லியில் ஐ.ஓ.சி விற்பனை மையங்களில் ரூ.58.37 ஆகவும்,
ஹெச்பிசிஎல், பிபிசிஎல் பம்ப்களில் ரூ.58.39 ஆகவும் விலை இருக்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 92 டாலர் விலை அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 15, 2011

இந்த பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்!!!


இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் நூற்றுக்கணக்கில் காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.





இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.





ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்கு முறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி. ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?




அருந்ததி ராய் 



ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான் இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது இருக்கட்டும். உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.



சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1. கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2. நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடனடியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3. ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4. 26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5. இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6. கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7. நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8. இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9. இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10. பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும். இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !



நன்றி: வினவு
 

கணக்குக் கேட்டால் தப்பா?

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதல்முறையாக பொதுக் கணக்குக் குழு முன்பாக இந்திய ராணுவத் தளபதிகள் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இந்த ஆண்டு உருவாகி இருக்கிறது.
 ராணுவத்தினருக்கான கேன்டீன்கள் மூலமாக 2003-ம் ஆண்டு முதல் 2009 நிதியாண்டு வரை, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 441 கோடி என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அரசுக்கு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுக்கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கடிதம் அனுப்பியதால், தரைப்படை, விமானப்படைத் தளபதிகள் வி.கே. சிங் மற்றும் பி.வி.நாயக், கப்பற்படை துணைத் தளபதி டி.கே. திவான் ஆகியோர் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
 ராணுவம் நடத்தும் கேன்டீன்களுக்கெனத் தனியாகத் தணிக்கை முறைகள் ராணுவத்துக்குள்ளேயே இருப்பதால், ஆய்வுசெய்யும் அதிகார வரம்பு, தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கு இல்லை என்று தாங்கள் கூறியதாக இந்தத் தளபதிகள் கருத்து தெரிவித்தாலும், அது ஏற்கக்கூடியதாக இல்லை. ராணுவ ரகசியம் மற்றும் உளவுத் தகவல் அறிவதற்காகச் செலவிடப்படும் கணக்கில் காட்டப்பட வேண்டிய அவசியமில்லாத நிதிஒதுக்கீடு ஆகியன தொடர்பாக தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை ஆய்வு நடத்த முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ராணுவப் பயிற்சிக்காகச் செலவிடப்படும் தொகை மற்றும் இந்தப் பயிற்சிகளில் வீணாகும் ஆயுதத் தளவாடங்கள், துப்பாக்கி ரவை, வெடிகுண்டுகள் குறித்தும் பொது கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்ப முடியாது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ராணுவம் நடத்தும் கேன்டீன்களில் பொருள்கள் வாங்கப்படும், விற்கப்படும் முறைகள் குறித்தும், அவற்றுக்காக மத்திய அரசு வழங்கும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, அதற்கான வரம்பு இல்லை என்று ராணுவத் தளபதிகள் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை.

 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் இரண்டு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முதலாவதாக, ராணுவத்தின் மூலம் நடத்தப்படும் சுமார் 3,600 கேன்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கான சலுகைகளில் விதிமீறல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, ராணுவ கேன்டீனுக்குக் கொள்முதல் செய்யும் விலை, நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கிறது. இதனால், கேன்டீனுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற வழி ஏற்படுகிறது.
 ராணுவ வீரர்களுக்கான மதுவிற்பனை இந்தக் கேன்டீன்கள் மூலம் நடைபெறுகிறது. இங்கு விற்கப்படும் மதுபானங்களுக்கு விற்பனை வரி, உற்பத்தி வரி ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிப்பதால் ராணுவ வீரர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இந்த மதுபானங்களை விற்பனை செய்ய முடிகிறது. ராணுவம் எந்த அளவுக்கு மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி, மதுபானங்களைக் கொள்முதல் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
 தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்ய பல கேன்டீன்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், இக்குழு புதுதில்லியில் 3 கேன்டீன்களில் மட்டுமே ஆய்வு செய்தவரையில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக இந்த மூன்று கேன்டீன்களும் ரூ. 8 கோடி மதிப்புள்ள மதுபானங்களை வாங்கி விற்றுள்ளன. இந்த ரூ. 8 கோடி மதுபானங்கள் வரிகளுடன் வெளிச்சந்தையில் விற்கப்பட்டிருந்தால் இதன் மதிப்பு ரூ.19.45 கோடி! அதாவது அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வரி இழப்பு ரூ.11.45 கோடி இந்த 3 கேன்டீன்கள் மூலமாக மட்டுமே ஏற்பட்டுள்ளது.
 மதுபான விற்பனையில் மட்டும்தான் வரிவிலக்கு மூலம் குறைந்த விலை சாத்தியமாகிறது என்றல்ல. வாஷிங் பவுடர் முதல் வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும், இரு சக்கர வாகனங்களும், ஏன் தற்போது கார்களும்கூட இந்தக் கேன்டீன்கள் மூலமாக வாங்க முடியும். இவை அனைத்துமே வரிச் சலுகைகளால் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.
 இவற்றை ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே முழுக்கப் பயன்படுத்தினாலும்கூட இந்த இழப்பை அரசு பொருள்படுத்தாமல் விட்டுவிட முடியும். ஆனால், வெளிச்சந்தையில் அதிக விலை என்கிற ஒரே காரணத்துக்காகத் தங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுக்க முனையும்போதுதான் அதிகப்படியான கொள்முதலுக்கு வழியேற்படுகிறது. அரசுக்கும் வரி வருவாய் இழப்பதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
 ராணுவத்துக்கு எவ்வாறு மது ஒதுக்கீடு அளவு (லிக்கர் கோட்டா) இருப்பதைப் போன்று ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் ஏன் மது ஒதுக்கீட்டை தேவைக்கேற்ப நிர்ணயிக்கக்கூடாது. ஒரு ராணுவ வீரர் தன் குடும்பத்துக்காக ஒரு வீட்டு உபயோகப் பொருளை வாங்கிவிட்டால், அந்தப் பொருளை அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு வாங்க முடியாத நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய குளறுபடிகளை தடுத்துவிட முடியுமே.

 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி முன்வைத்துள்ள இந்த இரு குற்றச்சாட்டுகளும் ராணுவத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு செய்யவில்லை என்பதையும், குறைகளைக் களைய வேண்டிய அவசியம் ராணுவத்துக்கும் இருக்கிறது என்பதையும் பாதுகாப்புத் துறை புரிந்துகொள்ள வேண்டும். ராணுவத்திலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் காணாமல்போய், அவை அடுத்த சில மணி நேரங்களில் தில்லியின் புறநகர் சாலையில் வீசப்பட்டு கிடக்குமா?
 ராணுவத்தினருக்கும் ராணுவக் குடும்பத்தினருக்கும் அனைத்துவிதமான சலுகைகளையும் அளித்து ஊக்கப்படுத்தினால்தான், ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால், இந்தப் பயன் ராணுவத்தினரின் குடும்பத்துக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்பதைக் கண்காணிப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும்?

Friday, January 14, 2011

காங்கிரசும் அதன் கருங்காலி ஹிந்துத்துவா சிந்தனையும்.!!

புதுடெல்லி,ஜன.13:ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய(டி.டி.எ) அதிகாரிகள் அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர். இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.

டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.

நன்றி செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
 

மாலேகாவ் குண்டுவெடிப்பு: மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி



மும்பை, ஜன. 13: மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசிமானந்தா குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த வாக்குமூலத்தை அடுத்து வழக்கை மறுவிசாரணை நடத்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. 2008-ம் ஆண்டில் மாலேகாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அசிமானந்தா கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது 2006-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும், அவரது நண்பர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி 2006-ல் மாலேகாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை மறுவிசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கோரியிருந்தது. அதற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் 2006-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
நன்றி:தினமணி 

பொங்கல்: நிரம்பி வழியும் ரயில், பஸ்கள்

சென்னை, ஜன. 13: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
 


தொழில், வேலைவாய்ப்புக்காக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர்.


 சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மட்டும் பல ஆயிரங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் வழக்கம்போல நிரம்பி வழிகின்றன. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற முண்டியடிக்கும் பயணிகளைக் கட்டுப்படுத்த நீண்ட வரிசையில் நிற்குமாறு ரயில்வே போலீஸôர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இந்த ஏற்பாடுகள் தொடருமா என்பது சந்தேகமே.




 சிறப்பு ரயில்களிலும் நெரிசல்: கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி முதல் டிசம்பர் வரை மட்டும் 1,310 சிறப்பு ரயில்களை இயக்கியதன் மூலம் ரூ. 36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 155 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 இதுதவிர நெரிசலை சமாளிக்கும் வகையில், பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 45 சிறப்பு ரயில்களும் நிரம்பி வழிகின்றன.


 இதில் பொங்கல் நாள்களில் எந்த ரயிலிலும் டிக்கெட் எதுவும் காலியில்லை. மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களிலும் 95 சத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


 சிறப்பு ரயில்களில் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த, தூங்கும் வசதி உள்ள 1.39 லட்சம் இருக்கைகளும் (பெர்த்) முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


 இதையடுத்து, பொங்கல் விடுமுறை நாள்களில் சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் கூடுதலாக 305 ரயில் பெட்டிகளை இணைத்து இயக்கவும் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.




 பகல் நேர சேர் கார் விரைவு ரயில் சேவை: கடைசி நேர நெரிசலை சமாளிக்க மற்றொரு முயற்சியாக சென்னை- நாகர்கோவில் இடையே பகல் நேர விரைவு ரயில் சேவையை இரு மார்க்கங்களிலும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளும் அமரும் இருக்கைகள் கொண்டதாக (சேர் கார்) இருக்கும். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.

 
நெரிசலைப் பயன்படுத்தி போலி முகவர்கள் முறைகேடாக பயணிகளிடம் ரயில் டிக்கெட்டுகளை விற்பதைத் தடுக்கும் வகையில், ரயில்வே போலீஸôர்- ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 


சிறப்பு பஸ்களாகும் டவுன் பஸ்கள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் இதர முக்கிய இடங்களுக்கு அரசு விரைவு பஸ் கழகங்களின் 475 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. 


இதுதவிர 650 சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு பஸ் கழகம் திட்டமிட்டுள்ளது.


 ரயில்கள் நிரம்பி வழிவதையடுத்து, இப்போது அரசு விரைவு பஸ்களை பயணிகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால், பஸ்களிலும் நெரிசல் அதிகரித்துள்ளது.


 கூடுதல் கட்டண வசூல்: சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவு பஸ்களில் இப்போதைய கட்டண விவரம் சாதாரண பஸ் (செமி டீலக்ஸ்) ரூ. 105. சொகுசு பஸ் (அல்ட்ரா டீலக்ஸ்) ரூ. 175. ஆனால், பொங்கல் நெரிசலைப் பயன்படுத்தி கடைசி நேரத்தில் 1,000 டவுன் பஸ்களை சிறப்பு பஸ்களாக இதர போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு இயக்க உள்ளன.


 இதற்காக திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இயக்கப்பட்ட சாதாரண பஸ்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


 இதில் சென்னை- திருச்சிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு (சாதாரண) பஸ்களில் கட்டணம் ரூ. 125 என்று முன்புற கண்ணாடியில் எழுதப்பட்டு, இயக்கப்படுகின்றன. இதே போல பிற இடங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ஆம்னி பஸ்களை சாதாரண மக்கள் நெருங்கக் கூட இயலவில்லை.
 
நன்றி:தினமணி 

Thursday, January 13, 2011

தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம்! - சீமான்

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிமுக பக்கம் இழுத்தார் வைகோ. இப்போது சீமானின் முறை. தன் பங்குக்கு முஸ்லிம் அமைப்புகளான மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.



நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலை ஆனார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. பழ நெடுமாறன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுகவுடன் கூட்டணி என்பதையும் அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சீமான் சென்றார்.



மனித நேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் ஜவாகிருல்லா அவரை வரவேற்றார். த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, மற்றும் நிர்வாகிகள் ரிபாயி, ஜெய்னுல் ஆபிதீன், கோவை சாதிக், இயக்குநர் புகழேந்தி, தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். 

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், இலங்கை தமிழர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்புக்கு பின்னர் சீமான் கூறும் போது, சட்டசபை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை மத்திய அரசு அலசியப்படுத்தியது :ஆனந்த் பட்வர்தன்.

திருச்சூர்,ஜன.12: ஆட்சியாளர்களும், போலீசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட்டு முன்னரே முஸ்லிம்களை தீவிரவாதிகள் என தீர்மானித்ததன் விளைவுதான் அஸிமானந்தாவின் வாக்குமூலம் வெளிப்படுத்துகிறது என பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான ஆனந்த்பட்வர்தன் தெரிவித்துள்ளார். திருச்சூரில் 6வது விப்ஜியார் சர்வதேச திரைப்பட விழாவிற்கு இயக்குநராக வருகைத்

தந்துள்ள அவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி வருமாறு: 

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பே 1992 ஆம் ஆண்டு "ராம் கீ நாம்" என்ற ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வெளியிட்டேன். தெளிவான ஆதாரங்களுடன் சங்க்பரிவார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிப்பார்கள் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர்த்தினேன். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அத்வானியின் ரதயாத்திரையும், மோடி நடத்திய கோத்ரா ரயில் எரிப்பும் ஏற்கனவே தீட்டப்பட்ட சதித்திட்டமாகும். 'எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர்! ஆனால் தீவிரவாதிகளெல்லாம் முஸ்லிம்கள்' என்ற அதிகாரப்பூர்வ பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களில் சிலர் வழி தவறிச் செல்லவும் காரணமானது. கேரளாவிலும், மேற்குவங்காளத்திலும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்தின் மிரட்டல்களுக் கெதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வந்தபிறகுதான் ஊடகங்கள் 'ராம் கீ நாம்' ஆவணப்படம் அளித்த செய்தியை புரிந்துக்கொண்டன. மூன்று தனியார் சேனல்கள் அச்சூழலில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பின. அப்பொழுதும்கூட ஒளிபரப்பு அசோசியேசனின் எதிர்ப்பு தொடரத்தான் செய்தது. நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான ஒளிபரப்பு அசோசியேசன், இந்த ஆவணப்படத்தைக் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ஆபத்து நிறைந்தது என குறிப்பிட்டது.

அரசும், போலீசும் இரண்டுவிதமாக தீவிரவாதத்தை அணுகுகின்றனர். எங்கேயாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் தீவிரவாத இயக்கங்களின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச்சென்று சிறையிலடைத்து கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர்.

மூன்றாம் தரமான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். நீதிமன்றத்தில் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்து குற்றவாளியாக்கி சிறையிலடைக்கின்றனர். நிரபராதிகள் தண்டிக்கப்படும் பொழுது மக்கள் நீதிபீடத்தின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் உற்பத்திச் செய்யும் தீவிரவாதம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்தியாவை தகர்த்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிரிகளாக பாவிக்கும் அவர்கள் மனிதத் தன்மையற்றவர்களும், ஜனநாயகத்திற்கு எதிரானவர்களுமாவர். ஹிட்லரும், முசோலினியும்தான் அவர்களின் வழிகாட்டிகள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மரியாதை அளித்தது 1979 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கமாகும்.


காந்தியின் படுகொலை மூலம் மக்களால் வெறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஜனதா கட்சி ஆட்சியின் மூலம் தங்களுடைய மரியாதையை பலப்படுத்திக் கொண்டார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும், இனக் கலவரங்களைக் குறித்தும் விசாரணை நடத்தினால் சங்க்பரிவாரின் ஆக்டோபஸ் கரங்கள் இவற்றின் பின்னணியில் இருப்பதை கண்டறியலாம்.

தங்களது இயக்கத் தலைவர்களையும், உறுப்பினர்களையும், அரசியல் லாபங்களுக்காகவும், பயங்கரவாத யுக்திகளுக்காகவும் கொலைச் செய்யவும் தயங்காதவர்கள்தான் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்திய நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத வரலாற்றைக் குறித்த விழிப்புணர்வு ஊட்டவேண்டும். இவ்வாறு பட்வர்தன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆனந்த் பட்வர்தன் தேஜஸ் பத்திரிகையின் ரெஸிடென்ட் எடிட்டரான மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் தனது உற்ற நண்பர் என தெரிவித்த ஆனந்த் பட்வர்தன், பாசிசத்தோடு சமரசத்திற்கு இடமில்லாமல் போராடிய முகுந்தன் சி மேனன் மனித உரிமை களத்தில் விலைமதிப்பில்லா சேவைகளை புரிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
 
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பத்தும் பறந்துபோம்!


ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டதுபோல எல்லோரும் விலைவாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப்படாமல் இருந்துவிட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது.


கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ. 1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.



ஏதோ வெங்காய விலை மட்டுமா மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது? பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள் என்று பரவலாக எல்லாப் பொருள்களும் சராசரி 15 முதல் 30 சதவீதத்துக்குக் குறையாமல் விலையேற்றத்தைக் கண்டிருக்கும் நிலைமை. இது ஒன்றும் திடீரென்று ஏற்பட்டுவிட்ட நிலைமையல்ல. கடந்த ஓராண்டாக இந்த விலையேற்றம் தொடர்ந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது. இதைப் பிரச்னையாகக் கருதாமல், பருவநிலை மாற்றம் அடுத்த மகசூலில் நிலைமையைக் கட்டுப்படுத்திவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் ஆட்சியாளர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றியும், ஆதர்ஷ் குடியிருப்பு பற்றியும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்ததன் விளைவுதான் இன்றைய கட்டுக்கடங்காத நிலைமை.


சராசரி இந்தியக் குடிமகன் சில்லறை வியாபாரிகளிடம் காய்கறி அல்லது உணவுப் பொருள்களுக்குத் தரும் விலைக்கும் மொத்த விற்பனை விலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதேபோல, விவசாயி தனது விளைபொருள்களை விற்கும் விலைக்கும் மொத்த விற்பனை விலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. சில்லறை விற்பனையில் கிடைக்கும் லாபம் குறைந்தது 30 சதவீதம். ஒரு சில பொருள்களுக்கு இந்த இடைத்தரகர்கள் அடையும் லாபம், அங்கும் இங்கும் கடன் வாங்கி, மழையிலும் வெயிலிலும் போராடி, உழுது பயிரிட்டு அந்தப் பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிக்குக் கிடைக்கும் விலையைவிட அதிகம் என்றால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி இரண்டையும் சேர்த்து நாம் சுமார் 350 லட்சம் டன் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி இருக்கிறோம். இதன் மொத்த மதிப்பு ரூ. 1.4 லட்சம் கோடி. அதாவது, சராசரியாக ஒரு டன்னுக்கு ரூ. 40,000. 1 கிலோ ரூ. 40. சில்லறை விற்பனையில் பொதுமக்கள் இந்தப் பருப்பு வகைகளை என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் தெரியுமா? குறைந்தது ரூ. 60 முதல் ரூ. 110வரை! ரூ. 60 என்று வைத்துக்கொண்டாலும்கூட 50 சதவீதம் லாபம் இடைத்தரகர்களுக்குப் போயிருக்கிறது. விவசாயிக்கு மிஞ்சியது உழைப்பும் கடனும்தான் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், காய்கறி, பழங்கள் என்று எல்லா பொருள்களிலும் இதேதான் நிலைமை. இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள். முதலாவதும் அடிப்படையானதுமான காரணம், முறையான சேமிப்புக் கிடங்கு வசதியோ, விற்பனை வசதியோ, விவசாயிக்கு முன்னுரிமை கொடுத்து விலை நிர்ணயம் செய்து அவரது நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நடவடிக்கையோ இல்லாதது. லஞ்சமும் ஊழலும் நிறைந்த பொதுவிநியோக முறை இருக்கும்வரை இந்தக் குறையைப் போக்க முடியாது என்பது தெரிந்தும், அதற்கான முயற்சிகளை அரசும் செய்யவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் செய்ய ஊக்குவிக்கவில்லை.இரண்டாவது காரணம், விவசாயிக்கு முறையாக நிதியுதவி வழங்கி விவசாயத்தை கௌரவமான, லாபகரமான தொழிலாக நிலைநிறுத்த அரசு முயற்சிக்காதது. சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்றின்படி, 40 சதவீதம் விவசாயிகள் விவசாயம் செய்வதை விட்டுவிட்டார்கள் அல்லது விட்டுவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விளைநிலங்கள் அரசின் அனுமதியுடனும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் வீட்டுமனைகளாக்கப்படுகின்றன. காரணம், ஊருக்குப் பசி தீர்க்கும் விவசாயம், விவசாயிக்குப் படியளக்கவில்லை, என்பதுதான்.

உலகின் எந்தப் பகுதியிலும், காலங்காலமாக அரசின் ஆதரவும், முறையான கடன் வசதிகளும் இல்லாமல் விவசாயம் தழைத்ததில்லை. இங்கே அவ்வப்போது கடன் நிவாரணம் என்ற பெயரில் வங்கிகளில் கடன் சுமை இறக்கப்படுகிறதே தவிர, விவசாயியின் சுமை இறக்கப்பட்டதே இல்லை. இடைத்தரகர்கள் விவசாயிகளுக்குத் தரப்படும் மானியங்களில் பாதிக்கு மேல் உண்டு கொழுக்கிறார்களே தவிர, விவசாயிக்கு முறையாக மானியங்கள் போய்ச் சேர்வதே கிடையாது.


கோடிக்கணக்கான ரூபாய் உர மானியம் என்கிற பெயரில் உரத் தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டும், இன்னும் ஒரு ஹெக்டேருக்கான உரம் அதிகப்படவே இல்லையே, ஏன்? கோடிக்கணக்கான பணம் பாசன வசதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படுகிறதே தவிர, விளைநிலங்களின் பரப்பளவு அதிகரிக்கவில்லையே, ஏன்? பிறகு ஏன் விவசாயிகள் பயிரிடத் தயங்குகிறார்கள்? எங்கே போயிற்று அந்தப் பணம் எல்லாம்?

இந்தியாவின் மொத்தப் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் என்று மார்தட்டிக் கொள்கிறது அரக. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக விவசாய வளர்ச்சி வெறும் 2.2 சதவீதம்தான். மத்திய அரசில் விவசாயிகள் பிரச்னை மற்றும் விலைவாசிப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சகங்கள் 12. மாநில அளவில் 5 அமைச்சகங்கள் விவசாய மற்றும் விலைவாசிப் பிரச்னைகளுடன் தொடர்புடையவை. இவை அனைத்தும் எப்போதாவது ஒன்றாக அமர்ந்து பிரச்னையை அலசி ஆராய்ந்தது உண்டா? தீர்வுகாண முயற்சித்தது உண்டா?
இத்தனை அமைச்சகங்கள், இத்தனை அதிகாரிகள், இவ்வளவு பெரிய நிர்வாக இயந்திரம். இவையெல்லாம் இருந்தும், தொலைநோக்குப் பார்வையுடனும் எச்சரிக்கையுடனும் மக்களின் உணவுப் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறும் ஓர் ஆட்சியை எப்படி நல்லாட்சி என்று ஏற்றுக் கொள்வது?

பொறுமை எல்லை மீறுகிறது. பசிவந்தால் பத்தும் பறந்துபோம்!
நன்றி:தினமணி 

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்..


IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.


இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா? என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்



இந்த தேர்வை பற்றிய முழு விபரம்.

யார் விண்ணப்பிக்க முடியும்?

1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்துஇருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness இருக்க வேண்டும்


விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : ஜனவரி 28


விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : 

அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த www.tnpsc.gov.inஇணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30.


தேர்வு கட்டணம் : 

முதல் கட்ட தேர்வு ரூ.75. இரண்டாம் கட்ட தேர்வு ரூ.125


தேர்வு நடக்கும் இடங்கள் : 

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன

சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:

1. 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.
2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்


பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Tamil Nadu Public Service Commission, Commercial Taxes Annexe Building, No.1 Greams Road, Chennai – 600 006


தேர்வை பற்றி

இந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in இந்த இணைய தளத்தில் உள்ளது.