Pages
- Home
- முத்துப்பேட்டையின் முதல்வர்கள் மற்றும் தியாகிகள்
- சரித்திரம் படைத்தவர்கள்
- புகைப்படங்கள்
- SCHOLARSHIP (OR) கல்வி உதவித்தொகை விபரம்
- பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்
- முத்துப்பேட்டை தொலைபேசி எண்கள்
- குர்-ஆண்,ஹதீஸ் கூறும் துஆக்கள்
- ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
- தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்
- தொடர்புக்கு
Sunday, February 27, 2011
முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?
அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு
சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்
அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.
மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.
காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உபகரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ் கல்மாடி பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்துள்ளது.
காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ் கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனால் கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ் கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Saturday, February 26, 2011
ரயில்வே பட்ஜெட் -தமிழகத்துக்கான ரயில்கள்
2. சென்னை - திருவனந்தபுரம் வாரம் இருமுறை
விவேக் எக்ஸ்பிரஸ்:
1. திப்ரூகர் - திருவனந்தபுரம்
-கன்னியாகுமரி வாராந்திர ரயில்
2. துவாரகா - தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
ஜன்ம பூமி கெüரவ் சுற்றுலா ரயில்கள்:
1. சென்னை - புதுச்சேரி - திருச்சிராப்பள்ளி - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - சென்னை
எக்ஸ்பிரஸ் (பெங்களூர் வழி)
2. கோயம்புத்தூர் - தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ்
3. மைசூர் - சென்னை வாராந்திர
எக்ஸ்பிரஸ்
4. வாஸ்கோ - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
5. கரக்பூர் - விழுப்புரம் வாராந்திர
எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
6. புரூலியா - விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
7. தில்லி - புதுச்சேரி வாராந்திர
எக்ஸ்பிரஸ்
பாசஞ்சர் ரயில்:
1. கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் (வாரத்தில் 6 நாள்)
ரயில் மோட்டார் சேவை:
தர்மபுரி - பெங்களூர்
மின் ரயில் சேவை:
கொல்லம் - நாகர்கோவில்
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்:
1. சென்னை எழும்பூர் - நாகூர்
எக்ஸ்பிரஸ் காரைக்கால் வரை
நீட்டிக்கப்படுகிறது.
2. நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில் கொச்சுவேலி வரை
நீட்டிக்கப்படுகிறது.
2. வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் திருச்சி - கரூர் பாசஞ்சர் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.
கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.
வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்தின் உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.
இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.
தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கை சென்று வியபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது.
1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.
இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் அங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25 லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.
இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.
அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.
- CMN சலீம்
http://www.samooganeethi.org/?
Friday, February 25, 2011
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி: பேச்சுவார்த்தை தொடங்கியது
முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றும் விரைவில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஜெயலலிதாவும் அவருடைய கட்சி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று பேசி வந்தார்.
துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!
எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது.
சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.
‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு
உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலமாகச் சித்தரித்தனர்.
முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர்.
திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.
இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது.
இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள்தாம்.
முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர்.
மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.
ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான் காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.
ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.
புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.
தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.
டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம்.
ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.
இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.
சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது இன்னொன்று.
கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின்
ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன.
ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.
இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!
நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும் காஷ்மீரத்தின் வரலாறு.
அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.
மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.
இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.
நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.
Thursday, February 24, 2011
விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டுமாம்; சொல்கிறார் காங்கிரஸ் பிரமுகர்!
Monday, February 7, 2011
நான் முஸ்லிம் என்பதால் என் வங்கிக் கணக்கை மூடிவிட்டனர்!
18 வயதான காலித் அலீ அப்பாஸி, டெல்லியில் ஒரு கலைக் கல்லூரியில் சமூக அறிவியல் பாடம் படித்து வருகிறார். சிண்டிகேட் வங்கியின் யமுனா விஹார் கிளைக்கு தனது ஏடிஎம் கார்டு வேலை செய்யாததைப் பற்றி விசாரிக்கச் சென்றார். கிளை மேலாளர் மஹேஷ் சந்த் ஷர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காலித். மக்கள் குழுமியிருந்த அந்த இடத்தில் மதத்தைக் காரணம் காட்டி இவரைத் திட்டி அவமதித்திருக்கிறார் கிளை மேலாளர்.
கிளை மேலாளர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவிட்டு அப்பாஸியின் வங்கிக் கணக்கை நிரந்தரமாகத் தடை செய்துவிட்டார்.
அவரும், "இங்கிருந்து வெளியே சென்றுவிடு முஸ்லிமே" என்று கூறினார். நான் செல்லாமல், "இது போல் செய்யக் கூடாது. எனக்கு என் கணக்கைப் பற்றித் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது" என்று கூறினேன். அதற்கு கிளை மேலாளர், "என் கணக்கை தடைசெய்து விடுவேன் என்று மிரட்டினார்" என்று அப்பாஸி கூறுகிறார்.
மேலாளரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இந்தக் குற்றச்சாட்டு தவறானது, இட்டுக் கட்டப்பட்டது" என்று கூறினார்.
முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியது குறித்துக் கேட்கப்பட்ட போது, "நான் படித்தவன், சமய சார்பற்றவன், பொது இடங்களில் இது போன்ற வார்த்தைகளை விடமாட்டேன்" என்று கூறினார்.
இதுக்குறித்து அப்பாஸி டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்திலும், இந்திய ரிசர்வ் வங்கியிலும் தனது புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.
புஷ்க்கு எதிரான நடவடிக்கை!! சிறப்பாக செயல்படும் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள்!!
இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
Saturday, February 5, 2011
இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்
மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.
இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர்
என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய
ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம்
மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.
செப்டம்பர் 11 மற்றும் லண்டனில் ஜூலை 7ல் நடந்தத தாக்குதல்களால் இங்கிலாந்தில்
இஸ்லாமோபோபியா பரவியது. எனினும் இதனால் இஸ்லாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை
குறையவில்லை.
மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!!!
முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
பாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும்,
பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது
குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
[image: INDIAREACTS.jpg]
2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை
வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை
டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட
பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என
அவ்வறிக்கை கூறுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில்
சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை
வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே
செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான
முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட
பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம்
இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக
கூறுகிறது.
வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை
நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை
அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை
மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட
விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக்கொண்ட அதிகாரிகளை
தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை
தெளிவுப்படுத்துகிறது.
அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும்
கொளுந்துவிட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது.
தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக
தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற
முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.
*எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்*:
1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள்
கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும்
நடந்துக்கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி
முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன்
சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி
குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை
தூண்டிவிட்டது.
2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு
அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை
நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை
அமைச்சகத்தின் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து
வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன்
ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட
நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார்.
பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ்
இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.
4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன.
இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல்
அழிக்கப்பட்டன.
5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட
பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட
கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த
காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக
நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில்
சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.
7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை
தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு
தெரிவித்தது.
8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி
நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.
9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக
விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை
பரிசோதிக்கவில்லை.
10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக
தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி
உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை
தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Friday, February 4, 2011
உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள்-தமிழக அரசு முடிவு!
இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதையொட்டி, பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம்
மற்றும் மோதினார்களுக்கு இதுபோன்று இலவச சைக்கிள் வழங்கவேண்டும்
என்ற கோரிக்கை முஸ்லிம்களால் வைக்கப்பட்டது. அதை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு
செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,
''தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில்
பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழக கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்
வழங்கப்பட்டதை போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்று உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக
சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில், உலமாக்களின் ஜீவாதார
கோரிக்கைகளை நலவாரியம் மூலம் நிறைவேற்றிட முதல்வர் கவனம் செலுத்தவேண்டும்.
முஸ்லிம் என்பதால் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டேன் - அப்துல் கலீம்!!!
முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான
அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
"கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்தவுடன் சிலமணி
நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு
விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை
நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக
இருந்தனர்.
இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச்
சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக
சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக்
கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன்.
பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச்
செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின்
கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன்
கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத்
தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.
பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது
என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை
கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது
உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.
வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக
சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி
அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு
ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத்
தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று
தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அவருடைய மனதை மாற்றியது நானல்ல. அல்லாஹ்தான் மாற்றினான்.
எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு
ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை
கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது.
நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது
அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம்
தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Wednesday, February 2, 2011
எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாகட்டும்!!!
அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள்
அணிதிரண்டுள்ளனர். தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும்
முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்
துவங்கிவிட்டனர்.
ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள்
வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. ஆளுங்கட்சியின் தலைமையகம்
தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து
செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.
பல செப்படி வித்தைகளும் பயனற்று போனதால் நகைச்சுவையான நடவடிக்கையொன்றை
மேற்கொண்டார் முபாரக். அது வேறொன்றுமில்லை, ரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்
தலைவரும், இஸ்ரேலுடனான கடத்தல் தொழிலுக்கு இடைத் தரகராகவும் செயல்பட்டுவந்த
வயது முதிர்ந்த உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்ததுதான்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைகேடுகள் நிறைந்த தேர்தலை நடத்தி மீண்டும்
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அதிபராக எழுந்தருளினார் முபாரக். அவருடைய
'மக்கள் ஆதரவை!' உலகம் தற்பொழுது கண்டுக்கொண்டிருக்கிறது.
கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது.
1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை
அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.
1989-இல் ருமேனிய புரட்சியின் ஒரு பகுதியாக ரெவலூஷன் சதுக்கத்தில் திரண்ட
மக்கள் கூட்டத்திற்கு உதாரணமாக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் காட்டப்படுகிறது.
வரலாறு மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரத்தை பழிவாங்க துவங்கிவிட்டது. 1981 ஆம்
ஆண்டு எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஹுஸ்னி செய்யத்
முபாரக் அதி விரைவாக மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்றுவிட்டார். இதர
சர்வாதிகாரிகளைப் போலவே முபாரக், மக்களின் விருப்பங்களை அடக்கி ஒடுக்கி,
தேர்தல்களில் முறைகேடுகளை நடத்தி, ஊழலை வழக்கமாக்கி எகிப்தை சுரண்டி சின்னா
பின்னப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஏகாதிபாத்திய நாடுகளுடனும், சர்வாதிகார அரசுகளுடனும் இணைந்துகொண்டு பொருளாதார
நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டார்.
ஈரானின் ஷா, ருமேனியாவின் செஷஸ்க்யுவாவைப்போல் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சியில்
தொடரலாம் என கருதிய முபாரக்கின் ஆட்சிக்கு மக்கள் புரட்சியின் வடிவில் உருவான
ஆபத்து அவரை ஆதரித்த அந்நிய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு மத்தியில் அரபு நாடுகளிலேயே
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற பதவியை ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திய
அரசு தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 130 கோடி டாலரை அமெரிக்கா
எகிப்திற்கு உதவித் தொகையாக வழங்கிவருகிறது.
இஸ்ரேலுக்கு அடுத்து அமெரிக்கா வழங்கும் அதிக உதவித் தொகையைப் பெறுவது
எகிப்தாகும். ஆனால், இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு உண்மையாகும்.
அடக்குமுறையையும், மக்கள் விரோதத்தையும் வழக்கமாகக் கொண்ட முபாரக் சில
தினங்களுக்கு முன்பாக எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் உருவாகும் வரை
அமெரிக்காவின் உற்றத் தோழனாகவே இருந்தார். கடுமையான மனித உரிமை மீறல்கள், கொடிய
சித்திரவதைகள், அடக்குமுறைகள் இவையெல்லாம் நிகழும்பொழுது முபாரக்கை
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தே வந்தனர்.
எகிப்தில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டத்தின் முன்னணியிலிருப்பது
இளைஞர்களாவர். எகிப்தின் எதிர்காலம் அவர்களின் கைகளில் செல்லும் வேளையில் அங்கு
மக்கள் விரும்பும் அரசியல் வெற்றியை சந்திக்கும்.
முபாரக்கினால் தடைச் செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் இந்த மக்கள்
திரள் போராட்டத்திற்கு பின்னணியிலிருந்து ஆதரவை தெரிவித்து வருகிறது என
செய்திகள் கூறுகின்றன.
முபாரக்கினால் சிறையிலடைக்கப்பட்டுள்ள இஃவான்களின் தலைவர்களும்,
உறுப்பினர்களும் இந்த மக்கள் திரள் போராட்டத்தினால் மகிழ்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர். அல்பராதியின் தலைமையில் புதிய அரசு உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால், அல்பராதி அமெரிக்க ஆதரவாளராக மாறிவிடுவாரோ என்றதொரு சந்தேகமும்
எழுந்துள்ளது.
எகிப்து நாட்டு மக்கள் சர்வாதிகாரத்திற்கெதிராக தங்களை அர்ப்பணித்து நடத்தும்
போராட்டம் வீணாகிவிடாமல் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். இனி முபாரக்கிற்கு
எகிப்தில் இடமிருக்காது. கேவலமடைந்த குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்டு
முபாரக் களத்தை விட்டு வெளியேறும் வேளையில் உலகில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்
கொண்டு ஆட்டம்போடும் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டும்.
ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான
நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். எந்த தேசம்
ஊழல்களிலும், முறைகேடுகளிலும் திளைக்கின்றதோ அந்த தேசம் மனித உரிமைகளையும்,
மக்களின் குடியுரிமைகளையும் அடக்கி ஒடுக்கி பின்னர் குற்றவாளி தேசமாக
பரிணமிக்கும்.
இன்று உலகின் பல ஜனநாயக முகமூடியை அணிந்துள்ள நாடுகளின் நிலைமையும் இதுதான்.
மக்களின் விருப்பங்களை விட ஏகாதிபத்திய சக்திகளுக்கும், கார்ப்பரேட்
சக்திகளுக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தியவர் முபாரக்.
ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்.
விசாரணையில்லாமலேயே பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் பலர்.
நிரபராதிகளான மக்களை விசாரணை இல்லாமலேயே பல ஆண்டுகள் சிறையிலடைத்தவர்.
கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துவிட அவர்
நினைத்தார்.இவையெல்லாம் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளில் மட்டுமல்ல,
ஜனநாயக முகமூடியை அணிந்துக்கொண்டு ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் நாம் காண
இயலும்.
இது சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எகிப்து மக்கள் புரட்சியை
கவனத்தில்கொண்டு இந்நாடுகள் தங்களின் செயல்பாடுகளை மீளாய்வுச் செய்யவேண்டும்.
இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்கூட மனித உரிமை மீறல்களும்,
அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள்,
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும்
நடந்துவருகிறதா? என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகவேண்டும்.
உதாரணமாக கூறவேண்டுமெனில், சமீபத்தில் ட்ரான்ஸ்ப்ரன்சி இண்டர்நேசனல் வெளியிட்ட
பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள்.
எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும்.இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும்.
மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும்
கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.
சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு ஆட்சியாளர்கள்
தயாராகுவார்களா?
Tuesday, February 1, 2011
புரோகித் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கொலைச் செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை
செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை *
பாலைவனத் தூது
புதுடெல்லி,ஜன.31:முஸ்லிம்கள்
வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதுடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி
புரோகித்தும் அவனது பயங்கரவாத குழுவினரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ புலனாய்வு அறிக்கை
கூறுகிறது.
ஒரிஸ்ஸாவில் கண்டமால், வடக்கு கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகள், புனே,
ஜபல்பூர், போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ மெஷினரிகள்
மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புரோகித்திற்கு அவனது பயங்கரவாத கும்பலுக்கும்
தொடர்புள்ளது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு கிறிஸ்தவர்களை கொலைச்
செய்ததில் புரோகித்தின் நெருங்கிய கூட்டாளியும் மலேகான் குண்டுவெடிப்பு
வழக்கில் குற்றவாளியுமான ஸமீர் குல்கர்னிக்கு பங்குண்டு என அவ்வறிக்கை
கூறுகிறது.
ராணுவம் நேரடியாக நடத்திய புலனாய்வு மட்டுமல்லாமல், புரோகித் மற்றும்
பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
மஹாராஷ்ட்ரா மாநிலம் காண்டாலாவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம்
தேதி மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து ராணுவம்
புரோகித்திடம் விசாரணை மேற்கொண்டது.
2008 அக்டோபர் மாதம் தான் புரோகித்தை சந்தித்ததாகவும், மலேகானில்
குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், 2008 ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு
கிறிஸ்தவர்களைக் கொலைச் செய்ததாகவும் பிரக்யாசிங் தாக்கூர் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
வடக்கு கர்நாடகாவில் கிறிஸ்தவ மையங்களுக்கு தீ வைத்ததையும் பிரக்யாசிங்
ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் புரோகித்தும் சம்மதித்ததாக அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. ஸமீர் குல்கர்னி மூலமாகத்தான் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குல்கர்னியை புரோகித் 'சாணக்கியன்' என அழைத்திருந்தார்.
தாக்குதல்களைக் குறித்து திட்டங்களை தீட்ட 2008 மார்ச் மாதம் தேசிய புலனாய்வு
ஏஜன்சியால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவா
பயங்கரவாதிகள் சந்தீப் டாங்கேயும், ராம்ஜி கல்சங்கராவும் புரோகித்தின்
பஞ்ச்மஹரியிலுள்ள வீட்டில் வைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக அறிக்கை
கூறுகிறது.
புனே,ஜபல்பூர்,போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட
தாக்குதல்களில் இவர்களின் பங்கினை குறித்து போலீஸ் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு தனியாக ஒரு
இயக்கத்தை உருவாக்க புரோகித் திட்டம் தயாரித்துள்ளான்.
2007-08 காலக்கட்டங்களில் அஸிமானந்தா புனேயில் அனில் மகாஜனின் வீட்டில் வைத்து
நடத்திய ரகசிய கூட்டத்தில் புரோகித் பங்கேற்றுள்ளான்.
ஸ்ரீராம சேனாவின் பிரமோத் முத்தலிக், ஹிந்துஸ்தான் ராஷ்ட்ரிய சேனாவின் விலாஸ்
பவார், குஜராத்தைச் சார்ந்த பாரத் ரதேஷ்வர், ஆந்திரபிரதேசத்தைச் சார்ந்த
டாக்டர்.சீதாராமைய்யா, சுதாகர் சதுர்வேதி, அஜய் ராய்வார் ஆகியோர்
பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டங்கள் ஒன்றில் அஸிமானந்தா அபினவ் பாரத்தை இதர
இயக்கங்களுடன் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றிப்பெறவில்லை என
ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Saturday, January 29, 2011
புனிதப் போராளியின் பயணம்
பழனிபாபா அவர்களது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்*.* இவரது திறமையைக் கண்டு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூக்கைய்யா தேவர், தனது நண்பர்களிடமெல்லாம் அஹமது
அலியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, அவரது பெயரைச் சொல்லாமல் மரியாதையுடன்
"பாபா" என்று அறிமுகப்படுத்துவார். *அதுபோலவே அஹமது அலி பொதுக்கூட்டங்களில்
கலந்து கொள்ளும்போது தனது ஊர் பற்றி குறிப்பிடும்போதும் அங்குள்ளவர்கள்
கேட்கும்போதும், பழனிக்கு பக்கத்தில் உள்ள புது ஆயக்குடி என்று சொல்லுவார். இவை
இரண்டும் காலப்போக்கில் பழனிபாபா என்று உருமாறியது. மறைந்த இந்திய பிரதபர்
இந்திரா காந்தி அவர்கள் தான் முதன்முதலில அஹமது அலியை பழனிபாபா என்று மிகுந்த
மரியாதையுடன் அழைத்தவர்*
***பழனிபாபா*
**பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது. புது
ஆயக்குடி. இக்கிராமமே பழனிபாபாவின் தாய்வழிப் பூர்வீக ஊர். தந்தையின் ஊர், நீலகிரி
மாவட்டம் குன்னூர். தந்தை பெயர் என்.எ.முஹம்மது அலி தாயார் பெயர் கதீஜா பீவி
குன்னூரில் காப்பி கொட்டை ராவுத்தர் என்று இவரது தந்தையை அழைப்பார்கள்.
பழனிபாபா பெற்றொருக்கு நான்கவது குழந்தையாக 14/11/1950ல் பிறந்தார். அஸ்ரப் அலி,
லியாகத் அலி, முபாரக் அலி ஆகிய சகோதரர்களும் ரெஜினா சுல்தான், ரூபினா சுல்தான்,
ஜரினா சுல்தான் ஆகிய 3 சகோதரிகள் உடன் பிறந்தவர்கள். மிகவும் அன்பான,
நேசமான, பொருளாதார
நிலையில் வசதியாக இருந்த குடும்பம்.
*ஆரம்பக் கல்வி*
பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பழனிபாபா குன்னூரில் உள்ள
செயின்ல் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக்கல்வியை தொடங்கினார். அடுத்து
மேல்நிலைக்கல்வியை புது ஆயக்குடியில் உள்ள ஐ.டி.ஒ (*I.D.O*)
மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
**
*பட்டப்படிப்பு*
பழனியில் உள்ள பழனி ஆண்டவர் கலைக் கல்லுரியில் ஆங்கில இலக்கியம் பட்டம் பயின்று
முடித்தார். அதன் பிறகு டெல்லியில் 10 ஆண்டுகள் இருந்தப்போது முதுகலை மற்றும்
முனைவர் (Phd.,) பட்டம் பெற்றார்.
படிப்பில் பிடிப்பு, ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக் கூர்மை உடைய
பாபா அவைகளையே தனது ஆயுதமாக பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
****
*பொது வாழ்க்கை*
நைனா முஹம்மது என்பவர் தலைமையில் புது ஆயக்குடியில் முஸ்லிம் லீக் சார்பில்
நடந்த கூட்டம்தான் பழனிபாபாவின் முதல் பொதுக்கூட்டம் அதன் பின ஆயிரக்கணக்கான
மேடைகளில் அடைமழையென, புயலென, அழகான அற்புதமான புள்ளிவிபரங்களுடன் பேசி
இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திட்டார். அவரது பேச்சுக்கள் இஸ்லாமிய
இளைஞர்களின் தேசிய கீதமானது. பாபா தனது வாழ்நாளில் பேசிய மொத்தக் கூட்டங்களின்
எண்ணிக்கை *13201 *ஆகும். இறுதியாக அவர் பேசிய கூட்டம் நாகை
மாவட்டம்.திட்டச்சேரியில் நடைபெற்றப்
பொதுக்கூட்டமாகும்.
தனது துணிச்சலான பொது வாழ்க்கை நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சங்கடங்களை
ஏற்படுத்தும் என்பதால் குடும்ப வாழ்க்கையையும், பந்த பாசப்பினைப்பினைபுகளையும்
விட்டுவிலகி வாழ்ந்து வந்தார். அவரது *30* ஆண்டுக்கால வாழ்க்கை அவரைப் புரிந்து
கொண்டவர்களுடனும், நண்பர்களுடனுமே இருந்தது. தனக்கென ஒரு பாதையை
வகுத்துக்கொண்டார். தனக்கென ஒரு இல்லற வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை அது
பற்றி தன் நண்பர்களுடன் பேசும் போது "பொது வாழ்க்கை, பிரச்சாரம் என்று ஊர் ஊராக
திரியரவன் கல்யாணத்தை வேறப் பண்ணிக்கிட்டு ஒரு பெண்னுடைய வாழ்க்கையையும்
நிம்மதியில்லாமல் ஆக்கனுமா?" என்று கூறுவார்.
ஆங்கிலத்தில் நல்ல பாண்டியத்தியம், அறிவுக்கூர்மை, இதனால்
எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களுக்கு நண்பராக இருந்து தமிழகத்தின் தலைமைச்
செயலகத்தை ஒரு கலக்கு கலக்கியவர். முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக
முதல்வராகப் பதவி ஏற்ற சில காலங்களிலேயே சென்னைக் கோட்டைக்குள் நுழைய
பழனிபாபாவிற்கு தடை என அரசானை வெளியானது. "யார் இந்த பழனிபாபா?" என்று தமிழக
மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் போட்ட தடை ஆணையில், "தாடி வைத்த, நடுத்தர
வயதுடைய, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அஹமது அலி என்கின்ற பழனிபாபா அரசாங்க
அலுவலத்துக்குள் நுழைய தடை " என்று எழுதியிருந்தது. எம்.ஜி. இராமச்சந்திரன்
அவர்களின் தடை உத்தரவுக்கு டெல்லி உச்சநீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றார்
பாபா. தடைஆணைக்கே
தடைஆணைப் பெற்ற சாதனையைப் படைத்தவர் இந்தியாவில் பழனிபாபா ஒருவர் தான். இவ்வாறே
தடா வழக்கு பதிவு செய்யப்பட்டும். கைது செய்ய இயலாத சூழ்நிலையை இந்தியாவில்
ஏற்படுத்திய ஒரே மனிதரும் பழனிபாபா தான்!.
எம்.ஜி. இராமச்சந்திரன் அவரது ஆட்சிக் காலத்தில், 'பழனிபாபா பொது கூட்டங்களில்
பேசக்கூடாது' எனத் தடை உத்தரவு போட்டிருந்தார். இதற்கு பதிலடிக் கொடுக்கும்
வகையில் *கோபிச்செட்டிப்பாளையத்தில் எருமை மாடுகளை கட்டிவைத்து**, **மைக்
வைத்து புள்ளி விபரங்களுடன் தனது கருத்துகளை பேசிய பாபா*, "மக்கள் கிட்ட
பேசுறதும், உங்க கிட்ட பேசுறதும் ஒன்றுதான் " என்று காமண்ட் அடித்தார்.
இந்து பாஸிஸம், தமிழகத்தில் "*தேசியம்*" என்ற வடிவிலும், '*நாட்டுப்பற்று*' என்ற
போர்வையில் தலையெடுத்த போது அதற்கு பதில் சொல்லத் தளைப்பட்டார்.
இந்துத் தலைவர்கள் எடுத்து வைத்த வாதங்களுக்கு *ஆங்கிலத்தில் அரசியல்
நிர்ணயச்சட்டம்**; **வரலாற்று நூல்கள்* ஆகியவற்றிலிருந்து ஆணித்தரமாக
மேற்கொள்காட்டி மறுப்பு தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கள் மக்களைக் கவர்ந்தன.
பழனிபாபாவின் பேச்சுக்களைக் காரணங்காட்டி அவரைப் பலமுறை கைது செய்தார்கள்..
அடிக்கடி கைது செய்தது பழனிபாபாவை ஒரு "*தீவிரவாதி*"யாகக் காட்டவே தவிர, அவர்
ஓரு குற்றவாளி என்பதால் அல்ல. காரணம் அவர் மீது தொடுக்கப்பட்ட எந்த வழக்கும்
நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட தே இல்லை!
ஆனால், பழனிபாபாவை "*தீவிரவாதி*"யாகக் காட்டும் உத்தியில் பார்ப்பன
பத்திரிக்கைகளும், காவல்துறையும் வெற்றி பெற்றது. வாக்குரிமையை முறையாக
பயன்படுத்த முன்வராத சமுதாயத்தில் பிறந்து, நீதிமன்றனகளை, சமுதாய எழுச்சிக்காக
முறையாக பயன்படுத்திக் கொண்டவர்தான் பழனிபாபா.
நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, தனது பேச்சுரிமையை நிலைநாட்டியதால்தான்.
பழனிபாபாவால் இத்தனை காலம் மக்களுக்காக பொது மேடைகளில் பேச முடிந்தது.
இல்லையெனில், பழனிபாபாவை துவக்க காலத்திலேயே அரசாங்கம் முடக்கி போட்டிருக்கும்.
பல நேரங்களில் இந்து பாஸிஸவாதிகளின் நரகல் நடைப் பேச்சுகளுக்கு அதே தொனியில்
இவர் பதில் சொல்ல முற்பட்டதாலும், *இழப்புக்கு மேல் இழப்பு**, **இழிவுக்கு மேல்
அழிவு* என முஸ்லிம் சமுதாயம் மதவெறியர்களால் பாதிப்புக்கு உள்ளான போதும், *பாபா
தன் ஆதங்கத்தை அப்படியே வெளிக் காட்டினார்*. இந்து பாஸிஸ பேச்சாளர்கள் பேசும்
பேச்சுகளோடு ஒப்பிடும் போது பழனிபாபா பேச்சு ஒன்றுமில்லை என்றே சொல்லலாம்.
பழனிபாபாவின் ஆதங்கத்தைக் கிளறியப் பேச்சாளர்கள் ஒரு முறை கூட கைது
செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் அவர்கள் மீது குற்றம் கூடச் சுமத்தவில்லை.
**
*வழக்குகள்*
பழனிபாபா மீது 136 வழக்குகள், 125 முறை சிறைவாசம். பாபா மீது தேசிய
பாதுகாப்புச் சட்டமும், கருணாநிதி ஆட்சியில் 2 முறை போடப்பட்டது. தேசிய
பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா (*1991 - 1995*)
ஆட்சிக்காலத்தில்
1 முறை தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேற்கண்ட அனைத்து
வழக்குகளிலும் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு முறை ஜெயலலிதா (
*1991- 1995*)ஆட்சிக்காலத்தில் பழனிபாபா மீது தடா சட்டத்தில் வழக்கு
பதியப்பட்டது. அதில் பாபா உச்சநீதிமன்றம் வரைச் சென்று வழக்காடி நிரபராதி என
விடுதையானார்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி திரு. ஆர்.வெங்கட்ராமன், துனை
ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும்
பதவி வகித்த காலத்தில் அரசு பணத்தில் (*240** கோடி ரூபாய்*) திருப்பதி
கோவிலுக்கும், காஞ்சி சங்கர மடத்துக்கும் அடிக்கடி சென்று வந்த மொத்த
செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி, சென்னை
உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து பலரது புருவத்தை உயர வைத்தார்.
அதன்பின் "சென்னை
உயர்நீதிமன்றம்" தள்ளுபடி செய்தது. பழனிபாபா மனம் தளராமல் டெல்லி உச்சநீதி
மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு சாதனை
சரித்திரமானது இவ்வழக்கு!.
**
*எழுத்துப்பணி*
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், ஹிந்துஸ்தானத்திற்கு ஹிந்துவுக்கு
ஆபத்து?<http://www.palanibaba.in/2009/04/blog-post_28.html>
என்ற இராம.கோபாலனுடைய நூலுக்கு மறுப்புரை நூலையும் எழுதினார். மறுப்புரை நூல்
பரபரப்பாக பேசப்பட்டது. அரசால் தடைசெய்யப்பட்டது. மறுப்புரை நூலுக்காக
கருணாநிதி இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் பழனிபாபாவை கைது
செய்தார். மறுப்புரை நூல் மீது இருந்த தடையை நீதிமன்றத்தில் முறையிட்டு, தடையை
நீக்க ஆணை பெற்றார். கிறிஸ்துவம் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். பைபிள்
மற்றும் கிறிஸ்துவம் தொடர்பாக கிறிஸ்துவ பாதிரிமார்களோடு இவர் நடத்திய
விவாதம்,பாபாவின் பைபிள் பற்றிய ஆய்வு கிறிஸ்துவத்திலும்
(பைபிள்) பாபாவுக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. அதன் வெளிப்பாடே
"*பைபிள் ஆண்டவனால்
அருளப்பட்டதா?<http://www.palanibaba.in/2009/03/blog-post_14.html>
* என்ற நூல். பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் பாபா எழுதிய நூல் தான்Who Is
Law Abiding On The Issue Of Babri
Masjid?<http://www.palanibaba.in/2007/09/babri-masjid.html> நூலாகும்.
இவ்வாறு நூல்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கைகளையும் தொடங்கினார்.
*பாபா நடத்திய** "**அல்முஜாஹித்**", "**முக்குல முரசு**", "**புனிதப்போராளி**",
*ஆகிய பத்திரிக்கைகள் மூலம். அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தனது பத்திரிக்கைகள் வாயிலாக
அம்பலப்படுத்தினார். பத்திரிக்கைகள், நூல்கள், மேடைபேச்சு, அரசியல் மற்றும்
சமூக விழிப்புணர்வு, இஸ்லாமிய பிரச்சாரம் என பல துறைகளிலும் சளைக்காமல்
பணியாற்றிய பல்துறை வித்தகர் அல்ஹாஜ் பழனிபாபா!.
**
*வெளிநாட்டு பயணம்*
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
சமூகத்தின் பிரச்சினைகளை பேசினார்.
1988ம் ஆண்டு அமெரிக்காவில் பைபிள் பற்றிய பல சர்ச்சைகளுக்கும் குர்ஆனின்
விஞ்ஞான விளக்கங்களும் என்ற தலைப்பில் பிலடெல்பியா மாகாணம் பெல்லொஷிப் பல்கலைக்
கழகத்தில் 13 மணி நேரம் தொடர் உரையாற்றி அமெரிக்க விஷயதாரிகளை வியப்புக்கு
உள்ளாக்கியவர். அந்தப் பிரச்சாரத்தில் ஏராளமான அயல்நாட்டினர் அமெரிக்கர் உட்பட
அல்லாஹ்வின் மார்க்கமாம் இஸ்லாத்தை அப்படியே துணிந்து ஏற்றனர். புருனே நாட்டின்
சுல்தான் பழனிபாபாவின் இனிய நண்பர்களில் ஒருவர்..
**
*இறுதிக் காலம்*
கடந்த சில வருடங்களாகவே தனது ஜிஹாத் கமிட்டியின் பிரச்சாரத்தை அமைதியாக அதே
சமயம் ஆக்கப்பூர்வமாக செய்து வந்தார்.
ஊர் ஊராக சென்று சமுதாய இளைஞர்களிடம் பேசி அவர்களைக் கவர்ந்து, வெளிநாட்டில்
வாழும் சமுதாய சொந்தகளிடம் கடிதத் தொடர்பு கொள்வதுடன் தனது ஆடியோ மற்றும்
வீடியோ கேசட்டுகளை அனுப்பி அவர்களின் ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் பெற்று
"ஜிஹாத்" கமிட்டி மூலம் பல *ஏழை எளிய சமுதாய மக்களுக்கெல்லாம் பண உதவிகள்
செய்து வந்தார்.*
தடா கைதிகளின் குடும்பத்தினர் முகவரிகளை எல்லாம் சேகரித்து, அவர்களுக்கு
மாதாமாதம் குடும்பச் செலவிற்கு பணம் (மணியாடர்) அனுப்பி உதவிவந்தார்.
இஸ்லாமியர்களின்
ஒருங்கிணைப்பிற்காக ஜமாத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை
ஒருங்கிணைத்தார். அதேபோல இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டோர், வன்னியர் ஒற்றுமையை
உருவாக்கிக் காண்பித்தவர் பழனிபாபா.இதனால் முஸ்லிம்களைப்போல் பிற
சமுதாயத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது.இந்த மூன்று சமூகங்களும்
அரசியல் அதிகாரத்தில் ஆளும் ஜாதியாக இல்லாமல், ஆளப்படும் ஜாதி என்பதை
கண்டுணர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும்
எண்ணத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தனது ஓய்வு நேரங்களை
புறாக்களோடும், இயற்கையோடும் கழித்தார்.
**
*மறைவு*
*1997** ஜனவரி **28**ந்* தேதி தனது சகோதரி மகன் ஹூசைனுடன் நோன்பு திறந்து
விட்டு அவரை *7:30* மணியளவில் வீட்டுக்கு அனுப்பியவுடன், பொள்ளாச்சி பேருந்து
நிலையத்திற்கு பின்னால் தனது நண்பர் தனபால் வீட்டிற்கு சென்றார். அவருடன்
பேசிக் கொண்டிருந்த பாபா பின்னர் சுமார் *9:30* மணிக்கு அங்கிருந்து வெளியே
வந்து, தனது ஜீப்பில் ஏறி அமர்ந்தார். அப்போது ஏதோ விசாரிக்க வந்தவன் போல் வந்த
ஒருவன், ஒரு கோடாரியால் பாபாவின் வயிற்றில் வெட்டினான். அசைய முடியாத நிலையில்
இருந்த பாபாவின் குடல் சரிந்ததும் கழுத்திலும், முகத்திலுமாக *13* வெட்டுகள்
விழுந்தன. அந்த இடத்திலேயே பாபா ஷஹித் ஆனார். இந்துத்துவாவின் அனைத்து
செயல்பாடுகளுக்கும் பிராமணர்களே காரணமாக இருந்ததை வெளிப்படுத்தியதால் பழனிபாபா
கொலை செய்யப்பட்டார். மறுநாள் *29-**ம்* தேதி புது ஆயக்குடிக்கு பாபாவின் ஜனாஸா
(உடல்) கொன்டுவரப்பட்டு அன்று மாலை 5:30 மணிக்கு ஐ.டி.ஒ. (*IDO*)
மேல்நிலைப்பள்ளி எதிரில் அடக்கம் செய்யப்பட்டது.
பாபா கோரமாகக் கொலைச் செய்யப்பட்ட அன்றும், அவர் ஒரு இந்து நண்பரின்
வீட்டிலிருந்தே புறப்பட்டிருக்கின்றார். இது அவர் ஓர் *யதார்த்தவாதி* என்பதையே
எடுத்துக் காட்டுகின்றது. இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன்
அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த அல்ஹாஜ்
பழனிபாபா இஸ்லாமிய ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமைக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர்
எனலாம்.
**
**
http://www.palanibaba.in/2011/01/blog-post_4640.html
Friday, January 28, 2011
இந்திய முஸ்லிம்களின் அவல நிலையும் - அதற்கான தீர்வும்!!!
முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும்
மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி
ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத்,
ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய
பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து
கொண்டார்கள். தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச்
சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம்
ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள்
உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம்
கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின்
எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற
மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க
வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை
எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும்
எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர
குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு
பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9
கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற
தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 7
கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட
வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே
தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால்
அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற
மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர,
அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை
நிலையாக இருந்தது.
இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு
தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய
ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம்
ராணுவத்தில் தனி மரியாதைச் செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனி
பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக்
குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில்
தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள்
அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும்
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட
நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள
மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில்
முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற
அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.
1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில்
நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி
மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம்
நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய
நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான
பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது.
பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர்
உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில்
ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள்
சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது
மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு
காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.
மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.
இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி இலங்கையைச் சார்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.
அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த
பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய
எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள்
நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும்
இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால்
பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி
பொறுப்பாவார்கள்?
*இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை *
இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும்
வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை
உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு
முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய
சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத
கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும்
ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு
சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு
செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு
இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று
படுவோம்.
சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில்
உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை
தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த
வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே
தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு
முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு
தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே
தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று
ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச்
சிறந்தது.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள்
பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக
இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும்
அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப்
போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை
வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான
காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில்
வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு
நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.
எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம்
என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து
வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற
முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம்
சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ
என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத
சூழ்நிலை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம்
அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில்
ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும்
ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில்
கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு
முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா
என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே
இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது
சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள்
வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என
கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு
பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?
எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி
ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக?
எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன்,
சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின்
இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின்
பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.
1. இதற்கான தீர்வுதான் என்ன?
2. இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?
3. நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?
இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும்,
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல்
ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?
இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில்,
நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல
பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும்
வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே
வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத்
தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம்
இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய
மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட
வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக
பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும்
வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1
சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே
பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம்
ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான்
பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில்
ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும்
சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை
சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல்
காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி
மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து
வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க
வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து
கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம்
உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால்
தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப்
பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக்
கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும்
பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக
முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள்
பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய
முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக
பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட
முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு
கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத்
தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு
முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட
இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித்
தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில்
எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால்
அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில்
எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு
அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி
கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1
இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.
இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில்
மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின்
ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது
என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும்
அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம்
விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும்
மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். நமக்கென்று ஒரு தனி
அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்;
இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள
வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும்
கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.
இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள
வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட
சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன
ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும்
செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு,
ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்படுவர் என்பது நிச்சயம்.
*பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும் *
நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன?
இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த
விதத்தில் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.
1. அறிவு
2. ஆயுதம்
ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில்
சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள்
என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய
உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன
ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை
இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு
என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும்
ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக
சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால்
ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர்
மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல
பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது
கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம்
ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற
பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத்
தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி
அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு
நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை
தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின்
முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால்
இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.
*இந்தியாவில் முஸ்லிம்களின் பலம் *
மாநிலத்திற்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில்
உள்ள 30 மாநிலங்களில் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக
அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று
நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?
*இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும் *
இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம்
வழிகாட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில்
மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும்
உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து
நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும்
ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு
வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.
*தமிழக முஸ்லிம்களின் பலம் *
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத்
தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம்
வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம்
முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம்
வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த
சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம்
வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட
முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கேயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை துரைமுகம்
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எக்மோர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.
இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான
முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும்
அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே
குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு
வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும்,
4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக்
கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன்,
தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும்
உருவாக்க முடியும்.
தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக்
கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை
இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள்
3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை
மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.
சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது
வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக
சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை
ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட
முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில்
மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின்
பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே
நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை
பெரும்பான்மை நிலைக்கு உயரும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை
ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச்
சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில்,
நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர
வேண்டும். இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத
அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம்
மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும்
ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு
இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி
இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.
இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய
வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை
உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? தேர்தல்
காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்
என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே
வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை
ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை
வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள்
அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத
எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே
குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை
உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது
முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும்
ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான
இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும்
பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.
தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான்.
ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான
மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர்
வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே!
மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே
என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி
அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய
முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து
அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.
நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட
வேண்டுமா?
நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும்
நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை
எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு
அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும்
அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். *எல்லாம் வல்ல
அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!*
**
**
என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
அஸ்கர்
மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
*அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.*

