Saturday, June 18, 2011

முற்றும் துறந்தவருக்கு ஏன் கோடிகணக்கில் பணமும், நகையும்!

JUNE 18, புட்டபர்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர்வேத மந்திர் மீண்டும் திறக்கப்பட்டது.

அங்கு கணக்கில் வராத கோடி கோடியாக பணமும், பெருமளவில் நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. ஏராளமான கம்ப்யூட்டர்களும் கிடைத்துள்ளன.

கடந்த மார்ச் 28-ம் தேதி பகவான் சத்யசாய் பாபா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 24 ம் தேதி இறையடி சேர்ந்தார். அப்போது அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர் பூட்டப்பட்டது.


தற்போது ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அறை திறக்கப்பட்டது. அந்த அறையைத் திறக்கும் ரகசிய எண் சாய்பாபாவின் நெருங்கிய சீடரான சத்யஜித்துக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவரே அறையைத் திறந்தார்.

பின்னர் உள்ளே போனபோது ஒவ்வொரு அறையிலும் கணக்கில் வராத பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரிய வந்தது. பணம் கட்டுக் கட்டாக கண்டுபிடிக்கப்பட்டது. வைர நகைகள் பெருமளவில் இருந்தன. இவற்றின் மதிப்பு என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பல கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது.

அங்கிருந்த கணக்கில் வராத பணம், நகைகளை கணக்கெடுத்து தனித் தனியாக பிரிக்கும் பணியில் மாணவர்கள் குழுவை ஈடுபடுத்தினர். பின்னர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் பணத்தையும், நகைகளையும் வங்கிக்கு கொண்டு சென்று டெபாசிட் செய்தனர்.

சிந்திக்கவும்: சாமியாருக்கு ஏன் இவ்வளவு கணக்கில் வராத நகைகளும் பணமும்? எல்லாம் மோசடி என்பது புரிய முடிகிறது. இது போன்ற சாமியார்கள் எல்லோரும் பெரும் கார்பரேட் முதலாளிகளின் பினாமிகள் என்ற செய்தி இப்பொது உண்மை ஆகியுள்ளது.




தலித் மக்களும் சமூக விடுதலையும்!

தாழ்த்தப்பட்ட ஹிந்துக்கள் மதம் மாறுவதையும்,  இட ஒதுக்கீட்டையும் இணைத்து இந்துமத பயங்கரவாத இயக்கங்கள் அடிக்கடி கூக்குரல் இடுவதை கேட்டிருப்பீர்கள்.

அதாவது, பணம், பால் பவுடர், வளைகுடா வேலை என்று பொருள் உலக ஆசை காட்டி மதம் மாற்றப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். யின் கோரிக்கை.

ஆனால், இவர்கள் இடஒதுக்கீடு என்ற உலக ஆசையைக் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதத்திலேயே இருங்கள், மதம் மாறாதீர்கள் என்று கேட்பது அதைவிட கொடுமை.

”இந்து மதத்தின் சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து உங்களுக்கு விடுதலை தருகின்றோம் ஆகவே நீங்கள் மதம் மாறாதீர்கள்” என்று இவர்களால் சொல்ல முடியுமா? அதற்கு இவர்களது மநுதர்மாம்தான் சம்மதிக்குமா!

மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் "இங்கேயே அடிமைகளாக இருங்கள்," அப்போதுதான் இடஒதுக்கீடு சலுகைகள் தரமுடியும் என்று மிரட்டுகிறார்கள்.


ஆன்மீகத்தினால், சமாதானத்தினால் அல்ல ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கிரிமினல் மிரட்டல்கள் மூலமாக தலித் மக்களுக்கு சமூக விடுதலையை கிடைக்கவிடாமல் தடுக்கிறார்கள்.

மேலும் தலித் மக்கள் எதாவது உலக லாபத்தை கருதியோ அல்லது தாங்களாக விரும்பியோ, வேறு மதத்திற்கு மாற விரும்பினால் அதை இடஒதுக்கீட்டை காரணம் காட்டி தடுத்து வருகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஹிந்துமதத்தின் பெயரால் இந்தியாவில் அனுபவிக்கும்  கொடுமைகள் போதும், மற்ற மதத்தில் அவர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்று அவர்கள் கருதினால் செல்லட்டும் அது அவர்கள் உரிமை.

இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரே இந்து மதத்தில் தொடர்ந்து இருந்தால் ஜாதி பிடியில் இருந்து மீள முடியாது என்று உணர்ந்து புத்த மதத்திற்கு மாறினார்.

தலித் மக்கள் முஸ்லிமாக மாறி ஜாதியை  தொலைத்து "பாய்" என்று அழைக்கப்படுவதை இப்போதும் பார்க்க முடிகிறது. அப்படியாவது அவர்களை பிடித்த ஜாதி என்கிற பேய் ஒழியட்டுமே!

இந்த பார்பனர்களால் இவர்களுக்கு நன்மைதான் செய்யமுடியாது, மதம் என்கிற மாயையை காட்டி இவர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்றனர். தலித்மக்கள் மதம் மாறிவிட்டால் இவர்கள் யாரிடம் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொள்ள முடியும்?.  இதுதான் அவாள்களின் சூட்சமம்!


காஞ்சி சங்கராச்சரியாரும், அத்வானியும், இன்னபிற பிராமண உயர்குலத்தோரும் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் குடும்பத்துடன் திருமணம் செய்ய சம்மதிக்கிறார்களோ அப்போதுதான் இவர்களுக்கு இதை பற்றி பேசும் உரிமையும், யோக்கிதையும் இருக்கிறது. 


Friday, June 17, 2011

முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம்


இந்த முஸ்லிம் தேசம் இலங்கை போன்று 27 மடங்கு பெரியது காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிரமிப்பு பிரச்னையைப் போலவே சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு அரச ஒடுக்குமுறை பிரச்சனைகள் உண்டு என்பதும்  பலருக்குத் தெரியாத விஷயம்.  ஏன் சீனாவில் சிங்கியாங் முஸ்லிம் தேசத்தை வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம் விரிவாக
சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம் பிரதேசம்தான் முஸ்லிம் உலகிலும் அதிகமாக அறியப்படாத முஸ்லிம் தேசம் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது பாகிஸ்தான் 523 கி.மீ.தூரத்திலும் இந்தியாவிலிருந்து  3,380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது   18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் 6/1  ஆறில் ஒரு பங்கு.  இது இலங்கை போன்று 27 மடங்கு பெரியது இலங்கை 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது ஆனால் சிங்கியாங் 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுகொண்டது இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி ஆனால் அங்கு முஸ்லிம்கள் பேசமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது.

இதை இன்னொரு முறையில் விளங்குவது என்றால் 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இலங்கையின் அதிலும் 15,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள வடக்கு கிழக்கு அதில் தமிழர் பிரச்சினை பெற்ற உலக கவனத்தை கூட இலங்கை போன்று 27 மடங்கு பாரிய சிங்கியாங் பெறவில்லை என்பதுதான்.
காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும் அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் பக்கம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் ஆக்கிறமிப்பில் உள்ளது 1,41,000 ச.கி.மீ. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்திய என்ற ஜனநாயக மேலாதிக்கம் கஷ்மீரை ஆக்கிரமித்து அடகிவைதுள்ளது போன்று சீனா என்ற கம்யூனிஸ   மேலாதிக்கம் சிங்கியாங் தேசத்தை ஆக்கிரமித்து நிற்கின்றது இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் சுமார் 1,45,000 ச.கி.மீ. பரப்பளவை கொண்டது சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான்.  சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது   ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை காரணம் சீனா அரசு திட்டமிட்டு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுதான்.
காஷ்மீர் உலகின் அரைகுறை கவனத்தை பெற்றிருப்பது போன்று கூட சீனா சிங்கியாங் பிரச்சினை அறியப்படவில்லை அங்கு அடக்கு முறை செய்திகளை உலகம் அறியமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுடன் முஸ்லிம் அமைப்புக்களும் இயக்கங்களும் இது பற்றிய போதுமான தகவல் இன்றி இருப்பதும் ஒரு முக்கியகாரணமாகும்.

1949இல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின் மீது படையெடுத்து அதனை சீனா ஆக்கிரமித்து தன் எல்லைகளை அகட்டி கொண்டது. 1948இல்  பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிரமித்து எல்லைகளை அகட்டி கொண்டது போன்றுதான் இதுவும் இரண்டு ஆக்கிரமிப்புகும் வயது கிட்ட தட்ட ஒன்றுதான் ஆனால் சீனா சிங்கியாங் ஆக்கிரமிப்பின் அழு குரல் வெளியே கேற்காதபடி சிங்கியாங் முஸ்லிம்களை மிக மோசமாக அடக்கி வைத்திருக்கிறது.
சீனா எவ்வாறு சிங்கியாங் தேசத்தை தன்னுடன் பலவந்தமாக இணைத்து கொண்டது என்பதை கவனித்தால், சிங்கியாங் பிரதேசம் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்டதாக காணப்பட்டது பின்னர் சீனா சீனர்களை திட்டமிட்டு குடியேற்றியது பல நுறு குடியேற்றங்களை உருவாக்கி முஸ்லிம்களை தங்களின் சொந்த மண்னில் அதிகாரமற்ற பொம்மைகளாக்கியது பல நூறு இராணுவ கிராமங்களை அங்கு உருவாக்கி இராணுவ குடும்பங்களை அங்கு குடியமர்த்தியது அவை காலபோக்கில் சீனர்களை கொண்ட சிவில் கிராமங்களாக உருவெடுத்தது  இப்போது 2 கோடி மக்கள்தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் தான் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் எனும் சீனர்கள் 1949இல் ஹன் சீனர்கள் தொகை வெறும் 6 சதவீதமாகத்தான் காணப்பட்டது . திட்டமிட்ட குடியேற்றம்  அறுபது ஆண்டுகளில் சீனர்களை 7 மடங்கு அதிகரித்திருக்கிறது.
மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் பலம் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது  மக்கள் தொகையில் மாறிய மாறுதல்களை செய்துள்ளமை  இயல்பாக முஸ்லிகள் பலவீனமான நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் சீனா தனது இராணுவத்தை இயந்திரத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு அனுப்பவில்லை. மாறாக சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. முஸ்லிம்களின் கையில் இருந்த நகரங்களும் கிராமங்களும் சிறிது சிறிதாக விலைக்கு வாங்கப்பட்டது அவர்களின் பொது நிலங்கள் சீனாவின் அரச சொத்தானது அவை வெளியூர் சீனா  மக்களுக்கு வழங்கப்பட்டது  ஹன் சீனர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது.

இப்போதைய 41 சதவீதம் சீனர்களின் தொகையானது அங்குள்ள ஆக்கிரமிப்பு இராணுவ சிப்பாய்களோ , அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.
சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008இல் 60 பில்லியன் டாலராக காணப்படுகிறது . அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள். சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.
உய்கர் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது வெருப்புடன் நாட்களை கழிக்கின்றனர் . ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் உலக உய்கர் காங்கிரஸ் என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.
சிங்கியாங் பகுதியில் முஸ்லிம்கள் தொடராக எழுச்சி பெருகின்றனர் ஆனாலும் உய்கர்கள் வேரு நாடுகளில் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை. ஆனாலும், இஸ்லாமிய எழுச்சி வளர்ந்து வருகிறது .
ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ஹன் சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியிலும் முஸ்லிம்கள் 90 சதவீதம் இருந்தனர் பின்னர் சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது இந்த திட்டமிட்ட குடியேற்றதின் பின்னர் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீனர்கள் மயமாக்கப்பட்டுள்ளது . இக்கலவரத்தை சீனா தனது இரும்பு கரம் கொண்டு  ஒடுக்கியது . இதன் போது ஒரு இரவில் மட்டும் -10000- பத்தாயிரம் முஸ்லிமகள் காணாமல் போயுள்ளனர் .
சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது. சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து ஹிஜாப் அணிய தடை விதித்தது முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது ஒவ்வொரு நேன்பு மாதத்திலும் இந்த அடக்குமுறைகள் அதிகரிக்கின்றது .  அப்படி இருந்தும் முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத விடையமாகவே இருக்கிறது.
சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீனர்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து முஸ்லிம்களின் பெரும்பான்மையை சிறுபான்மையாக மாற்றியமைத்தது. சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சினர்கள் மூலம் நிரப்பப்பட்டது . மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலை என்ற முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்கள் தொடர்ந்தும் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்கி ஒடுக்குகின்றனர் ஆனால் அன்மையில் ஜெர்மனியில் ஹிஜாப் அணிந்ததற்காக கொடுரமான முறையில் கொல்லபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் வீர பிரதாபம் பெற்ற முஸ்லிம் உலகின் கவனத்தை, மிக பிரமாண்டமான விடையம் பெறாமல் இருப்பது உறக்கத்தை கலைக்கிறது.
குறிப்பு:
சீனாவின் எல்லை நாடுகள்: ஆப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ. இதில் 4 முஸ்லிம் நாடுகள் அமைந்திருக்கின்றன என்பது குறிபிட்ட தக்கது.

விபரீத ஆலோசனை!

உலக வங்கிக்கு இந்தியா மீது அளவற்ற பாசம். அதனால்தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவ்வப்போது ஏதாவது ஓர் ஆலோசனையை இந்திய அரசுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. "மாறிவரும் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு- உலக வங்கி அறிக்கை' மே 17-ம் தேதி வெளியானது. இந்த அறிக்கையின் பரிந்துரை என்னவென்றால், இந்திய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதுதான். 


பொதுவிநியோகத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டோமானால், மக்களுக்கு எப்படிக் குறைந்தவிலையில் இன்றியமையா உணவுப் பொருள்கள் கிடைக்கும்? "மானியத்துக்கு ஈடாக அவர்களிடம் பணத்தைக் கொடுங்கள்' என்கிறது உலக வங்கி. எவ்வளவு கொடுக்கலாம் என்பதையும் உலக வங்கியே சொல்கிறது. அதாவது, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் பெண்மணிக்கு, ரூ.1,100 கொடுங்கள். 


இந்தப் பரிந்துரையை நியாயப்படுத்த உலக வங்கி சொல்லும் காரணத்தைக் கேட்டால், நமக்கும்கூட முதலில் இது நல்ல யோசனையாகத் தான் தோன்றும். ஆனால், சற்று ஆழ்ந்து நிதானமாக யோசிக்கும்போதுதான், இது எவ்வளவு முட்டாள்தனமான, இந்திய எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத யோசனை என்பது புரியும். 


இந்தியா முழுவதிலும் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ளவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியன வழங்கப்படுகின்றன. இப்பொருள்களை அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக அரசுக்கு ஏற்படும் மானியச் செலவு ரூ.45,000 கோடி. இதில் 60 விழுக்காடு உணவுப்பொருள் கடத்தல்காரர்களால் வெளிச்சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் ரூ.27,000 கோடி வீணாகிறது. ஆகவே, யார் பயனாளியோ அவர்களுக்கு அதிகவிலையில் விற்கப்படும் சர்க்கரை, அரிசி, கோதுமை வாங்குவதற்காக மாதம் ரூ.1,100 கொடுத்துவிட்டால் போதும். நேரடியாக ஏழைகள் பயன்பெறுவார்கள் என்பது உலக வங்கிஅறிக்கையின் வாதம். 


தமிழ்நாட்டில் 20 கிலோ அரிசி முற்றிலும் இலவசமாகவும் மற்ற மாநிலங்களில் விலை குறைவாகவும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படுவதால், ஏழைகள் ஏதோ வேளைக்குக் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். கையில் காசைக் கொடுத்து, மிச்சத்தை நீங்களே போட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலைமை வந்தால், பெரும்பாலான குடும்பங்களில் அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டுபோய் மது குடித்து, சூதாடி, ஊதாரித்தனமாகச் செலவு செய்பவர்கள் இந்தியக் கணவன்மார்களாகத்தான் இருப்பார்கள். பெண்களும், குழந்தைகளும் பட்டினியில் கிடக்கும் நிலைமை உருவாவது மட்டுமல்ல, குற்றங்களும் அதிகரிக்கும். 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் ரேஷன் அரிசி கடத்தப்பட்டாலும், எவ்வளவுதான் குறைந்தவிலை மளிகைப் பொருள்கள் வெளிச்சந்தைக்கு வந்தாலும், எவ்வளவுதான் மண்ணெண்ணெய் ஊற்றும் தேதியைத் தள்ளிப்போட்டு ஏமாற்றி, கொஞ்சம் திசைதிருப்பப்பட்டாலும், தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் இன்னமும் கொஞ்சம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 

பொது விநியோக முறையில் நிச்சயமாகக் குறைகள் இருக்கின்றன. குறைகள் இருப்பதால்தான் தினமும் ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்குகின்றன. ஆனால், இவ்வாறு பிடிபடும் ரேஷன் அரிசி மூட்டைகளில் 90% ஏழைகளை ஏமாற்றிய அரிசி அல்ல. வசதி படைத்தவர்கள் வாங்காமல்விட்ட அரிசி.  வாங்காமல் விட்ட அரிசிக்குத்தான், முறைகேடாகக் கணக்கு எழுதப்பட்டு, அரிசிஆலையில் மறுஅரைவை (இதைக் கடத்தல்காரர்கள் பாலிஷ் போடுதல் என்கின்றனர்) செய்து வெளிமாநிலங்களில் விற்கிறார்கள். இதன் மூலம் கடத்தல்காரர்களுக்கு, ஒரு கிலோ அரிசிக்கு, (லஞ்சம் கொடுத்ததுபோக), ரூ.7 முதல் ரூ.10 வரை லாபம் கிடைக்கிறது. மற்ற பொருள்களான பாமாலின், சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியன வெளிச்சந்தையில் ஏற்படும் விலைவேறுபாடுகளைப் பொறுத்து கடத்தலின் அளவு குறையும் அல்லது கூடும்.  அரசின் நடவடிக்கை என்பது, வசதி படைத்தவர்கள் வாங்காமல் விட்ட பொருள்கள், மீண்டும் ஏழைகளுக்கே கிடைக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அதற்குக் கணக்குத் தணிக்கை மிகவும் கடுமையாக இருத்தல் வேண்டும். 

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை 250-க்கு மிகாமல் பார்த்துக் கொண்டு, யார்யார் என்னென்ன வாங்கியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக நுகர்வோர் பார்க்கும்படி செய்ய வேண்டும். பொதுவிநியோகக் கடைகள் அனைத்திலும், அரிசி, பருப்பு அனைத்தையும் பை அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கும் முறை அமலுக்கு வரவேண்டும். நுகர்வோர் எடையைச் சரிபார்க்க மின்னணு தராசு இருக்க வேண்டும். பொருள்களை அட்டைதாரரின் விரல்ரேகைப் பதிவுக்குப் பின்னரே வழங்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகள் கணினிகள் மூலம் இணைக்கப்பட்டு, துல்லியமான கையிருப்பு, விநியோகம் கண்டறியப்படவேண்டும். இவற்றைச் செய்தாலே பொதுவிநியோகத்தில் முறைகேடுகள் 99 விழுக்காடு குறைந்துவிடும்.  இதைவிடுத்து, பொதுவிநியோகத் திட்டத்துக்கு முடிவு கட்டிவிட்டு, பணப் பரிவர்த்தனை (தில்லியில் இதைப் பரிசோதனை அடிப்படையில் செய்கிறார்கள். அதற்குப் பெயர் "பரிவர்த்தனை') செய்வது இந்தியாவுக்கு ஏற்புடைய ஏற்பாடாக அமையாது. நோயாளியைப் பார்க்க வருகிறவரெல்லாம், இந்த நோய்க்கு இன்னார் இந்த மருத்துவத்தால் குணமடைந்தார் என்று சொல்வார்கள்தான். அதற்காக, அதையெல்லாம் நடைமுறைப்படுத்த முயல்வது எவ்வளவு முட்டாள்தனமோ, அதுபோலத்தான் உலக வங்கியின் ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்வதும்.  இந்தியாவில் தென் மாநிலங்களிலும், சில வட மாநிலங்களிலும் தவிர, பெருவாரியான மாநிலங்களில் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளாகியும் இன்னும் முறையான பொது விநியோக முறை இல்லை. இதுதான் தீவிரவாதம் பரவுவதற்கான காரணிகளில் ஒன்று. பொது விநியோக முறையைப் பலப்படுத்தி, பரவலாக்கி, சீர்படுத்துவதை விடுத்து, முற்றிலுமாகச் சிதைப்பது என்பது "பட்டினிப் போராட்டத்தை' வலிய வரவழைக்கும் ஆபத்தான முடிவு. உச்ச நீதிமன்றம் அரசின் உணவுக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் தானியங்களை வீணாக்காமல் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு விநியோகிக்கச் சொன்னால், விநியோக முறையையே சீர்குலைக்கச் சொல்கிறது உலக வங்கி.

உலக வங்கி கடன் கொடுத்து வசூலிப்பதுடன் நிறுத்திக் கொள்ளட்டும். நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வோம். போதும் இவர்களது விபரீத ஆலோசனைகள்!




பெண்களுக்கு எதிரா வன்முறை இந்தியாவுக்கு 4 இடம்!

JUNE 17, புதுடில்லி:பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் எவை என சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், சுகாதாரப் பிரச்னை, பாலியல் வன்முறை, பாலியல் அல்லாத வன்முறைகள், பண்பாடு, மதம் மற்றும் பாரம்பரியத்தின் பேரால் தீங்கு விளைவிக்கும் சடங்குகள், பொருளாதார வளம் சரியாகக் கிடைக்காதது, ஆள் கடத்தல் போன்ற பெண்களுக்கு எதிரான ஆறு பிரச்னைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டன.


இந்த ஆய்வில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது . கடந்த 2009ல் சி.பி.ஐ., எடுத்த கணக்கெடுப்பின் படி, ஆட் கடத்தலில் 90 சதவீதம் இந்தியாவிற்குள் நடக்கிறது என்பதும், நாடு முழுவதும் 30 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்கள் உள்ளனர்; அவர்களில் 40 சதவீதம் பேர் சிறுமிகள் என்பதும் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

அதுபோல் மதத்தின் பெயரால் குழந்தைகள் திருமணம், பெண்கள் மீதான பாலியல் வன்முறை வரதட்சணை கொடுமைகள், பெண் சிசு கொலை இப்படி பெண்களுக்கு எதிரான எல்லாவித கொடுமைகளும் ஒருங்கே நடைபெறும் ஒரு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த அறிக்கையின் வாயிலாக இந்தியாவிற்கு சுற்றலா வரும் வெளிநாட்டு பெண்களின் வரவு குறைந்து போகும் என்று நம்பப்படுகிறது.


Thursday, June 16, 2011

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!

JUNE 16, டேராடூன்: கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கடந்த பிப்ரவரி முதல், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகமானந்தாவின் உயிர் பிரிந்தது.


இதற்கிடையே, சுவாமி நிகமானந்தாவின் மரணம் குறித்து, பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார்.

சிந்திக்கவும்: ஆளும் பி ஜேபி அரசு இவரது உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு இவரை கொன்று விட்டது என்றே சொல்லலாம். ஹிந்து மதத்தினர் புனிதமாக கருதும் கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஒரு சாமியார் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணமும் அடைந்துள்ளார்.

இவர் உண்ணவிரதம் இருந்ததை எந்த பத்திரிக்கையும் தலைப்பு செய்தியாக போடவில்லை. இப்படியாக கங்கை நதியை பாதுக்காக்க சாமியார் நிகமானந்தா உயிர் தியாகம் செய்து வீரத்துறவியானார். இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்பன பத்திரிக்கைகளும் "இவரை பற்றி செய்திகளை போட்டு மக்கள் ஆதரவை" இவருக்கு தேடிக்கொடுக்கவில்லை. இப்படி, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் என்பது எத்தனை மக்களுக்குதான் தெரியும்?


ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் அனுதாபிகளும் யோகா சாமியார் ராம்தேவின் உண்ணாவிரதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவரது உண்ணாவிரதத்திற்கு கொடுக்கவில்லையே அது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் முகமூடி பி.ஜே.பி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் இப்படி நடந்திருப்பது இவர்களுக்கு ஹிந்து மக்களின் நலனில் ஒன்றும் சிறப்பான அக்கறை கிடையாது என்பதையே காட்டுகிறது.

ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்களின் நோக்கம் ஹிந்து மக்களுக்கு நன்மை செய்வது என்பதில் இல்லை. பாபா ராம்தேவ் என்கிற மோசடி சாமியாரின் உண்ணாவிரதத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி, மத்திய அரசை கொடுத்த நெருக்கடி இருகிறதே அது சொல்லி மாளாது. பாபா ராம்தேவ்வின் உயிருக்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்று கூவினார்கள் இந்த பி.ஜே.பி. காரர்கள் அப்படி பட்டவர்கள் தங்கள் ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தில் 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஒரு ஹிந்து சாமியார் இறந்துவிட்டார், அதுவும் மர்மமான முறையில் இதற்க்கு இவர்கள் பொறுப்பேற்று ஆட்சி துறப்பார்களா?.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை கட்டி அமைத்தவர்கள் பிராமணர்களே. ஹிந்து மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே இவர்களது முக்கிய நோக்கம். ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதன் உயர் உயர்பதவிகளில் இருப்பது அனைவரும் பிராமணர்களே என்பது! மிகச்சிறுபான்மையினரான யூதர்கள் சூழ்ச்சியின் மூலம் எப்படி உலகத்தை ஆளுகின்றனரோ?, அதுபோல் இந்தியாவில் மதமாச்சாரியாங்களை உண்டாக்கி அதன்மூலம் 'இந்த பார்பனர்கள்' ஆட்சி மற்றும் அதிகார பீடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

அத்வானி, ராம கோபாலன் வகைறாக்கள் "ஹிந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்ப்படுத்த" ரதயாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, காசி, மதுரா இப்படி புதுபுது பிரச்சனைகளாக உண்டாக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஏன் இவர்கள் பாபா ராம்தேவையும், அன்னா ஹசாரவையும் மட்டும் தூக்கிப்பிடித்தார்கள் என்றால்? ஒன்று இந்தியாவின் ஆட்சியை பிடிக்க, மற்றொன்று இவர்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புகளை மறைக்க. தொடர் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பங்கு வெட்டவெளிச்சமாகி உள்ள இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க ஆட்சியை பிடித்தால் மட்டுமே முடியும், என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் ஊழல் ஒழிப்பு, அந்நிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்ட கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று அன்னா ஹஸாரே மற்றும் பாபா ராம்தேவ் போன்றவர்களை வைத்து நடத்திய நாடகம். இவர்கள் இந்தியாவை ஆளும் பொழுது இதையெல்லாம் செய்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இந்த வக்கற்றவர்கள் செய்த ஊழலை சொன்னால் இந்தியாவே நாறும். கார்க்கில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கு வாங்கிய சவபெட்டியில் ஊழல் செய்தவர்கள்தான் இந்த தேசபக்த வேடதாரிகள். 


கங்கை நதியை சுற்றி கல்குவாரி வைத்திருந்தவர்களில் பெரும்பகுதியினர், பி.ஜே.பி, மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே என்பதும், அதானால்தான் இவர்கள் சுவாமி நிகமானந்தா நடத்திய உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு முறையான சிகிச்சை அழைக்கப்படவில்லை, இவரது உண்ணாவிரதத்தை யாரும் முடித்து வைக்க முயற்ச்சிக்கவில்லை இவரை பரிதாபமாக சாகவிட்டுவிட்டார்கள் என்று கடும் குற்றச்சாட்டு இவர்கள் மேல் எழுந்துள்ளது.

மேலும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சொல்லி வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதல் பல ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள் வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை. மேலும், இவருக்கு அளிக்கப்பட சிகிச்சையின் பொழுது இவரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாக மத்ரி சதான் ஆசிரம தலைவர் சுவாமி சிவானந்தா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாநில ஆளும்கட்சியான பாரதிய ஜனதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது, ஆனால் காங்கிரஸ் இவர் மரணமடைய காரணமே பி.ஜே.பி ஆட்சியின் மெத்தன போக்கே என்று குற்றம் சாட்டியது. எனவே சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது.கல் குவாரிகாரர்களோடு அரசுக்கு இருந்த நெருங்கிய தொடர்பு, இவரது தொடர் உண்ணாவிரதத்தை அனுமத்தித்தது, முறையான சிகிச்சை கொடுக்காதது ஆகியவையே இவரது மரணத்திற்கு காரணம் என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாடியுள்ளது.




ஆளில்லா விமானம் மூலம் ஏமனை தாக்க அமெரிக்கா திட்டம்!


வாஷிங்டன்: ஏமனில் உள்ள பொதுமக்கள் அதிபருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமனிலும், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு அல் கொய்தா விடமிருந்து  மிரட்டல் வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது


இன்னும் அல் கொய்தாவினர் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தவும் தயாராகி வருவதாகவும் அமெரிக்கா கூறுகிறது இந்நிலையில் அல்கொய்தாவினரை அழிக்க அமெரிக்காவின் உளவுத்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள வஜிரிஸ்தானில் பதுங்கியுள்ள அல் கொய்தாவினரை அமெரிக்கா தனது ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. அதே போன்று ஏமனிலும் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் தாக்க ரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, June 15, 2011

தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9

மதுரை: மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துள்ளது.


பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என நம்பப்டுகிறது.

தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை நமது கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நமது கணணியில் இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ( விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட் ) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்யலாம்.

மேலும், விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எபிக் ஆகிய பிரவுசர்கள் இந்திய மார்க்கெட்டைக் குறி வைத்து உருவாகி அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.

அதேசமயம், இந்திய சந்தையை மைக்ரோசாப்ட் குறி வைப்பது முதல் முறையல்ல. பொனடிக் கீபோர்ட், இந்திய மொழிகளுக்கான இன்டிங் லாங்குவேஜ் இன்புட் டூல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இமெயில், மெசஞ்சர் ஆகியவற்றிலும் இந்திய மொழிகளை அது ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.




தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

கோவை: தமிழகத்தில் நான்கு பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாகரத்தை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.


இதுதவிர 26 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முடிவையும் அது நிறுத்தி வைத்துள்ளது.

1. ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி
2. டாக்டர் ஜி.யு.போப் என்ஜினீயரிங் கல்லூரி
3. பத்மாவதி என்ஜினீயரிங் கல்லூரி
4. வி.கே.கே.விஜயன் என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரமே தற்போது ரத்தாகியுள்ளது.

ஏஐசிடிஇ இந்த முடிவை திங்கள்கிழமை எடுத்து தனது இணையதளம் மூலம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கல்லூரிகளுக்கு அரசுக் கோட்டாவின் கீழ் இடம் ஒதுக்கப்பட மாட்டாது. அதேசமயம், கல்லூரிக் கோட்டா மூலம் ஏற்கனவே இங்கு படிக்க பெரும் பணம் கொடுத்து அட்மிஷன் வாங்கியுள்ள மாணவ, மாணவியரின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுதவிர அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள 26 கல்லூரிகளின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற இணைய தளத்திற்குள் ஊடுருவிய "ஹேக்கர்ஸ்'

வாஷிங்டன், ஜூன் 14: அமெரிக்க நாடாளுமன்ற இணைதளத்தை ஊடுருவி அதிலுள்ள தகவல்களை ஒரு கும்பல் திருடியுள்ளது.

கணினி மற்றும் இணையதளத்தில் முக்கிய தகவல்களை, வைரûஸ பரப்பி அழிப்பது, அவற்றை திருடுவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரிய தகவல்கள் இல்லாமல் அத்துறைக்கு பெரும்பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 மிகவும் பாதுகாப்பான முறையில் அமெரிக்காவுக்கு பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ராணுவ ரகசியங்கள், தூதர்களின் கருத்துகள் போன்றவற்றை ஹேக் செய்து ஸ்விஸ் பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்ஜே விக்கிலீஸ் இணையதளத்தில் வெளியிட்டு அமெரிக்காவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.








 இதே பாணியில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவிய ஒரு கும்பல், அதிலிருந்த முக்கிய தகவல்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்துள்ளது. அவற்றை "லல்ஸ் செக்யூரிட்டி' என்ற அமைப்பு திருடி, லல்ஸ் செக்யூரிட்டி.காம் என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
"" இது அமெரிக்காவுக்கு எதிரான போர். அமெரிக்காவை எங்களுக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்ற தகவல்கள் எவ்வளவு பாதுகாப்பாற்ற முறையில் உள்ளன என்பதை உணர்த்தவே இதை செய்தோம்.'' என்று "லல்ஸ் செக்யூரிட்டி'தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற சர்வரில் அனுமதியின்றி யாரோ நுழைந்துள்ளதை செனட் கம்ப்யூட்டர் செக்யூரிட்டி அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ரகசிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். அமெரிக்காவின் தீவிர பாதுகாப்புக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே இது கருதப்படுகிறது.



பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம்


ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (13.06.2011) இரவு ஸஃபா எனும் பலஸ்தீன் கிராமத்தில் இந்த அக்கிரமம் அரங்கேறியுள்ளது. நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 சதுர அடிகள்) பரப்புள்ள பெரும் நிலப்பரப்பு தீமூட்டப்பட்டதையடுத்து, கிராவாசிகள் தீயை அணைப்பதற்காக முன்வந்தபோது, அவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர் என்றும், பயிர்நிலம் முற்றாக எரிந்து முடியும்வரை இந்த நிலைமை நீடித்தது என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


இச்சம்பவம் தொடர்பாக, 'அடர்ந்து வளர்ந்துள்ள பயிர்களினூடே பலஸ்தீனர்கள் ஊடுருவிச்சென்று பிரிவினைச் சுவரை அண்மிக்க முடியும் என்ற ஐயப்பாடு நிலவுவதாலேயே இப்பயிர் நிலங்கள் அழிக்கப்பட்டன' என இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு கல்கிலியா பிரதேசத்தின் அஸுன் கிராமத்தின் பல தூனம் பரப்புள்ள விவசாய நிலமும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் எரியூட்டி நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான மிகப்பெரும் நிலப்பரப்பு எரியூட்டப்பட்டும் புல்டோஸர்கள் ஓட்டப்பட்டுமாக தொடர்ச்சியாக நிர்மூலமாக்கப்பட்டு வருவதன் மூலம் பலஸ்தீன் விவசாயிகளின் பொருளாதார நிலைமை மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த அழிப்பு நடவடிக்கையின் விளைவால் நட்டமடையும் விவசாயிகளுக்கோ நிலச் சொந்தக்காரர்களுக்கோ எத்தகைய நட்டஈடும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான தமது சொந்த மண்ணில் இருப்பிடங்களையும் நிலங்களையும் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு அகதிகளாகவும், வாழ்வாதாரத்தையே இழந்துவிட்ட வறியவர்களாகவும் வாழ நேர்ந்துள்ள அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச அமைப்புக்களும், உலக மனித உரிமைகள் அமைப்புக்களும் துரிதமாக முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட பலஸ்தீன் மக்கள் விடுக்கின்ற இடையறாத கோரிக்கை, சர்வதேச அரங்கில் ஆங்காங்கே சில அதிர்வலைகளை ஏற்படுத்தவும் தவறவில்லை எனத் தெரிகின்றது.

ஈழத்தமிழர்கள் ரத்தத்திலே ஒட்டப்படும் கப்பல்!!

JUNE 15, தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கும், இலங்கையின் கொழும்புவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவை தமிழக அரசு புறக்கணித்துள்ளதை நாம் தமிழர் கட்சி பாராட்டி வரவேற்கிறது.

இலங்கை தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு, இன்றைக்கும் அவர்களின் வாழ்வை சின்னபின்னமாக்கி சிதறடித்து விட்டு, அரசியல் தீர்வு எதையும் வெளியில் இருந்து யாரும் வற்புறுத்த முடியாது என்று திமிராக பேசி வருகிறது சிங்கள இனவாத ராஜபக்சே அரசு.


சமீபத்தில் இலங்கை சென்ற இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான குழு, தமிழர்களுக்கு குறைந்தபட்சம் அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய தீர்வை உருவாக்குமாறு விடுத்த பெயரளவுக் கோரிக்கையை கூட ராஜபக்சே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக கொழும்புவில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தமிழர்கள் செத்தால் என்ன, இருந்தால் என்ன என்ற தமிழர் எதிர்ப்பு மனப்பாங்குடன் செயல்பட்டு வரும் இந்திய அரசு, அந்நாட்டுடன் எல்லா வகையிலும் நட்புறவு கொள்ளத் துடிக்கிறது. இந்திய அரசிற்கு தமிழர்களின் சம உரிமையோ அல்லது அவர்கள் கண்ணியமான வாழ்வைப் பெற வேண்டும் என்பதிலோ அக்கறை இருந்தால், தமிழர்களை கொன்றொழித்த இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டிருக்கும்.

ஆனால் அது தமிழின எதிர்ப்புணர்வுடன் செயல்படுதால், ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் ஆகியோரின் உயிரைப் பலி கொண்டு வரும் சிங்கள பௌத்த இனவாத அரசுடன் நட்பு கொண்டாடி வருகிறது. அதன் ஒரு வெளிப்பாடாகவே, தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய அரசு அங்கீகரித்து, அதனை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் ஜி.கே.வாசனைக் கொண்டு தொடங்கியும் வைத்துள்ளது.

தமிழனத்திற்கோ, தமிழ் நாட்டுடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஐரோப்பிய ஒன்றியம், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசு பன்னாட்டு விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரியது. அதற்கு உடன்பட மறுத்த இலங்கைக்கு இதுநாள் வரை அளித்து வந்த வணிக வரிச்சலுகைகளை நிறுத்தி விட்டது.

ஆனால் தமிழர்களை தன்நாட்டினராகக் கொண்ட இந்தியாவோ, தமிழினத்தை கொன்று குவித்த இனவெறி அரசுடன் கூடிக் குலாவி வருகிறது. அது மட்டுமல்ல, இலங்கையுடமிருந்து நாம் விலகிச் சென்றால், அந்த நாடு சீனாவுடன் நெருக்கமாகி விடும். அது இந்தியாவின் நலனிற்கு எதிரானதாகி விடும் என்று பூச்சாண்டிக் காட்டுவது இந்திய அரசின் மோசடி முகத்தையே வெளிக்காட்டுகிறது.

ஈழத் தமிழர் நலனிலும், தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக அரசு, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையிலேயே ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானத்தை மதிக்காமல், கொழும்புவுடன் பயணிகள் போக்குவரத்தை தொடங்கியுள்ளது மத்திய அரசு.





இதன் மூலம் தமிழக அரசு தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய பொருளாதார தடை தீர்மானத்தை மத்திய அரசு அவமதித்துள்ளது. பொருளாதாரத் தடையை தமிழர்களாகிய நாம் தமிழக அரசுடன் இணைந்து ஒருமித்த உள்ளத்துடன் முன்னெடுப்போம். இலங்கையின் பொருட்களை புறக்கணிப்போம். இலங்கையோடு செய்யும் வணிகத்தை தமிழக வணிகர்கள் நிறுத்த வேண்டும். இலங்கை நமது இனத்தை அழித்த எதிரி நாடு. அந்நாட்டுடன் எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை என்ற முடிவுடன் தமிழினம் செயல்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சீமான் அதில் கூறியுள்ளார்.




இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்


லண்டன்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  



இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.
 

Tuesday, June 14, 2011

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தமிழகத்தில் இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்றும் இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது.


ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.

இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.



அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.

2 வாரத்திற்குள் இந்த நிபுணர் குழு தனது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10ம் வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.




ஆம்னி பஸ் கொள்ளை...

கடந்த வாரம் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஒரு தனியார் சொகுசுப் பேருந்து எரிந்த விபத்தில் 23 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பக் கதைகளும், சோகங்களும் ஓரிரு நாள்கள் பேசப்பட்டன. பத்திரிகைகள் எழுதின. ஊடகங்களில் பேட்டிகள் இடம்பெற்றன. அரசும் இவர்களது குடும்பங்களுக்குக் கருணைத்தொகை அறிவித்தது. அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தனர். எரிந்துபோய் எலும்புக்கூடாக நின்ற பேருந்து அகற்றப்பட்டது. நான்காவது நாளே அனைவராலும் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது.


இது உலக வழக்கு என்றாலும், இந்தச் சம்பவத்திலிருந்து அரசும், அதிகாரிகளும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் பெற்ற படிப்பினை என்ன என்றால், ஒன்றுமே இல்லை என்பதைப் போலத்தான் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த விபத்தில் மூன்று விஷயங்களை நினைவுகூர வேண்டியுள்ளது.





 முதலாவதாக, இந்தப் பேருந்து ஓட்டுநர், ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த லாரி பேருந்து பக்கமாக நகர்ந்ததால், மோதலைத் தவிர்க்க முயன்றபோதுதான் இந்த விபத்து நேரிட்டது என்று கூறியுள்ளார்.



 நாற்கரச் சாலைகளில் கனரக வாகனங்கள் சாலையின் இடது பக்கமாகச் செல்ல வேண்டும் என்று பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் எழுதி வைக்கப்பட்டும்கூட, கனரக வாகன ஓட்டுநர்கள் அதைப் பொருள்படுத்துவதே இல்லை. இதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை எடுப்பதோ அல்லது அத்தகைய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதோ இல்லை. நெடுஞ்சாலைக் காவலர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.



 மேலும், சாலையில் லாரி ஓட்டுநருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் ஏற்படும் தகராறின் விளைவாக, லாரிகள் வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பதும், பேருந்து முந்திச் செல்லும்போது வேண்டுமென்றே பிரேக் போட்டு, பேருந்து ஒட்டுநருக்கு அதிர்ச்சிதரும் விளையாட்டை அரங்கேற்றுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு பயணிகள் பேருந்தின் ஓட்டுநரை தடுமாறச் செய்வதன் மூலம் குறைந்தது 50 பயணிகளின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற உணர்வு இந்த லாரி ஓட்டுநர்களிடம் இருப்பதே இல்லை. விபத்து நடந்தால் இந்த லாரிகள், நிற்காமல் பறந்துவிடும்.

 பயணிகள் பேருந்து ஓட்டுநர்களின் மீதான கோபத்தை, பயணிகளின் உயிருக்கு உலைவைப்பதாய் மாற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தண்டனைக்குரியவர்களா இல்லையா? பயணிகள் வாகனங்களின் முன்புறம் ஒரு சிறு விடியோ கருவி பொருத்துவதை (விமானங்களில் கருப்புப்பெட்டி போல) கட்டாயமாக்கி, விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்வதும், நடவடிக்கை எடுப்பதும் இயலக்கூடியவைதானே? அதிலும் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இற்றைநாளில், அதற்கான செலவும் மிகக் குறைவுதான்.




 இரண்டாவதாக, சொகுசுப் பேருந்து கவிழ்ந்தவுடன், டீசல் கசிவு ஏற்பட்டு பேருந்து எரிந்துள்ளது. பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டுமே தப்பிக்கும்படியாக அத்தனை விரைவில் தீப்பிடித்தற்கான காரணம் டீசல் மட்டும்தானா? இல்லை, பேருந்தின் அடிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டுப் பெட்டியின் கார்பன் மோனோ ஆக்சைடு வாயுவால்தான் இவ்வளவு விரைவில் தீ பரவியதா?



 மூன்றாவதாக, இப்போதைய தனியார் சொகுசுப் பேருந்துகள் அனைத்துமே "ஸ்லீப்பர் கோச்' என்கிற பெயரில், ரயிலில் எப்படி "பெர்த்'தில் படுத்து வருகிறோமோ, அதே போன்று படுக்கை வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆகவே, உடனே தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு சாதாரண வீடு கட்டினாலே வரைபடம் கேட்கும் இந்நாளில், ஒரு பயணிகள் பேருந்து எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதற்கு ஒப்புதல்பெற வேண்டியது அவசியமல்லவா? பயணிகள் பேருந்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறதா? இருந்தால் இந்தப் பேருந்துக்கு அவை ஏன் 
அமல்படுத்தப்படவில்லை? இந்த விபத்துக்குப் பிறகும் "ஸ்லீப்பர் கோச்' சொகுசுப் பேருந்துகள் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன?



 இவை ஒருபுறம் இருக்க, சொகுசுப் பேருந்துகளை கட்டுப்படுத்தும் திறனற்ற அமைப்பாக நமது போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் மாறிவருகின்றன என்பதுதான் வேதனைக்குரியது. தனியார் சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் குறித்த எந்தக் கட்டுப்பாடும், வரையறையும் இல்லை. பயணிகள் கூட்டத்தைப் பொறுத்து கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். கேட்பார் இல்லை.



 ஒரே பதிவு எண்ணில் இரண்டும், இரண்டுக்கு மேலும் பேருந்துகள் இயங்குவதும், உரிமம் இல்லாமலேயே சொகுசுப் பேருந்துகள் இயங்குவதும் (குறிப்பாகப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இவை களத்தில் இறங்கிவிடுகின்றன) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்பதைத்தான் அண்மையில் மதுரை ஆட்சியர் நடத்திய சோதனைகள் வெளிப்படுத்துகின்றன.



 தமிழ்நாட்டில் 1.4.1993-ல் தனியார் ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 245. கடந்த ஏப்ரல் மாதப் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தற்போது 686 ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. இன்னொரு கூடுதல் தகவல்: 2006 ஏப்ரலில் தமிழ்நாட்டில் மாநில உரிமம் பெற்ற ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 310. ஆனால் 2007-ம் ஆண்டு 466 ஆக உயர்ந்து, தற்போது நிகழாண்டில் 515 வாகனங்களாக அதிகரித்துள்ளன.




 ஏன் இவ்வளவு சொகுசுப் பேருந்துகளை அனுமதித்தார்கள் என்பது நமது கேள்வி அல்ல. இவை அனைத்தும் கொள்ளை லாபத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி, அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே அதைத்தான் ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.

 ஆம்னி பஸ் கொள்ளையைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா? நமது அரசுப் போக்குவரத்துத் துறையை மீண்டும் திறமையாகவும், தரமாகவும், குறைந்த கட்டணத்திலும் செயல்பட வைத்து சாதாரண பொதுமக்களின் நலனைப் பேணும் எண்ணம் அரசுக்கு ஏற்படவே செய்யாதா?

போலீஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 14 வயது சிறுமி!


JUNE 14, உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் பகுதியில் கடந்த 10.06.2011 அன்று 14 வயது மாணவி ஒருவர் மாயமானார். 

இதற்கிடையே அவர் நிகாஷன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.


 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாயார் புகார் கூறினார்.  முதல் கட்ட பிரேத பரிசோதனையில் சரியான தகவல் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து 2வது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் மாணவி கற்பழித்து  கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.  இதுபற்றி சி.பி.சிஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாயாவதி அரசு உத்தரவிட்டது. 

இதையொட்டி நடந்த விசாரணையில் தடயங்களை  அழிக்க  முற்பட்டதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பி.கே.சிங் உள்பட 4 போலீசாரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த கொலை பற்றி மாநில அரசின் விசாரணை முறையாக இருக்காது என்றும் எனவே இந்த கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

சிந்திக்கவும்: இந்தியாவில் போலீஸ் துறை என்பது பயங்கரவாதிகள் நிறைந்த ஒரு துறை. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் போலீஸ் என்றால் பொது மக்களுக்கு சேவை செய்பவர்கள்.


அங்குள்ள போலீஸ் காரர்கள் பொதுமக்களுக்கு கொடுக்கும் மரியாதை இருக்கிறதே அதை எழுத்தால் வடிக்க முடியாது, அது போல் நீங்கள் வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் சென்றால் உங்களுக்கு கொடுக்கும் மரியாதை சொல்லி மாளாது.

நீங்கள் 911 போலீஸ்க்கு போன் செய்தால், 5  நிமிடத்திற்குள் வந்து நிற்ப்பார்கள். அதுபோல் நீங்கள் ட்ராபிக் விதிகளை மீறி விட்டால் உங்களிடம் விசாரிக்கும் மரியாதை இருக்கிறதே அதற்க்கு 100  ஓ போடணும்.

நம்ம ஊரு போலீஸ் இருக்கிறதே மரியாதை  கெட்ட நாய்கள் என்று சொல்லணும், இவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளமும்,  அது பத்தாது என்று லாஞ்சமும் வாங்கி  குடி, விபச்சாரம்,  இப்படி தொந்தி கொளுத்து மக்களை இவர்கள் நடத்தும் விதம் இருக்கிறதே சொல்லி மாளாது.  இந்த கலுசடை நாய்கள்தான் இப்படி ஒரு பச்சை மண்ணை கெடுத்து கொலையும் செய்துள்ளது. இவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டு கொல்ல
வேண்டும்.


Monday, June 13, 2011

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவிப்பு


இந்திய ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளை, மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார். டெல்லியில் நடந்த அகில இந்திய ஹஜ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசுகையில், 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்.
 

ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4-வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை என்றார். மேலும் ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
நன்றி;மாலைமலர்

பாகிஸ்தானில் அமெரிக்க உளவாளி கைது


இஸ்லாமாபாத்,ஜூன் 12: பாகிஸ்தானில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் மேத்யூ கிரெய்க் பேரட்(27). இவர் இஸ்லாமாபாத் அருகே பெத்ஜங் என்ற இடத்தில் உள்ள அணு உலைகளை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் போலீஸôர் இவரை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி ராவல்பிண்டி சிறையில் அடைத்தனர்.





 ÷முன்னதாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு இவருக்கு கடந்த 4-ம் தேதி பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இவர் பெத்ஜங் பகுதியில் இருந்து தப்பித் தலைமறைவானார். இதையடுத்து பாகிஸ்தான் போலீஸôர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இவரைக் கைது செய்தனர்.

 ÷ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேத்யூ பாகிஸ்தான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.



ஓவியர் ஹுசைனை நாடு கடத்தியது சரியா?

உலகின் மிகச்சிறந்த சம கால ஓவியர்களில் ஒருவரான M . F . ஹுசைன் லண்டன் ஆஸ்பத்திரியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ந்து சிகிட்சைப்பெற்றும் பலனின்று இறந்துவிட்டார்.

அவரின் இறப்புடன் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அவருடன் சேர்ந்தே இறந்துவிடுமா? RSS ன் ஓவியர் ஹுசைன் மீதான எதிர்ப்பை சந்திக்க இயலாமல் அவரை நாடு கடத்த இசைந்தது இந்திய அரசு.


ஒரு ஓவியனுடைய பார்வைபோல் பொதுமக்களுக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஓவியம் மக்களின் சிந்தனைகளை நன்மையான காரியங்களில் ஈடுபடவைப்பதாக இருக்கவேண்டும். அவருடைய ஓவியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் அளவுக்கு நமக்கு அறிவும் இல்லை, நேரமும் இல்லை.

மாதுரி தீட்சித் எனும் பம்பாய் நடிகையின் அழகை விதம், விதம்மாக வரைவதிலும், ரசிப்பதிலுமே கணிசமான காலங்களை கழித்த கிழட்டு வக்கிரப் புத்தி படைத்தவர்.


ஹிந்து கடவுள் சரஸ்வதியின் உருவத்தை ஆபாசமாக வரைந்து பெருவாரி மக்களின் கோபத்தை வாங்கிக் கொண்டார். அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு RSS வகையறாக்கள் அவரை நாடுகடத்தி, தான் பிறந்த மண்ணிலே தனது கடைசி காலங்களை கழிக்க இயலாமல் செய்துவிட்டன.

தெய்வங்களை உருவங்களாக்குவதில் நிறைய தர்ம சங்கடங்கள் உள்ளன. அவற்றில் ஓவியர் ஹுசைன் செய்த முட்டாள் தனமும் ஓன்று. ஏன் ஓவியர்களின் பார்வை துகிளுரிவதாகவே இருக்கிறது? என்பது பில்லியன் டாலர் கேள்வி.

இது இப்படி இருக்க, சரஸ்வதியின் உருவத்தை ஓவியர் ஹுசைன் ஆபாச படமாக வரைந்ததை பிரச்சனை ஆக்கி அவர் இந்தியாவை விட்டு குடிபெயர்ந்து லண்டன் செல்ல காரணமான RSS வகையறாக்கள் முற்றிலும் இது போன்ற செயல்களை செய்ய, பேச தகுதி அற்றவர்கள்.

காரணம், தஸ்லீமா நஸ்ரின் என்ற பங்களா தேசப் பெண் கர்ப்ப அறை சுதந்திரம் (எந்த ஆணுடைய குழந்தையையும் கற்பத்தில் சுமந்துகொள்ளும் சுதந்திரம்) கேட்டு தன் விருப்பத்தை எழுத்துக்களாக வெளியிட்டார்.

அந்த படுபாதகமான சிந்தனையை, அசிங்கத்தை எதிர்த்த பங்களா தேச மக்கள் அவரை நாடு கடத்தினர். அவருக்கு அடைக்கலம் கொடுக்க முற்றிலும் துணையாக நின்றது இந்த RSS ம் அதைச் சார்ந்த நியாயவான்கலும்தான்.


ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த மக்களுடைய சிந்தனைக்கு எதிராக ஒரு அசிங்கத்தை அரங்கேற்ற துணிந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க நினைத்தது ஹிந்துத்துவாவின் முற்போக்கு சிந்தனையா? அப்படி செய்தது ஹிந்துதுவாவிற்கும் அந்த கேடுகெட்ட கலாசாரத்தை ஊக்கப்படுத்தும் ஹிந்துத்துவாகாரர்களுக்கும் ஓவியர் ஹுசைன் அசிங்கத்தை விமர்சிக்கவோ, அதை எதிர்த்து போராடவோ எந்த நியாயமும் இல்லை.

சல்மான் ருஷ்டி என்ற எழுத்துக் கிறுக்கன் இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் வெளியிட்டார் அதற்கு முக்கியம் கொடுத்தது இந்த ஹிந்துத்துவா ஜந்துக்கள். மற்ற மதத்தினர்களின் உணர்வுகளை புண்படுத்தி, மாற்று மதத்தினரின் கடவுள்களை இழிவுபடுத்தி, அவர்களது மத வழிபாட்டுத்தலங்களை இடித்து, அவர்கள் வேதங்களை கொளுத்தி இப்படி தீவிரவாதம் புரிந்தவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். ஹிந்த்துதுவா இயக்கங்கள்.

நிர்வாணம் என்பது ஹிந்துத்துவாவிற்கும், ஹிந்துத்துவாவினருக்கும் தெய்வீகம். இதை (அம்மணத்தை) அம்மனச்சாமியார்களை வணக்கத்திற்குரியதாக்கி வணங்கிக்கொண்டிருக்கும்
இந்த ஹிந்துத்துவா சித்தாந்தவாதிகள் தான் ஓவியர் ஹுசைன் 'தான் வரைந்ததை" வாபஸ் வாங்கிய பிறகும் அவரை இந்தியாவுக்கு திரும்பவிடாமல் செய்தனர்.

ஹிந்துத்துவா விற்கு தஸ்லீமா நச்ரீனும், சல்மான் ருஷ்டியும் ஒன்றாக தெரிவதும், ஓவியர் ஹுசைனை வேறு கண் கொண்டு பார்ப்பதும் ஏன்?

நியாயங்களை சொல்ல நியாயவான்கள் வரட்டும். அநியாயங்களின் பிரும்மாண்டமான ஹிந்துத்துவாவிற்கும், ஹிந்துத்துவாவினருக்கும் நியாய சபைகளுக்கு வர எங்கனம் துணிவு வந்தது? அநியாயங்களின் மொத்த உருவே, அரக்கத்தனத்தின் மறு பிறப்பே, பச்சோந்தித்தனத்தின் கள்ளக்குழந்தையே உன் பெயர்தான் ஹிந்துத்துவாவா?




இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அருந்ததி ராய்!!

JUNE 13, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை அளவுக்கு ஒரு கொடுமையை நான் வேறெங்கும் கண்டதில்லை என மனித உரிமை ஆர்வலர் அருந்ததி ராய் தெரிவித்தார்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர் அப்போது அருந்ததிராய் இந்த கருத்தை தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது குண்டு போட்டது, பள்ளி கூடங்கள் மீது குண்டுமழை பொழிந்து பள்ளி குழந்தைகளை கொன்று குவித்தார்கள்.

அதுபோல் குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து, அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் ஏவுகணை மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச நாடுகள் தங்களது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த விசயங்களுக்காக இலங்கையில் நடைபெற்ற கொடிய போருக்கும், இனப்படுகொலைக்கும் அனுமதியளித்தன.


இலங்கையில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி இந்தியா போன்ற மற்றைய நாடுகளும் செயற்பட வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக்கொண்டு அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், அதேவேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு தான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப்போல் நடாத்தப்படுவதை தான் கண்டதாகவும், இந்த விடையத்தில் தமிழக அரசியல் வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலு தெரிவித்தார்.