Tuesday, January 24, 2012

மோடி பிரதமரானால் என்ன நடக்கும்!

கலவரங்களை திட்டமிட்டு நடத்துவதற்க்கேன்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டமே. 

கலவரங்கள் என்பது உணர்ச்சி உந்தலின் அடிப்படையில் எதிர்பாராமல்  சில பிரிவினரோ, கூட்டங்களோ சண்டையிட்டு கொள்வதே ஆகும்.

இது ஒரு சில மணி நேரம் நீடிக்கும் போதிய அளவில் காவல்துறை அந்த பகுதிக்கு வந்தடைந்ததும் கலவரம் நின்றுவிடும். ஆனால்  இவர்கள் கலவரம் உண்டாக்கினால் அது நாள்கணக்கில் நடக்கும். 





ஒரு கூட்டம் கலவரங்களை நடத்துவதற்கென்றே சதி திட்டங்களை  தீட்டி செயல்படுத்துகிறது என்றால்  உங்களால் நம்பமுடிகிறதா? தானாக உருவாகினால்  அதன் பெயர் கலவரம் ஆனால் அதையே திட்டம் போட்டு  உருவாக்கினால் அது  பயங்கரவாதம். இந்த பயங்கரவாத செயலைத்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் செய்து வருகின்றன. 

விநாயகர் ஊர்வலங்களிளின் போது விநாயகரை கடலில் கரைக்க பலவழிகள் இருந்தாலும்  வேண்டும் என்றே சிறுபான்மையினரின் வணக்க தளங்கள்  வழியாக ஊர்வலங்களை கொண்டு சொல்வோம் என்று அடம் பிடிப்பது. அப்படியே இவர்கள் போக அனுமதிக்கப்படும் போது வேண்டுமென்றே தொழுகை நேரம் வரும்வரை ஊர்வலத்தை தாமதப்படுத்துவது. பின்னர் ஊர்வலத்தில் "பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு" போன்ற பல  கீழ்த்தரமான வார்த்தை பிரோயோகங்களை செய்வது. 

இஸ்லாமியர்கள் தொழுகைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பள்ளிவாசல்கள் முன்பு  வெடிவெடித்து, கூக்குரலிட்டு  ஆர்ப்பாட்டம் செய்வது.  ஊர்வலத்தின் மீது இவர்களே செருப்புகளை தூக்கி வீசிவிட்டு கலவரம்  நடத்துவது. சிறுபான்மையினரின் கடைகளை தீவைத்து கொளுத்துவது, உடைத்து நாசம் செய்வது. பள்ளிவாசல்களில் பன்றி தலைகளை போடுவது, கோவில்களில் இவர்களே மாட்டு தலைகளை போட்டுவிட்டு அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று சொல்வது. 

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இரவோடு இரவாக சிலைகளை வைப்பது. பின்னர் அதை கோவில் என்று சொல்லி எடுக்க மறுத்து அதை கொண்டு கலவரம் நடத்துவது இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் ஓவ்வொரு நாளும் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. RSS மற்றும் அதன் சங்கபரிவாரங்கள் 'சாகா' மற்றும் ஆயுத பயிற்ச்சிகளை  எடுத்து  கலவரங்களை உண்டாக்கி மக்களை பிளவுபடுத்துகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்த தொடர்குண்டு வெடிப்புகளை இவர்களே நடத்தி விட்டு அந்த பலியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்தனர். பாபர் மசூதி இருந்த  இடத்தில் ராமர் பிறந்தார் என்று சொல்லி அதை உடைத்துகலவரம் உண்டாக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வந்த நல்லவர்கள்தான் இவர்கள். ரத யாத்திரை ஒன்றை நடத்தி அது போகும் வழியெல்லாம் சிறுபான்மை மக்களின் ரத்தங்களை ஓட்டியதும் இவர்களே.

மும்பை, பகல்பூர், பீவாண்டி, நெல்லி, குஜராத், கோவை, இப்படி திரும்பிய திசை எங்கும் கலவரங்களை நடத்தி சிறுபான்மையினரின் உயிர்களை குடித்த வஞ்சகர்களும் இவர்களே.  இதன் உச்ச கட்டம்தான் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் அரசு அலுவலங்களில்  பாகிஸ்தான் கொடியை ஏற்றியது. இதை சிறுபான்மையினர் செய்தார்கள் என்று சொல்லி பெரும் கலவரத்தை நடத்த ஆயுதங்களுடன் எதிர்பார்த்து இருந்தது இப்படி இவர்களின் பெருமையை அடுக்கிக்கொண்டே  போகலாம்.

இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான ஹிந்துத்துவா அமைப்புகளின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்கள்தான் தற்போது மோடியை இந்தியாவின் பிரதமராக்க  வேண்டும் என்று ஒரு கோசத்தை எழுப்பி  வருகின்றனர்.  குஜராத் முதல்வராக இருந்து இவர் எப்படி ஒரு கலவரத்தை  நடத்தினாரோ அதுபோல் இந்தியாவுக்கு பிரதமராகி இந்தியா முழுவதும் கலவரக்காடாக்க திட்டமா? வர்ணாசிரம சங்கபரிவார் சாத்தானை இந்தியாவின் முதல்வராக்கினால் இந்தியா இடுகாடாகும் என்பதில் சந்தேகம் என்ன இருக்கிறது.

Sunday, January 22, 2012

இஸ்லாத்தை தழுவியதால் தீவிரவாதியாக்க முயற்சி: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் இளைஞர்...



மானந்தவாடி(கேரளா):சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.
நேற்று முன்தினம் இரவு என்.ஐ.ஏ உள்ளிட்ட பெரும் போலீஸ் படை பிலால் வசித்துவரும் மானந்தவாடி என்ற இடத்தில் உள்ள இவரது வீட்டை சுற்றி வளைத்து பின்னர் அவரை கைது செய்தனர். மூன்று வாகனங்களில் வந்த போலீஸார் அப்பகுதியில் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்கிய பின்னர் 
இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.




ஒன்றரை மணிநேரம் விசாரணை நடத்திய பிறகு போலீஸ் வாகனத்திலேயே இவரை வீட்டில் கொண்டு விட்டுள்ளனர். கேரள மாநில முவாற்றுப்புழாவில் நபிகளாரை அவமதித்த பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி இந்த விசாரணை நாடகத்தை போலீஸார் மேற்கொண்டனர்.

தனிப்பட்ட விரோதத்தின் அடிப்படையில் சில உள்ளூர்வாசிகள் அளித்த தவறான தகவலின் அடிப்படையில் தன்னை தீவிரவாதியாக சித்தரிக்கும் வகையில் போலீஸ் நடந்துக் கொண்டதாக பிலால் கூறுகிறார்.

இதுக்குறித்து பிலால் கூறியதாவது: ‘பொது சமூகத்தில் அனைவர் மத்தியிலும் அறிமுகமான என்னை தனியாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்காமல், இரவு நேரத்தில் பயங்கரவாத பீதியை உருவாக்கி ஊர்மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் 
சென்றனர். இது ஒரு மனித உரிமை மீறலாகும்.

இதுத்தொடர்பாக நீதிமன்றத்தையும், மனித உரிமை அமைப்புகளையும் அணுகுவேன். சமூகத்தில் என் மீது தீவிரவாத முத்திரைக்குத்த முயன்றவர்கள் மீதும், அதற்கு உதவிய போலீஸார் மற்றும் தவறான செய்தியை அளித்த பத்திரிகை மீதும் வழக்கு தொடர்வேன்.’ என பிலால் கூறினார்.

இந்து மதத்தின் நாயர் சமூகத்தை சார்ந்தவராக இருந்த பிலால் துபாயில் வைத்து இஸ்லாத்தை தழுவினார். பின்னர் நாடு திரும்பிய பொழுது ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டார். ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பிலால் தனக்கு அறிமுகமான மெஹ்ருன்னிசா என்பவரை திருமணம் செய்தார். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்காக வயநாட்டில் தனது குடும்பத்துடன் வசிப்பிடத்தை மாற்றினார் பிலால். அயல்வாசிகளுடன் ஏற்பட்ட சின்ன பிரச்சனை போலீசாரின் அச்சுறுத்தல் நடவடிக்கையில் முடிந்துள்ளது என பிலால் கூறுகிறார்.

நிரபராதியான தன்னையும், குடும்பத்தையும் நிம்மதியாக வாழவிட்டால் போதும் என கோரிக்கை விடுக்கிறார் பிலால்.

டேராடூனில் ஹஸாரே குழுவினர் மீது செருப்பு வீச்சு!

டேராடூன்: உத்தரகண்டில் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினர் மீது செருப்பு வீசினர் பார்வையாளர்கள்.

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய காங்கிரஸ் அரசை கண்டிக்கும் விதமாகவும் லோக்பால் தேவை பற்றி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் அன்னா ஹசாரே குழு உறுப்பினர்கள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர் .



இந் நிலையில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கெஜ்ரிவாலை நோக்கி வீசினார். ஆனால் அந்த குறி தவறவிட்டது.

அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ,கிரண்பேடி உள்பட மற்ற உறுப்பினர்களும் உடன் இருந்தனர். முதல் செருப்பு இலக்கு தவறியதால் மற்றொரு செருப்பை கழற்றி வீச முனைந்தார்.உடனே உத்தரகண்ட் போலீசார் தாக்குதல் நடத்த முயன்றவரை கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு நிலவியது.

தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து!

தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. 

நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். 

நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.  ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. 




சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.  நியூட்ரினோ என்பது சூரியன் மற்றும் விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். 

கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது.

நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம். தற்போது இந்த ஆராய்ச்சிக் கூடம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிப்புரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ., தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும். 

அதையடுத்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும். அங்கு 50 கிலோ டன் இரும்பிலானநியூட்ரினோ டிடெக்டர் அமைக்கப்படும். இதைச் சுற்றி, நான்கு திசைகளிலும் மேலேயும் கீழேயும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ., பரிமாணமுள்ள பாறை இருந்தால் தான், ஆராய்ச்சி நடத்த முடியும். இவ்வளவு பெரிய பாறையால் தான், வானவெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து, நிறுத்த முடியும். அதன் பிறகு தான், நியூட்ரினோவை காண முடியும்.

சரி இதற்க்கு முன்னாள்  கோலார் தங்க வயல் சுரங்கத்தில் செயல்பட்டு வந்த  இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்ன விதமான கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும்உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும், இதனால் மக்களுக்கு என்ன பிரோஜனம் என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விடயங்கள் ஆகும்.

இதனால் ஏற்ப்படும் ஆபத்துக்கள் என்றவென்று பார்த்தால் தண்ணீர், விவசாயம், காற்று, இப்படி எல்லாம் மாசுபடும். இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. இதில்  கசிவுகள் 
எதுவும் ஏற்ப்பட்டால் அடுத்து ஒரு போபால் உருவாகும் ஆபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் இயற்கையை கெடுக்க வந்த அரக்கனாகவே இதை பார்க்க முடிகிறது.

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு எற்ப்பட்டதன் விளைவாள் மக்கள் மீதும்காட்டுயிர்கள் மீதும்நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறிஅந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது. 

விஞ்சான கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்சி கூடங்களை மற்ற நாடுகள் நடத்துகின்றன என்பதற்காக போட்டிக்கு நாமும் நடத்துவதால் எந்த பயனும் இல்லை. 
இது அத்தியாவாசியமான மக்களுக்கு தேவையான ஒரு ஆய்வாக இருந்தாலும் பரவாயில்லை.  மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவு செய்யமுடியாத  இந்தியா போன்ற  நாடுகளுக்கு இது போன்ற ஆய்வகங்கள் தேவையில்லை. மேலும் இது போன்ற அழிவுத்திட்டங்கள் எல்லாம் திட்டமிட்டு தமிழகத்தை நேக்கி நகர்த்தப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு


ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா அபுல் காஸிம் நுஃமானி கூறியுள்ளார். அனைத்து முஸ்லிம்களின் மார்க்க உணர்வுடன் தொடர்புடைய பிரச்சனை என்பதால் ருஷ்டியின் தீர்மானத்தில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசிய செயலாளர் முஹம்மது சலீம் தெரிவித்துள்ளார்.






ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் மீதான எதிர்ப்பை தவிர இலக்கியத் திருவிழா மீதான எதிர்ப்பு அல்ல. இறைத்தூதரை குறித்து மோசமாக எழுதிய ருஷ்டி மார்க்க ரீதியாக ஒரு க்ரிமினல் ஆவார்.
கருத்து சுதந்திரம் என்பது ருஷ்டியைப் போல எழுதுவதற்கான உரிமை அல்ல. ரகசிய புலனாய்வு பிரிவின் தகவலின் அடிப்படையில் தான் இந்திய வருகையை ரத்துச்செய்வதாக ருஷ்டி கூறுவது நாடகமாகும் என முஹம்மது சலீம் கூறியுள்ளார்.
ருஷ்டி இந்திய வருகையை ரத்துச் செய்ததை தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் அவரை எதிர்த்து நடத்தவிருந்த போராட்டத்தை ரத்துச்செய்துள்ளன.
அதேவேளையில், ருஷ்டியின் தீர்மானம் அவர் தனிப்பட்ட ரீதியில் எடுத்ததாகும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் திக்விஜய்சிங் லக்னோவில் தெரிவித்துள்ளார். ருஷ்டி இந்தியாவுக்கு வருகை தர விசா தேவையில்லை என சிங் கூறினார்.

Monday, January 16, 2012

எங்களைச் சீண்ட வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!


"இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு அமெரிக்கா கால் வைக்க நினைக்கும் இடம் ஈரானாக இருக்கலாம்" என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்கக் கடற்படை  ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காக ஈரான் கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையில் தன்னுடைய மிகப்பெரிய கடற்படைக் கப்பலைக் கொண்டுபோய் நிறுத்தியது.



இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரான் தன்னுடைய கடற்படைப் படகுகள் மூலம் எங்களைச் சீண்டிப் பார்க்கிறது. இதே நிலைமை நீடித்தால் அதன் விளைவை ஈரான் அனுபவிக்க நேரும்.

ஹோர்முஸ் நீரிணையில் சென்ற அமெரிக்கப் போர்க்கப்பலான நியூ ஆர்லியான்ஸ் கப்பலுக்கு அருகில் 2 போர்ப்படகுகள் வந்தன. அதில் இருந்தவர்கள் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை வெளியில் தெரியும்படி வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அந்தத் துப்பாக்கியையும் அமெரிக்கப் போர்க்கப்பலை நோக்கியே வைத்திருந்தார். மேலும் ஈரான் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அருகில் தன்னுடைய கடற்படைப் படகுகளை அதி வேகத்தில் இயக்கி, அச்சுறுத்துவதைப் போல நடந்துகொள்கிறது.


மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரித்து அதைத் தன்னுடைய நட்பு நாடுகளுக்குத் தருகிறது" என்று குற்றச்சாட்டுகளை ஈரான் மீது அமெரிக்கா சுமத்துகிறது.

ஈரான் மீது ராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. எனவே அதனுடைய குற்றச்சாட்டுகளைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?


 சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை பா.ஜக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய் கூட்டணி உருவானால் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். இதில் சிலர் ரகசியமாக ரஜினியை முன்மொழிந்துள்ளனர்.





இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடிதான் பாரதிய ஜனதா கட்சி. ஒரு தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் பிரவேசமான பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய பார்பனர்கள் முயற்சிப்பது என்னவோ சரி. ஆனால் அதில் ரஜினிகாந்த்க்கு என்ன வேலை என்பது புரியாத மர்மம்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துவரும் குண்டுவெடிப்புகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியதுதான் என்பது தெளிவாகி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களும், சாமியார்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படியாவது ஆட்சியை பிடித்து அவர்களை வெளியே கொண்டு வரவும் அதே நேரம் தங்களது வர்ணாசிரம ஹிந்துத்துவா சித்தாந்தத்தை நிலை நிறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். 


இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அரசியல் முகமூடியை தமிழகத்தில் காலூன்ற செய்யும் வேலையைத்தான் இவர்கள் சிரத்தையோடு செய்து வருகின்றனர்.  ஜெயலலிதா மற்றும் சோ, சுப்பிரமணிய சாமி, குரு மூர்த்தி, 
பாலசந்தர் இவர்கள் எல்லாம் யார் என்று நமக்கு தெரியும். அந்த கூட்டத்தில் ரஜினிகாந்தும் சேர்ந்திருப்பது வியப்பளிக்கிறது. தங்களது பயங்கரவாத முகம் வெளியே தெரிந்து விட்டதால் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பிரதம வேட்பாளர் தேவைப்படுகிறது அது ஜெயலலிதாவாகவோ அல்லது ரஜினிகாந்தாகவோ இருக்கலாம்

Saturday, January 14, 2012

வெள்ளந்தி நோக்கத்தில் தான் வெளியிட்டோம் - நக்கீரன் வருத்தம்!


"மாட்டுக் கறி சாப்பிடும் மாமீ நான்" என்று நக்கீரன் வார இதழில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா குறித்து வெளியான செய்தியை அடுத்து நக்கீரன் அலுவலகம் தாக்கப் பட்டது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நக்கீரன் கோபால் மற்றும் காமராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்து வெளியாக உள்ள நக்கீரன் இதழில் முதல் பக்கத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறுச் செய்திக்கு மன்னிப்பு கேட்டுச் செய்தி வெளியிட வேண்டுமென உத்தரவிட்டனர்.



நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று வெளியான நக்கீரன் இதழில் "ஜனவரி 7-10 தேதியிட்ட இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியான செய்தி எந்த உள்நோக்கமும் இன்றி வெளியிடப் பட்டதாகும். ஆளுங்கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கை சார்ந்தும் அரசியல் ரீதியாகவும் சாதகமாக உள்ள தகவல் என்ற வெள்ளந்தி நோக்கத்தில் தான் வெளியிட்டோம்.

எந்த வகையிலும் மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் புகழுக்கோ, இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கோ களங்கம் கற்பிக்கும் எண்ணம் நக்கீரனுக்குச் சிறிதளவும் இல்லை. எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிடப் பட்ட அந்த அட்டைப் படச் செய்தியால் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, அவரைச் சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எவர் ஒருவரேனும் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக நக்கீரன் தனது மனப் பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்


புதுடெல்லி:தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தானது. துரதிர்ஷ்டவசமாக நமது அரசு அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் மோசமான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.


இந்தியா-இஸ்ரேலின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் தூதரகம் பெங்களூரில் திறக்கப்படும் என்ற முடிவு தேச நலனிற்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒன்றாக பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகின்றது.
மதவாதம் மற்றும் பயங்கரவாதத்தை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்துத்துவ பாசிஸ்டுகளின் கையில் சிக்குண்டு கிடக்கும் மாநிலமான கர்நாடகாவில் இஸ்ரேலிய தூதரகம் அமையவிருப்பது பாசிஸ்டுகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும்.
சியோனிச தீவிரவாத கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் நாடான இஸ்ரேல்தான் நவீன கால தீவிரவாதத்திற்கு வித்திட்டு வருகின்றது என்பதை நாகரீக உலகில் உள்ள அனைவரும் அறிவர். குறிப்பாக கடந்த 60 ஆண்டுகளாக சியோனிச தீவிரவாதத்தால் பாதிப்பிற்குள்ளாகி வரும் ஃபலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் தீவிரவாதத்தை குறித்து நன்கு அறிவர்.
இஸ்ரேல் தனது தூதரகத்தை இந்தியாவில் டெல்லியிலும், இந்தியா இஸ்ரேலிய தலைநகர் டெல்அவீவிலும் 1992-ஆம் ஆண்டு பரஸ்பரம் துவக்கினர். இந்தியாவில் இஸ்ரேலிய தூதரகம் துவங்கப்பட்ட(1992க்கு) பின்புதான் நாட்டில் தொடர்
குண்டு வெடிப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக இந்தியா ஃபலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தனது கணக்கை துவக்கியதிலிருந்து ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் இஸ்ரெல் இழைத்து வரும் அக்கிரமங்களை எதிர்த்து எடுக்கப்படும் தீர்மானங்களில் இந்தியா தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது.
மகாத்மா காந்தி சொன்னது போன்று எப்படி இங்கிலாந்து – ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ அது போன்று ஃபலஸ்தீன் ஃபலஸ்தீனர்களுக்கே என்ற நிலைப்பாட்டில் தாங்கள் நிலைத்திருப்போம் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல தருணங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபலஸ்தீனை பிரிக்கக்கூடிய விவகாரத்தில் இந்தியா எப்போதுமே எதிர்கருத்தைத் தான் கொண்டுள்ளது. மேலும் யூதர்கள் மற்றும் ஃபலஸ்தீனர்களுக்கு சமமான அரசியல் உரிமையை வழங்கும் ஒரு தேச கொள்கையிலும் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது.
ஜவஹர்லால் நேருவின் காலம் தொட்டு ராஜீவ்காந்தி காலம் வரை இதுதான் நம்முடைய கொள்கையாக இருந்து வந்தது.
எனவே, ஃபலஸ்தீன மக்களின் துயரங்களோடு நாங்களும் இருக்கின்றோம் என்பது போன்று காட்டிக்கொண்டு மறுபுறம் ரவுடி நாடான இஸ்ரேலை அரவணைக்கும் நயவஞ்சக போக்கினை இந்தியா உடனடியாக கைவிடவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கேட்டுக்கொள்கின்றது.” இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறியுள்ளார்.

போபால்:பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு


புதுடெல்லி:போபால் விஷவாயு துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க இச்சம்பவம் தொடர்பான அமைச்சரவை குழு(GoM-Group of Ministers)
தீர்மானித்துள்ளது. போபால் விஷவாயு துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களால் அவதியுறுகின்றனர்.


இழப்பீட்டு தொகையை விநியோகிக்க நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் தீர்மானித்துள்ளதாக கூட்டத்திற்கு பிறகு மத்தியபிரதேச மாநில அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்பட பல அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.
விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 10045 பேருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை குழு நிராகரித்தது. இதுக்குறித்து ம.பி.அமைச்சர் பாபுலால் கவுர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

அத்வானி, மோடி இன்று சென்னை வருகை


சென்னை:பா.ஜ.கவின் ரதயாத்திரை புகழ் எல்.கே.அத்வானியும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியும் இன்று சென்னை வருகின்றனர்.
தமிழகத்தில் பாசிஸ்டுகளின் ஏஜண்டாக செயல்பட்டுவரும் ‘சோ’ ராமசாமியின் துக்ளக் பத்திரிகையின் 43-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருவரும் வருகை தருகின்றனர். சிங்கப்பூரில்
சிகிட்சை முடிந்து சென்னையில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்தை இருவரும் சந்திப்பார்கள் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.மேலும் இவர்கள் தங்களது இனியதோழியும், தமிழ முதல்வருமான ஜெயலலிதாவையும் சந்திப்பார்கள் என உறுதிச் செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உற்றத்தோழி சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு ‘சோ’ உள்ளிட்ட பார்ப்பன பாசிச கும்பல் போயஸில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
நக்கீரனில் வெளியான ‘மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்’ என்ற செய்திக்கட்டுரைக்கு பதிலளித்த ஜெயலலிதா தான் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார்.
முன்பு சட்டசபையில் “நான் பாப்பாத்தி” என்றும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில்  “ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?” என்றும் கேட்ட ஜெயலலிதா
பாசிஸ்டுகளின் நெஞ்சில் பாலை வார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மோடி, அத்வானியின் சென்னை வருகை அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.கவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியாக இருக்குமா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்

"துரத்தப்பட்டது ஏன்?" : வாய் திறக்க 'சசிகலா' நடராஜன் முடிவு!

ஆளும் அதிமுகவிலிருந்தும், அதன் 'தோட்டத்திலிருந்தும்' கூண்டோடும் குடும்பத்தோடும் நீக்கப்பட்டது ஏன் என்பது பற்றி 'வாய் திறக்க' சசிகலாவின்  கணவர் நடராஜன் ஆயத்தமாகி விட்டாராம். 

நாளை மறுநாள் முதல் மூன்று நாள்கள்  தஞ்சையில், தனக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள கலை இலக்கியத் திருவிழாவில் நடராஜன் பல இரகசியங்களைப் பேசப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.



நடராஜன் தரப்பு அனைத்து மன்னார்குடி அரசியல்வாதிகளும் கலந்துகொள்ள உள்ள இவ்விழாவில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும், நண்பர்களையும் அவர் அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக் காட்டவும், தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை காட்டவும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.

ஜனவரி 15ம் கலை, கலாச்சார நிகழ்ச்சியாக நடைபெறும். ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில், அடுத்த நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு, பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.

3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை வெளியிடுகிறார். தமிழர் இயக்க பழ.நெடுமாறன்,  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.

விழாவின் இறுதி நாளில் நடராஜன் சிறப்புரையாற்றுகிறாராம் .அப்போதுதான் ஜெயலலிதா குறித்தும், அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப் போவதாகத் தெரிகிறது.

இடஒதுக்கீடு: ஏன் இந்த கொல வெறி?



சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாதாம் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்நாட்டு போருக்கும் பா.ஜ.க தயாராகுமாம்!

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இம்முறை உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்களில் நோட்டமிட்டு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பாராட்டத்தக்கதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என பா.ஜ.க தலைவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்த சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்துடனும், சிறுபான்மையின மக்களுடனும் பா.ஜ.கவிற்கும், சங்க்பரிவாரத்திற்கும் அணு அளவேனும் மதிப்பிருந்தால் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளியிருப்பார்களா? அரசியல் சட்டத்தையும், நீதிபீடத்தையும் சிறிதளவேனும் மதித்திருந்தால் சிறுபான்மை வகுப்பினரான முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நரேந்திர மோடியை தலையில் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களா? சுருக்கமாக கூறினால், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்க்பரிவார அமைப்புகளின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வகுப்புவாதமும், முஸ்லிம்கள் மீதான தீராத பகையுமாகும். இவற்றை விட வேறு எந்த அஜண்டாவும் அவர்களுக்கு இல்லை.





இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைத்தே தீரவேண்டும் என்றால் அவர்கள் இந்துமதத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் அபயம் தேடிக்கொள்ளலாம் என்ற தொகாடியாவின் வகுப்பு வெறியை உமிழும் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து சங்க்பரிவாரத்தின் இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சிறுபான்மையின வகுப்பினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்ற கார்ப்பரேட் ப்ரேக்கிங் நியூஸ்கள் வந்த உடனேயே தளர்ந்துகிடந்த பா.ஜ.க தலைவர்கள் துள்ளி எழுந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வாதம் புரிய கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுக்க அணிவகுத்தனர். மதசார்பின்மையும், தேசப்பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் வெதும்பினர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் பாரபட்சம் மற்றும் சமூக சூழல்களின் பலி ஆடுகளான முஸ்லிம்களுக்கு இந்த குறைந்தளவு இட ஒதுக்கீடாவது ஆறுதல் அளிக்கட்டும் என்ற கருத்து எந்த சேனல்களின் விவாதத்திலும் இடம்பெறவில்லை. மாறாக லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்புக் குழுவில் கூட அச்சமூகத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற கூக்குரல்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் கேட்டது.
தினமணி என்ற பார்ப்பன நாளேடு பழத்தில் ஊசியை அல்ல விஷ ஊசியை ஏற்றும் கைங்கர்யத்தை தலையங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக படித்தால் நன்றாகத்தான் இருக்கும் அதன் பின்னணியில் இருக்கும் மேல்ஜாதி திமிரும், காழ்ப்புணர்வும் அதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் புரியவரும்.
பா.ஜ.கவின் அதே இனவெறியைத்தான் சேனல்களில் நடந்த விவாதங்களிலும் காணமுடிந்தது. ‘அரசியல் சட்ட விரோதம்’ என்ற போர்டை மாட்டி வைத்துவிட்டு ஆக்ரோஷமடைந்தார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் வேளையில் அரசியல் சட்டவிரோதம் என்ற குரல் எழும்பவில்லை. அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் 50 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனாலும், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களும் மகளிருக்கு மனதார வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கடைசி வார்த்தை அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அறியாமல் இந்த மற்போர் நடக்கவில்லை. அரசு தீர்மானம் வந்தால் அதன் தடைகள் ஒவ்வொன்றாக அகலும். முஸ்லிம்கள் அத்தகைய சலுகைகளுக்கு எல்லாம் தகுதியானவர்கள் அல்லர் என்பது தான் உண்மையான பின்னணி.
1956-ஆம் ஆண்டு சீக்கிய மதப் பிரிவினரையும், 1990-ஆம் ஆண்டு புத்த மதத்தை சார்ந்தவர்களையும் எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்த்த வேளையில் யாரும் அதனை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடங்கிய சிறுபான்மையினர் அனுபவித்து விடக்கூடாது என்ற மேல்ஜாதி ஆதிக்க மனப்பாண்மைதான் தேசிய நீரோட்டத்தில் காணப்படுகிறது.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு கூட  இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என மேல்ஜாதி வர்க்கம் பாடுபடுகிறது.





சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களின் தனித்தன்மையை இழக்காத வகையிலான நலத் திட்டங்களுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என அரசியல் சட்டம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடும், உறுதியான நடவடிக்கைகளும் தொடர வேண்டியது வரலாற்று ரீதியான ஒரு அத்தியாவசியமும் ஆகும். ஆனால், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகும் மத சிறுபான்மையினரின் நிலை என்ன? கல்வி, அரசு பணி, தனியார் துறை, மீடியா – என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? வருமானம், சுகாதாரம், தொழில் துறை ஆகியவற்றில் நாடு அடைந்த முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் அடைந்த பலன் என்ன? இக்கேள்விகளுக்கு எல்லாம் எதிர்மறையான பதில்களே கிடைக்கும்!
வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய வேளையில் ஊடகங்களும், கார்ப்பரேட்டுகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வீதிகளில் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பின் ஆக்ரோஷ பிரகடனத்தை மறக்க இயலாது. இறுதியில் தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்கு தேசிய கட்சிகள் தள்ளப்பட்டன. இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்த போதிலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்தியாவில் முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு அரசியல் சட்டம் தடையாக இருக்கவில்லை. ஆனால், அதற்கான அரசியல் ரீதியான துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.

தென்னிந்திய மாநிலங்கள்தாம் இதில் முன்மாதிரியாக திகழ்ந்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்தின. தமிழகத்தில் 3.5 சதவீதமும், கர்நாடகாவில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பொழுது அதன் பெயரால் சச்சரவுகள் எழவில்லை. கேரளா மாநிலத்தில் அரசு பணிகளில் 12 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை முஸ்லிம்களை ஒ.பி.சியில் உட்படுத்தி இதர மாநிலங்களும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி இருக்கலாம். 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பலன் குறைந்த அளவே முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 32 ஆண்டுகள் இடதுசாரிகளால் ஆளப்பட்ட மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்லிம்களின் சதவீதம் 24 சதவீதம் ஆகும். ஆனால் இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து விலகுவதற்கு சற்று முன்புதான் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக அறிவித்தனர்.

வட இந்தியாவில் தலித், பிற்படுத்தப்பட்ட அரசியல் வலுப்பெற்ற போதிலும் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். தற்பொழுது அடித்தளத்திலிருந்து சில அசைவுகள் முஸ்லிம் சமூகத்திடம் தென்படுகிறது. மே.வங்கத்தில் இதுவரை இடதுசாரிகளுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம்கள் மமதாவிற்கு அளித்தனர். அஸ்ஸாமில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்காமல்  மவ்லானா அஜ்மலின் கட்சிக்கு வாக்களித்து எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். தொப்பி அணிந்தும், அஜ்மீர் தர்காவிற்கு நன்கொடை அளித்தும் முஸ்லிம்களை நம்மோடு நிறுத்தலாம் என கருதிய லாலுவின் திட்டமும் பீகாரில் செல்லுபடியாகவில்லை. உ.பியில் மாயாவதியும், முலாயமும் முஸ்லிம்களின் அசைவுகளை அடையாளம் காண்கின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு என கண்ணியமான வாழ்க்கையை தேடிய முஸ்லிம்கள் துவக்கியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை.
பிரிவினைக்கு பிறகும் இந்தியாவில் வாழ தீர்மானித்த ஒரு சமூகத்திற்கு இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழைத்த அநீதியின் சுட்டெரிக்கும் உண்மைகளைத்தான் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் தங்களது ஆய்வில் வெளிக்கொணர்ந்தனர். தலித்துகளை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்வதாக சச்சார் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் தங்களது நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்ய 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்தது. கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் 41.6 சதவீதம் பேருக்கு  மாத வருமானம் 825/ ரூபாய் மட்டுமே என்ற உண்மையை ஆக்ஷன் எய்டும், இந்தியன் சோஷியல் இன்ஸ்ட்யூட்டும் நடத்திய புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவரானதும், ஹமீத் அன்ஸாரி துணை குடியரசு தலைவராக தொடர்வதும், குரைஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதும், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற கான் வகையறாக்கள் பாலிவுட்டில் பிரபலமானதையும் சுட்டிக்காட்டி ஒரு மேதாவித்தனமான கேள்வியை எழுப்புகிறார்கள் – இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை எட்டியதற்கு இடஒதுக்கீடுதான் காரணமா? என்பதுதான் அக்கேள்வி.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறும் வேளையில் இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி முஸ்லிம்களை சமாதானப்படுத்தலாம் என எவரும் கருதவேண்டாம். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையின் அடித்தளமே சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவமும், உரிமைகளுமாகும். அவர்களை புறந்தள்ளிவிட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது.

ஆதலால் காங்கிரஸும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் செய்யவேண்டியது என்னவெனில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாகும். முஸ்லிம் வேடம்பூண்ட  ஷாநவாஸ் ஹுஸைன், முக்தா அப்பாஸ் நக்வி போன்ற எட்டப்பர்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டு அவர்கள் மூலமாக ஊளையிடும் பா.ஜ.க, சங்க்பரிவார்களின் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது. இத்தகைய களத்து மேட்டு காளான்களை அதற்குரிய மதிப்புடன் புறக்கணிப்பதே சிறந்தது!
அ.செய்யது அலீ