Saturday, November 2, 2013

ஹிட்லரைப் போலவே மோடியும் பாசிசவாதி: திவாரி தாக்கு

ஹிட்லரைப் போலவே நரேந்திர மோடியும் பாசிசவாதி என மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி விமர்சித்துள்ளார்.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: மோடிக்குச் சவால்!

புதுடெல்லி: "பொய்யிலேயே அரசியல் செய்யும் மோடி, நாட்டின் வளர்ச்சி பணிகள் முதல் எந்த ஒரு விசயத்திலும் நேரடியாக விவாதிக்க தயாரா?" மோடிக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு மோடிக்குச் சவால் விடுத்தார். மேலூம் அவர் கூறியதாவது:
"நரேந்திர மோடி பேசும் மேடைகள் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து பல்வேறு பொய்களை அவர் பேசி வருகிறார். இவரது பேரணிக்கு 10 முதல் 15 கோடி வரை செலவிடப்படுகிறது. இது எங்கிருந்து வந்த பணம்? இது கள்ளப்பணமா? இது குறித்துவிசாரணை நடத்த உத்தரவிடப்படும்.
கறுப்பு பணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் மோடி பேரணியில் கறுப்பு பணம் புழங்குவதாக எனக்கு தகவல் கிடைக்கிறது. பிரதமர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் மோடி திரிகிறார். ஆனால், அதற்கான வெளிப்படைத்தன்மையிலும், பொறுப்பிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை.

இவரது திட்டமென்ன? நான் அவருக்குச் சவால் விடுகிறேன். எந்தவொரு விஷயமானாலும், எந்தவொரு கேள்விக்கும், பதிலுக்கும் நான் ரெடி! நீங்களே தேதியை, இடத்தைச் சொல்லுங்கள்! என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா?
ஆனால் அவர் இதனைச் செய்ய மாட்டார். இது வரை மோடி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தியதில்லை. இவர் என்னோடு எதனை விவாதிக்க போகிறார்? மோடியின் நிலை என்ன? பாதுகாப்பில் இவரது திட்டமென்ன? ஏதாவது வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறாரா? நாட்டின் எதிர்கால திட்டம் குறித்து ஏதாவது மோடி சொல்லட்டும். ஒரு தனி மனிதன் இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானித்து விட முடியாது. அவர் அனைத்து கூட்டங்களிலும் பொய்யான தகவலையே தெரிவிக்கிறார்".

முத்துப்பேட்டையில் தீபாவளி கொண்டாட்டம்!

முத்துப்பேட்டையில் தீபாவளி பண்டிகை உற்சாமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முஸஃபர் நகர் கலவரம்: 8 பேர் கைது, 15 பேர் மீது வழக்கு!

முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தின் முஸஃபர்நகரில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

70 பழங்குடி கிராமங்களின் மக்களை வெளியேற்றிவிட்டு படேலின் சிலையை எழுப்பும் மோடியின் சர்வாதிகாரம்: எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது!

புதுடெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரால் குஜராத்தில் ஒருமைப்பாட்டு சிலையை நிறுவும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி 70 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்துள்ளார். மோடி அரசின் அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்களை போலீஸ் கைதுச் செய்துள்ளது. பழங்குடி மக்களை கூட்டாக வெளியேற்றியதற்கு எதிராக அப்பகுதியில் எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மேதா பட்கரின் தலைமையில் என்.ஏ.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மக்கள் கூட்டாக வெளியேற்றப்படுவதற்கும், போலீஸ் பயங்கரவாதத்திற்கும் எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

திருவாரூரில் மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்.


இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பிரதமர் உட்பட யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்



”மாபெரும் ரயில் மறியல் பேராட்டம்”

இடம்: திருவாரூர் ரயில் நிலையம்
நாள்: 7.11.2013 | மதியம் 2 மணி

கண்டன உரை:
எம்.தமிமுன் அன்சாரி
(மமக பொதுச் செயலாளர்)

அன்புடன் அழைகிறது
மனிதநேய மக்கள் கட்சி, திருவாரூர் மாவட்டம்

Friday, November 1, 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.

13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை: பா.ஜ.கவுக்கு ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏவும் இல்லை!

புதுடெல்லி: இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இல்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக தந்திரங்களை கையாளும் காங்கிரசுக்கும், மோடியின் பா.ஜ.கவுக்கு வித்தியாசம் இல்லை.பா.ஜ.கவில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ  கூட இல்லாதது அக்கட்சியின் முஸ்லிம் விரோத போக்கிற்கு சிறந்த உதாரணமாகும். ஆனால், முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்று நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும் நிலை மிக மோசமாக உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய எந்த தகவல்களையும் ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என IB மற்றும் NIA மறுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு தீவிரவாத இயக்கம் என சித்தரித்து எந்த தகவல்களையும், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள வில்லை என்று புலனாய்வு அமைப்புகளான IB (Intelligence Bureau)மற்றும் NIA (NationalInvestigation Agency) மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் (Press Council of India - PCI) அனுப்பிய நோட்டிசுக்கு பதில் அளித்துள்ள புலனாய்வு அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்டை தீவிரவாத இயக்கமென சில பத்திரிக்கைகள் கூறுவது போல் எந்த ஒரு தகவலும் தங்களிடம் இல்லை என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்து !

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே உமா தேவி மினி பேருந்து மற்றும் நிலா சீ புட்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


பேருந்து  ஓட்டுனர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பேருந்தில் முன் பகுதி விபத்தினால் சேதம் அடைந்தது.இதனால் பேருந்து JCB இயந்திரம் கொண்டு மீட்கப்பட்டது  இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.

NEWS :முத்துப்பேட்டை  டுடே 

Thursday, October 31, 2013

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரகளை-பத்திரிகையாளருக்கு சரமாரி அடி!

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது அதன் அடிப்படையில் இன்று துவங்கிய மன்ற கூட்டத்தில் 1 வது வார்டு கவுன்சிலர் மாரிமுத்து முத்துப்பேட்டையில் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க வலியுறுத்தி கொசு வலையும் மன்ற கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதனை புகைப்படம் எடுக்கவும், 






செய்திகள் சேகரிக்கவும் கூட்டம் நடக்கும் அரங்கத்திற்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் பிச்சுமணி (தினமலர்), முகைதீன் பிச்சை (தினகரன்), திருமுருகன் (புதிய தலைமுறை) ஆகியோரை பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் தடுத்து சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. காயமுற்ற பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.அருணாச்சலம் மீது வழக்கு பதியபட்டுள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்! -தவ்ஹீத் ஜமாத்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அலுவலகம் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இதனை சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் தடை வித்தித்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பணிகள் தடைபெற்று நின்றது.



இதனை கண்டிக்கும் வகையில் வரும் 5-11-2013 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.  

பாட்னா குண்டு வெடிப்பு : விடை தெரியாத வினாக்கள்

டந்த 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்ட போது அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் 6 பேர் உயிரிழந்ததோடு எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிறுநீரக கல்லைக்கரைக்கும் நன்னாரி..! சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு..!

நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் ...படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன. 

இந்திய உளவுத்துறையும் & இந்தியன் முஜாஹிதீன் இயக்கமும்!

அக் 31/2013: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பாட்னா கூட்டத்தில் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று முன்பே பீகார் அரசுக்கு தகவல் தெரிவித்திருந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்.

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (அக்டோபர் 29) முதல் துணை நிதி நிலை அறிக்கை மீதான கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது.

Wednesday, October 30, 2013

முத்துப்பேட்டையில் SDPI கட்சி பற்றி தவறான புரிதலுக்கு திருவாரூர் மாவட்ட பொதுசெயலாளர் நைனா முஹம்மது விளக்கம் !

(29/10/13) ஒரு இயக்கத்தினரால் நடத்தப்படும் பேஸ்புக் பக்கத்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாவா பகுருதீன் தி.மு.க.வில் இணைந்ததால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.


முத்துப்பேட்டை அருகே கடத்தபப்ட்ட 7.6 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் ஆசாத் நகர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தில் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை மல்லிப்பட்டிணம் திருத்துறைப்பூண்டி பகுதி சுங்க இலாகா அலுவலகமும் இயங்கி வருகிறது. 

PFI யை கண்டு தொடைநடுங்கும் டிரௌசர் பாண்டிகள் !!

பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையில் துணிச்சலான முயற்சிகளால் ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட மக்களை , வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக திரட்டி போராடுவதை கண்டு RSS அச்சப்படுகிறது.


பாட்னா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐபி முன்னறிவிப்பு!

அஹ்மதாபாத்: பாட்னா குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவில் இருக்க இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.


பேரணியில் ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐபி அளித்த முன்னறிவிப்பு இப்பொழுது விவாதமாகியிருக்கிறது. மோடியின் தேர்தல் பேரணியில் வீரியம் குறைந்த குண்டுகள் வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதாக இருந்தது ஐபியின் முன்னறிவிப்பு.

குஜராத்தில் நடந்த இடைதேர்தல் சம்பந்தமாக இந்த முன்னறிவிப்பு வந்தது என்றாலும் பாட்னாவில் இதே போன்று வீரியம் குறைந்த குண்டுகள் வெடித்திருப்பதனால் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் விசாரணையை அதனை நோக்கியும் திருப்பியுள்ளனர்.

ஒரு ஹிந்துத்துவ அமைப்புதான் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் என்றும், அது மோடியுடைய கூட்டத்தில் நடப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஐபி தெளிவான முன்னறிவிப்பு செய்திருந்தது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்தான் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அறிக்கை மே 21 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட தேசிய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை கவர்வதற்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்த ஹிந்துத்துவ அமைப்பு இதில் ஈடுபடுகிறது என்று ஐபி தெளிவாக்கியிருக்கிறது.


தான் ஹிந்துக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல என்று மோடி பாட்னா கூட்டத்திற்கு முன்புள்ள கூட்டத்தில் கூறியிருந்தார். அத்தோடு மோடி நடத்திய சத்பாவனா நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. அதில் முஸ்லிம் தலைவர்கள் உட்பட சில முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இந்த விஷயத்தில் மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்க வேண்டும் என்பதை மோடிக்கு நினைவூட்டவுமே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.

மக்கள் கொல்லப்படக்கூடாதென்றும், அதே சமயம் அவர்கள் பீதிவயப்பட வேண்டுமென்றும் கருதித்தான் வீரியம் குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஐபி அறிக்கை கூறுகிறது. பாட்னாவில் வெடித்த அனைத்து குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

மோடியின் நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்தல் உண்டென்று பீகார் அரசுக்கு ஐபி முன்னரே தகவல் அளித்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று கூறினார். ஆனால் இதுகுறித்த விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.