Saturday, January 2, 2016

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சி! - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!


புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகக் கூட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்ட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்போதைய நிலையை தொடர வேண்டும் எனும் நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு RSS மற்றும் VHP போன்ற அமைப்புகள் அயோத்தி சர்ச்சையினை  மீண்டும் எழுப்பியுள்ளது. இரண்டு லாரிகளில் கற்களை இராமர் கோயில் கட்டுவதற்கு அயோத்திக்குள் கொண்டு வந்து அயோத்தி சர்ச்சையினை மீண்டும் எழுப்புவதன் மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுத்தி தேசம் முழுவதும் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். சட்டத்தை மீறும் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் கோயிலை சீரமைக்கவும், விரிவாக்கத்திற்கும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தற்காலிக அனுமதியை மதவாத சக்திகள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தங்களது கோரிக்கையை நியாயப்படுத்துவதற்கு  நீதிமன்ற அனுமதியை தவறாக பயன்படுத்தலாம் என்றும் இக்குழு கவலை தெரிவித்தது.
இந்த மதவாத சக்திகள்தான் நீண்ட காலம் திட்டமிட்டு முன் தயாரிப்புகளோடு நூற்றாண்டு பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜிதை இடித்து தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களது உயிர்களையும் இழந்தனர். எனவே மதவாத சக்திகளின் முயற்சியினை உ.பி அரசு முறியடிக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
இக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M. ஷெரீஃப், தேசிய பொதுச் செயலாளர் M. முஹம்மது அலீ ஜின்னா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் வாஹித் சேட், E.M. அப்துர் ரஹ்மான், முஹம்மது ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

9 comments: