Saturday, December 21, 2013

Thursday, December 19, 2013

முத்துப்பேட்டையில் விபத்தின் காரணமாக உணர்வுகள் இல்லா நிலையில் பரிதாபத்திற்குரிய வகையில் நபீல்.

டிசம்பர் 19: ஈர நெஞ்சம் உள்ளவர்கள் கவனத்திற்க்கு!! பிறர் நலனில் அதிக அக்கரையுள்ள கண்ணியவான்களே! இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!

குஜராத் இனப்படுகொலையை சீக்கியர் கூட்டுப்படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது:அமர்த்தியா சென்!

புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்கள் கூட்டுப் படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது என்று நோபல் விருதுப் பெற்றவரும், பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென்தெரிவித்தார்.

மதரஸாக்களில் கல்வி பயிலும் ஹிந்து மாணவர்கள்: சமூக ஒத்துழைப்புக்கு உதாரணம்!

மேற்கு வங்காளத்தில் பாரம்பரிய முஸ்லிம் மதரஸாக்களில் சேரும் மாணவர்களில் 15 சதவீதம் பேர் ஹிந்துக்கள் ஆவர்.

Tuesday, December 17, 2013

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: கருணாநிதி

பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க, டிச.,16ல் இருந்து 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வகுப்புக் கலவர தடுப்பு மசோதா:அமைச்சரவை அங்கீகாரம்!-இன்று பாராளுமன்றத்தில் தாக்கல்!

புதுடெல்லி: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய பிரிவுகளை நீக்கிவிட்டு அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.க உள்ளிட்ட சிலஎதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இம்மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

Monday, December 16, 2013

முத்துப்பேட்டையில் வி. ஏ. ஓ. மீது ஊராட்சி தலைவர் தாக்குதல் பரபரப்பு

முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வி.ஏ.ஓ.வாக இருப்பவர் குணசேகரன். இவர், கடந்த சில தினங்களாக விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை கட்டுவதற்கு சான்று வழங்கும் பனியில் இரவு பகலாக ஈடுப்பட்டு வந்தார்.

முத்துப்பேட்டையில் தமுமுக & மமக மாணவர் அணி நிர்வாகிகள் பொதுக்குழு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் தமுமுக அலுவலகத்தில் 14.12.2013 இன்று இஷா தொழுகைக்கு பிறகு தமுமுக & மமக மாணவர் அணி நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


Saturday, December 14, 2013

முத்துப்பேட்டை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. 

Friday, December 13, 2013

ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்தத் தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிட்டு படுகொலை!

டாக்கா: மூத்த ஜமாஅத்தே இஸ்லாமி தலைவரை வங்காளதேசத்தின் பாசிச ஷேக் ஹஸீனா அரசு தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.சட்டத்துறை இணை அமைச்சர் கமருல் இஸ்லாம் இச்செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.நேற்று இரவு 10 மணிக்கு முல்லா தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் அலட்சியத்தை கண்டு வெகுண்டெழுந்த 6 வது வார்டு கவுன்சிலர் .புகைப்படங்கள்

டிசம்பர் 13: முத்துப்பேட்டையில் பரபரப்பு, குப்பையை அள்ள பேரூராட்சி நிர்வாகம் மறுத்ததால் குப்பையில் அமர்ந்து கவுன்சலரின் கணவர் தர்னா. 

முஸ்லீம்களின் ஆதரவை மெல்ல மெல்ல இழக்கும் காங்... அதிர்ச்சித் தகவல்

டெல்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், காங்கிரஸுக்கு பாதகமாக நிறைய விஷயங்கள் நடந்திருப்பது தெரிய வருகிறது. பாரம்பரியமாக காங்கிரஸுக்குக் கிடைத்து வந்த வாக்குகள் தற்போது அவர்களை விட்டு விலகியிருப்பதை இது காட்டுகிறது. குறிப்பாக டெல்லியில் மட்டும் 70 சதவீத முஸ்லீம் வாக்காளர்களை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாம். 2008 தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் கட்சி டெல்லியில், 70 சதவீத முஸ்லீம்களை இழந்துள்ளது. இத்தனைக்கும் காங்கிரஸுக்குக் கிடைத்த எட்டு எம்.எல்.ஏக்களில் 5 பேர் முஸ்லீம்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, December 12, 2013

ஹிந்து முன்னணி தீவிரவாதிகளை கண்டித்து த.மு.மு.க சார்பாக தஞ்சையில் நடந்த ஆர்பாட்டம்

தமுமுக சார்பாக கடந்த டிசம்பர் 6 ம் தேதி தஞ்சை மாவட்டம் மதுக்கூரிலிருந்து வாகனங்களில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லிம்கள் சென்றபோது போஸ் என்கிற இந்து முண்ணனியை சேர்ந்தவனும் அவனது தம்பி வழக்கறிஞர் பிரபுவும் தங்களது வாகனத்தை ரோட்டின் நடுவே நிறுத்திக்கொண்டு எங்கள் ஊர் வழியாக முஸ்லிம்கள் செல்லக்கூடாது என மிரட்டியதோடு வாகனத்தின் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். 

Tuesday, December 10, 2013

டெல்லி:மோடி பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3 இல் பா.ஜ.க தோல்வி!

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர்பிரச்சாரம் செய்த 5 தொகுதிகளில் 3 இல் பா.ஜ.க தோல்வியைசந்தித்துள்ளது.கட்சியின் செல்வாக்கு மிகுந்த ரோஹிணி, துவாரகா,சுல்தான்பூர், மஜ்ரா, ஷஹ்தாரா, சாந்தினி சவுக் ஆகிய தொகுதிகளில் மோடிபிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் துவாரகா மற்றும் ஷஹ்தாராவில் மட்டும்பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது.சுல்தான்பூர், மஜ்ரா தொகுதிகளில் பா.ஜ.க நான்காவது தடவையாக தோல்வியை தழுவியுள்ளது.ஷாலிமார்பாக், ரோஹிணி, கரோல்பாக், க்ரேட்டர் கைலாஷ், திலக் நகர், டெல்லிகாண்ட், ஷக்கூர் பஸ்தி ஆகிய கட்சியின் செல்வாக்குமிக்க தொகுதிகளை இழந்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஷாலிமார்பாகில் நான்கு தடவை எம்.எல்.ஏவாக இருந்த ரவீந்தர் பன்ஸல், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரிடம் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.கரோல்பாகில் பா.ஜ.கவின் செல்வாக்குமிகுந்த வேட்பாளர் சுரேந்தர்பால் தாவலும் தோல்வியை தழுவினார்.
f

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள். குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள். சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மக்கள் தொகையில் பத்து சதவீதமுள்ளனர் தமிழர்கள்.


இந்த கலவரத்துக்கு தமிழர்கள் காரணம் என ஊடகங்களில் பரவும் செய்திகள் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் சிங்கப்பூர் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. "இந்த கலவரச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சும்மாவே 'போன இடத்தில் தமிழர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே' என்பார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்... என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை," என்கிறார் சிங்கப்பூர் வாழ் தமிழர் ரமேஷ். சரி அப்படி என்னதான் நடந்தது? "இது ரொம்ப சாதாரண சம்பவம். ஆனால் தேவையில்லாமல் பெரிய கலவரமாக்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையையும் ஜஸ்ட் 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சிங்கப்பூர் அரசு. லிட்டில் இந்தியா பகுதியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும். கூட்டம் என்றால் உங்க ஊரு கூட்டம் எங்க ஊரு கூட்டமில்லை... நம்ம தி நகர் ரங்கநாதன் தெருவைவிட அதிகமாக இருக்கும் நெரிசல். அந்தப் பகுதியில் பீர் போன்ற மதுவகைகளை வெளியில் வைத்தே குடிக்க அனுமதி கொடுத்துள்ளது அரசு. பணியாளர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர்கள்தான் நிறைய அங்கு வந்து குடிப்பார்கள். குடிபோதையில் பஸ் ஏறப்போன இளைஞன் தவறி விழுந்துவிட்டான். அந்த விபத்தில் அங்கேயே அவன் இறந்துவிட்டான். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டு, ஒரு ஆம்புலன்ஸ் கூட எரிந்துவிட்டது. இந்த கலவரம் தொடர்பாக 27 பேரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவான முகங்களை வைத்து கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள் போலீசார். கலவரம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இனி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி," என்கிறார் ரமேஷ்.

source at: http://tamil.oneindia.in/news/

Monday, December 9, 2013

மௌத் அறிவிப்பு “அல்லாபக்ஸ்”

டிசம்பர் 09: முத்துப்பேட்டை குண்டாங்குளத்தெரு மர்ஹும் ஷேக் அஹமது அவர்களின் மகனும், மர்ஹும் டைலர் ஷரிப் பாய் அவர்களின் மருமகனும், தாஜுதீன், காதர் பாச்சா இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி "அல்லாபக்ஸ்" அவர்கள் நேற்று (08/12/13 ஞாயிற்றுக் கிழமை) இரவு 10 மணியளவில் விபத்தின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அறிவிப்பவர்
A.தாஜுதீன். 99424 54481.

தகவல்: ரஷித் அலி - சிங்கப்பூர் மற்றும் 

சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டையில் வீடு புகுந்து 16 பவுன் நகை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் கொள்ளை.

டிசம்பர் 09: முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சந்திரபோஸ்(47). இவர் தற்பொழுது வெளி நாட்டில் பணி புரிகிறார்.

நாடே இல்லாத நாதாரி!?

நாயயை விட மோசமாக நடந்து கொள்ளும் ஒரு அயோக்கியன் மோடி இந்த அயோக்கியனைத்தான் நாடே இல்லாத நாதாரி பார்ப்பன ஊடகங்கள் தூக்கிபிடிக்கின்றன. 

1. டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. அது டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி.

சொங்கியின் சோ" மாரித்தனம்!

டிசம்பர் - 6 அம்பேத்கார் நினைவு நாள்.
டிசம்பர் - 6 பாபர்மசூதி இடிப்புநாள்.



Saturday, December 7, 2013

முத்துப்பேட்டையில் உதயமானது ஆண்களுக்கான குர்ஆன் மனனம் செய்யும் அல் மதரஸத்துல் இலாஹியா

முத்துப்பேட்டை, டிசம்பர் 07:  (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் பொருந்தி கொள்வானாக ஆமீன்). முத்துப்பேட்டையில் உள்ள பங்களாவாசல் அருகில் ஆண்களுக்கான குர் ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா) "அல் மதரஸத்துல் இலாஹியா" என்ற பெயரில் கடந்த 3மாதமாக நடைபெற்று வருகிறது.  முத்துப்பேட்டையில் ஆண்களுக்கான குர்ஆன் மனனம் செய்யும் (ஹிஃப்ழு மதரஸா)  இதுவே முதல் முறையாக துவங்கப் பட்டுள்ளது. இந்த மதரஸாவானது தாங்கள் கொடுக்கக்கூடிய சந்தா, மற்றும் ஹதியா மூலம் தான் மாணவர்கள் படிப்பிற்கும் உணவு, உடை, மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட  அனைத்தும் இலவசமாக இங்கு வழங்கப்படுகிறது.

மதுக்கூரில் காவிகள் வெறிச்செயல்-இந்து முன்னணி தீவிரவாதிகள் அராஜகம்

மதுக்கூர் தமுமுக வாகனத்தின் மீது கொடூர தாக்குதல் : பெண்கள் இருந்த வாகனத்தின் கண்ணாடி உடைப்பு - இந்து முன்னணி தீவிரவாதிகள் அராஜகம், மாவட்டம் முழுவதும் பரபரப்பு.....!! 



தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிராம்பட்டினம் கிளையின் சார்பாக 17 வேன்களில் 400 க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.




Wednesday, December 4, 2013

முத்துப்பேட்டையில் ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் காயம்.

டிசம்பர் 04: முத்துப்பேட்டையைச் சேரந்தவர் நபில். ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு செம்படவன்காடு பெட்ரோல் பங்கில் போட்டுவிட்டு தனது நண்பர்கள் சலீம் மற்றும் அசரப் அலியுடன் மங்களுர் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி ஆட்டோ பைபாஸில் உள்ள வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது.

முத்துப்பேட்டையில் நேற்று 22.2 மிமீ மழை

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் திங்கள்கிழமை 120.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
 மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

சி.ஐ.ஏ.வின் கரங்களில் ஆதார் அட்டை ஆவணங்கள்?

பெங்களூர்: ஆதாரின் ரகசியத்தை பாதுகாப்பதில் நாட்டு மக்கள் எழுப்பும் கவலை பொய்யாகவில்லை. இதன் அறிகுறியை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பு சுட்டிக்காட்டுகிறது.
இந்திய குடிமக்களின் அடிப்படை விவரங்களை ஆவணப்படுத்திய ஆதார் விவரங்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வின் கரங்களுக்கு செல்வதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வலுவடைகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தப் பகுதி வலுவடைந்து வருகிறது. இது புதன்கிழமைக்குள் (டிச.3) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 2, 2013

முத்துப்பேட்டை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு


முத்துப்பேட்டையில் SDPI கட்சி கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது கடந்த பேரூராட்சி மன்ற தேர்தலில் SDPI கட்சி போட்டியிட்டு  இரண்டாம் இடத்தை பெற்றது.இக்கட்சி பெருரட்சியின் அலட்சியத்தை எதிர்த்து பல போராடங்களை நடத்தி வருகின்றது,கடந்த சில மாதமாக சிறப்பாக செயல்படாததால் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யபட்டனர்.

இக்கூட்டத்தில் SDPI யின்  திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது தலமைதாங்கினார்,  மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட தலைவர்  A.அபுபக்கர் சித்திக். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . 
   






முத்துப்பேட்டையில் SDPIபுதிய நிறுவாகிகல் பட்டியல்      

                                              நகர தலைவராக : சேக் மைதீன்.

                                              துணை தலைவர் : அஷ்ரப் அலி.

                                              செயலாளர்.          : தீன் முகம்மது

                                              துணை செயலாளர் :ஜெகபர் அலி

                                              பொருளாலர்.        : சலீம் 








செயற்குழு உறுப்பினர்கள்



ரஹ்மத்துல்லாஹ் 
நைனா முஹம்மது
சர்தார் 
மீரா ஹுசைன்  
ஆகிய அனைவரும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்க பட்டனர்.