Thursday, February 16, 2012

ஹிட்லரும் மோடியும் ஒன்றா?

ஆமாம்! நாங்கள் ஒட்டிப்பிறக்காத இரட்டையர்களே.  ஹிட்லரே எனது ரோல் மாடல். ஹிட்லரிடம் இருந்துதான் நான் பாசிசம் பயின்றேன். 

அவரிடம் இருந்துதான் வெறுப்பு தத்துவத்தை (HATE POLICY)  பயின்றேன்.  பெண்களையும், வயதானவர்களையும், சிறுவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் கொல்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். 

சொந்த சமூகத்தின் மக்களை நாங்களே கொன்று விட்டுஅதை காரணமாக வைத்து கூட்டு படுகொலைகள் செய்வது எப்படி? அதை திட்ட மிட்டு மறைப்பது எப்படி? என்பதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்த ஆன்மீக குருவே ஹிட்லர்தான். 

காந்தியை கொன்ற கோட்சேயும் அவர் அங்கம் வகித்த ஆர்.எஸ்.எஸ். இயக்கமுமே என்கூட்டாளிகள். வரலாறு ஹிட்லரை தூற்றினாலும், கொலைகாரன், பயங்கரவாதி என்று சொன்னாலும் அவரே எங்களின் பேச்சு மூச்சு, சித்தாந்தம். வரலாறு அவரை மறந்தாலும் நாங்கள் அவரை மறக்கவில்லை.

ஜெர்மனியில் அவர் கடைபிடித்த கொள்கைகளையும், சித்தாந்தத்தையுமே நன் குஜராத்தில் கடை பிடிக்கிறேன். அவரை பின்பற்றியே நான் குஜராத் இன அழிப்பை நடத்தினேன். அவர் உலகை ஆட்சி செய்ய நாசி படை நடத்தினார். நான் இந்தியாவை பிடிக்க ஆர்.எஸ்.எஸ். பாசிச படைநடத்துகிறேன். காவல்துறை, உளவுத்துறை, நீதி துறை எல்லாம் என்கைகளில்.   

குஜராத் இனப்படுகொலை:2002 ஆண்டு  மோடி தலைமையில் நடத்தப்பட்ட இன படுகொலையில் சுமார் 5000 பேருக்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.தெஹல்கா பத்திரிக்கை நடத்தி இரகசிய பத்திரிகை புலனாய்வுகளில் கொலைகளை செய்த காவி பயங்கரவாதிகள் தாம் செய்தவற்றை பெருமையுடன் அவர்கள் நிருபர்கள் என்று தெரியாமல் கக்கியவைகள் தெஹல்கா வெளியிட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்தோம், பின்னர் உயிருடன் எரித்தோம்’ என்றும், கிராமம் கிராமமாக சென்று ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தொடரான கற்பழித்து பின்னர் மார்பகங்களை அறுத்து சித்திரவதை செய்து கொலைசெய்தோம் என்றும் மஸ்ஜிதுகளில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை குவித்து கொலைசெய்து விட்டு பெட்ரோல் ஊற்றி  மஸ்ஜிதுகளுடன் எரித்தோம் என்றும் தமது வீர சாகசங்களை பெருமையுடன் கூறினர் காவி பயங்கரவாதிகள்.

தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த முஸ்லிம் சிறுவர், சிறுமியர், பெண்கள் வயோதிபர் என்று 72 பேரை பயங்கரமான முறையில் இந்தியாவில் காவிபோலீஸ் படையின் உதவியுடன் வெட்டியும், குத்தியும் கொலை   கொலை செய்தனர் காவி பயங்கரவாதிகள். இவ்வினப் படுகொலைகளுக்கு நீதி வேண்டி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்  அதை உள்ளூர் கோர்ட்டே நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில்,நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது.  இந்தியாவை உலுக்கிய மாபெரும் இனப்படுகொலையை நடத்திய நரேந்திர மோடி அதில் இருந்து தப்பித்து கொண்டான். நீதி செத்தது இனி, முஸ்லிம்கள் உயிர் வாழ்வது எ

Tuesday, February 14, 2012

குண்டுவெடிப்பு வழக்கு:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகானின் கைது திருப்புமுனையாகும்


புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கமால் சவுகானை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சவுகானை நேற்று முன்தினம் இந்தூரில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோரை கைது செய்ய சவுகானின் கைது உதவும் என கருதப்படுகிறது.
சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் சவுகானிடமிருந்து தகவல் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. 2007 பிப்ரவரி 28-ஆம் தேதி 68 பேர் பலியான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டியில் குண்டை நிறுவியவர்களில் சவுகானும் ஒருவர் என என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. நேற்று க்ரேட்டர் நொய்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுகான் ஒரு நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சவுகான் ஆஜர்படுத்தப்படுவார்.


சுனில் ஜோஷி வழக்கு தொடர்பாக முதலில் என்.ஐ.ஏ சவுகானிடம் விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோருடன் சவுகானுக்கு இருந்த தொடர்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சவுகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சவுகான் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதை தொடர்ந்து அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. இதர 3 நபர்களுடன் சேர்ந்து சவுகான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டை வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் குஜராத் பிரிவு தலைவர் நாபாகுமார் சர்க்கார் என்பவரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியதில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சதித்திட்டம் குறித்து கூடுதல் விபரங்கள் கிடைத்தன. குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அனைவரும் நெடுங்காலமாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப் படுகொலையை போல இந்தியா முழுவதும் நடத்துவதுதான் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கொள்கை என்றும், அதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியதால் அதிருப்தியடைந்தவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்த துவங்கினார்கள் என்றும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் சோலங்கி தாங்க் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சோலங்கி அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் சுனில் ஜோஷி கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்த 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சவுகானும் ஒருவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.

குஜராத்:சமூக ஆர்வலர்களுக்கு விசாரணை அறிக்கை நகலை அளிக்க முடியாது: எஸ்.ஐ.டி


அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையின் நகலை சமூக் ஆர்வலர்களுக்கு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குல்பர்க் சொஸைட்டி கூட்டுப்படுகொலை தொடர்பாக எஸ்.ஐ.டி அறிக்கையின் மீதான விசாரணையின் போது மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் எம்.எஸ்.பட்டிடம் இதனை விசாரணை குழு தெரிவித்தது.
குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையின் அறிக்கையை கோரி சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். குல்பர்கா சொஸைட்டி வழக்கின் விசாரணை நடைபெறும் வேளையில் நீதிமன்றம் டீஸ்டா மற்றும் முகுல் சின்ஹா ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்தது.


குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரிக்கும் விசாரணை அறிக்கையின் நகலை அளிக்கமுடியாது என்று எஸ்.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேவேளையில், குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கில் எஸ்.ஐ.டியின் அறிக்கை மீதான விசாரணை முடிவடைந்தது. நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கும்.
உண்மையான மனுதாரர்களுக்கு மட்டுமே நகலை அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எஸ்.ஐ.டிக்காக ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சி.ஜமுகர் கூறினார்.


டீஸ்டா உண்மையான மனுதாரர் அல்ல என்றும், அவர் பின்னர் கட்சிதாரராக இணைந்தார் என்றும் ஜமுகர் சுட்டிக்காட்டினார். ஸாகியா ஜாஃப்ரியும் தற்போது மனுதாரர் அல்ல என்றும், ஆகவே அவருக்கும் எஸ்.ஐ.டி அறிக்கையின் நகலை அளிக்க இயலாது என்று அவர் கூறினார்.
ஆனால்,அறிக்கையில் இறுதி தீர்ப்பு வரும் முன்பு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கட்சிதாரர்கள் அனைவருக்கும் அறிக்கையின் நகலை அளிக்கவேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் எஸ்.எம்.வோரா வாதிட்டார். எஸ்.ஐ.டி எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால் அவை மனுதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
எஸ்.ஐ.டி அனைத்து ஆவணங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்று சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் வழக்கறிஞர் ஐ.எம்.முன்ஷி கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 1000 பக்கங்களை கொண்ட அறிக்கையை எஸ்.ஐ.டி தயார் செய்துள்ளது. 2011 செப்டம்பர் மாதம் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்தியா-ஈரா​ன் நட்புறவை சீர்குலைக்​க இஸ்ரேலே குண்டுவெடிப்பை நிகழ்த்தியு​ள்ளது – ஈரான் குற்றச்சாட்​டு


டெஹ்ரான்:புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இது விபத்தா? அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. ஆனால், இச்சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.


பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லமான எண்.7, ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து அதிக தூரம் இல்லாத துக்ளக் சாலையில் இஸ்ரேல் தூதரகத்தின் 109 சி.டி 35 எண்டயோட்டா இன்னோவா கார் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்த இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி தால் யஷோவா மற்றும் ஓட்டுநர் மனோஜ் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இதர இரு நபர்கள் அருகில் நின்ற வாகனத்தில் இருந்தவர்கள் ஆவர். யஷோவாவிற்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், இஸ்ரேலிய தூதரகத்தின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிக்னலில் நிற்கும்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்களை காரின் பின்னால் வைத்ததாக நேரடியாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கடந்துசென்ற பிறகு சற்றுநேரம் கழித்து விபத்து நிகழ்ந்துள்ளது. கார் தீப்பிடித்த வேளையில் சிறிய குண்டுவெடிப்பு சத்தமும் கேட்டுள்ளது.
ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரியில் இருந்து நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விரிவான விசாரணை நடந்துவருகிறது. நாட்டில் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.என்.ஜி சிலிண்டர் பொருத்திய இஸ்ரேலிய தூதரக வாகனம்தான் விபத்தில் சிக்கியது. அருகில் உள்ள சி.என்.ஜி பம்பில் இருந்து எரிபொருளை நிரப்பிவிட்டு வெளியே வந்த வாகனம் சற்றுநேரத்தில் வெடித்துள்ளது. வெடிப்பொருட்கள்களின் சிதறல்களை கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது. கூடுதல் விசாரணைக்கு பின்னரே குண்டுவெடிப்பின் காரணம் உறுதிச் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சக ஸ்பெஷல் செகரட்டரி கூறியுள்ளார்.
ஜார்ஜியாவிலும் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதனிடையே உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் தூதரகங்களை அந்நாட்டு அரசு உஷார் படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் அவிக்டர் லிபர்மனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லிபர்மனுக்கு உறுதி அளித்ததாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.


ஹிஸ்புல்லாஹ் தலைவர் இமாத் முக்னியை இஸ்ரேல் கொலைச் செய்த நான்காவது ஆண்டு நினைவு தினத்தில் இரண்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இத்துடன் குண்டுவெடிப்புகளை இணைக்க முயற்சிக்கிறது இஸ்ரேல். இச்சம்பவங்களின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் ஈரானுடன் உறவை வலுப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் ஒட்டு குண்டு(ஸ்டிக்கிங் பாம்ப்) இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பயன்படுத்தாத புதிய முறையாகும் என போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டது ஸ்டிக்கிங் பாம்பை அவர்கள் சென்ற காரில் பொருத்தியதன் மூலமாகும். இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில்; ‘புதுடெல்லி, திப்லிஸி(ஜார்ஜியா) ஆகிய இடங்களில் உள்ள தங்களது தூதரகங்களில் இஸ்ரேலே தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு ஈரான் மீது பழிபோடுகிறது. ஈரானுடன் இந்தியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் வைத்திருக்கும் நட்புறவை சீர்குலைப்பதே இஸ்ரேலின் திட்டமாகும். இஸ்ரேல் இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்கள் மூலம் ஈரானுடன் மனோரீதியான போரை துவக்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோரும்"ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற தலைப்பில் தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கு உடல்பயிற்சி இன்றியமையாதது  என்பதை  மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக யோகா,உடல்பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள். 





இதன் தமிழகத்தின்  துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. இதில் கோவை மாநகர மேயர் செ. மா. வேலுச்சாமி அவர்களும், கோவை அரசு மருத்துவமனை சிவப்பிரகாசம்அவர்களும் பங்கு பெற்றனர். 


இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ராஜா உசேன் வரவேற்புரை வழகினார் சிறப்பு விருதினரக மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார். பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.  இதில் யோகா வகுப்புகள் மற்றும் உடல்பயிற்சிகள் ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கப்பட்டது.

சிந்திக்கவும்: யோகாசனம் என்கிற மக்கள் சொத்தை வைத்து ஒரு கூட்டம் காசு பார்க்கும் இந்த தருணத்தில் இதுபோல் இதை மக்களுக்கு இலவசமாக சொல்லிக்கொடுப்பது ஒரு சிறப்பான விடயம்தான். கார்பரேட் சாமியார்கள் யோகாசனத்தை வைத்து பலகோடிகள் சம்பாதித்துவெளிநாடுகளில் சொந்தமாக தீவும், ஹெலிஹாப்ட்டரும் வாங்கி இருக்கும் போது இந்த கலையை மக்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கும் இவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

இவர்கள் டாக்டர்களா? அல்லது எமதர்மர்களா?

FEB 13: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஆந்திராவில் ஜுனியர் மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நீடித்து வருவதால், சிகிச்சை கிடைக்காமல் இன்று ஒரே நாளில் 44 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.  

ஆந்திராவில் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை, 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆயிரத்துக்கும் அதிமான பயிற்சி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



சிந்திக்கவும்: இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு அப்பாவி மக்கள் ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்தினால் போடா, தடா, தேசிய பாதுகாப்பு சட்டங்களை கொண்டு ஒடுக்கும். மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு பயங்கரவாத படைகளான போலீஸ் மற்றும் ராணுவம் ஏவி விடப்படும். ஆனால் இப்படி ஒரு வேலை நிறுத்தத்தின் மூலம் ஒரே நாளில் 44 அப்பாவி மக்களை கொன்றவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.

இந்த வெள்ளை உடை தரித்த அழுக்கு பிடித்த கயவர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரில் 44 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பயங்கரவாதம்தான். மக்களுக்கு தேவையான உணவுகளை பதுக்கும் பதுக்கல் வியாபாரிகள், போலி மருந்துக்களை தயாரித்து மக்கள் உயிருக்கு உலைவைக்கும் மருந்து கம்பெனிகள், இதுபோன்று உயிர்காக்கும் பணிகளில் உள்ளவர்கள் செய்யும் வேலை நிறுத்தங்கள்ஆகியவற்றால் பாதிக்கபடுவது ஏழை எளிய மக்களின் உயிர்களே. இந்த கயவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். செய்வார்களா இந்த போலி அரசியல்வாதிகள். இல்லையேல் மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வரவேண்டும். 

Saturday, February 11, 2012

தோல் தொற்று நோய்களைத் தடுக்க...



மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி. 

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது. 


தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம்  பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன. 

பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

ரெசிபி

பிரெட் சப்பாத்தி: பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

டயட்

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

பாட்டி வைத்தியம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும். 
*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும். 
*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும். 
*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும். 
*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். 
*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும். 
*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம். 
*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். 
*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.
*முகத்தில் தேவையற்ற முடி
வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம். 
நன்றி தமிழ் முரசு

இறைத்தூதரை அவமதித்த சவூதி வலைப்பூ பதிவர் மலேசியாவில் கைது


கோலாலம்பூர்:ட்விட்டர் சமூக இணையதளம் வாயிலாக முஸ்லிம்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபியை குறித்து கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்த சவூதி அரேபியாவை சார்ந்த வலைப்பூ பதிவரை மலேசியா போலீஸ் கைது செய்தது. 23 வயதான ஹம்ஸா கஸ்காரி சவூதி அரேபியா அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மலேசியாவில் வைத்து கைதானார்.


அரசியல் புகலிடம் தேடி நியூசிலாந்திற்கு செல்லவிருந்த ஹம்ஸா, விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ஹம்ஸா, ட்விட்டர் சமூக வலை தளத்தில் முஹம்மது நபியின் பிறந்த நாளில் அவர்களைக் குறித்து அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் போஸ்ட் செய்தார். இவரின் கருத்துக்களுக்கு எதிராக சவூதி அரேபியா மார்க்க அறிஞர்களும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கஸ்காரி தனது ட்விட்டர் கருத்தை வாபஸ் பெற்றார். இவரின் ட்விட்டர் அக்கவுண்ட் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அமீர்கான்: சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை


புதுடெல்லி:எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பொய் குற்றச்சாட்டை சுமத்தி சட்டத்திற்கு புறம்பான முறையில் டெல்லி போலீசாரால் அமீர்கான் பிடித்துச் செல்லப்பட்டார். மைமூனாபீ அமீர்கானின் தாயார் ஆவார். மூளையில் இரத்த நாளம் உடைந்து தளர்வாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை 14 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்போம் என கருதவில்லை.
ஜனவரி 9, 2012 ஆம் ஆண்டு மகன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவரால் தனது மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த இயலவில்லை. கடுமையான முயற்சிக்கு பிறகே வார்த்தைகள் உடைந்து போய் அவரிடமிருந்து வெளியாகின.



முஹம்மது அமீர்கான் மீது டெல்லியை சுற்றி நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக 20 வழக்குகள் சுமத்தப்பட்டன. தற்போது பலத்த சட்டரீதியான போராட்டத்திற்கு பிறகு 17 வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்டார். இம்மாதம்(ஜனவரி)தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 வழக்குகள் மீதமுள்ளன. 2 வழக்குகளில் மேல்முறையீடுச் செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனையை ரத்துச் செய்தது.
14 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியான அமீர்கான் முதலில் வானத்தை அண்ணாந்து பார்த்தார். “நான் கடந்த 14 ஆண்டுகளாக வானத்தில் நட்சத்திரங்களை பார்க்கவில்லை. நான் உயர் பாதுகாப்பு நிறைந்த தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். இரவு துவங்கும் முன்பே நான் சிறை அறையில் அடைக்கப்படுவேன். ஆதலால் என்னால் கடந்த 14 ஆண்டுகளாக நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை. இப்பொழுது நான் வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து எனது சுதந்திரத்தை உணர்கிறேன்” என்று அமீர்கான் கூறுகிறார்.
14 ஆண்டுகள் தனிமைச் சிறை. மூன்றாம் தர(thirddegree torture) சித்திரவதைகள். அமீர் மாமூலான வாழ்க்கைக்கு திரும்ப பல மாதங்கள் தேவைப்படும்.
 
இவ்வளவு வழக்குகளில் இருந்து விடுபட்டு சிறையை விட்டு வெளியே வருவோம் என அமீர் நம்பவில்லை. ஆமை வேகத்தில் நடக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் அவர் தனது நம்பிக்கையை இழந்திருந்தார்.

“ஒன்றுக்கு மேல் ஒன்றாக 20 வழக்குகளை போலீஸ் என் மீது சுமத்தியது. படு தாமதமான நீதிமன்ற நடவடிக்கைகள் தாம் எனக்கு உச்சபட்ச துயரமாக ஆகிவிட்டது. கடந்த 14 ஆண்டுகளில் நான் மனோரீதியான கவலையால் பாதிக்கப்பட்டேன். உலகம் மிகவும் மாறிவிட்டது. எனக்கு மொபைல் ஃபோனை எப்படி இயக்குவது என்பது கூட தெரியாது. நான் சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தான் முதன் முதலாக மொபைல் ஃபோனை பார்க்கிறேன்.” என அப்பாவித்தனமாக கூறுகிறார் அமீர்.

சிறையில் அமீர், மேல்நிலை வகுப்பை தேறாத கைதிகளுக்காக நடத்தப்படும் Bachelor Preparatory Program படிப்பில் தேர்ச்சி பெற்றார். 20 குண்டுவெடிப்பு வழக்குகள் சுமத்தப்பட்ட அமீர்கான் 2011 ஆம் ஆண்டு ‘காரகார்பந்தி ஜீவன்’ என்ற தேசிய சிறை மாத இதழில் 2011-ஆம் ஆண்டு சிறந்த கட்டுரையை எழுதியதற்கான விருதை பெற்றுள்ளார். அவர் எழுதிய கட்டுரைக்கான தலைப்பு ‘மகாத்மா காந்தியும், அணிசேரா இயக்கமும்’ என்பதாகும்.

திஹார் சிறையில் வைத்து இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் (IGNOU)பி.ஏ பட்டப்படிப்பிற்கு சேர்ந்தார்.
 
தன்னைக் கைது செய்தவுடன் ஒரு தீவிரவாதியின் குடும்பம் என பழி தூற்றி தனது உறவினர்கள் தனது குடும்பத்தை ஒதுக்கி தள்ளியதைக் குறித்து பேசுகையில் உடைந்து போகிறார் அமீர்.
முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் மனப்பாங்கால் மிகவும் காயப்பட்டுள்ளார். தான் சிறையில் வாடும் வேளையில் எந்தவொரு சமுதாய தலைவர்களும் தனது குடும்பத்தினரை சந்தித்து உதவ முன்வரவில்லை எனக் கூறும் அமீர், பொருளாதார மற்றும் சட்டரீதியான உதவிகளை தன்னந்தனியாகவே தனது குடும்பம் சந்தித்தது என தெரிவிக்கிறார்.

“எனது அண்டை அயலாரும், உற்றார் உறவினரும் என்னை ஒரு தீவிரவாதியாகவே கருதினார்கள். எனது சமூகமும், உறவினர்களும் கூட நாங்கள் உதவிக்காக ஏங்கிய வேளையில் உதவ முன்வராததை நான் சிறையில் இருந்த வேளையில் எனக்கு எனது பெற்றோர்கள் தெரிவித்தனர். அதனால் நான் மிகவும் உடைந்து போனேன்.

அமீரால் தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்குகூட கட்டணத்தை கொடுக்க முடியவில்லை. வழக்கறிஞர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் அமீருடைய வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார்கள்.

சமூகமோ, உறவினர்களோ, சிவில் சமூகமோ எவ்வித உதவியும் தீவிரவாத வழக்குகள் சுமத்தப்பட்ட இந்த அப்பாவிக்கு அளிக்கவில்லை. வயதான, நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்தாம் இந்திய அரசுடன் கடுமையான சட்டரீதியான போராட்டத்தை சொந்தமாக நடத்தியுள்ளார்கள்.

ஆகஸ்ட் 2001-ஆம் ஆண்டு அமீருக்கு நம்பிக்கை அளித்த தந்தை மாரடைப்பால் இறந்து போனார். அதன் பிறகு அவரது சகோதரியும், தாயாரும், தூரத்து உறவினர் ஒருவரும் சட்டரீதியான தொடர் போராட்டத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்கள். தற்போது அமீரின் விடுதலைக்குப் பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கியுள்ளதை எண்ணி அவர் மகிழ்ச்சி அடைகிறார்.

“நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால் எனது வாழ்க்கையும், எனது குடும்பமும் சீர்குலைந்து விட்டன.” என அமீர் கூறுகிறார்.
 
போலீசாரின் தவறான குற்றச்சாட்டால் தனது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தொடர்ந்து சட்டரீதியாக போராடிய தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். அமீரின் குடும்பம் தங்களிடம் இருந்த அனைத்தையும் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக செலவழித்துவிட்டார்கள். அவரது தாய் தளர்வாத நோயால்பா திக்கப்பட்டுள்ளார் .மிகவும் பின் தங்கிய குடும்பம் கவனிப்பாரற்று உள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த அமீர் வீட்டில் இருந்து வெளியேசெல்ல அஞ்சுகிறார். “எங்கே நான் வெளியே சென்றால் மீண்டும் என்னை போலீஸ் பிடித்து சித்திரவதைச் செய்து சிறையில் அடைத்துவிடுவார்களா?” என அச்சத்துடன் கேட்கிறார் அமீர்.

அமீருக்கு தற்பொழுது இரண்டு பிரச்சனை. ஒன்று பாதுகாப்பு. இரண்டு மறுவாழ்வு. போலீசுக்கு பயந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து மீடியாவிடமோ வேறு நபர்களிடமோ பேச தயங்குகிறார் அமீர். இரண்டாவதாக அவரது வாழ்க்கையை கழிப்பதற்கான வேலை தேவை. அவரோ பயத்தால் வெளியே செல்ல தயங்குகிறார். என்ன வேலை செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. வழிகாட்டவும் ஆள் இல்லை. தனது சுமூகமான வாழ்க்கைக்கு அவர் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளை நம்பியுள்ளார்.

தற்பொழுது இரண்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அவ்வழக்குகளில் வாதாட வழக்கறிஞர்களுக்கு அளிப்பதற்கான குறைந்தபட்ச தொகை கூட அவரிடம் இல்லை.
 
அமீருக்கு நேர்ந்த இந்த துயரம் அவருக்கு மட்டும் நேர்ந்தது அல்ல. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சம உரிமையை வழங்கும் இந்தியாவை குறித்து கனவு காணும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட துயரமாகும்.

பாட்லா ஹவுஸ்:போலி என்கவுண்டர் புகைப்படங்களை பார்த்து சோனியா அழுதார் – குர்ஷித்


ஆஸம்கர்:பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் புகைப்படங்களை பார்த்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கண்ணீர்விட்டு அழுதார் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
உ.பி மாநிலம் ஆஸம்கரில் தேர்தல் பிரச்சார பேரணியில் உரை நிகழ்த்திய குர்ஷித் முஸ்லிம் வாக்குவங்கியை கவருவதற்காக இத்தகவலை வெளியிட்டார்.


அவர் கூறியது: பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்த வேளையில் நான் அமைச்சராக இல்லை. இருந்தபோதிலும் இதனை சோனியா காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். புகைப்படங்களை பார்த்தவுடன் சோனியா காந்தியின் கண்கள் குளமாகின. இவ்விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல சோனியா உத்தரவிட்டார். இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்துவதற்கான கட்டம் வரை உருவானது. ஆனால், மக்களவை தேர்தல் நடக்கும் வேளை என்பதால் நீதிமன்றத்திற்கு இவ்விவகாரம் சென்றுவிட்டது’ என குர்ஷித் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய சில மணிநேரங்களே உள்ள நிலையில் கூறினார்.
2008 செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லி பாட்லா ஹவுஸில் நடந்த போலி என்கவுண்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்திர சர்மாவும், ஜாமிஆ மில்லியாவின் இரண்டு மாணவர்களும் கொல்லப்பட்டனர்.
ஆனால், குர்ஷித்தின் பேச்சுக்கு திக் விஜய் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.”சோனியா காந்தி அழவில்லை. அது சல்மான் குர்ஷித்தின் சொந்த கருத்து” என திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.