சரித்திரம் படைத்தவர்கள்

தியாகி இ.க.முஹம்மது இஸ்மாயில் பட்டாமணியார்:

                இ.க.ஹபீப் முஹம்மது மரைக்காயர்-ஹம்சா அம்மாள் தம்பதியின் மகனாக 1902 ஜூலையில் பிறந்த தியாகி இ.க.முஹம்மது இஸ்மாயில், பட்டாமணியார் 77 ஆண்டுகள் வாழ்ந்து ஜூலையிலேயே மறைந்த மாமனிதர்!


                அவர் வாழ்ந்த வாழ்க்கை அனைவருக்கும் முன்னுதரனமாகும்.


                எல்லோராலும் வாழ்ந்து காட்ட முடியாதது.


               இறப்பு வரை கதராடை மட்டுமே அணிந்து வந்த உண்மையான காங்கிரஸ் காரர்.


               தனது இறப்பிற்கு பின் தன் உடலை மூடுவதற்கு(கபன்) 10 மீட்டர் துணியை எப்போதும் வைத்திருந்தவர்.


               முஸ்லீம்கள் எல்லோரும் முஹம்மது அலி ஜின்னாஹ்வை தலைவராக ஏற்றுக்கொண்டு முஸ்லிம் லீகில் இணைந்த போது இவர் மட்டும் மகாத்மா காந்தியின் மீது அபிமானம் கொண்டு காங்கிரஸ்சில் இணைந்தார்.இதனால் முஸ்லிம்களுக்கு எதிரியாக கருதப்பட்டார்.


               1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உப்பு சதியாக்கிரகத்தில் ஈடுப்பட்டு தண்டி யாத்திரை புறப்பட்டு சென்ற போது,மூதறிஞர் ராஜாஜி, தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக யாத்திரையில் இவரும் பங்குகொண்டார்.


               அங்கே சர்தார் வேதரத்தினம் பிள்ளையோடு போலிசாரின் தடியடியில் காயமுற்று கைது செய்யபட்டார்.திருச்சி சிறையில் இரண்டு மாதம் இருந்தபின் விடுதலையானார்.மீண்டும் 1935 -36 களில் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாகிரகத்திலும்,  "வெள்ளையனே "வெளியேறு" இயக்கத்திலும் ஈடுபட்டு முத்துப்பேட்டையில் இருந்து சென்னைக்கு நடை பயணம் புறப்பட்டார்.


              அப்பொழுது இவருடன் புறப்பட்டவர்கள் பட்டுகோட்டை ஸ்ரீனிவாச அய்யர் ஜம்பவானோடை"கட்டை நாவன்னா" என்று அழைக்கப்படும் நாராயண சுவாமி தேவர் ஆகியோர்.


              திருவாரூர் வரை வந்து சிலர் திரும்பி விட்டனர்.இவரும் ஸ்ரீனிவாச அய்யரும் மாயவரம் வரை சென்றனர்.


               அங்கே போலிசின் தாக்குதலுக்கு ஆளாகி நடு ரோட்டில் காயம்களுடன் கிடந்தவரை போலிசுக்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை,ஒரு பிராமண குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு தூக்கி சென்று மருத்துவ உதவி செய்து ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


               இவ்வாறு பல போராட்டம் கலந்துகொண்டு ஆறு முறை கைது செய்யபட்டார்.


               காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கட்டுவதற்காகவே நீண்ட நாட்கள் திருமணம் செய்யாமல் இருந்தார்.பின் கும்பகோணம் ஹக்கீம் என்ற வக்கீலின் வற்புறுத்தலால் 1938 யில் "ஆமினா உம்மாள்" அவர்களை கைபிடித்தார்.


               முஸ்லிம்களிடையே .இருந்த மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து "ஜமாதுல் இஸ்லாம்" என்ற அமைப்பை நிறுவினார்.


              காங்கிரஸ் கட்சியில் இவருக்கு நெருக்கமான நண்பர்கள்"தலைவர் காமராஜ்,சத்தியமூர்த்தி,கங்கன்" ஆகியோர்.


              தலைவர் காமராஜ் பல முறை இவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார், முதல்வராக இருக்கும் போது கூட நாலைந்து முறை வந்து சென்றுள்ளார்.


             1945 யில் மகாத்மா காந்தி தஞ்சை வந்த போது வக்கீல் ஸ்ரீனிவாச அய்யர் வீட்டில் தங்கியிருந்தபோது இவர் மகாத்மாவை சந்தித்தார்.


              தேவிக்குலம் பீர் மேடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபாடு காட்டாத போது எல்லா கட்சிகளும் சேர்ந்து "முத்துப்பேட்டை ஐக்கிய முன்னணி" என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தன.


              அதில் ஐந்து ஆண்டுகள் தலைவராக இருந்து பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண பாடுபட்டார்.தமிழகத்தில் கடுமையான பஞ்சம் வந்து உணவு பற்றாகுறையால் மக்கள் தவித்தபோது டாக்டர் சங்கரனும் இவரும் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி சொந்த செலவில் உணவு பங்கீடு அட்டை அச்சடித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கினார். தஞ்சை கலைக்டர் சந்தித்து அரிசி பெற்று வந்து எந்த குறைபாடும் இன்றி எல்லோருக்கும் விநியோகித்தார். பஞ்சம் நீங்கும் வரை அதனை நேர்மையாக நிர்வகித்து வந்தார்.


             புதுகோட்டகம் பட்டாமணியாராக நீண்ட காலம் பணியாற்றினார்.


            இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடந்த சமயத்தில் அரசு யூத்த நிதி திரட்டிய பொது தனது முழு சம்பளத்தையும் நிதியாக கொடுத்ததோடு அதனை ஆயுள் முழுவதும் எடுத்து கொள்ளும் படி எழுதிக்கொடுத்தார். அதன்பின் அவர் சம்பளமே பெற்று கொள்ளவில்லை.


            1979 ஜூலை மாதம் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் நிரந்தர ஓய்வு கொண்டார்.


             இவருக்கு 5 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் அவர்களின் பெயர்கள்:


            1 .மெஹபூப் அலிகான்


            2.அப்துல் அஜீஸ்


            3 .முஹம்மது இப்ராஹீம்


            4 .ஹபீப் முஹம்மது


            5.முத்து நாச்சியா


            6.அப்துல் நாசர்


               ஆனால் மூத்த மகன் ஜனாப் அலிகான் சென்னை வடபழனியில் "இசை உலகில்" சஞ்சரித்து கொண்டிருக்கிறார்.பாடகராக அல்ல! பாட்டு தட்டுகளை சேகரித்து பதிவு செய்து பாதுகாத்தும் வருகிறார்.


ஆசாத் நகர் காரணாம் பிள்ளை:

              ஒரு காகத்தில் பறைச்சேரிப்பட்டினம் என்றிருந்த ஊரின் பெயரை,முன்னாள் இந்திய கல்வி அமைச்சர்,மவூலான அபுல் கலாம் ஆசாத் நினைவில் "ஆசாத் நகர்" என்று பெயர் மற்றம்செய்வதில் வெற்றி பெற்றார் ஒருவர்!


             பின்னர் அவர் "ஆசாத் நகர் காரணம் பிள்ளை" என்று அழைக்கப்பட்டார்.


              இவர் முத்துப்பேட்டையில் சிறந்த நீதிமானாகவும்,மார்க்க விளக்கம் மற்றும் பஞ்சாயத்து தீர்ப்புகளில் சிறந்து விளங்கியவர்,பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகவும் சிறந்து விளங்கியவர்.


பட்டாமணியார்கலாக பளிசிட்டார்கள்:


             முத்துப்பேட்டை பட்டாமணியார்கலாக பளிச்சிட்டவர்களில் மர்ஹூம் எஸ்.எம்.பரீத் மரைக்காயர் மற்றும் கே.முஹம்மது ராவுத்தர் ஆகிய இருவரையும் நினைவு கூற வேண்டும்.


            ஷேய்க் பரீத் மரைக்காயர் தனது நீண்ட காலப் பதவியை தனது மகனார் ஷேய்க் தாவூதிடம் வழங்கினார்,


            பின்னர்,கொண்டை கட்டி மரைக்காயர் மகன் முஹம்மது இபுராஹீமிடம் சென்றது,


இதன் பின்னர் பட்டாமணியார்களின் வெளிச்சம் மங்கியது.

மலேசியாவில் நம்மவருக்கு அரசு கவருவம்:


           "தேன்காய்பூ" என்று செல்லமாக அழைக்கப்பட்ட மர்ஹூம் எம்.முஹம்மது அலி எஎம்என் பிபிஎன்,இங்கேயே ஓரளவு கல்வி கற்று மளிசியா சென்று தொழில் துறையில் அனுபவமாகி,ஒரு நிர்வாகத்தில் நிர்வாகியாக மாறினார்,அங்கேயே ஆங்கிலம்,மலாய் போன்ற மொழிகளை கற்றார்,பின்ன்னர் மலாய் இந்தியன் காங்கிரசில் சேர்ந்து தலைவராக மாறினார்.

              பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், மற்றும் அடுத்தடுத்து வந்த பிரதமர்களுக்கு நெருங்கிய நண்பரானார்!


               அவருக்கு அந்நாட்டு சுல்தான் "எஎம்என் பிபிஎன்" என்னும் பட்டம்களை வழங்கினார்,இது இந்திய நாட்டில் வழங்கப்படும் "பத்மஸ்ரீ" பட்டத்திற்கு நிகரானது இவர் உடல் நிலைமை மலிந்து 1994 லிலிருந்து தமது மண்ணிலேயே ஓய்வுறக்கம் மேற்கொண்டார்.