Monday, December 9, 2013

முத்துப்பேட்டையில் வீடு புகுந்து 16 பவுன் நகை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் கொள்ளை.

டிசம்பர் 09: முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சந்திரபோஸ்(47). இவர் தற்பொழுது வெளி நாட்டில் பணி புரிகிறார்.




 இதனால் இவர் வீட்டில் மனைவி தனலெட்சுமி மகன்கள் பிரவின், நவீன் ஆகியோர் வசித்து வந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் மகன்களை அழைத்து கொண்டு தனலெட்சுமி தம்பிக்கோட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு சென்று இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சந்திரபோஸின் வீடு திறந்து இருப்பதை அருகே உள்ள வீட்டில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர் உடன் சந்திரபோஸின் மனைவி தனலெட்சுமி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஊரிலிருந்து தனலெட்சுமி வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் வெளி கதவை உடைத்து கொண்டு சென்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 16 பவுன் நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.


தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி, எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முத்தப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி மற்றும் தனி பிரிவுகள் ஏட்டுகள் கோபால், குணசேகரன் ஆகியோர் விசாரனை நடத்தினர். பின்னர் திருவாரூரிலிருந்து ரோஸி என்ற மோப்ப நாய் வந்து சோதனை செய்து செம்படவன்காடு பஸ்டான்டு வரை சென்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் திருவாரூர் கைரேகை நிபுனர்கள் தடய பரிசோதனை நடத்தினர். இது குறித்து சந்திரபோஸ் மனைவி தனலெட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படம் செய்தி:
முத்துப்பேட்டை அடுத்த செம்படவன் காட்டில் கொள்ளை நடந்த சந்திரபோஸ் வீடு.



source:muthupetbbc

No comments:

Post a Comment