Wednesday, October 30, 2013

PFI யை கண்டு தொடைநடுங்கும் டிரௌசர் பாண்டிகள் !!

பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையில் துணிச்சலான முயற்சிகளால் ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட மக்களை , வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக திரட்டி போராடுவதை கண்டு RSS அச்சப்படுகிறது.




பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , RSS-ன் தேசிய செயற்குழுவில் , தென் இந்தியாவில் செயல்படும் மக்கள் பேரியக்கத்தை தீவிரவாத இயக்கமாக சித்தரித்து பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது , இது காழ்ப்புணர்வு மூலம் வன்முறையை உருவாக்க நிறைவேற்றிய தீர்மானமாகும்.

RSS இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட் தான் தங்களுடைய முதல் எதிரி என பிரகடனப் படுத்தியுள்ளது. மேலும் அரசு அதனை ஒடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏனெனில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையில் துணிச்சலான முயற்சிகளால் ஒடுக்கப்பட்ட , ஓரங்கட்டப்பட்ட மக்களை , வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக திரட்டி போராடுவதை கண்டு RSS அச்சப்படுகிறது.


" RSS இன் பாசிச கொள்கை மக்கள் ஒற்றுமைக்கும் , தேசிய பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை நன்கு தெரிந்த ஒரு இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட். RSS போன்ற பிரிவினை வாத சக்திகளை இனம் கண்டு சட்டரீதியாகவும் ஜனநாயகரீதியாகவும் எதிர் கொள்வது தான் பாப்புலர் ஃப்ரண்டின் ஜனநாயக உரிமையும்,பொறுப்பும் ஆகும்.

இந்த அச்சுறுத்தலை கண்டு பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய தேசிய ஜனநாயக பணியில் இருந்து ஒரு போதும் விலகாது. ஆதலால் , பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ பார்த்து RSS பயப்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
ஒருபுறம் மதக்கலவரங்களை தூண்டி விட்டு , குண்டுவெடிப்புகளை நடத்தி கொண்டு இருக்கும் RSS ஒரு நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்டுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை அள்ளி தெளித்து , அடிதட்டு மக்களிடம் ஆதரவு தேட முனைகிறது.

அது நிச்சயமாக பயனளிக்காது. அவ்வளவு எளிதாக RSS-னுடைய ரத்தம் தோய்ந்த வரலாறை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.



RSS தொடங்கப்பட்ட 1926 இல் இருந்து இன்று வரை மதக்கலவரங்களை நடத்தி வன்முறையை தூண்டிவிட்டு சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை தொடர்ந்து உருவாக்கி கொண்டுவருகிறது.

தொடர்ந்து மோசமான காரணங்களுக்காக , தேச பிதா காந்தியை படுகொலை செய்தது , புனிதமிக்க பாபரி மஸ்ஜிதை இடித்தது உள்பட 3 முறை இந்த தேசத்தில் தடை செய்யப்பட்ட வரலாறு RSS-க்கு மட்டுமே உண்டு என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

முஸ்லிம்களுக்கு எதிரான RSS-னுடைய இந்த தீர்மானம்," தேச பாதுகாப்பிற்கு சவால்", "தீவிரவாத கொள்கைகளை நிலைபெற செய்யும் முயற்சி" , "மூளை சலவை செய்து ஆயுத பயிற்சி அளிப்பது" , "சமூக விரோத , தேச விரோத நடவடிக்கைகள்" , "மறைவான இடங்களில் தீவிரவாத பயிற்சி எடுப்பது" , இது போன்ற இன்னும் நிறைய தேச விரோத செயல்கள் கேரளாவிலும் இன்னும் நாட்டின் பல இடங்களிலும் செய்து கொண்டிருக்கும் RSS-க்கு மட்டும்தான் இந்த தீர்மானம் பொருந்தும். முஸ்லிம் இயக்கங்களுக்கு பொருந்தாது.

ஊடக துறையும் , மதசார்பற்ற கட்சிகளும், மத்திய மாநில அரசுகள் உட்பட சமூகத்தின் அணைத்து பிரிவுகளும் , சிறுபான்மை மக்களுக்கு எதிரான RSS-னுடைய இந்த குற்றச்சாட்டுகளை புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment