Friday, December 9, 2011

கொல்கத்தா: தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ- 20 பேர் பலி?

கொல்கத்தா: தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 20 நோயாளிகள் பலியாகி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 20 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் பல நோயாளிகள் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இது குறித்து மேற்கு வங்க அமைச்சர் ஜாவித் கான் கூறுகையில், மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்க முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் பலரை மீட்டுள்ளோம். அடித்தளத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தான் தீப்பிடித்துள்ளது என்றார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4 மாடிகளில் தீ பரவியுள்ளது. எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெரியவில்லை என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐசியு, ஐசிசியு, ஐடியு ஆகியவற்றின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.

No comments:

Post a Comment