Saturday, December 10, 2011

சுட்டுவீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை ஈரான் வெளியிட்டது

டெஹ்ரான்:ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோ காட்சியை ஈரான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
வான் எல்லையில் அத்துமீறி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கிழக்கு ஈரானில் உளவு வேலையில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன விமானி இல்லாத உளவு விமானம் ஆர்.க்யூ-170ஐ ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியிருந்தது.


பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படாத உளவு விமானத்தை ஈரான் ராணுவ அதிகாரிகள் பரிசோதிப்பதை வீடியோவில் காணலாம். விமானாம் காணாமல் போனதை ஏற்கனவே அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள் உறுதிச்செய்தனர். ஈரான் அணுசக்தி நிலையங்களை குறித்து விபரங்களை உளவறிவதற்கான அமெரிக்காவின் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த உளவு விமானத்தின் வேவு பார்த்தல் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தது.
அதேவேளையில் சட்டவிரோதமாக வான் எல்லையை மீறியதற்காக அமெரிக்காவின் மீது ஈரான் ஐ.நாவில் புகார் அளித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை ஐ.நா கண்டிக்கவேண்டும் என்றும், போதுமான இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் ஈரான் ஐ.நாவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நாவில் ஈரானின் தூதர் இந்த புகாரை அளித்துள்ளார்.

1 comment: