Thursday, December 19, 2013

மதரஸாக்களில் கல்வி பயிலும் ஹிந்து மாணவர்கள்: சமூக ஒத்துழைப்புக்கு உதாரணம்!

மேற்கு வங்காளத்தில் பாரம்பரிய முஸ்லிம் மதரஸாக்களில் சேரும் மாணவர்களில் 15 சதவீதம் பேர் ஹிந்துக்கள் ஆவர்.


இந்தியாவின் தேசிய கரிக்குலம் மத்ரஸாக்களை அங்கீகரித்த பிறகு இஸ்லாமிய கல்வி மற்றும் அரபு மொழியுடன் கணிதம், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களும் நடத்தப்படுகின்றன.
2007-ஆம் ஆண்டு இஸ்லாமிய மதரஸாக்கள் நவீன மயமாக்கப்பட்டன. அன்று ஏராளமான முஸ்லிம்கள் அதனை எதிர்த்தனர். ஆனால், மதரஸாக்கள் தற்போது புதிய வெற்றிகளை ஈட்டி வருகின்றன.
ஏராளமானோர் பட்டதாரிகளாக மதரஸாக்களில் இருந்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் ஹிந்துக்கள் ஆவர். மேற்குவங்காள மாநிலம் ஆர்க்ராம் கிராமத்தில் உள்ள சாடுஸ்பள்ளி மதரஸாவில் 1400 மாணவர்களில் 60 சதவீதம் பேரும், 32 ஆசிரியர்களில் 11 பேரும் ஹிந்துக்கள் ஆவர் என்று அல்ஜஸீரா வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிதியுதவி வழங்கப்படும் மதரஸாக்கள் கிராமங்களில் அமைந்துள்ளன. கட்டணம் இல்லாத இம்மதரஸாக்கள் ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக உள்ளது.
மதரஸாக்கள் இலவச மதிய உணவு மற்றும் சீருடைகளையும் வழங்குகின்றன. முஸ்லிம் மாணவர்களுக்கு நவீன கல்வியை போதித்து, பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களை உயர்த்துவதே மதரஸாவை நவீனப்படுத்தியிருப்பதற்கான நோக்கம் என்று மேற்கு வங்காள மாநில மதரஸா கல்வி ஆணைய தலைவர் முஹம்மது ஃபைஸல் ராபி தெரிவித்தார். இது முஸ்லிம்-ஹிந்து சமூகங்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய உதவும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment