Wednesday, November 3, 2010

பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸக்கு தொடர்பு: காங்கிரஸ்

புதுதில்லி, நவ. 2: பயங்கரவாதச் செயல்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் இணை அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன என்று அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.


÷கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசும்போது, "அண்மையில் நடந்த சில பயங்கரவாதச் சம்பவங்கள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன் துணை அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகி உள்ளது' என்று கூறினார்.


சோனியா காந்தி பேசும்போது, "மதத்தை அரசியல் நோக்கத்துக்காக யார் பயன்படுத்தினாலும் அதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்' என்று கூறினார்.


மேலும் "ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை மன்னித்துவிட்டதாக கருதிவிட முடியாது' என்று கூறினார்.




÷அகில இந்திய காங்கிரஸ் பேரவை அறிக்கையிலும் பயங்கரவாதச் செயல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்தியாக இருந்தாலும் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் நமது நாட்டை அழிக்க திட்டமிடும் சக்திகள் என்னை விலைகொடுத்தாயினும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினமனி  

No comments:

Post a Comment