Saturday, September 28, 2013

இந்தியாவின் NO 1 மாநிலம் கோவா!

Sep 28/2013: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. கேரளாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களை பல்நோக்கு குறியீட்டு எண் அடிப்படையில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ந்து வரும் மாநிலங்கள், வளர்ச்சியடையாத மாநிலங்கள் ஆகிய 3 பிரிவாக ரகுராம் ராஜன் கமிட்டி பிரித்துள்ளது.

தனி நபர் நுகர்வு, கல்வி, சுகாதாரம், வீட்டு உபகரணங்கள், வறுமை, மகளிர் பாதுகாப்பு, எஸ்.சி.-எஸ்.டி. மக்கள்தொகை, நகரமயமாக்கல், போக்குவரத்து வசதி ஆகிய குறியீடுகளின் அடிப்படையில் கமிட்டி பட்டியலை தயாரித்துள்ளது.


இந்தியாவில்  உள்ள மொத்தம் 28 மாநிலங்களில்  கோவா, கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடு, பஞ்சாப், மஹராஷ்ட்ரா, உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு-கஷ்மீர், மிசோராம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பீகார், ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடையாத பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு: ஆனால், ஹிந்துத்துவா சக்திகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டாடும் மோடியின் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. குஜராத்திற்கு 12வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் வளர்ந்து வரும் மாநிலங்களின் (குறைந்த வளர்ச்சி) பட்டியலில்தான் குஜராத் இடம் பெற்றிருக்கிறதே தவிர வளர்ச்சி யடைந்த  மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment