Saturday, September 28, 2013

200 அடி குழியில் விழுந்த குழந்தை ; 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்பு

திருவண்ணாமலை : ஆரணி அருகே ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுமியை 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் துரித ஏற்பாடுகள் மூலம் மீட்டனர் . ஆனால் இகுழந்தை மயக்கமுற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. உடல் நலம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தற்போது சொல்ல முடியவில்லை. அவர் ஆரணி அரசு ஆஸ்பத்தரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவரை குழியில் இருந்து மீட்டாலும் , இவர் உயிரோடு நலமுடன் திரும்ப வேண்டும் என இப்பகுதி மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.

புலவன்பாடி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் விவசாய பணிக்கென ஆழ்குழாய் கிணறு தோண்டினார். 200 அடி தோண்டியும் தண்ணீர் இல்லாததால் குழியை ஒரு கோணிப்பை மூலம் மூடி விட்டார். இந்த நிலத்திற்கு அருகே விவசாய கூலி செய்து வரும் மலர் என்பவர் இன்று வழக்கம் போல் வயலுக்கு வந்தார். இங்கு இவரது குழந்தை தேவி (வயது 4 ) விளையாடிக்கொண்டிருந்தது. அருகில் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த தாயார் கதறி அழுதார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த படையினர் குழந்தையை மீட்கும் பணியில் 10 மணி நேரம் ஈடுபட்டனர், 


ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் கிரேன் மூலம் தோண்டினர். குழந்தை தற்போது முணகும் சப்தம் கேட்ட படி இருக்கிறது. இதனால் குழந்தையை உயிருடன் எப்படியாவது மீட்க வேண்டும் என அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் நேரடியில் :
சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ஞானசேகர் புலவன்பாடிக்கு சென்றார். அங்கு மீட்பு பணியை முடுக்கி விட்டார்.அடுத்து , அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உத்தவு பிறப்பித்தார்.மாவட்ட எஸ்.பி., முத்தரசி சம்பவ இடத்தில் முகாமிட்டார். இதற்கிடையில் கிணறு தோண்டிய நில உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


வழிகாட்டுதல்கள் தேவை : @@இது போன்று குழந்தைகள் ஆழ்குழாய் கிணற்றில் விழுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. குஜராத், அரியானா, ராஜஸ்தான் மற்றும் தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விழுந்துள்ளனர். கவனக்குறைவு என்பது காரணமாக இருந்தாலும், ஆழ்குழாய் கிணறு அமைப்பதில் போதிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தேவை.

No comments:

Post a Comment