Saturday, September 3, 2011

ஆக்ஸிஜன் சப்ளையில் கோளாறு- அரசு மருத்துவமனையில் 11 குழந்தைகள் பலி

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் குறைபாடு ஏற்பட்டதால் கடந்த இரு நாட்களில் 11 குழந்தைகள் பலியாகியுள்ளன.

புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 7 குழந்தைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலியாகியுள்ளன. இந்தக் குழந்தைகள் அனைவருமே 5 வயதுக்குட்பட்டவர்கள்.


பல்வேறு உடல் நல பிரச்சனைகள் காரணமாக குழந்தைகள் நல வார்டில் சேர்க்கப்பட்டிருந்த இவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் சிஸ்டம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆக்ஸிஜன் வழங்கும் 4 வென்டிலேட்டர்களில் 2 செயல்படவில்லை என்பதும், இந்த வார்டில் பணியில் இருக்க வேண்டிய 25 நர்சுகளில் 5 பேர் மட்டுமே பணியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் மாதத்துக்கு 50 குழந்தைகள் வரை பலியாவதாக ஏற்கனவே புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment