Saturday, January 25, 2014

முஸஃபர் நகர் கலவரம்:2 பேர் மீது குற்றப்பத்திரிகை!

முஸஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் 2 பேருக்கு எதிராக சிறப்பு புலானாய்வுக் குழு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: முஸஃபர்நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரத்தின் போது குத்பா கிராமத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர்.



இந்தக் கலவரத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கன்வர் பால் மற்றும் ஜோகிந்தர் ஆகியோருக்கு எதிராக விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வுக் குழு, முதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கலவரத்தில் தொடர்புடைய 71 பேர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் மலாக்பூர் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 மாதக் பெண் குழந்தை உயிரிழந்தது.

மேற்கண்ட குழந்தையின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நிவாரண முகாமுக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது என்று கைரானாவில் அரசு சுகாதார மையத்தின் கண்காணிப்பாளர் சரண் சிங் தெரிவித்தார்.
-

No comments:

Post a Comment