Monday, January 20, 2014

முத்துப்பேட்டையில் என்று தீரும் இந்த அவலம்?

ஒரு மாததிற்க்கும் மேலாக H.P. கேஸ்  சிலிண்டர் வராமல் தீடீரென இன்று (19.1.2014) காலை வந்தது. இதை கேள்வி பட்ட மக்கள் முகைதீன் பள்ளி முன்பு கூட தொடங்கினர். வசதி படைத்தவர்களும், வசதி  இல்லாதவர்களும்  கியூ வில்  நிற்க தொடங்கினர்.


பாவம் நம் பெண்கள். ஆண் துனை இல்லாதவர்கள் சிலிண்டரை தூக்க முடியாமல் அவதி பட்டனர். திடீரென தகவல் தெரிந்தவர்கள் வீட்டு வேலைகளை அப்படியே போட்டு விட்டு கியூவில்   வந்து நின்றனர்.

காலை 10 மணி. நல்ல வெயில்.   அந்த வெயிலையும் பொருட்படுத்தாது நம் பெண்கள் நின்றது   வேதனை   அளித்தது.  அதோடு அல்லாமல் திடீரென மழையும் வந்து விட்டது. இதில்   சிலர்   மழையில்   நனைந்தபடி   கியூவில் நின்றது இன்னும் வேதனை அளித்தது. இதில் எதற்க்கும்   துணிந்தவர்கள்   கியூவில்   நடுவில்   புகுந்து   சிலர்   குழப்பம்   விளவித்தனர்.
கியூவில் நிற்க்கும் பெண்கள் அந்த கும்பலுக்கு நடுவில் போக முடியாமல் சிலிண்டருக்கு அருகே நின்று வசைபாடிக் கொண்டு நின்றனர். அப்படியே போனாலும் சிலிண்டரை திருடுபவர்களும் உண்டு. இது போல சம்பவங்களும் நிறையவே நடந்துள்ளதாம்.  கூட்டம் அதிகமாகவே காவல் துறையும் வந்துவிட்டது. காவல் துறை வந்த பின்பு தான் குழப்பம் செய்பவர்கள்  கட்டுக்குள்   வந்தனர்.
வீட்டுக்கு   வீடு   வந்து    சிலிண்டரை   கொடுக்க  வேண்டும்   என்பது  நிறுவனத்திற்க்கு   ஆனை.   ஆனல் அது போல் கொடுக்காமல் இப்படி நேரம் காலம் இல்லாமல் எந்தவித முன்னறிவிப்பும்   இல்லாமல் மக்களுக்கு வேதனை கொடுப்பது கடந்த பல வருடங்களாக நடந்து   கொண்டு   உள்ளதாக   மக்கள்   வேதனையோடு   சொன்னார்கள்.
முத்துப்பேட்டையை பொருத்த வரை இதற்க்கு யாரும் சிரத்தை எடுத்து செயல்படுவது   போல் தெரியவில்லை. நடு நிலையாளர்கள் சொன்னது   வீட்டுக் வீடு வந்து  அவர்கள் கொடுக்க தயாராக  இருந்தாலும் சிலிண்டரை வாங்கி   விற்ப்பவர்கள்   செய்யும்   சூழ்ச்சியே இது என்று   சொன்னது  என் காதில்  விழுந்தது.
2 மணி நேரம் காத்திருந்து பலர் கேஸ் வாங்கி சென்றனர். சிலர் பொறுமையோடு காத்திருந்தாலும் கேஸ் கிடைக்கவில்லை. காரணம். 10 நாட்களுக்கு  முன்பு பதிய வேண்டுமாம்.  அப்படியே   பதிந்திருந்தாலும் 30 நாட்கள் முழுமை அடைய வேண்டுமாம். சிலர் கேஸ் வாங்கி   3  மாதம் ஆகிவிட்டது.   ஆனால் பதிய வில்லை.   இது போல் உள்ளவர்கள்  வெயிலிலும் மழையிலும் காத்திருந்து அவதிபட்டு கேஸ் வாங்காமல் திரும்பியது   வேதனையிலும்  வேதனை.   என்ன சட்ட திட்டமோ தெரியவில்லை.
எது   எப்படியோ.   நடந்தது   நடந்தாக   இருக்கட்டும். இனி நடப்பது நண்மையாக அமைய வேண்டும்.  இந்த வீடியோவை ஆதாராமாக    வைத்து   துபாய்,   குவைத்,   மலேசியா, சிங்கப்பூரை  சார்ந்த நமதூர் சங்கங்கள் முயற்சி எடுத்தால் நிச்சயம் இதற்க்கு விடிவு காலம் பிறக்கும்.     முயற்ச்சி   செய்வார்களா?
முத்துப்பேட்டையிலிருந்து    A.அப்துல் ரஹ்மான்.

No comments:

Post a Comment