Thursday, February 24, 2011

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டுமாம்; சொல்கிறார் காங்கிரஸ் பிரமுகர்!


இந்தியாவை பொருத்தமட்டில் விபச்சாரத்தின் மூலம் விளையும் 'எயிட்ஸ்' எனும் உயிர்க்கொல்லி நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துவரும் நிலையில், விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.பிரியாதத், 
 
''விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். எனவே அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த, விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதே ஒரே வழி என்றும், விபசாரம் என்பது உலகில் பழமையான தொழில். இதில் ஈடுபடுவோருக்கு, இந்த நாட்டு மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. எனவே அவர்களது நலனை பேண வேண்டியது அரசின் கடமை என்றும்  இவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
 

விபச்சாரம் ஒரு தொழில் என்று சொல்லி, உண்மையான தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறார் இவர். சென்னை போன்ற பெருநகரங்களில், பார்வையிழந்த போதும் பிறரிடம் கையேந்தாமல். கவுரவமாக ரயில்களில் ஏறி இறங்கி பேனா விற்கும் அவர்களை குறித்தோ, குறைவான ஊதியத்திற்கு நாளெல்லாம் மாடாய் உழைக்கும் தொழிலாளிகள் குறித்தோ, இவர் கவலை கொள்ளவில்லை. மாறாக, இறைவன் தந்த அழகை வைத்து, ஆனை மயக்கி சம்பாதிப்பதோடு, உயிர்கொல்லி நோயை விதைக்கும் விபச்சாரம் செய்பவர்களைக் குறித்து கவலைகொள்கிறார். மேலும் இது பழமையான[?] தொழிலாம். எனவே சட்டபூர்வமாக்க வேண்டுமாம். திருட்டு- கொலை- கற்பழிப்பு போன்ற குற்றங்களும் பழமையானவைத்தான். இவைகளும் நாட்டில் தொன்று தொட்டு நடந்துதான் வருகின்றன. இவைகளையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்பாரா? இவரைப் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தும் காங்கிரஸ், இவரது கருத்தை அங்கீகரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 

No comments:

Post a Comment