Tuesday, February 1, 2011

புரோகித் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கொலைச் செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை

*புரோகித் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கொலைச்
செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை *
பாலைவனத் தூது
புதுடெல்லி,ஜன.31:முஸ்லிம்கள்
வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதுடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி
புரோகித்தும் அவனது பயங்கரவாத குழுவினரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ புலனாய்வு அறிக்கை
கூறுகிறது.

ஒரிஸ்ஸாவில் கண்டமால், வடக்கு கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகள், புனே,
ஜபல்பூர், போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ மெஷினரிகள்
மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புரோகித்திற்கு அவனது பயங்கரவாத கும்பலுக்கும்
தொடர்புள்ளது.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு கிறிஸ்தவர்களை கொலைச்
செய்ததில் புரோகித்தின் நெருங்கிய கூட்டாளியும் மலேகான் குண்டுவெடிப்பு
வழக்கில் குற்றவாளியுமான ஸமீர் குல்கர்னிக்கு பங்குண்டு என அவ்வறிக்கை
கூறுகிறது.

ராணுவம் நேரடியாக நடத்திய புலனாய்வு மட்டுமல்லாமல், புரோகித் மற்றும்
பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

மஹாராஷ்ட்ரா மாநிலம் காண்டாலாவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம்
தேதி மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து ராணுவம்
புரோகித்திடம் விசாரணை மேற்கொண்டது.

2008 அக்டோபர் மாதம் தான் புரோகித்தை சந்தித்ததாகவும், மலேகானில்
குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், 2008 ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு
கிறிஸ்தவர்களைக் கொலைச் செய்ததாகவும் பிரக்யாசிங் தாக்கூர் வாக்குமூலம்
அளித்துள்ளார்.

வடக்கு கர்நாடகாவில் கிறிஸ்தவ மையங்களுக்கு தீ வைத்ததையும் பிரக்யாசிங்
ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் புரோகித்தும் சம்மதித்ததாக அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. ஸமீர் குல்கர்னி மூலமாகத்தான் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குல்கர்னியை புரோகித் 'சாணக்கியன்' என அழைத்திருந்தார்.

தாக்குதல்களைக் குறித்து திட்டங்களை தீட்ட 2008 மார்ச் மாதம் தேசிய புலனாய்வு
ஏஜன்சியால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவா
பயங்கரவாதிகள் சந்தீப் டாங்கேயும், ராம்ஜி கல்சங்கராவும் புரோகித்தின்
பஞ்ச்மஹரியிலுள்ள வீட்டில் வைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக அறிக்கை
கூறுகிறது.

புனே,ஜபல்பூர்,போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட
தாக்குதல்களில் இவர்களின் பங்கினை குறித்து போலீஸ் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு தனியாக ஒரு
இயக்கத்தை உருவாக்க புரோகித் திட்டம் தயாரித்துள்ளான்.

2007-08 காலக்கட்டங்களில் அஸிமானந்தா புனேயில் அனில் மகாஜனின் வீட்டில் வைத்து
நடத்திய ரகசிய கூட்டத்தில் புரோகித் பங்கேற்றுள்ளான்.

ஸ்ரீராம சேனாவின் பிரமோத் முத்தலிக், ஹிந்துஸ்தான் ராஷ்ட்ரிய சேனாவின் விலாஸ்
பவார், குஜராத்தைச் சார்ந்த பாரத் ரதேஷ்வர், ஆந்திரபிரதேசத்தைச் சார்ந்த
டாக்டர்.சீதாராமைய்யா, சுதாகர் சதுர்வேதி, அஜய் ராய்வார் ஆகியோர்
பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டங்கள் ஒன்றில் அஸிமானந்தா அபினவ் பாரத்தை இதர
இயக்கங்களுடன் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றிப்பெறவில்லை என
ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment