Monday, August 29, 2011

மூவரின் தூக்கை ரத்து செய்யும் அதிகாரம் தமக்கில்லை - ஜெயலலிதா அறிவிப்பு!


முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்திக் கொலைக் குற்றவாளிகள் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தமக்கில்லை என்றும் அரசியல் கட்சிகள் தமக்கு அதிகாரம் இருப்பதாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட மூவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்னர் மூவரையும் காப்பாற்ற தமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் மீண்டும் குடியரசுத் தலைவருக்குத் தான் மூவரும் தங்கள் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டத்தைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ முதல்வருக்கு மூவரையும் காப்பாற்ற அதிகாரம் இருப்பது போன்று தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவித்த ஜெயலலிதா இனி தமக்கு அதிகாரம் இருப்பது போன்ற ஒரு பிரச்சாரத்தை எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூவரின் உயிரைக் காப்பாற்ற செங்கொடி என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்டதாக வந்த செய்தி தமக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கியதாகவும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment