Monday, January 17, 2011

நெரிசலில் சிக்காமல் தப்பிக்க ஓடி வந்த பக்தர்களை விரட்டியடித்த மலையாள வியாபாரிகள்

தேனி: சபரிமலை அருகே புல்மேடு பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அதில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள ஓடி வந்த பக்தர்களை கம்புகளால் விரட்டியடித்துள்ளனர் கொடுமைக்கார மலையாள வியாபாரிகள்.

புல்மேடு பகுதியில் நடந்த கோர சம்பவத்தில் 109 அய்யப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனால் அதை விட சோகமான சம்பவமும் அப்பகுதியில் நடந்துள்ளது. அது தற்போது தெரிய வந்துள்ளது.

ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்நதே கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பும், காயமும் ஏற்பட்டுள்ளது.



அந்த சமயத்தில் அப்பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்து உயிர் தப்ப பக்தர்கள் பலர் ஓடி வந்தனர். ஆனால் அங்கிருந்த மலையாள வியாபாரிகள் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் ஓடி வந்த பக்தர்களை தடிகளாலும், கம்புகளாலும் அடித்து விரட்டி வெளியேற்றியுள்ளனர். இதனால் தஞ்சம் புக வந்த அப்பாவி பக்தர்கள் மீண்டும் நெரிசலுக்குள் போய் சிக்க நேரிட்டதாம்.

அப்பாவி பக்தர்களை நம்பி பிழைப்பு நடத்தும் இந்த மலையாள வியாபாரிகள், காசு பார்த்தால் போதும், எவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்துடன் இரும்பு நெஞ்சுடன் நடந்து கொண்ட சம்பவம் பதை பதைக்க வைப்பதாக உள்ளது. ஒருவன் உயிருக்குப் போராடுகிற சமயத்தில் கூட அவனுக்கு உதவும் மனது இவர்களுக்கு இல்லாமல் போனதை என்னவென்று சொல்வது?.

No comments:

Post a Comment