Friday, January 14, 2011

மாலேகாவ் குண்டுவெடிப்பு: மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி



மும்பை, ஜன. 13: மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் மறுவிசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுவாமி அசிமானந்தா குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த வாக்குமூலத்தை அடுத்து வழக்கை மறுவிசாரணை நடத்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. 2008-ம் ஆண்டில் மாலேகாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அசிமானந்தா கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது 2006-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும், அவரது நண்பர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்படி 2006-ல் மாலேகாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு வழக்கை மறுவிசாரணை நடத்த அனுமதிக்க வேண்டுமென சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கோரியிருந்தது. அதற்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் மாலேகாவில் 2006-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
நன்றி:தினமணி 

No comments:

Post a Comment